Sunday, October 21, 2012

சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும் பொருட்டு அவர்கள் இம்முறையைக் கையாண்டனர். ஆத்ம ஞானம் பெற விரும்புவன் உயர்ந்த பண்பைப் பெற்றிருக்க வேண்டும். உயர்ந்த பண்பைப் பெற்றுள்ள ஒவ்வொருவனும் உயர்ந்த கோத்திரத்தைச் சார்ந்தவனாகிறான்.
அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வு
செந்தண்மை பூண்டு ஒழுகலான்

என்பது பொய்யாமொழி. குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற கோட்பாட்டின்படி ஒருவனுடைய குணத்தை அறிவதற்கு அவனுடைய கோத்திரத்தை பழைய பெரியோர்கள் கேட்டு வந்தார்கள். குருவை அடைந்து ஆத்ம ஞானம் பெற விரும்பிய ஸத்தியகாமன் குருவினிடம் கோத்திரத்தைச் சொல்வதற்காகத் தன் தாயிடம் தன்னுடைய கோத்திரத்தைக் கேட்டான்.
தாய் எளிய வாழ்வும் தூய உள்ளமும் படைத்தவள். தன் மகனோடு கிராமத்தில் ஒரு புறத்தில் எளிய குடிசையில் வாழ்ந்து வந்தாள். பக்ஷிகளின் இனிய கீதம், நீரோடைகளின் சலசலப்பான ஓசை, சூரியனின் களங்கமற்ற ஒளி, சந்திரனின் தண்மை ஆகிய இவைகள் அவர்களுக்கு இன்பமூட்டும் பொருள்களாக இருந்து வந்தன. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்பவர்கள் இறைவனோடு இயைந்த வாழ்வு வாழ்பவர்களாகிறார்கள். தன் மகன் தன்னைக் கோத்திரத்தைக் கேட்டபொழுது தன்னுடைய பழைய வாழ்க்கையின் ஞாபகம் ஜாபாலாவுக்கு வந்தது.
“நான் ஓர் இளைஞனை மணம் செய்து கொண்டேன். என்னுடைய தலைவனுக்குப் பணிவிடை செய்வதிலேயே என் காலத்தைக் கழித்தேன். உன்னைக் கருத்தரித்தபின் உன் தந்தை காலமாகிவிட்டார். நான் பின் அனாதையாகிவிட்டேன். உன் தந்தை இறக்கும்பொழுது என் சிந்தனை எல்லாம் உன்னைப்பற்றியே இருந்ததால் அவரைக் கோத்திரம் கேட்க மறந்துவிட்டேன். என் பெற்றோர்களும் என்னைச் சிறு வயதிலேயே விட்டுப் பிரிந்துவிட்டதால் அவர்களிடமும் நான் கோத்திரத்தைப் பற்றிக் கேட்க விட்டுவிட்டேன். தூய வாழ்க்கை வாழ்வதற்குக் கோத்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாக நான் அப்பொழுது கருதவில்லை”- இங்ஙனம் தன் வரலாற்றை அவள் கூறி முடித்தாள்.
அவள் தன்னிடத்திலிருந்த தூய்மையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தாள். தன் மகன் யாண்டும் உண்மையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வுண்மையே அவனுக்கு வாழ்க்கையில் வெற்றிதரும் என்றும் அவள் உறுதிகொண்டிருந்தாள். ஆகையால் அவள், “மகனே, நீ உன் குருவிடம் உண்மையை உள்ளபடி சொல். எனக்குக் கோத்திரம் தெரியாது. என் பெயர் ஸத்தியகாமன். என் தாயின் பெயர் ஜாபாலா. ஆகையால் நான் ஸத்தியகாமன் என்ற ஜாபாலன் ஆவேன் என்று கூறி உன்னை அறிமுகப்படுத்திக்கொள்!” என்று ஸத்தியகாமனிடம் கூறி அவனை குருவிடம் அனுப்பி வைத்தாள்.
ஸத்தியகாமன் தாயினிடமிருந்து அறிந்த விபரத்தை வைத்துக்கொண்டு தாயினுடைய கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு குருவினிடம் புறப்பட்டுப் போனான். தாயும் அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் அவனை அவள் அருள்நோக்கோடு பார்த்தவண்ணம் இருந்தாள். கண்பார்வையினின்று அவன் மறைந்ததும் அவனுக்கு ஏற்படும் தடைகளெல்லாம் நிவர்த்தியாக வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டாள்.
கெளதமர் என்னும் புகழ்பெற்ற ரிஷியின் ஆசிரமத்தை ஸத்தியகாமன் சென்றடைந்தான். அவ்வாசிரமம் தவம் புரிவதற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. ஸத்தியகாமன் அவ்வாசிரமத்தை அடைவதற்கு சற்று தூரத்திலேயே அங்கு நிகழ்ந்த யாகத்தினின்று உண்டாகிய நெருப்பின் புகையைக் கண்டான். பிரம்மசாரிகள் ஓதிய வேதத்தின் ஓசை காற்றில் மிதந்து வந்து அவன் காதில் விழுந்தது. அப்பொழுது சூரியன் மேல்திசையில் மறைந்து கொண்டிருந்தான். சூரியனுடைய மறைவானது ஆகாயத்தில் தெய்வ சாந்நித்தியத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. ஸத்தியகாமன் ஆசிரமத்தை அணுகியபொழுது பசுக்கூட்டம் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். சில பிரம்மசாரிகள் அடுத்தநாள் ஹோமாக்கினிக்கு சமித்துத் தயார் செய்து கொண்டிருந்தனர். இவனும் சில சமித்துகளைத் தயார் செய்துகொண்டு அவர்களோடு சேர்ந்து ஆசிரமத்துக்குச் சென்றான். வழிநடையால் ஸத்தியாகாமன் களைப்புற்றிருந்ததால் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டான். இரவு பிரார்த்தனைக்குப் பின்பு கெளதம முனிவரிடம் அழைத்துச் செல்லப்பட்டான். குருவுக்கு  மரியாதையோடு கூடிய வணக்கம் செய்து அவருடைய திருவடிகளில் தான் கொண்டுசென்றிருந்த சமித்தை காணிக்கையாக சமர்ப்பித்தபின், “இதை காணிக்கçயாக ஏற்றுக்கொண்டு பிரம்ம ஞானம் பெறுவதற்கு முதல்படியாக உள்ள பிரம்மசரிய தீட்சையை எனக்குத் தந்தருளுங்கள்!” என்று குருவைக் கேட்டுக்கொண்டாள்.

