Friday, March 15, 2013
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா இது ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் !!!
Sunday, February 24, 2013
வெயிலோடு விளையாடு!!!
Thursday, February 21, 2013
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆண்டால் இந்தியா திவாலா... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
பல பல தீவுகளையே, விலைக்கு வாங்கியதோடு உலகில் உள்ள, 30க்கும் மேற்பட்ட நாடுகளில், தங்களிடம் உள்ள பல லட்சம் கோடி பணத்தை தி.மு.க., தலைவர்கள் முதலீடு செய்து விட்டனர்.
காங்., தலைவர்களின், பல லட்சம் கோடியால், சுவிஸ் வங்கி, வீங்கித் தவிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட, பல லட்சம் கோடி இந்தியப் பணத்தால், "இத்தாலி' என்ற நாடே பெருத்த பெரும் பணக்கார நாடாக,"சீர்' பெற்று வருகிறது.
மேலும், ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்தியா பெற்றிருந்த வெளிநாட்டுக் கடன், வெறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனை மட்டுமே வைத்து விட்டு, 2004ல் தன் பதவியை விட்டுச் சென்றார் வாஜ்பாய்.
ஆனால், தொடர்ந்து கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவோடு ஆண்டு வரும் மத்திய காங்கிரஸ் ஆட்சி, 2004ல் இருந்த, 5 லட்சம் கோடி கடனை, இன்று அதாவது, 2013ல், 40 லட்சம் கோடி கடனாக, எட்டு மடங்காக உயர்த்தி, இந்தியர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
அதே நேரம், காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க., தலைவர்கள் என, எல்லாருடைய சொத்துக்கள், 10 மடங்குகளுக்கு மேல் உயர்ந்து, பல லட்சம் கோடியாக எகிறியுள்ளதை, 125 கோடி ஏமாளி இந்தியர்கள் நன்கறிவர்.
இதே காங்., கூட்டணியின் ஊழல் ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவின் பொதுக் கடன், 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து, இந்தியா திவாலாகி விடும் என்பதில் ஐயமில்லை.
இந்நிலை ஏற்படாமல் இருக்க, காங்கிரஸ் கூட்டணிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டி, தமிழகத்தில் உள்ள, 40க்கும் சைபர் என்ற படுதோல்வியைத் தர, 5.15 கோடி தமிழக வாக்காளப் பெருமக்கள் உறுதி பூண்டுள்ளனர்.
கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்...!
Saturday, February 16, 2013
ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
Thursday, February 14, 2013
டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!
வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.
டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.
அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.
உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.
டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.
டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph.
Tuesday, February 12, 2013
முற்றிலும் உண்மைச் சம்பவம். (விறுவிறுப்பானது)
இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடையேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது.
விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.
அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மண்ணிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள்.
சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச்சிறிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.
சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள், விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமற நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மண்ணிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பிந்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப் பெண்ணை பாராட்டினர்.
அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும் தலைமை விமானியும் நிறுவனத்தின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.
"மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்."
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!! :))
Wednesday, February 6, 2013
KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!
கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.
இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின.
விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது
THANKS TO
Stella Fathima
Saturday, February 2, 2013
"நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு" - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. 'இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. இதில் வெளியான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.
ஆய்வு சொல்லும் முடிவுகள்:
சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.
அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
ப்ரீத்தி ஷா சொல்கிறார் .
''ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெருநிறுவனங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமைப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.
உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!
Wednesday, January 30, 2013
மாடுகளுக்குத் தவிடு..மனிதர்களுக்கு சர்க்கரை !
Sunday, January 27, 2013
மனிதர்களை கண்டால் நிறம் மாறும் பூ!!!!!!
மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடும், சித்த ஆகம ஆராய்ச்சியாளர் ஈஸ்வரன்: முப்பது ஆண்டுகளாக, நானும், என் நண்பர்களும், பல முறை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குள், சென்று வந்திருக்கிறோம். கடந்த முறை சென்றபோது, இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளேயே, தங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. மலை உச்சியில், ஒரு மரம் நீல நிறப் பூக்களோடு அழகாய் காட்சியளித்தது. நீல நிற பூக்கள் இருந்த மரத்தை நோக்கி நடந்தோம். மரத்தை விட்டு தள்ளி இருந்த போது, எந்த மாற்றமும் தெரியவில்லை. மரத்தடியில், 10 நிமிடங்கள் இளைப்பாறிய போது பார்த்தால், நீலநிற பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில், "பளிச்'சென்று மாறின. அப்போது தான், முற்றிலும் மறைந்ததாக கருதப்பட்ட, காணக் கிடைக்காத, "சர்க்கரை வில்வ மரம்' அது என, தெரிந்தது. "காயாம்பூ' என அழைக்கப்படும் இந்த மரத்தின் பூக்கள், வெளிறிய நீல நிறத்தில் இருக்கும். 10 அடி தொலைவில், மனிதர்கள் யாராவது வந்தால், அதை உணர்ந்து பூக்கள், அடர் ஊதா நிறத்துக்கு மாறி விடுகின்றன. இப்படி ஒரு ஆச்சரியம், அறிவியலுக்கும் எட்டாதவையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் காணப்படும், ஒரு சில தாவரங்களும், விலங்குகளும், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. அரிய வகை, வரை ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன. இம்மலைக்கே உரித்தான, பல மூலிகைச் செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி, அகத்திய சித்த நூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த அரிய தாவரங்களில், " சர்க்கரை வில்வ மரமும்' ஒன்று. பல ஆண்டுகளாக, எவர் கண்ணிலும் படாததால், அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டது. ஒவ்வொரு முறை, மலைக்கு செல்லும்போதும், 50 மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். இந்த முறை சென்ற போது, மலையை சுத்தம் செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் குப்பையை நீக்கி, அங்கிருந்து எடுத்து வந்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையில், எண்ணற்ற மருத்துவ மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்!!!!!
மதுரை,: "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.
காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார்.வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.
இது பற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள் தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!' எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார். எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார்.
இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!
Wednesday, January 23, 2013
மூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.சுந்தர்ராஜன்,ஸ்ரீவி)
Friday, January 18, 2013
பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்
அன்றாட வாழ்வில் பல பெரிய நெருக்கடிகளை சூழ்நிலைகளும் அது சார்ந்த தன்மைகளுமே நமக்கு உருவாக்கிவருகிறது. தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட உணர்வும் உள்ளுக்குள்!
குடும்பத்துடன் சுற்றுலா சென்றால் கணவன்-மனைவி சுதந்திரமாக எதுவேண்டுமானாலும் செய்யமுடியுமா? சில துணிக்கடையில் பெண்/ஆண் துணிமாற்றுவதை கூட படம்பிடிக்கிறார்கள். இது தான் இன்றைய சூழலா?
ஹோட்டல் அறைகளில் சுதந்திரமாக இருக்க முடியுமா?. இவ்வளவு ஏன் சில பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பேருந்துகளில் கூட சுதந்திரமும் பாதுகாப்புகளும் குறைக்கப்பட்டும்,பரிக்கபட்டும் உள்ளதே?
நிம்மதியா குளிக்க முடியல, தூங்க முடியல. என்னய்யா உலகம் இது?
கேமராக்கள் மிகவும் துல்லியமான தரத்துடனும் அளவுகளில் சிறியதாகவும் இருப்பது பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
மேலுள்ள கேள்விகளுக்கு விடை என்ன தெரியுமா? நமது அலட்சியமும் விழிப்புணர்வு இல்லாமையுமே. உண்மைதானே?. மேலும் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் நடப்புகளை முன்வைத்து இதை தொடருகிறோம். இந்த பதிவு நல்ல நோக்கங்களுக்காக எழுதப்பட்டது.
பீப்ஹோல் ரிவர்சர்:
பீப்ஹோல் என்பது பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படுவது. ஹோட்டல் அறைகளிலும் இதுபோன்ற கருவி பொருத்தபட்டிருக்கும். வெளியில் நிற்பவர் யார் என்பதை எளிதில் பார்பதற்கு இது பயன்படுகிறது.
