Sunday, August 5, 2012

சதுரகிரிக்கு எப்போதெல்லாம் செல்லலாம்?

சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், ‘பஞ்சபூத லிங்கம்’ என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்றனர் ஆன்றோர்.

 சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது இந்த தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் பரிஸ்தான லிங்கமதனை ஆக்கி, தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. ‘கல் லாலமரம்’ என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை. இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை சேவித்து இன்புறுகின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

‘‘ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் ‘காம்யலோகம்’ கிட்டும்’’ என்கிறார், அகஸ்தியர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த  வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். 

கொல்லி மலையில் உள்ள கொல்லிப்பாவையை இந்தப் பெரிய மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் வனத்தில் வைத்தே கோரக்கர் என்ற புகழ்மிக்க சித்தர் உருவாக்கினார். பின் சிவனின் உத்தரவுப்படி, கொல்லி மலையில் தேவியை கோரக்கர் பிரதிஷ்டை செய்தார். கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது. இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ‘ஜலஸ்நானம்’ செய்வது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. ‘‘8 ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும்; தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது’’ என்கிறார், அகஸ்தியர். 

‘‘இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும்’’ என்கிறார், கோரக்கர்.

நாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப் பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு. 

மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். மிகுந்த ஒல்லியான உடல் கொண்டவர் உள்ளே சென்றால், சுமார் எழுநூறு மீட்டர் தூரம் சென்ற உடன் கூட்டல் குறிபோல நான்கு வழிகள் பிரியும். இதில் பூமியை நோக்கி சரியும் வழியில் 200 மீட்டர் சென்றால் ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதை காணலாம். இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருகின்றனர்.

உண்மையான பக்தியும் விசுவாசமும் திடமான மனமும் கொண்டு குகைக்குள் சென்றால், சித்தர்களை சேவிக்கலாம் என்கிறது நாடி. இதனை பின்பற்றி சித்தர்களை தரிசித்தவர்கள் உண்டு. அவர்களை நான் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தும் இருக்கின்றேன்.

‘‘ஊழிற் பெருவழி யாதுள’’ என்கிறார், ஒருவர். ‘‘விதி வழி மதி செல்லும்’’ என்கின்றார் இன்னொரு சித்தர். ‘விதி வலிது’ என்கிறது ஜோதிடம். ஆனால், விதியையே திகைக்க வைக்கும் ஆற்றல் பக்திக்கு உண்டு. சதுரகிரி சென்று அங்கு கல்லால விருட்சமடியில் கொலுவிருக்கும் சிவனுடன் ஏனைய இறையையும் பெரியோர் ஆலோசனையுடன், தொழுதால், கோள் என்ன செய்யும், விதி என்ன செய்யும்? தோற்று ஓடி ஒளியும்.

சுண்ணாம்பு காளவாயில் இட்டு ஒரு நாயன்மாரை அரசன் கொடுமைபடுத்துகின்றான். அவருடன் கல்லை கட்டி கடலில் தள்ளுகிறான். ஆனால் அவரோ ஆனந்தமாய் பாடுகின்றார். ஈசன் திருவடியை எண்ணி, அப்பர் அப்படி பாடியது மகாலிங்க நாதனை எண்ணித் தான் என்கிறார் குதம்பை சித்தர்.

சதுரகிரி என்பது திருக்கைலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். பிரம்ம கிரி நின்று சரஸ்வதி மாதாவும் தெய்வீக லிங்கனாம், மகாலிங்கானாம், சுந்தர மகாலிங்கனை வீணை மீட்டி அவர் ஆராதனை செய்து வருகிறார். 

ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ, ‘விண்ணோர் பலரும் வரக்கண்டேன்’ என்கின்றார் அகஸ்தியர். ராவணேஸ்வரன், கும்பகர்ணன், ராமன், தசரதன், இக்ஷ்வாகு, யயாதி போன்ற பெரியோர்களும் வருணன், குபேரன் போன்ற தேவர்களும், நாராயணன், திருமகள், யமன் உள்ளிட்ட நித்ய சூரிகளும் குழுமி நிற்கின்றனர் என்றால், சதுரகிரி நாதனை தொழ நாம் ஏன் காலந் தாழ்த்த வேண்டும்?
 
நன்றி:தினகரன்

ஒரு மணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு !!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காதர், ஜமால் ஆகிய இளைஞர்கள் ஒரு மணி நேரத்தில் 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதிசயம் - ஆனால் உண்மை.

சிவகங்கை மாவட்டம், கீலவெல் லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் (32). இவர் எம்.பி.ஏ மற்றும் எம்எஸ் (அய்டி) படித்தவர். அமெரிக்காவில் கடந்த 13 ஆண்டுகளாக தனியார் அய்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எண்ணெய் ஆலைகளுக்கு தேங்காய் விநியோகம் செய்வது, இவரது குடும்ப தொழிலாக இருந்து வருகிறது. தேங்காய் உரிக்க போது மான ஆட்கள் இல்லாததால், ஆலை களுக்கு போதுமான தேங்காய்களை விநியோகம் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில், புதிய கருவியை கண்டு பிடிக்க காதர் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். பின்னர், அவருடன் சேர்ந்து 4 பேர் கொண்ட குழு, இந்த கருவியை வடிவமைத்துள்ளது.