குரு அவனுடைய ஆத்மஞான வேட்கையை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். உள்ளூற அவர் அவனை ஆசீர்வதித்து, அவனுடைய கோத்திரத்தை வினவினார். அவனுக்குக் கோத்திரம் தெரியாதாகையால், அவனுடைய தாய்சொன்னதை அப்படியே குருவிடம் ஒப்புவித்தான். அதைக்கேட்டு, ரிஷிபரம்பரையிலும், தேவர்கள் பரம்பரையிலும் வழித்தோன்றலாக வந்த மற்ற ஆசிரமவாசிகள், பரிகாசத்தோடு அவனைப் பார்த்தார்கள். கெளதம ரிஷி அவனுடைய நிலையை அறிந்து அவன்மீது தன் அருள் பார்வையைத் திருப்பினார். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தின் மீது அவன் வைத்திருந்த விசுவாசத்தை விளக்கியது. ஸத்தியகாமனிடத்திலிருந்த தூய்மையையும் சாந்தியையும் நேர்மையையும் கண்டு அம்முனிவர் மகிழ்ச்சி அடைந்தவராக அவனை அழைத்துக் கூறியதாவது– “உண்மையை தெளிவுபடக்கூறிய உன்னை பிராம்மணன் அல்ல என்று சொல்வது தகுதியன்று. சத்தியமே பிரம்மம். சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள் பிரம்மத்தை அறியத் தகுதி உடையவர்களாகிறார்கள். பிரம்மத்தை அறிபவன் பிராம்மணன் ஆகிறான். சத்தியவந்தனாகிய நீ பிராம்மணன் ஆவாய். நாளை உனக்குப் பிரம்ம நாட்டத்துக்கு முதல்படியாக இருக்கும் பிரம்மசரிய தீட்சை செய்து வைப்பேன்.”
மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மசரிய தீட்சை செய்து வைக்கப்பட்டான். அதற்குப் புறச் சின்னமாக முப்புரிநூலும் அணிவிக்கப்பட்டான். அவனுடைய தாயின் ஆசீர்வாதம் அவனுக்கு நன்கு பயனளிக்க ஆரம்பித்தது. வேதத்தைக் கற்று பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்ற நீண்டகால அவனுடைய அவா பூர்த்தியாயிற்று. இந்த மேலான வாழ்வில் என்னை வழுவாது அழைத்துச்செல்வாயாக என்று அக்கினிதேவதையைப் பிரார்த்தித்துக் கொண்டான்.
உபநயனத்துக்குப் பின்பு குரு, ஸத்தியகாமனிடம் நானூறு பசுக்களை ஒப்படைத்தார். அந்நானூறு பசுக்களும் ஆயிரம் பசுக்களாகப் பெருகியபின்தான் திரும்ப வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஸத்தியகாமனும் மகிழ்ச்சியோடு இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஏராளமான புல்லும் நல்ல தண்ணீரும் அகப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க காட்டுக்குள் வெகுதூரம் அவற்றை ஓட்டிச் சென்றான். நல்லதொரு இடத்தையும் கண்டான். பசுக்களுக்கு நல்ல உணவும் நீரும் அவ்விடத்தில் அகப்பட்டதோடு, தியானத்திற்கு மிகப் பொருத்தமான இடமாகவும் அது அமைந்திருந்தது. அமைதியும் தனிமையும் நிறைந்த அந்த இயற்கைச் சூழ்நிலையில் இறைவனோடு உள்ளத்தை ஈடுபடுத்த ஸத்தியகாமனுக்குச் சுலபமாக இருந்தது. குரு உபதேசித்தபடி ஸத்தியாகாமன் தவவாழ்வு வாழ ஆரம்பித்தான். நாள்தோறும் அக்கினி வழிபாடு தவறாது செய்துவந்தான். பசுக்கூட்டத்தைப் பராமரிப்பதில் அவன் சிறிதும் சளைக்காதவனாக இருந்தான். அவனுடைய நேர் பராமரிப்பில் பசுக்கூட்டம் பெருக ஆரம்பித்தது.
நாள்கள் மாதங்களாகவும், மாதங்கள் ஆண்டுகளாகவும் விரிந்து கொண்டே போயின. ஸத்தியகாமன் காலத்தைக் கருத்தில் வாங்காது கடும் தவவாழ்வில் ஈடுபட்டு இருந்தான். ஆரம்பத்தில் அடிக்கடி தாயினுடைய ஞாபகமும், வீட்டு ஞாபகமும் அவன் தவத்துக்கு இடையூறாக இருந்தன. நாளடைவில் அவ்வெண்ணங்கள் அவன் மனதை விட்டு முற்றும் அகன்றன. இவ்வுலக விஷயங்களிலிருந்து அவன் மனது விலக விலக புதிய தவவாழ்க்கையில் அவன் மனது முற்றும் ஈடுபட ஆரம்பித்தது. பிரார்த்தனை, தியானம் அவன் புதுவாழ்வில் முக்கிய அம்சங்களாக இருந்தன. மலையினின்று வீசிய மந்தமாருதமும், யக்ஞத்துத் தோற்றுவித்த நெருப்பும் அவனுக்கு நண்பர்களாக இருந்து அவனோடு உரையாடி வந்தன. ஒருநாள் வாயுபகவான் அவனிடமிருந்த பெரிய பசுவின் வாயிலாக அவனுக்குச் சொன்னதாவது– “ஸத்தியகாம, பசுக்கள் ஆயிரமாகப் பெருகிவிட்டன. அவைகளை அவைகளுடைய தலைவரிருக்கும் ஆச்ரமத்திற்கு ஓட்டிச் செல்லலாம்.”
பசுக்கள் ஆயிரமாகப் பெருகியது உண்மைதானா என்று கணக்கிட்டுப் பார்த்ததில் அது முற்றிலும் உண்மை என்று அவனுக்குப் புலப்பட்டது. அவனுடைய ஸத்தியத்தையும், கடும் தவத்தையும், குரு பக்தியையும் கண்ட வாயுபகவான் அவனுக்கு மேலும் பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை உபதேசிக்க முன்வந்தது. ஸத்தியகாமன் வாயுபகவான் உபதேசத்தை ஏற்கச் சம்மதித்தான். “நான்கு திசைகளிலும் பிரம்மம் ஒன்றே பரந்து இருக்கிறது. எத்திக்கும் உள்ள பிரம்மத்தை தியானிக்க வேண்டும். பிரம்மத்தைப் பேரொளி வடிவமாகத் தியானிக்கும்போது தியானிப்பவனுடைய அறிவு பிரகாசமுடையதாகிறது. பிரம்மத்தினுடைய பேரியல்பில் பிரகாசம் ஒருபகுதி என்றும் இப்பகுதிக்குப் ‘பிரகாசவான்’ என்ற பெயரும் உண்டு” என்று வாயுபகவான் உபதேசித்தது. பிரம்மத்தைப் பற்றிய விளக்கத்தில் இது கால்பங்கு என்றும் மேலும் அக்கினியிடமிருந்து ஸத்திய காமனுக்கு உபதேசம் கிடைக்கும் என்றும் வாயுபகவான் கூறிற்று.
மறுநாள் காலையில் ஸத்தியகாமன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கெளதமருடைய ஆசிரமத்திற்குப் புறப்படான். அவன் உள்ளத்தில் ஆனந்தம் ததும்பிக்கொண்டிருந்தது. முந்திய நாள் வாயுபகவானிடம் இருந்து கிடைத்த உபதேசம் அவனுடைய வாழ்க்கையில் பெரும் மாறுதலை உண்டாக்கியிருந்தது. சூரியன், அடர்ந்த காடு, மலர்களும், பழங்களும் நிறைந்த கொடிகள், சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு ஓடும் தெளிந்த நீரோடை– இயற்கையிலுள்ள இக்காட்சிகள் தெய்வத்தன்மையை ஸத்தியகாமனுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அவன் உள்ளத்தில் சொல்லொணாத ஆனந்த ஊற்று கிளம்புவதை உணர்ந்தான். இதற்கு முன்பு இத்தகைய ஆனந்தத்தை அவன் அனுபவித்து கிடையாது. அவன் ஆசிரமத்தை அடைவதற்குமுன் இரவு நேரம் வந்துவிட்டது. பசுக்களை ஒழுங்குபடுத்தி ஓர் இடத்தில் இருத்திவிட்டு யாகத்துக்கு நெருப்பை மூட்டினான். ஹோமாக்னிக்குமுன் தியானத்தில் அமர்ந்தான். ஹோமாக்னி பேசுவது போன்ற குரல் அவன் காதில் விழுந்தது. அப்பொழுது அப்பேச்சிலிருந்து அவனுக்குக் கிடைத்த உபதேசமாவது: “இப்பூவுலகிலும் இதற்கு மேலுள்ள சொர்க்க லோகத்திலும் இவ்விரண்டிற்குமிடையிலுள்ள இடைவெளியெங்கும், இப்பூவுலகத்திற்குக் கீழும் ஆகிய எல்லாஇடங்களிலும் பிரம்மமே நிறைந்திருக்கிறது. எல்லையிலடங்காத அனந்த சொரூபமாக இருக்கும் பிரம்மத்தைத் தியானம் செய்தல் வேண்டும். பிரம்மத்தின் தன்மைகளுள் இவ்வானந்தம் ஒருபகுதி. பிரம்மத்தின் இப்பகுதி “அனந்தவான்” என்று அழைக்கப்படுகிறது”. இங்ஙனம் பிரம்மத்தின் பிரகாசமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும் அதன் மகிமைக்கு ஓர் எல்லையில்லை என்றும் ஸத்தியகாமனுக்கு உபதேசிக்கப்பட்டதும் அவன் முகத்தில் பிரம்ம தேஜஸ் திகழ்ந்தது. அவன் எங்கும் பிரம்மத்தின் மஹிமையையே உணரலானான்.
அடுத்தநாள் தன்குருவின் ஆசிரமத்தை நோக்கி ஸத்தியகாமன் தன் பிரயாணத்தைத் தொடங்கினான். ஆனால் அன்றும் அவன் ஆசிரமத்தை அடைவதற்குமுன் இருள் சூழ்ந்துவிட்டது. முன்னாள் இரவு போன்று பசுக்கூட்டம் தங்க இடம் அமைத்துவிட்டு நெருப்பை மூட்டி தியானத்தில் அமர்ந்தான். அப்பொழுது ஓர் அன்னப்பறவை அவன் இருந்த இடத்திற்கு மேலே பறந்து செல்வதைப் பார்த்தான். ஆதித்யன் அவ்வன்னப்பறையின் வேடம் பூண்டு ஓர் அரிய விஷயத்தை உபதேசிக்க அங்கு வந்திருப்பதாக அவன் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. அப்பறவை அவனுக்கு உபதேசித்ததாவது– “பிரம்மத்தின் ஒளியே அக்னிவடிவமாகப் பூமியிலும், சூரிய சந்திர வடிவங்களாகச் சொர்க்கத்திலும், மின்னலின் வடிவமாகச் சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வெளியிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பிரம்மத்தின் ஜோதி வடிவை இங்ஙனம் தியானித்துப் பழக வேண்டும். பிரம்மத்தின் ஜோதிமயமான இப்பகுதி ‘ஜோதிஷ்மான்’ என அழைக்கப்படுகிறது.”
