Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Thursday, January 10, 2013

உங்கள் Laptop இன் Battery Life ஐ அதிகரிக்க சில 10 வழிகள்.

laptop-battery-lifeமுதலில் நேற்று எந்த வித இடுகைகளையும் இடவில்லை. ஞாயிற்று கிழமை மட்டும் பதிவிற்கு விடுமுறை. அனேகமாக தற்போது அதிகமானவர்கள் லாப்டாப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள்.

நீங்கள் உங்கள் லாப்டாப் இன் battery பற்றி கவலை படுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அது கட்டாயமான ஒன்றாகும். எனென்றால் ஒரு ஐந்து நிமிடத்தில் உங்களின் முக்கியமான ஒரு வேலை low battery காரணமாக தடைப்பட்டு விடலாம். எனவே உங்களுக்கு இப்போது சில வழிகளை கூறப்போகிறேன்.

Ubuntu ஐ பயன்படுத்துங்கள் : அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் battery மற்ற OS பயன்படுத்தியபோது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும்.

Wireless சாதனங்கள் : உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி battery இன் வாழ்கையை தின்னும் என்று. இதில் முக்கிய அறிவுரை என்ன வென்றால் battery ஆனது charge இல் இருக்கும் போது Wi-fi மற்றும் bluetooth என்பன பாவனையில் இல்லாதபோது அவற்றை off செய்யவும்.

திரை விளைவுகளை செப்பம் செய்தல் : battery கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால், திரையின் brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக்கொள்ளுங்கள்.

USB மற்றும் CD/DVD : இவையும் wireless போலதான், I mean இவாறான சாதனங்கள் பாவனையில் இல்லாதபோது அவற்றை துண்டித்து விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ லாப்டாப் இல் charge போடுவது ஒரு சரியில்லாத வேலைதான்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAM : குறிப்பாக சொல்லபோனால் RAM இன் தொழில்பாடு மிகையானால் அது தற்காலிக விளைவாக உங்கள் hard-disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் battery ஐ தின்னலாம். எனவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா RAM போட்டால் உங்கள் battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.

Background applications : உங்கள் கணனியில் background apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக messengers, clock apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.

Battery ஐ charge இல் போடும் நேரம் : battery எந்நேரமும் charge இல் போடுவது ஒரு தவறான வேலை. battery இல் உள்ள இலத்திரன்கள் ஒழுங்காக ஓடுவதை நிச்சயப்படுத்த நீங்கள் தூங்கும் போது வாரத்தில் ஒரு முறையாவது charge இல் இருந்து துண்டித்து விடுங்கள் .

Chrysanth WebStory Published by WebStory

Sunday, January 6, 2013

கிறுக்கல் விழுந்த CDகளிலிருந்து தகவல்களை பெற மென்பொருள்

நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள்.

அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும்.

சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம். நீங்கள் இந்த ( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும்.

அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும். இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

Chrysanth WebStory Published by WebStory

Thursday, July 12, 2012

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!! ( மறு பதிவு )

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

Saturday, March 17, 2012

கட்டற்ற மென்பொருள் (Free Open Source Software)