ஆலைகளுக்கு தேங்காய் சப்ளை செய்வது, எங்களின் குடும்ப தொழி லாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. தற்போது, ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களின் தொழில் பெரிதும் பாதிக் கப்படுகிறது. எங்களை போல் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலைகள் கேட்கும் அளவுக்கு உடனடியாக தேங்காய் களை உரித்து அனுப்ப முடியவில்லை. இதற்காக, புதிய கருவியை கண்டுபிடிக்க வேண் டுமென திட்டமிட்டு இருந்தேன்.

அப்போதுதான், இணையதளம் மூலம் நாமக்கல் மாவட் டத்தில் பட்டறை நடத்தி வரும் ஜெகன் என்பவரின் நட்பு கிடைத்தது. பயனுள்ள தொழில்நுட்பங்கள் பற்றி அடிக்கடி இணையதளம் மூலம் பேசுவோம். 3 மாதங்களாக புதிய கருவி கண்டுபிடிப்பு பற்றி ஆலோ சனை நடத்தினோம். ஜெகன், ஜமால், ஷேக், சேட் ஆகிய 4 பேருடன் நானும் சேர்ந்து, இந்த புதிய கருவியை 2 மாதத்தில் வடிவமைத்தோம். இதற்காக, மொத்தம் ரூ.8 லட்சம் செல விட்டுள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு 2,000 முதல் 2,500 தேங்காய்களை உரிக்க முடியும். பயிற்சி பெற்ற தொழி லாளி ஒரு மணி நேரத்துக்கு 200 தேங்காய் மட்டுமே உரிக்க முடியும்.

தற்போது 1,000 தேங்காய் உரிக்கும்போது 5 தேங்காய் உடைகிறது. தேங்காய் உடைவதை தடுக்க சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள் ளோம். மேலும், நமக்கு தேவையான போது, குடுமியுடனும் தேங்காய் உரிக்க முடியும். இந்த புதிய இயந்திரத்தை இயக்கவும், கண் காணிக்கவும் ஒரு தொழிலாளர் மட்டுமே போதுமானது. எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி தேங்காய் தர முடியும். தேங்காய் ஏற்றுமதி பாதிக்காது. தேங்காய் நார் உற்பத்தியும் எளிமையாகி விடும். இதைத்தொடர்ந்து, தேய்காய் கழிவுகளை கொண்டு பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி
தினகரன் ..

உலர் திராட்சை (கிஸ் மிஸ் பழம் )..!

கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை (ஆண்மைக்கு) தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் கு ணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

இதில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சியபின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடகாத்திரமாக வளரும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டுக் காய்ச்சி 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

Saturday, August 4, 2012

Fact fact fact fact fact

சரித்திர நாயகன்!

இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கைக் கால்களைக் கொண்டு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் வீரர் என்கிற பெருமையோடு, 400 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிக்கு முன்னேறி சரித்திரச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார், தென் ஆப்பிரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

இன்று நடந்த தகுதிச் சுற்றில், 400 மீட்டர் தூரத்தைக் கடந்து 45.44 பாயின்டுகளை அள்ளி, சீசனல் ரெக்கார்டு ஒன்றையும் நிகழ்த்தி இருக்கிறார் பிஸ்டோரியஸ்.

பதக்கம் வெல்வாரோ, இல்லையோ... ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதன் மூலமே புதிய சரித்திரம் படைக்கிறார் எனப் போற்றப்பட்டவர் தென் ஆப்பிரிக்க ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்.

இரண்டு கால்களையும் இழந்த நிலையில் ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற முதல் வீரர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்துவிட்டவர், தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தன் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினார். கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.

லண்டன் ஒலிம்பிக்ஸுக்குத் தகுதிபெற்றபோது, தனது வாழ்க்கையில் பெருமைக்குரிய தருணங்களில் இதுவும் ஒன்று எனக் கூறிய 25 வயதான பிஸ்டோரியஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாராலிம்பிக்ஸ்' போட்டிகளிலும் பங்கேற்க இருக்கிறார்.

முன்னதாக, ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்படுவதற்கே பெரும் போராட்டத்தைச் சந்தித்தார் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓடும் பிஸ்டோரியஸ், மற்ற போட்டியாளர்களுடன் ஓடும்போது, சாதகமான நிலையைப் பெறுகிறார் என்ற புகார் எழுந்தது. அந்தப் புகார், விளையாட்டுத் துறைக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டு இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்கிறார்.

அரையிறுதியில் நாளை ஓடப்போகும் பிஸ்டோரியஸுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

இளநீரின் மருத்துவ குணம்..!

கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.

குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.


இளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.

இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.

மின்தடை இல்லாத கிராமம்!

நாடே இருளில் மூழ்கினாலும் மத்திய பிரதேசத்தில் உள்ள மீர்வாடா கிராமம் மட்டும் எப்போதம் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வரை மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது இந்த கிராமம். மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு வெளிச்சத்திலேயே மக்கள் வாழ்ந்தனர், மாணவ & மாணவரியரும் படித்து வந்தனர்.

ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் சன் எடிஸன் நிறுவனம் இந்த கிராமத்தில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி அமைப்பை எற்படுத்தியது. அது வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இயற்கையை என்னதான் செயற்கையாக மாற்றினாலும், இயற்கையின் வலிமை எப்போதும் அதிகம் தானே..?