மறுநாள் ஸத்தியகாமன் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறதென்றும், எல்லாவற்றையும் கடந்திருக்கிறதென்றும், அதனுடைய மஹிமையை இவ்வுலகப் பொருள்கள் விளக்கிக் கொண்டிருக்கின்றன என்றும் முந்திய நாள்களில் கேட்ட மூன்று உபதேசங்களின் சாராம்சத்தை ஆழ்ந்து எண்ணிக் கொண்டிருந்தான். அவ்வமயம் நீர்ப்பறவையொன்று அங்கு பறந்துவந்தது. முக்கியப் பிராணன் அந்நீர்ப்பறவையின் வடிவெடுத்து அவனுக்குப் பிரம்மத்தின் நான்காவது தன்மையை உபதேசிக்கலாயிற்று– “பிராணன், நேத்திரம், செவி, மனம் இந்நான்கையும் பிரம்மமே இயக்குகிறது. அத்தியாத்மத்தில் பிரம்மத்தினுடைய தன்மை இந்நான்கின் மூலம் விளக்கப்படுகிறது. பிரம்மத்தின் இத்தன்மை ‘ஆயதனவான்’ என அழைக்கப்படுகிறது”. புறத்திலும் அகத்திலும் பிரம்மத்தின் தன்மை இங்ஙனம் இருப்பதாக ஸத்தியகாமன் உபதேசிக்கப்பட்டவுடன் அவனுக்கு ஓர் உண்மை விளங்கிற்று. பிரம்மமே எங்கும் நிறைந்திருக்கிறதென்றும் இதை அறிவதே பிரம்மத்தை அறிவதற்கு நிகராகுமென்றும் இந்த ஞானம் தன்னை அறிவதிலிருந்தே எளிதில் கிடைக்கிறதென்றும் தெளிவாக அவன் உணர்ந்தான். மேலும் ஆத்ம சொரூபத்துக்குத் தான் புறம்பாக இருக்கும்வரையில் பிரம்மத்தை அறிந்தவன் ஆகமுடியாது என்பதையும் அவன் நன்கு உணர்ந்தான்.
பிரம்மத்தைப் பற்றிய ஞானம் அவனிடத்தில் தெளிவானதும் அவன் உள்ளம் சாந்தியடைந்தது. அருள்தாகம் தணிந்து பிரம்மஞானம் உள்ளவனாக குருவிடம் தனது வணக்கத்தைத் தெரிவிக்க அவரது ஆசிரமத்துக்கு அவன் சென்றான். ஆசிரமத்தை அடைந்து குருவை வீழ்ந்து நமஸ்கரித்தான். அவனுடைய முகத்தில் பிரம்மதேஜஸ் ஜொலித்துக்கொண்டிருப்பதைக் கண்ட குரு ஆனந்தமடைந்தவராய், “ஸத்தியகாமா!” என்று அன்புடன் கூவி, “நீ பிரம்மஞானம் அடைந்தவன் போல் காட்சியளிக்கிறாய். உன் முகத்தில் தவழ்கின்ற புன்சிரிப்பு உன்னிடத்திலுள்ள பரமசாந்தியை வெளிப்படுத்துகிறது. உனக்குப் பிரம்ம ஞானத்தைப் புகட்டியவர் யார்?” என்று கேட்டார்.
வாயு, அக்கினி, ஆதித்யன், பிராணன் ஆகிய நான்கினிடமிருந்தும் அவனுக்குக் கிடைத்த ஞானத்தை குருவினிடம் எடுத்துப் பகர்ந்தான். தேவதைகளின் மூலம் மறைமுகமாக அவனுக்குக் கிடைத்த ஞானத்தை அவன் பெரிதாகக் கருதவில்லை. குருவினிடம் நேரே உபதேசம் பெறுவதுதான் சிறந்தது எனக்கருதி, தன் கருத்தைக் குருவிடம் தெரிவித்தான். குருவும் சிஷ்யனுடைய விசுவாசத்தை மெச்சி மீண்டும் அவனுக்கு பிரம்மஞானத்தைப் புகட்டினார். ஏற்கனவே அவன் அறிந்த ஞானத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் தெளிவுபடுத்துவதற்கும் குருவின் உபதேசம் அவனுக்குப் பயன்பட்டது. இங்ஙனம் மாதா, தெய்வம், குரு ஆகியோரின ஆசீர்வாதத்தால் ஸத்தியகாமன் ஞானத்தைப் பெற்றான். சாதனையில் நாட்டங்கொண்டு முறையாகச் சாதனம் செய்பவர்களுக்குத் தாயிடம் இருந்தும், குருவினிடம் இருந்தும், தெய்வத்தினிடம் இருந்தும் உதவியும் ஆசியும் கிட்டுகின்றன என்பதை ஸத்தியகாமன் கதை தெளிவாக்குகிறது.
மாடு மேய்த்தல் மூலம் ஸத்தியகாமனுக்கு ஞானம் ஏற்படுகிறது. ஆகையால் மனபரிபாகத்துக்குத் தொழில் எத்தகையது என்பது முக்கியமன்று; அது என்ன நோக்கத்தோடு செய்யப்படுகிறது என்பதே முக்கியமானது. நமக்கு அமைந்த தொழிலைக் கடவுளுக்காக என்று நாம் செய்து வந்தால் அது நம் மனதைப் பரிசுத்தமாக்குகிறது. மனம் பரிசுத்தம் அடையும்பொழுது அது ஞானத்தைப் பெறத் தகுதியுடையதாகிறது. பரிசுத்த உள்ளத்தில் ஞானோதயம் உண்டாகிறது. அந்நிலையில் வானும் மண்ணும், ஒளியும், வெளியும், மலையும், நதியும் ஒவ்வொன்றும் உபகுருவாய் இருந்து பேசாமல் பேசி நமக்கு ஞானத்தைப் புகட்டுகின்றன. இவ்வுண்மையை ஸத்தியகாமனுடைய கதை நமக்குப் புகட்டுகிறது.
உபகோஸலர்
கெளதம முனிவரிடமிருந்து ஞானோபதேசம் பெற்றபின் ஸத்தியகாம ஜாபாலன் குரு ஸ்தானம் பெற்றார். அவருடைய பெருமை எங்கும் பரவியது. பலர் வேதங்களைப் பயிலுவதற்கும், பிரம்மஞானத்தைப் பெறுவதற்கும், பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிப்பதற்கும் அவரிடம் வந்தனர்.
பண்டைக்காலத்தில் குருவிடமிருந்து பிரம்மச்சரியம் அனுஷ்டித்து பிரம்மவித்தையைக் கற்றார்கள். கல்விபெறும் பயிற்சி முடிந்தவுடன் சிலர் சிறந்த இல்லற வாழக்கையில் ஈடுபட்டார்கள். இன்னும் சிலர் வாழ்க்கையில் மேலாம் நிலையில் இருக்கும் சந்நியாச வாழ்க்கையில் இறங்கினர். சந்நியாச வாழ்க்கை உயர்ந்தது எனினும் இல்லற வாழ்க்கையில் இருப்பது இன்னும் பலருக்கு உதவிபுரிவதற்கு அனுகூலமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவ்வாழ்க்கையில் சிலர் ஈடுபட்டார்கள். இல்லற வாழ்க்கையில் இறங்கியவர்களுள் ஸத்தியகாமனும் ஒருவர். கெளதம முனிவரிடமிருந்து பிரம்ம வித்தையைக் கற்றான பிறகு அழகான ஸ்திரீயை மணந்து கொண்டார். அம்மாது சமயக் கொள்கையிடத்தும் கணவரிடத்தும் பக்தி நிரம்பப் பெற்றவராக இருந்தார். ஸத்தியகாமருடைய ஆச்ரமத்துக்கு வந்த பிரம்மசாரிகள் அம்மாதுவிடமிருந்து தாய் அன்பைப் பெற்று வந்தார்கள். தங்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்ட காலத்து அம்மாதுவிடமிருந்து அவர்களுக்கு மனச்சாந்தி கிடைத்து வந்தது. அம்மாது ஆச்ரமத்தில் இருந்ததால் கட்டுப்பாடான ஆச்ரம வாழ்க்கையும் உள்ளத்துக்கு உவந்த வாழ்க்கையாக அமைந்திருந்தது.
அவ்வாச்ரமத்தில் ‘உபகோஸலர்’ என்னும் வாலிப பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளாக அவ்வாச்ரமத்தில் வசித்திருந்து தமக்கு அமைந்த கடமையை முறையாகக் கவனித்து வந்தார். கல்விக்குரிய காலம் முடிந்ததும் மற்ற பிரம்மசாரிகள் அவர்களுடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உபகோஸலருக்கோ பிரம்மஞானமும் உபதேசிக்கப்படவில்லை; வீடு செல்லுவதற்கு அனுமதியும் தரப்படவில்லை. உபகோஸலரிடம் ஸத்தியகாமர் இங்ஙனம் பாராமுகமாக இருந்ததற்குத் தகுந்த காரணம் உண்டு. அக்காரணம் ஸத்தியகாமர் ஒருவருக்குத்தான் தெரியும். ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்து கொண்டே போயின. ஆனால் உபகோஸலர் நிலைமட்டும் அதேமாதிரி தான் இருந்தது. உபகோஸலர் ஏமாற்றமும் துன்பமும் அடைந்தார். இவருடைய நிலைமையை ஸத்தியகாமருடைய மனைவி அறிந்து, இவர்மீது அனுதாபம் கொண்டாள். ஸத்தியகாமரிடம் உபகோஸலர் என்னும் பிரம்மச்சாரி நீண்டகாலம் சிறந்த தபசு செய்து வந்திருக்றார். அவருக்கு நீங்கள் உபதேசம் செய்தாக வேண்டும் என்று விநயமாகக் கேட்டுக் கொண்டாள். மனைவியின் வேண்டுதலைக் கேட்டும் உபகோஸலருக்கு உபதேசம் செய்யாமலேயே ஸத்தியகாமர் நீண்டதொரு க்ஷேத்திர யாத்திரை புறப்பட்டு விட்டார்.
காரியமாகிய இப்பிரபஞ்சத்திற்குக் காரணமாக இருப்பவர் கடவுளே என்பதை ஞானிகள் நன்கு அறிவர். ஆகையால் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் கடவுளின் தோற்றம் என்பது வெளிப்படையாகிறது. இப்பிரபஞ்சத்தில் மனிதன் எதைக் கடவுள் சொரூபமாகக் கருதி உபாசித்து வருகின்றானோ அதன் மூலம் கடவுள் உரிய காலத்தில் அவனுக்கு ஞானத்தைப் புகட்டுகின்றார். அக்கினி வழிபாடு செய்து வந்த உபகோஸலருக்கு உரிய காலத்தில் அந்த அக்கினியே உபதேசம் செய்யும் என்று எண்ணியே ஸத்தியகாமர் யாத்திரை சென்றார்.