கட்டற்ற மென்பொருள் Free Open Source Software[FOSS] என்பது என்ன?
இன்று நாம் ஏன் அதைப்பற்றி பேசவேண்டும்?
கட்டற்ற மென்பொருள் open source software என்பது இலவசமாக கிடைக்கும் ஓர் மென்பொருள். FOSS என்பது விலையில் மட்டும் இலவசம் என்று கருத்தில் கொள்ளக்கூடாது. “சுதந்திரம்” என்பது மட்டுமே சுதந்திரங்களை தருகிறது. அவையாவன
0  – எவ்வித தடையும் இன்றி, எந்த ஒரு மென்பொருளையும் எங்கு வேண்டுமானாலும் உபயோகிக்க சுதந்திரம்.
1  – மென்பொருள் எப்படி வேலை செய்கிறது மற்றும் தெரிந்ததை மாற்றி உபயோகிக்க சுதந்திரம்.
2  – மாற்றி அமைத்த மென்பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விநியோகிக்க சுதந்திரம்.
3  – மென்பொருளை வளர்க்கவும், வளர்த்ததை பொதுமக்களிடம் வழங்கவும் ‘சுதந்திரம்‘.
இதன்  மூலம் FOSS என்பதனை விலையில் மட்டுமல்ல, நமக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சுதந்திரங்களையும் தரம் ஒரு சிறப்பான அமைப்பாகும்.
Microsoft-ம் ஏகாதிபத்தியமும்:-
இதுவரை  உலகின் முதல் (No. 1) பணக்காரராக விளங்கும் பில்கேட்ஸ் தொடங்கிய நிறுவனம் தான் ‘Microsoft’ இவரின் இந்த அதீத வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பிண்ணனிகளை நீங்கள் கேட்டால் அது உங்களை நிலைகுலையச் செய்யும். அது மிகவும் மனித நேயமற்ற செயல் மற்றும் அநீதி ஆகும்.
நாம்  இப்போது ஒரு கனிணி வாங்க  வேண்டுமெனில் அதற்கு ஆகும்  செலவு ரூபாய். 30,000/- தான் ஆனால் வெறும் கனிணியை வைத்துக் கொண்டு நம்மால் எதுவும் செய்ய இயலாது. அது இயங்க இயங்குதளம்(Operating System) என்று அழைக்கப்படும் ‘OS’ தேவை. உதாரணமாக Microsoft’s Windows ‘OS’ நமக்கு தேவையெனில் அதை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதன் விலை 7,500/- ரூபாய் ஆனால் வெறும் ‘OS’ வைத்துக்கொண்டும் நம்மால் ஏதும் செய்ய இயலாது.  ‘Home Edition’ எனப்படம் வீட்டில் மட்டும் உபயேகிக்கக்கூடிய ‘OS’ என்றாலும் அதை இயக்கக் தேவையான அடிப்படையான மென்பொளையும் நாம் விலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதுவும் சில வருட உபயேகத்திற்கு மட்டுமே, மற்றும் அப்படி விலைக் கொடுத்து வாங்கிய மென்பொருள்களை ஒரேயொரு கனிணிக்கு மட்டுமே நிறுவ வேண்டும் என்ற விதி உள்ளது மேலும் அதை நாம் யாருக்கும் இலவசமாகவோ பணத்திற்கோ விநியோகிக்கக் கூடாது, அண்ணன் தங்கையாக இருந்தாலும் கூடவே கூட!!!!!!!!!!!!!
மென்பொருள்களின் விலை:-
Microsoft Office – 15,000/-  Photoshop – 50,000/- Multimedia Editors – 50,000/-  Antiviruses – 1,500
Games – 3,000 இது போன்ற அடிப்படை மென்பொருள்களின் குறைந்தபட்ச தோராயமான விலை ஒரு லட்சம். இது நமது கனிணி இயந்திரத்தின் விலையை விட மூன்று மடங்கு அதிகம். இது வெறும் Home Edition  என்று கூறப்படும் வீட்டு உபயோகத்திற்கு மட்டும் ஆகும் செலவு.
இதுவே ‘Enterprise Edition’ எனில் ஒரு கனிணிக்கு தேவையான ‘OS’ -க்கு ஆகும் செலவு தோரயமாக ரூபாய்20,000/-  மற்றும் அடிப்படை மென்பொருள்களுக்கும் ஆகும் செலவு தோரயமாக ரூபாய் 1,50,000/- நமது நாட்டில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அதில் TCS, CTS, INFOSYS போன்ற நிறுவனங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 50,000கனிணிக்கள் உள்ளன(இருக்கலாம்) எனவே ஒரு நிறுவனம் சில குறிப்பிட்ட வருடங்களுக்கு செய்யும் செலவு ரூபாய் 75,00,000,000/- இது ஒரு நிறுவனத்திற்கு ஆகும் செலவு எனில் நமது நாட்டில் தோராயமாக 240000தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியும்!! 240000x75,00,000,000 என்று நீங்களே  கணக்கு போட்டு பாருங்கள். 1800000000000000! என்ன தலை சுற்றுகிறதா?! இவ்வளவு பெருந்தொகை  Microsoft போன்ற பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே செல்கிறது. இப்போது சொல்லுங்கள் நமது நாடு “ஏழை நாடா…”? நமக்கு பின் சுதந்திரம் வாங்கிய சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பெரும்பாலும் ‘FOSS’ எனப்படும் கட்டற்ற மென்பொருள் உபயோகிக்கின்றன. இந்நாடுகளின் வளர்ச்சி நமக்கு கண்கூடாகத் தெரியும்.
இவ்வளவு விவரங்கள் அறிந்தும் நம்மக்கள்  பலர் கட்டற்ற மென்பொருக்கு மாறாததன் காரணம் அவர்கள் Window எனும் மாயைக்கு அடிமையானததுதான் நம்மக்களுள் பலர் Pirate எனப்படும் திருட்டுத்தனமான மென்பொருளை மட்டுமே உபயோகம் செய்கின்றனர். இவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் Microsoft-ன் விதியின்படி முதல் குற்றப்பத்திரிக்கை அறிக்கை(FIR) போடக்கூடிய அளவுக்கு திருட்டு செயல் ஆகும். நாம் ஏன் இன்னும் திருடர்களாகவே இருக்க வேண்டும்.