‘பீப்ஹோல் ரிவர்சர்’ என்பது ஒரு வீடியோ கேமராவாகவும் பயன்படுத்தபடுகிறது. இது எளிதாக கதவுகளில் பொருத்தபடுகிறது. அறையில் உள்ளேயும்,வெளியேயும் எளிதில் படம்பிடித்துவிடும்.
இது படம்பிடிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்:
துணிய போட்டு மூடுங்க! அல்லது சூயிங்கம் போன்ற ஒட்டும் வகையிலானதை பயன்படுத்தி அதை மறைத்து விடுங்கள்.
ஸ்க்ரூ கேமரா:
பார்த்தவுடன் மிகவும் அதிர்ச்சியளுக்கும் வகையிலாக இருந்தது. சாதாரணமாக எல்லா இடங்களிலும் உபயோகிக்கப்படும் ‘ஸ்க்ரூவில்’ கேமரா இருந்தால் என்னதான் செய்வது?
இந்த வகை கேமராக்களை டிவி, டேபிள், கட்டில், கதவு என எல்லா இடங்களிலும் எளிதில் பொருத்திவிடமுடியும்.கண்டிப்பாக இதுபோன்ற கேமராக்களை கண்டறிவது மிகவும் கடினமானதே.
சற்று பெரிதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் ‘ஸ்க்ரூக்களை’ உடைத்தே விடுங்கள்.
பேனா மற்றும் கண்ணாடி கேமரா:
ஆங்கில திரைப்படங்களில் காட்டுவதைப்போல பேனா மற்றும் கண் கண்ணாடியிலும் கேமராக்கள் வைத்து வேவுபார்க்கிறது வக்கிர வர்க்கம். சில அறைகளில் சாதாரணமாக கிடக்கும் பேனா போன்றவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்.
இவையிரண்டும் வீடியோ ரெகார்ட் செய்து உடனுக்குடன் இணைப்பில்லாத இணையம் வாயிலாகவும் அனுப்பக்கூடியது. இதன் தரம் திரைப்படங்கள் எடுக்கும் அதிநவீன கேமராக்களுக்கு சமம் என்பதை நினைவில்கொள்க.
ஃபைபர் கேமரா:
ஃபைபர் கேபிள் என்ற இணைப்புகளுக்கு பயன்படுத்தும் அதிநவீன தரவுகள் பரிமாறும் ஒயரால் ஆனா கேமரா இது. இந்த வகை கேமராக்கள் எந்த சிறிய இடத்திலும் நுழையக்கூடியது. மேலும் குளிர்சாதன பெட்டி, ஃபேன் மற்றும் மின் விளக்குகளில் கூட இதை எளிதில் பொருத்தமுடியும்.
அதேபோல் இதன் துல்லியமும் மிகவும் அசாத்தியமானது. இது இணைப்பில்லாமல் பயன்படுத்த முடியாது. எனவே சற்று முயற்சி செய்தால் கண்டுபிடிப்பது எளிதே!
நைட் விஷன் கேமரா:
இந்த கேமரா இரவின் இருள் தருணங்களில்கூட தெளிவாக படம்பிடிக்கும் தன்மையுடையது. இதன் தரமும் துல்லியமும் மிகவும் அபாரம். இருட்டில் உள்ளதையும் சாதாரண படங்கள்போலவே இந்த கேமராவால் படம்பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது அளவில் பெரியதாக இருப்பதால் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதுபோன்ற சாதனங்கள் எங்காவது மறைத்துவைத்து படம்பிடிப்பார்கள். முயற்சி செய்தால் மிக எளிது.
Tuesday, January 8, 2013
சிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக்குகிறது!
1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், சிக்கன தினம் கொண்டாட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அக்.31ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். இது, வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதையே குறிக்கும். அதாவது, அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது என அர்த்தம். சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழிலுக்கும் மூலதனம்.
செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களை குறிக்கும். இது வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சிக்கனம் என்பது, தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.