உபகோஸலருக்கு வாழ்க்கையில் அது இருள்சூழ்ந்த காலமாகத் தென்பட்டது. இருளைப் பின்தொடர்ந்து வெளிச்சம் வருகிறது என்பதை விடியற்காலைநேரம் விளக்கிக் காட்டுவது போன்று அவருடைய வாழ்க்கையிலும் ஞானஒளி ஏற்படப் போகிறது என்பதற்கு அறிகுறியாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. ஹோமாக்கினிக்கு முன் ஆழ்ந்த நிஷ்டையில் உபகோஸலர் அமர்ந்திருந்தபொழுது அந்த அக்கினி மூன்று வடிவங்கள் மூலமாக அவருக்கு உபதேசம் செய்ய முன்வந்தது. இது அவருடைய முழுக்கவனத்தையும் ஈர்த்தது. அக்கினியிடம் இருந்து வந்த ஓசையை உபகோஸலர் கவனமாகக் கேட்டார். பிராணன் பிரம்மம், ‘க’-பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்று அக்கினி உபதேசிப்பதாக உணர்ந்தார். ‘க’- பிரம்மம், ‘க்க’-பிரம்மம் என்பதன் பொருள் அவருக்கு விளங்கவில்லை. அவற்றிற்கான விளக்கம் அக்கினி தேவதை உரைப்பதை அவர் மேலும் கேட்டார். ‘க’ என்னும் அக்ஷரமும் ‘க்க’ என்னும் அக்ஷரமும் ஒரே பொருளைக் குறிப்பதாகும் என்று அக்கினி தேவதை மேலும் விளக்கியது. ‘க’ என்னும் அக்ஷரம் சுகத்தையும், ‘க்க’ என்னும் அக்ஷரம் ஆகாசத்தையும் குறிக்கும். சுகத்துக்கு ஆதியும் அந்தமும் உண்டு. பிரம்மத்துக்கு ஆதியும் அந்தமும் இல்லை. ஆகாசம் அசேதனப் பொருள். பிரம்மமோ சேதனப் பொருள். எனவே அவ்வக்ஷரங்கள் எப்படி பிரம்மம் ஆகும் என்று எண்ணிப் பார்த்தார். ஆழ்ந்த தியானத்திலிருந்து அவற்றிற்கு விளக்கம் காண முயன்றபொழுது அவற்றிற்குரிய விளக்கம் அவருடைய உள்ளத்தில் உதித்தது. புலன்களின் மூலம் எட்டும் விஷய சுகம் சாசுவதமானதன்று. ஹிருதய குகையில் விளங்கும் ஆசுகம் அழியாதது. அதுவே பிரம்ம சுகம் ஆகிறது. அக்கினி உபதேசித்த சுகம் ஹிருதயகுகையில் விளங்கும் சுகத்தைக் குறிக்கவேண்டும், வெளியிலுள்ள ஆகாசம் ஜட ஆகாசமாகிறது. எனவே அது பிரம்மத்தைக் குறிக்காது. ‘சிதாகாசம்’ என்னும் ஆனந்தமயமான ஆகாசம் நம்முள் இருக்கிறது. ஆகாசம் என்ற சொல் அதையே குறிக்கவேண்டும். இங்ஙனம் அக்கினியின் உபதேசத்துக்கு உபகோஸலர் பொருள் கண்டார். மேலும் அவர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். அப்பொழுது இன்னும் சில அரிய கருத்துக்கள் அவருக்குத் தெளிவாயின. வெட்டவெளியைப் பிளவுபடுத்த முடியாது. ஓர் அறைக்கு உள்ளிருக்கும் வெட்டவெளியும் அறைக்கு வெளியில் இருக்கும் வெட்டவெளியும் அறையின் சுவரினுள் இருக்கும் வெட்டவெளியும் ஒன்றேயாம். இங்ஙனம் ஹிருதய குகையில் இருக்கும் பிரம்மமும் பிரபஞ்சத்திலிருக்கும் பிரம்மமும் ஒன்றேயாகும். பிரம்மசுகத்தைப் புறஉலகப் பொருள்கள் எதனிடத்திருந்தும் பெறமுடியாது. பிரம்மம் ஒன்றினிடத்து இருந்தே பிரம்ம சுகத்தைப் பெறமுடியும். அப்பிரம்ம சுகம் பிரம்மத்தை அறிகின்றவர்களுக்கே உரியதாகும்.
ஸத்தியாகாமர் தன்னுடைய யாத்திரையை முடித்துக்கொண்டு ஆச்ரமத்திற்குத் திரும்பினார். அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த பிரம்ம தேஜஸ் விளங்குவதைக் கண்டார். அக்கினியிலிருந்து அவருக்குக் கிடைத்த உபதேசத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். ஸத்தியகாமர் மேலும் அதை அவருக்குத் தெளிவுபடுத்தினார். இங்ஙனம் உபகோஸலருக்கு ஸத்தியகாமர் ஞானவாழ்வை நல்கினார். உபகோஸலரும் ஸத்தியகாமரை குருவாகக் கொண்டு ஞானத்தை அடையப்பெற்றவரானார்.
[இந்த ஞானியரின் வரலாறும் உபதேசங்களும் சாந்தோக்கிய உபநிஷதத்தில் உள்ளவை]

அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .

70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது

குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் . வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் ) லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது பசுமையான மின்சாரம் கொடுக்கும் பசுமையான திட்டம் வருக ... வெல்க

தமிழகத்திலும் நிறைய முயற்ச்சிகள் எடுக்கபடுகிறது .
காற்றாலைகளை நிறுவுகிறது பாரத் ஸ்டேட் வங்கி (SBI).
நாட்டில் முதல் முறையாக பொதுத் துறை வங்கியான பாரத்ஸ்டேட் வங்கி சொந்தப் பயன்பாட்டிற்காக தமிழகம் ,ஜதராபாத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றாலைகளை நிறுவுகிறது. தமிழகம் , மகராஷ்டிரா ,குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான மின்சாரத்தை தயாரிக்கும் நோக்கில் இம்மூன்று மாநிலங்களிலும் காற்றாலைகளை நிறுவ SBI திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூரில் சமீபத்தில் காற்றாலைகளைஇவ்வங்கி நிறுவியது. மற்ற மாநிலங்களில் இன்னும் நான்குமாதங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுவிடும்.

இதேபோல் அனைத்து தொழிற்ச்சாலைகள் மற்றும் தனியார்நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான மின்சக்தியைதயாரிக்க அவைகளே முன்வந்தால் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் மின்சக்தி தட்டுப்பாடேஏற்ப்படாது.

அமெரிக்காவும் வால்மார்ட்டும்!!

ஒவ்வொரு வருடமும் ஒரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக $4000களை வால்மார்ட்டில் செலவழிக்கிறது. அமெரிக்காவில் வேறு எந்த நிறுவனத்தையும் காட்டிலும்,வால்மார்ட் மிக அதிகளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு $4 களிலும் $1 வால்மார்ட்டில் மளிகைப்பொருட்கள் வாங்கச் செலவிடப்படுகிறது.

எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒன்று: 2001 லிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால் அமெரிக்காவில் 1,33,000 உற்பத்தி வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன என்று தெரிவிக்கிறது.