தேவை மாற்றம் மட்டுமே:-

கட்டற்ற மென்பொருளின் நான்கு விதிகளின்  படி நீங்கள் இயங்குதளம் மற்றும் மென்பொருள்களை CD/DVD -ல் போட்டு இலவசமாகவோ/பணத்திற்கோ விநியோகம் செய்யலாம். LINUX என்பது கட்டற்ற மென்பொருளின் ஒரு முக்கியமான ‘OS’ ஆகும். LINUX ன் பெரிய பலம் என்னவெனில் அதனை VIRUS Attack செய்யாது. Windows வாடிக்கையாளர்கள் பெரிதும் பயப்படுவது ‘Virus’ களுக்கு மட்டுமே. ஆனால் ‘LINUX’ -ல் இந்த வார்த்தைக்கு இடமே இல்லை.
மேலும்  Microsoft-ன் எந்தவொரு தொழிற்நுட்பத்தின் உட்தகவலும் (Source code)  நமக்கு கிடைப்பதில்லை. இயந்திரங்களுக்கு மட்டும் புரியும் “BINARY CODE” களாக தரப்படுகிறது. ஆனால் ‘LINUX’ ல் “Source Code” நமக்கு தரப்பட்டு, நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உரிமம் தரப்படுகிறது.
நம்மக்கள் பெரும்பாலும் முயற்சி செய்வதே இல்லை ‘LINUX’ என்ற உடனே அதுவா? அதை இயக்க மிகவும் கடினம் என்ற எண்ணத்துடமே உள்ளனர். ஆனால் தற்போது மிகப்பெரிய மாற்றங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
LINUX -க்கு நீங்கள் புதியவரா? உங்களுக்கு உதவ இந்த ஒரு உலகமே காத்துகொண்டிருக்கிறது. அது ‘LUG’ எனப்படும் “LINUX USER GROUP”.இந்தியாவில் தற்போது எண்ணற்ற ‘LUG’ உருவாகிக் கொண்டு வருகிறது. இங்கு நமது சென்னையில் ‘ILUGC’ என்று அழைக்க படுகிற “Indian Linux user group chennai” எனும் குழுமம் சிறப்பாக செயல் பட்டுக் கொண்டு இருகிறது. http://ilugc.inஇங்கு சென்று ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும் உங்களுடைய LINUX தேவைகள்/கேள்விகள் பூர்த்தி செய்யக் காத்துக்கொண்டிருக்கிறது.
“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”
-எனும் வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

Tuesday, March 13, 2012

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஓர் புதிய டேப்லெட்!