ஆடம்பரம் என்பது, வசதியானவன் என அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களைப் போல இருக்க வேண்டும் என நினைத்தும் தகுதியை மீறி செலவு செய்வது. நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது கண்மூடித்தனமாக, தேவையில்லாத செலவுகள் செய்வது. இது அழிவுப்பாதைக்குத் தான் அழைத்துச் செல்லும்.
சேமிப்பு பழக்கத்தை எறும்பு, தேனீக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள், பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும் போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே சிக்கனமாக இருப்பதில் பயன் இல்லை. அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான், சேமிப்பு உருவாகும். இன்று வரை, "சிக்கனம் என்றால் என்ன" என கேட்பவராக இருந்தாலும் பராவாயில்லை. உடனே சேமிக்க தொடங்குவோம். எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருப்போம்.
Sunday, January 6, 2013
என்றும் மக்கள் மனதில் உ.சகாயம் ஐ.ஏ.எஸ் !!
| கற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே! சிறுவயதில் என்ன நமக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறதோ, அது தான் ஆழமாக மனதில் நிற்கும். இவர் இந்த நிலையில், இத்தனை நல்லவராய் இருக்க முக்கியக் காரணம் இவரது தாய் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? சிறுவயதில், கீழே விழுந்து கிடந்த மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வந்து இவர் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த மாம்பழம் இவர்களுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணத்தால், அதைத் தூக்கி ஏறியச் செய்திருக்கிறார் அவரது அம்மா. மற்ற சிறுவர்களும் மாம்பழம் எடுத்துச் சென்றதாகச் சொல்லி இருக்கிறார் இவர். எல்லோரும் செய்தார்கள் என்பதால், தவறு என்றுமே சரியாகிவிடாது, என்று அறிவுரை சொல்லி இருக்கிறார், அம்மா. அன்று அம்மா சொன்னதன் பயன் தான் இன்று, இவ்வளவு நேர்மையானவராக நிற்கிறார், நிமிர்ந்து நிற்கிறார் நமது சகாயம் அவர்கள். கொள்கை: ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே, "உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து" “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை. இவரது தன்னலமற்ற நல்ல சேவைக்குக் கிடைத்த பெரிய பரிசு என்ன? நாம் அறிந்தது போல,பதினெட்டு முறை வேலை மாற்றம் இருபது ஆண்டுகளில்! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பத்தொன்பது முறை இருபத்தி ஒரு ஆண்டுகளில்! இது போல் நல்ல நல்ல பரிசுகளை எல்லாம், உயர்ந்த சேவை செய்பவர்களுக்குக் கொடுக்க, இங்கு நம் நாட்டில் தானே முடியும்? ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் சகாயம் அவர்கள். மாணவர்களோடு பேசும் போது, மாணவர்கள் யாராவது நானும் உங்களைப் போல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று சொன்னால், " இன்று நீங்கள் நேர்மையாக இருப்பேன் என்று சொல்வது எளிது, ஆனால், இறுதி வரையில் உங்கள் வேளையில் நீங்கள் நேர்மையாக இருப்பீர்களா?" என்று கேட்பாராம். ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன? ஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு - அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் "யூனிட்டிற்கு" "சீல்" வைத்திருக்கிறார். அப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், "சீல்" வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், "இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்", என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார். தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார். பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, "சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க", இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார். மதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா? திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார். இன்று நடந்து கொண்டிருக்கும் "கிரானைட் ஊழல்" வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம். எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது. ஆற்றிய பணிகள்: தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர் நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர் கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர் சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர் நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் மதுரை மாவட்ட ஆட்சியர் கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது) சொந்தம்: ஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம். பெற்றோர்: உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள். மனைவி: விமலா. பிள்ளைகள்: யாழினி, அருண். இவர், இவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம். இன்னும் வருங்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்னொரு பெண் சகாயம் அவர்களை. இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே? அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்! நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒருவர் தற்போது கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்.... |