வால்மார்ட் கம்பெனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் 'மருத்துவ வசதி' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,அவர்களது மருத்துவச் செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது.வால்மார்ட் கம்பெனி அல்ல!

96% அமெரிக்கர்களுக்கு 20 மைல்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கை 60,000 சரிந்துவிட்டது.

2011 ஆம் ஆண்டில் வால்மார்ட் 'அரசியல் லாபி' செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்தது.இதை செண்டர் பார் ரெஸ்பான்ஸிவ் பொலிடிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது.இந்தத் தொகையில் பிரச்சாரச் செலவுகள் சேர்க்கப்படவில்லை;

வால்மார்ட் கம்பெனியின் வெறும் ஆறு குடும்பங்களின்(பங்குதாரர்கள்) ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30% அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்குச் சமம்.

மேலும் சில அவசியமான தகவல்கள்:இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடிகள்;அமெரிக்காவின் ஜனத்தொகை வெறும் 30 கோடிகள்.

இந்தியாவின் டீன் ஏஜ் எண்ணிக்கை 1.1.2012 அன்று 35 கோடிகள்.

இந்தியாவில் இருக்கும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை 4 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த 4 கோடி பெட்டிக்கடைகளால் 12 கோடிப் பேர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அரசியல் பின்பலத்தால் இம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்களால் நாம் ஏமாற்றப்படுகிறோம் இந்தியர்கள் உணரும் முன்பே இதுமாதிரியான பன்னாட்டு நிறுவனபூதங்கள் உலகம் முழுவதும் சம்பாதிக்கும் மொத்த லாபத்தை விடவும்,குறைந்தது நான்கு மடங்கு இந்தியாவில் சம்பாதித்துவிடும்.இது நவீன காலனியாதிக்கமே! இவைகளின் ஓராண்டு லாபம் இந்தியாவைத் தவிர்த்து 9,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் அரசியல் விழிப்புணர்வோடு இருப்பான்;நாம் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளின் மயத்திலிருந்து மீளவே மாட்டோம்;

கைகளை மடக்கி கடவுளை பார் ! ,

    வதாரங்கள் என்று வந்துவிட்டாலே மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களை பற்றி மட்டுமே பலருக்கு தெரியும் சிவபெருமான் அவதாரங்கள் எடுத்திருக்கிறாரா? இல்லையா? என்று ஒருவர் கூட யோசித்து பார்த்து கேள்விகள் கேட்டிருக்க மாட்டோம். போக சுகத்தை அள்ளித்தந்து முக்தி தருகின்ற பெருமாள் மட்டுமல்ல யோக மார்க்கத்தை மனிதகுலத்திற்கு தந்த சிவபெருமான் கூட சில அவதாரங்களை எடுத்திர்க்கிறார். சிவபெருமானின் அவதாரங்கள் பக்தர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அவ்வளவாக பேசபடாததற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஒன்று பெருமாளின் அவதாரம் போல் சிவனின் அவதாரம் மனதை சுலபமாக கவரக்கூடியதாக இல்லை இரண்டாவது சிவன் எடுத்த அவதாரங்கள் மிக கடினமான முக்தி வழியை காட்டுவதாக இருப்பது. 

சிவபெருமான் விறகு வெட்டியாக பிட்டுக்கு மண் சுமப்பவராக சுந்தரரை தடுத்தாட்கொள்ள பித்தனாக பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது தஷ்ணாமூர்த்தி அவதாரமாகும். இந்த அவதாரத்தின் மூலம் சாதாரண மனிதன் தனது மனித நிலையிலிருந்து படிப்படியாக மாறி கடவுள் நிலையை அடைவதற்கான பல வழிவகைகளை அவர் சொல்லியிருக்கிறார். அதனால் தான் தஷ்ணாமூர்த்தி அவதாரத்தை யோக தஷ்ணாமூர்த்தி என்றும் ஜெகத்குரு என்றும் ஞானிகள் போற்றி வணங்குகிறார்கள். 

பகவான் தஷ்ணாமூர்த்தியாக வந்தபோது சனகாதி முனிவர்களுக்கு நான்மறையை உபதேசித்து உலக வாழ்வுக்கான சரியான இலக்கணம் என்று கருதபடுகிற அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கு தத்துவங்களையும் வரிசை படுத்தி சொல்லி முடித்து உலக வாழ்வில் பரிபூரண நிலையை அடைந்தவர்கள் இறைவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன வழிமுறையை பின்பபற்ற வேண்டும்? என்பதை நாளை சொல்கிறேன் நீங்கள் இன்று போய் நாளை வாருங்கள் அப்படி நீங்கள் வரும் போது எனது உபதேசம் வார்த்தைகளாக இருக்காது நீங்கள் அனுமானித்து புரிந்துகொள்ளும் வண்ணம் குறியீடாக இருக்கும் என்று கூறி அனுப்பி வைத்தார். 

மகாகுருவான ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி பகவானின் கட்டளையை ஏற்ற சனகாதி முனிவர்கள் அடுத்த நாள் சூரிய உதையத்திற்கு முன்பே குளித்து முடித்து சிவ சின்னங்களை அணிந்து குருநாதரை தரிசனம் செய்ய சென்றார்கள். அபோது அவர்கள் அங்கே கண்ட காட்சி மிகவும் வியப்பாகவும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணமும் இருந்தது. தென்முக கடவுள் யோக சமாதி நிலையில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கரமும் தொடைகளின் மீது மேல் நோக்கிய வாறு இருந்தது. கைவிரல்களில் ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் இணைந்திருக்க மற்ற மூன்று விரல்களும் தனித்தனியாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உரசாமல் பிரிந்து இருப்பதை கண்டார்கள். 

பிரிந்து நிற்கும் நடுவிரல் மோதிரவிரல் சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களும் ஆணவம், கர்மா, மாயை ஆகிய தத்துவங்களை குறிப்பதாகவும் அந்த மும்மலங்கள் விலகிய ஜீவாத்மாவாகிய ஆள்காட்டி விரல் பரமாத்மா என்ற கட்டை விரலோடு இணைந்திருக்கும் தத்துவத்தை புரிந்து கொண்டார்கள். அதாவது ஒரு மனிதன் கடவுள் நிலையை அடைய வேண்டுமானால் அவனுக்கு தவம் என்பது முக்கியம் அந்த தவத்திற்கு ஆசனமும் முத்திரையும் மிக தேவையானது என்பதை தஷ்ணாமூர்த்தி பகவான் சொல்லாமல் சொன்னார். ஆசனம் என்றால் என்னவென்று பலருக்கு புரியும் முத்திரை என்பதை பற்றி ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அதிலும் குறிப்பாக தஷ்ணாமூர்த்தி காட்டிய முத்திரையின் அடையாளம் சின்முத்திரை என்பது வெகு சிலருக்கே தெரியும்.