Huawei S7 301c
ஹுவேயி நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஹுவேயி எஸ்7-301 சின் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமும் செய்து இருக்கிறது.
இந்த ஹுவேயி டேப்லெட்டில் ஏராளமான சாப்ட்வேர் மற்றும் ஹார்வேர் வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த புதிய டேப்லெட்டின் 7 இன்ச் டேப்லெட் 1280 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் திரை வண்ண டிஎப்டி தொடு வசதி கொண்டது. இந்த டேப்லெட்டின் மொத்த எடை 390 கிராம் மட்டுமே.
இந்த ஹுவேயி டேப்லெட் ஆன்ட்ராய்டு வி3.2.1 ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் ப்ராசஸர் 1.2 ஜிஹெர்ட்ஸ் கொண்ட க்வல்காம் ஸ்னாப்ட்ராகன் எம்எஸ்எம்8660 ஆகும். அதுபோல் இந்த டேப்லெட் 2592×1944 பிக்சல் கொண்ட 5 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் வீடியோ, ஜியோ டேக்கிங் மற்றும் ஆட்டோ போக்கஸ் போன்ற வசதிகளும் உண்டு. மேலும் 0.9 மெகா பிக்சல் கொண்ட துணை கேமராவையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் 1ஜிபி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சேமிப்பை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எஸ்டி கார்டு, மைக்ரோ எஸ்டிஎச்சி மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் போன்ற வசதிகளும் உண்டு.
இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் டபுள்யுலேன், வைபை 802.11பி, 802.11ஜி, 802.11 என், ப்ளூடூத் வி2.1 மற்றும் டேட்டா ரேட் போன்ற வசதிகளை அளிக்கிறது. ஆனால் இன்ப்ரேர்டு போர்ட் வசதி இந்த டேப்லெட்டில் இல்லை. மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் மற்றும் எ-ஜிபிஎஸ் சப்போர்ட் ஆகிய வசதிகள் இந்த டேப்லெட்டில் உண்டு.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த டேப்லெட் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர் போன்றவற்றைக் கொண்டுள்ளன. ஆனால் இதில் எப்எம் ரேடியோ இல்லை. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், மோனோ மைக்ரோபோனும் மற்றும் ஆடியோ ஜாக்கும் உண்டு. மின் திறனிற்காக இந்த டேப்லெட் 4100 எம்எஎச் சக்தி கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல் இந்த டேப்லெட் இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

நன்றி:  oneindia.com

மார்ச் 16 விற்பனைக்கு வரும் iPad3 பற்றிய அதிரடியான தகவல்கள்

Apple நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPad 3 என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே iPad 3 பற்றிய பல செய்திகள் வெளிவந்தமிருந்தன. iPad 3 யின் வடிவமைப்பு பற்றியும் பாகங்களின் செயல்திறன் பற்றியும் பல தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.


இப்போது iPad 3யின் வெளியீட்டு திகதியும் இன்னும் சில சுவாரஸ்யமான செய்திகளும் வெளியாகியுள்ளது.

பல புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் iPad3 உலகிலேயே முதன்முதலில் Bluetooth 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய Tablet ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் பாட்டரி iPad 2 வின் பாட்டரியை விட 70% வலு கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாதம் (மார்ச்) 16ம் திகதி குறிப்பிட்ட சில (10) நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து 25 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இதே வேளை இந்தியாவில் 2 மாதங்களின் பின்னரே விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சொல்லவா வேண்டும் :(  iPad 2 மற்றும் iPhone 4S போன்றன இரண்டு மாதங்களின் பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவில் ஆன்லைன் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. iPad 3 இன் விலை 600$ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆன்லைன் விற்பனை அதிகரித்ததால் புதிய ஆர்டர்கள் மார்ச் 19 ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Thursday, March 8, 2012