முத்திரைகள் பல உண்டு அவற்றில் சின் முத்திரை என்பதை முத்திரைகளின் தலை ராஜ முத்திரை என்றே சொல்லலாம். கோவில்களில் உள்ள தெய்வங்களின் திருவுருவ சிலைகள் எதாவது ஒரு முத்திரையை காட்டியவண்ணம் இருப்பதை நாமறிவோம். இந்த முத்திரைகள் அழகுக்காக சிற்பங்களின் கலைத்தன்மையை எடுத்து காட்டுவதற்காக அமைக்கப்பட்டது அல்ல அதில் பல அற்புதமான சங்கதிகள் அடங்கி உள்ளன. நமது முன்னோர்கள் கடுகை தரித்து கடலை புகுத்துவதில் வல்லவர்கள் மிக சிறிய காரியத்திற்குள்ளேயே மிகபெரிய விஷயங்களை அடக்கி விடுவார்கள். அதே நேரம் அறிவை உழைத்து பெற எவன் தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானோ அவனுக்கு மட்டுமே உண்மைகள் விளங்க வேண்டும் என்ற கருத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து பல விஷயங்களை சூசகமாகவே தெரிவிப்பார்கள். அவற்றில் ஒன்று இந்த சின்முத்திரை. 

முத்திரைகள் ஒவ்வொன்றும் உலகத்தில் உள்ள ஜீவராசிகளை இயக்குகின்ற தேவதைகளை அல்லது தெய்விக சக்திகளை குறிப்பதாகும். தெய்வ உலகத்தோடு மனித ஜென்மங்கள் தொடர்பு வைத்து கொள்ள முத்திரைகள் காரணமாக இருக்கிறது அதாவது கண்ணுக்கு தெரியாத தெய்வீக சக்திகளுக்கும் நமக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்துவது முத்திரைகளே இந்த முத்திரைகளின் பயனாகவே மனிதனின் பிராத்தனைகள் தெய்வ சக்திகளிடம் சென்றடைந்து அவர்கள் தருகின்ற அருள்சக்தி நம்மிடம் வந்து சேருகிறது. இறைசக்திகள் நமக்கு தருகின்ற இத்தகைய ஆற்றலால் நாம் பெறுகின்ற பயன்கள் ஒன்றிரண்டு அல்ல ஏராளம் மிக குறிப்பாக சொல்வது என்றால் சின்முத்திரையின் மூலம் நாம் அடைகின்ற உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பயன்கள் நிறையவே உண்டு என்று சொல்ல்லலாம். 

ஒரு விரலை இன்னொரு விரலோடு சேர்த்து வைப்பதில் என்ன பெரிய பயன் கிடைத்துவிட போகிறது. என்று சிலர் நினைக்க கூடும். நானும் அப்படி தான் ஆரம்பகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் காலம் செல்ல செல்ல மனிதர்களை பற்றிய அனுபவ அறிவு முதிர்ச்சி அடையும் போது நமது முன்னோர்கள் சொல்லி சென்ற எந்த விஷயமும் தவறானது அல்ல மிகவும் பயனுடையது என்பதை புரிந்துகொண்டேன். ஹஸ்த ரேகை சாஸ்திரம் என்ற கைரேகை சாஸ்திரத்தை நான் படிக்கும் ஆரம்ப கட்டத்தில் அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் எனக்கு வியப்பை தந்தன. ஆனால் அவைகளை அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பெரிய உண்மைகள் பல எனக்கு தெரிந்தன.

உதாரணமாக இரண்டு கைகளையும் எப்போதும் ஆடைகளுக்குள் மறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை பழிவாங்குவதில் கொக்கை போல காத்திருப்பார்கள் என்றும் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு நடப்பவர்கள் ஆளுமை தன்மை அதிகமாக உடையவர்கள் என்றும் படித்திருக்கிறேன். அதை பரிசோதனை செய்து பார்த்த போது அது வெறும் படிப்பல்ல அனுபவ சத்திய வார்த்தை என்பதை தெரிந்து கொண்டேன். அதே போலவே சாதாரணமாக விரல்களை மடக்காமல் கைகளை துவைய வைத்து கொண்டிருந்தால் மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும் மட்டுமே வரும் உறுதி இருக்காது மன உறுதி அடைய வேண்டுமானால் வேலை நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் கைகளை இறுக மூடிக்கொள்ள வேண்டும் அதுவே பழக்கமாகி விட்டால் நாளடைவில் அசாத்தியமான மன துணிச்சல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதை என் சொந்த வாழ்விலும் கடைப்பிடித்து அதனால் நல்ல பலனை இதுவரை பெற்றும் வருகிறேன். 

அதன் அடிப்படையில் முத்திரையை பற்றி நமது முன்னோர்கள் சொல்லியிருக்கும் சங்கதிகளை நாம் புறக்கணித்து விட கூடாது. அவைகளை பயன்படுத்தி பல நல்ல பலன்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் மேற்குலக விஞ்ஞான ஆய்வு படி சின்முத்திரையை நாம் முறைப்படி செய்தால் உடம்பில் இரத்த ஓட்டம் சுறுசுறுப்பாக இருக்கும் கோபம் குறைந்து மன இறுக்கம் மறையும் நல்ல நினைவாற்றல் ஏற்படும் தூக்கமின்மையும் அதீத தூக்கமும் பக்கத்திலயே வராது. மனநோய் கூட குணமாகிவிடும் என்று சொல்லபட்டிருக்கிறது. 

நமது நாட்டு ஞானிகள் சின்முத்திரையை அன்றாட வாழ்வில் சிறந்த பழக்கமாக கொண்டால் மனம் எப்போதுமே மகிழ்வாக இருக்கும் துக்கம் என்பதே நம்மை தீண்டாது மன ஒருநிலைப்பாடு ஏற்படுவதனால் பிரபஞ்ச ரகசியத்தையும் இறைவனோடு ஐக்கியமாகும் நிலையையும் மனிதன் பெறலாம் என்று சொல்கிறார்கள். இது நம்மை திருப்தி படுத்துவதற்காக சொல்லப்பட்டவைகள் அல்ல நம் வாழ்வை சீரமைப்பதற்காக கூரியவைகளே ஆகும். இது உண்மையா? பொய்யா? என்பதை அறிந்துகொள்ள நடைமுறைபடுத்தி பார்க்கலாம். 

நீங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது பேருந்து பயணத்திலோ இருக்கும்போது கூட ஆள்காட்டி விரலையும் கட்டைவிரல் நுனியையும் இணைத்து வைத்து பாருங்கள் இந்த பழக்கம் தொடர தொடர உங்கள் மனவளம் வளருவதை கண்கூடாக காண்பீர்கள். சாதாரண பலன்கள் வேண்டாம் இறை அனுபவம் வேண்டும் என்பவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரையை பழகி பாருங்கள் இறைவன் என்ற மகர ஜோதி உங்கள் புருவ மத்தியில் சுடர்விடுவதை காண்பீர்கள்.

Saturday, October 20, 2012

20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என்ஜினீயர்கள் சாதனை!

சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனி அது பற்றி கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி அமெரிக்க ‘ஏரோ நாட்டிக்கல்’ என்ஜினீயர்கள் வடிவமைத்துள்ளனர்.

ரோடுகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானம் ஆக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.