இனி எல்லாமே டேப்ளட் பிசி

லேப்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்புகளை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.
  1. மின்சக்தி பயன்பாடு: இதனைப் பொறுத்தவரை, டேப்ளட் பிசியின் அருகில் கூட லேப்டாப் வர முடியாது. டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு முழு நாள் கூட பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிக பட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
  2. வைரஸ்: ஒரு டேப்ளட் பிசி எந்த வைரஸ் தாக்குதலையும் கொண்ட தில்லை. மால்வேர் எதுவும் அதனைப் பாதித்ததில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.
  3. எடுத்துச் செல்ல எளிது: சட்டை அல்லது கோட் பாக்கெட், பாதுகாப்பாக சட்டைக்குள்ளாக என ஒரு டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எனவே ஏர்போர்ட், ஹோட்டல் விடுதி, டாக்ஸி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என எங்கும் எளிதாக டேப்ளட் பிசியைக் கொண்டு செல்ல முடியும். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், ஒரு டாக்சியில், மாடிப் படிகளின் கீழாக என எந்த ஒரு தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்த டேப்ளட் பிசிதான் சிறந்தது. ஏன், குளியலறையில் கூட வைத்து எளிதாக இயக்கலாம்.
  4. விலை: டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமாயின், இதன் விலை குறைவாக இருந்தால் தான் முடியும் என்பதனை டேப்ளட் பிசி யினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, லேப்டாப்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கில், அல்லது நான்கில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசி ஒன்றை வாங்க முடியும்.
  5. ஆன்லைன் நெட்வொர்க் தொடர்பு: கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, ஒரு டேப்ளட் பிசிக்கு 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெற முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி இணைப்பு உள்ள இடம் எங்குள்ளது என்று தேடி அலைய வேண்டியதில்லை. கிளவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற பணிகளுக்கான நெட்வொர்க் வழங்குவதற்காக, மேல் நாடுகளில் பல நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். அல்லது டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
  6. ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன்கள் ரெடி: டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இப்போதே கிடைக்கின்றன. பெரும்பாலான பயனுள்ள அப்ளிகேஷன்கள் இலவச மாகவே தரப்படுகின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்.
  7. எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது.
  8. புளுடூத் இணைப்பு: ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன. இதனால், குழப்பமான இணைப்புகளுடன் நாம் போராட வேண்டியதில்லை.
  9. உடனடி இயக்கம்: எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே, போகிற போக்கில் பல செயல்பாடுகளை ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்ள முடியும்.
  10. சமுதாய இணைய தள இணைப்பு: வர்த்தகம் மற்றும் அலுவலக ரீதியான பணிகளுக்கு சமுதாய இணைய தள இணைப்பு தேவையில்லையே! எனச் சிலர் எண்ணலாம். அவை வர்த்தக நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதனை, அவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிவார் கள். அதனால் தான் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள், சமுதாய தளங்களில் தங்களைப் பதிந்து கொண்டு வருகின்றன. இந்த வகையில், ஒரு டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்க முடியும்.
லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசி என எடுத்துக் கொண்டால், நிச்சயம் டேப்ளட் பிசிதான் பின்னாளில் நிலையாக இயங்கப் போகிறது என்பது உண்மை. ஆனால் அந்த நாள் விரைவிலா அல்லது சில ஆண்டுகள் கழித்தா என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்து அமையும்.
நன்றி: தினமலர்

2012ல் கம்ப்யூட்டரும் இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

1. விண்டோஸ் 8:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது.
இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.
 
2. குரல் வழி கட்டளை:
தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம்.
 
நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.
 
பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம்.
 
இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு:
இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது.
 
ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
 
4. தொலைக்காட்சிகளில் மாற்றம்:
தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும்.அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும்.
 
5. டிஜிட்டல் ஸ்டோர்கள்:
இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன.
 
6. தடிமன் குறையும்:
டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும்.
 
7. அனைத்திலும் டேப்ளட் பிசி:
சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும்.
 
8. ஒருவரோடு ஒருவர்:
இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.
 
எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.
 
நன்றி: தெரிஞ்சுக்கோ.காம்