2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம். பின்னர் இதை தரை இறக்கும் போது மீண்டும் கார் ஆக மாற்றி வீட்டின் போர்டிகோவில் பார்க்கிங் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ரயில்வே தான்

உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பறையாக இந்திய ரயில்வே விளங்குவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் உலகிலேயே குப்பைகளின் தலைநகராக இந்தியா விளங்குவதாகவும், இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நிலவும் சுகாதாரமின்மை குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு 1.1 கோடி பேர் பயணிக்கும் ரயில்வே தான் உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறையாக திகழ்கிறது.

50,000 ரயில் பெட்டிகளில் வெறும் 436 பெட்டிகளில் தான் இப்போது பயோ-டாய்லட் எனப்படும் சுத்தமான கழிப்பறைகள் உள்ளன. மற்றவற்றின் கழிவு எல்லாமே வெளியே அப்படியே தான் வந்து விழுகிறது. இதில் ஆண்டுதோறும் புதிதாக 4,000 ரயில் பெட்டிகள் புதிதாக வேறு தயாரிக்கப்படுகின்றன.

விரைவில் பிரான்சிடமிருந்து 20 பில்லியன் டாலர் செலவில் 126 போர் விமானங்களை வாங்கவுள்ளோம். இதில் ஒரு விமானத்தின் பணத்தை செலவிட்டாலே 1,000 கிராமங்களை கழிப்பறை பிரச்சனையைத் தீர்த்துவிடலாம்.

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்துள்ள பயோ-டாய்லட் வசதியை இந்த கிராமங்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரக வளர்ச்சி, குடிநீர், சுகாதாரத்துக்கு வெறும் ரூ. 90,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட்களை பொறுத்துவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை ஏற்க ஊரக வளர்ச்சித்துறை தயாராக உள்ளது. இதை ரயில்வே போர்ட் தலைவரிடம் தெரிவித்துள்ளேன் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

இதையடுத்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, பயோ-டாய்லெட் தொழில்நுட்பத்தைத் தர பாதுகாப்புத்துறையும் டிஆர்டிஓவும் தயார். ஆனால், ரூ. 1.93 லட்சம் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டது சரியே. அது நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடையது என்றார்.

இதைத் தொடர்ந்து விளக்கம் தந்த ஜெய்ராம் ரமேஷ், நான் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியதை தவறாகக் கூறவில்லை. ஆனால், டிஆர்டிஓ போன்ற ராணுவ ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கும் பயோ-டாய்லெட் போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்துக்கும் பெரிய அளவில் பயன்பட வேண்டும் என்றார்.

இவர்களை நம்பியா இருக்கிறோம்?

பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங் கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங் கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

போபால் பேரழிவுக்குப் பிந்தைய இந்த 28 ஆண்டுகளில், போபால் துயரத்தைக் கடந்து நாம் எவ்வளவோ தூரம் வந்திருக்கலாம். ஆனால், 'யூனியன் கார்பைடு நிறுவனம்’ பறித்த உயிர்களின் ஆன்மாக்கள் இந்தியாவின் மனசாட்சியைத் தொடந்து உலுக்கிக்கொண்டே இருக்கின்றன. 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தை ஆகிய கொடூரங்களை எல்லாம் தாண்டி, இன்னமும் விஷத் தைக் குடித்துக்கொண்டு இருக்கும் போபால் மக்களை இந்தியா எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட் கின்றன அந்த ஆன்மாக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வு, போபாலில் 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்ட இடத்தைச் சுற்றி மூன்று கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகி இருப்பதை உறுதி செய்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட பரிசோதனையோ, 'ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு வரை ரசாயனக் காரணிகள் அடங்கிய தண்ணீரைக் குடிக்கிறார்கள் போபால்வாசிகள்’ என்கிறது. ''இங்கு 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்டபோது, அது பூச்சிக்கொல்லியை உருவாக் கியது. அது மூடப்பட்ட பிறகு, புற்றுநோயாளி களையும் சிறுநீரக நோயாளிகளையும் உருவாக் கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் போபால்வாசிகள். காரணம், ஆலையைச் சுற்றி  பரவியிருக்கும் 350 டன் நச்சுக் கழிவுகள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்ற இறுதிக் கெடு விதித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கழிவுகளை அகற்றும் வழி தெரியாததால்,  25 கோடி நிதி ஒதுக்கி, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் (ஜி.ஐ.எஸ்.) இந்தப் பணியை ஒப்படைத்தது இந்திய அரசு. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை ஆகிய காரணங்களைக் காட்டி கடந்த வாரம் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம். இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது இந்திய அரசு. நம்முடைய லட்சணம் இதுதான்.

போபால் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது ஆலையில் இருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோசயனேட்’. குளிர் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய ரசாயனம் இது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், குளிர் சாதனங்களை இயக்குவதை ஆலை நிர்வாகம் நிறுத்தியதால் ஏற்பட்ட வெப்ப நிலை உயர்வாலேயே 'மெத்தில் ஐசோசயனேட்’ வெடித்து வெளியேறியது. 'மெத்தில் ஐசோசயனேட்’ ரசாயனத்தை எதிர்கொள்ள எளிய பாதுகாப்பு முறை ஒன்று உண்டு. மூக்கையும் வாயையும் ஈரத் துணியால் மூடிக்கொண்டு வாயு பரவும் திசைக்கு எதிர் திசையில் மெள்ள முன்னேறுவது. ஆனால், இந்த எளிய முன்னெச்சரிக்கைப் பயிற்சியைக்கூட ஆலையைச் சுற்றி உள்ள மக்களுக்கு ஆலை நிர்வாகமோ, அரசோ கொடுக்கவில்லை. இந்த அழிவுக்கு முன்பே ஆலையில் ஏராளமான விபத்துகள் நடந்தன; அவற்றை அரசு வழக்கம்போல் மூடி மறைத்தது. அழிவு நடந்த அடுத்த சில வாரங்களில் ஏராளமான மருத்துவக் குழுக் களைக் கண்துடைப்பாக அரசு அழைத்துச் சென்றபோது, அப்படி ஒரு சூழலை எதிர்கொண்ட பழக்கம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் முன் செய்வதறியாமல் நின்றார்கள் மருத்துவர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சூழல்கள் எல்லாம் இந்தியாவில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன?

வளர்ச்சியின் பெயரால் கொஞ்சமும் அறி முகம் இல்லாத எவ்வளவோ அபாயகரமான தொழில்நுட்பங்களுடன் இயங்கும் நிறுவனங் களை நாட்டில் அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாயகரமான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி ஆகின்றன. தவிர, உள்நாட்டிலும் உற்பத்தியாகின்றன அணுக் கழிவுகள் உட்பட. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறே கடக்கிறோம்.

யாரை நம்பி?
இப்படி ஒரு படுகொலையின் பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டு, ஏனைய உள்ளூர் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் வெறும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசை நம்பி. ஒரு தொழிற்சாலை விபத்து எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான எல்லா அனுபவங்களையும் 'யூனியன் கார்பைடு’ நிறுவனத்திடம் இருந்து பெற்ற பின்னும் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமான வகையில், அணு சக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றிய அரசை நம்பி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் நியாயமான இழப்பீட்டுக்காகப் போராடும் மக்களுக்கு, குடிக்கக்கூட பாதுகாப்பான தண்ணீரை வழங்காத அரசை நம்பி!

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;
1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறுசுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை 

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் 

மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.