Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, February 21, 2013

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆண்டால் இந்தியா திவாலா... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொதுக் கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி பிராத்' என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, உலகப் பொருளாதார விற்பன்னர்கள் எனக் கூறிக் கொள்ளும், நிதியமைச்சரும், பிரதமரும், இந்திய தேசத்தை வெளிநாட்டவர்களுக்கு, அடகு வைக்க முயன்று வருகின்றனர்.

இவர்களோடு, இந்தியாவில் உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களில் உள்ள இயற்கை வளங்களை, இங்குள்ள அரசியல் தலைவர்கள், "ஆட்டையைப்' போட்டு, இந்தியாவை கடன்கார நாடாக்கி, "கடன் பட்டார் நெஞ்சம் போல் இந்தியர்களை கலங்க' வைத்து வருகின்றனர்.

ஆதர்ஷ் ஊழலில், 1 லட்சம் கோடி; காமன்வெல்த்தில், 1.50 லட்சம் கோடி; "2ஜி'யில், 1.76 லட்சம் கோடி; நிலக்கரியில், 4 லட்சம் கோடி; எஸ்.பாண்டில், 10 லட்சம் கோடி; டெலிகாம் ஊழலில், 15 லட்சம் கோடி, ஹெலிகாப்டர் வாங்கியதில், 360 கோடி ஊழல் என, மெகா ஊழல்களோடு, இன்னும் வெளிவராத உலகப் புகழ் ஊழல்கள் மூலம், இந்தியாவின் இயற்கை வளங்களில் இவர்கள் திருடியது, 50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். அதனால் தான், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சரி, இந்தியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டியவர்கள், அதை எங்கே முதலீடு செய்துள்ளனர்...?

இதோ...

பல பல தீவுகளையே, விலைக்கு வாங்கியதோடு உலகில் உள்ள, 30க்கும் மேற்பட்ட நாடுகளில், தங்களிடம் உள்ள பல லட்சம் கோடி பணத்தை தி.மு.க., தலைவர்கள் முதலீடு செய்து விட்டனர்.

காங்., தலைவர்களின், பல லட்சம் கோடியால், சுவிஸ் வங்கி, வீங்கித் தவிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட, பல லட்சம் கோடி இந்தியப் பணத்தால், "இத்தாலி' என்ற நாடே பெருத்த பெரும் பணக்கார நாடாக,"சீர்' பெற்று வருகிறது.

மேலும், ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்தியா பெற்றிருந்த வெளிநாட்டுக் கடன், வெறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனை மட்டுமே வைத்து விட்டு, 2004ல் தன் பதவியை விட்டுச் சென்றார் வாஜ்பாய்.

ஆனால், தொடர்ந்து கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவோடு ஆண்டு வரும் மத்திய காங்கிரஸ் ஆட்சி, 2004ல் இருந்த, 5 லட்சம் கோடி கடனை, இன்று அதாவது, 2013ல், 40 லட்சம் கோடி கடனாக, எட்டு மடங்காக உயர்த்தி, இந்தியர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

அதே நேரம், காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க., தலைவர்கள் என, எல்லாருடைய சொத்துக்கள், 10 மடங்குகளுக்கு மேல் உயர்ந்து, பல லட்சம் கோடியாக எகிறியுள்ளதை, 125 கோடி ஏமாளி இந்தியர்கள் நன்கறிவர்.

இதே காங்., கூட்டணியின் ஊழல் ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவின் பொதுக் கடன், 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து, இந்தியா திவாலாகி விடும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலை ஏற்படாமல் இருக்க, காங்கிரஸ் கூட்டணிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டி, தமிழகத்தில் உள்ள, 40க்கும் சைபர் என்ற படுதோல்வியைத் தர, 5.15 கோடி தமிழக வாக்காளப் பெருமக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்...!

கடிதம் நன்றி : டாக்டர் ரா.அசோகன், சென்னை
Chrysanth WebStory Published by WebStory

Wednesday, February 6, 2013

KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்பு: நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு !!!

கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின.
விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது

THANKS TO
Stella Fathima

Monday, February 4, 2013

பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமி, தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

நம் ஊர் 'சாக்கடை கமிஷன்' கவுன்சிலர்களாவது இதைச் செய்வார்களா...??
"""""பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!"""""

கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்.... கஷ்மீரிகளின் வார்த்தைகளில்....

திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.

நேரடி களத்தொகுப்பு - தமீமுன் அன்சாரி.

ரஜினியின் ரோபோவை பின்னுக்கு தள்ளிய கமலின் விஸ்வரூபம்

kamal rajiniகமல்ஹாசனின் விஸ்வரூபம் படம், ரஜினியின் ரோபோ படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 25ம் தேதியே தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பால் இப்படம் தடைபட்டது. அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. முதல்நாளில் இம்மாநிலங்களில் சில பிரச்னைகள் வந்தபோதும், அடுத்தடுத்த நாட்களில் படம் தொடர்ந்து சுமூகமாக ஓடத் தொடங்கியது.

வடமாநிலங்களில் கடந்த வெள்ளியன்று (பிப்-1-ம் தேதி) இப்படம் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தியில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் ‌என்னதான் இருக்கிறது என்று ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. அதன்விளைவாக இப்படம் அங்கு நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

முதல்நாளில் விஸ்வரூபம் படம் ரூ.1.89 கோடி வசூலித்துள்ளது. தமிழ் படம் ஒன்று, மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தளவு வசூல் ஈட்டுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் ரஜினியின் எந்திரன் படம் ரோபா என்ற பெயரில் இந்தியில் வெளியானது. இப்படம் முதல்நாளில் ரூ.1.75 கோடி வசூல் செய்து இருந்ததே முந்தைய வசூல் சாதனையாக இருந்தது. தற்போது அதனை கமலின் விஸ்வரூபம் படம் முறியடித்துள்ளது. இந்த வசூல் சாதனை முதல்நாள் வசூலை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Chrysanth WebStory Published by WebStory

Saturday, February 2, 2013

கமலுக்கு எதிராக மற்றும் ஒரு "விஸ்வரூபம்" தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஆவேசம் !!!

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் . இவர் இன்று மாலை 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார்.

அதில், விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை கமலஹாசன் இழிவுபடுத்திருப்பதால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து ராமகிருஷ்ணனிம் நமது நிருபர் பேசியபோது, ‘’விஸ்வரூபம் படத்தை அமெரிக்காவில் பார்த்த என் உறவினர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, தொடர்புகொண்டார். படத்தின் கதாநாயகி பிராமணப் பெண். அவருக்கு கமல் சிக்கன் சமைத்துக் கொடுப்பதுபோல் காட்சி வருகிறது.

இது எங்களின் உணர்வை புண்படுத்துகிறது. கமல் முற்போக்கு வாதி, அறிவுஜிவி என்றூ சொல்லிக்கொண்டு மடத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுவார். அவரை நாங்கள் ஒருபோதும் பிராமணராக அங்கீகரித்தது கிடையாது.

பூணூல் என்பது சொறிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்று ஒருமுறை கமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் எப்படி பிராமணராக இருக்க முடியும்.

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க அங்கே இங்கே சென்று முட்டுவதைவிட ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள ஆஞ்சேனர் கோவிலுக்கு வந்துதேங்காய் உடைத்தி ருந்தால் விஸ்வரூபத்தின் தடைகள் உடைபட்டு போயிருக்கும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

நன்றி
நக்கீரன்

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் வசூல் மழை !

விஸ்வரூபம் படம் இந்தியாவில் வெளியாகவில்லை. தமிழகத்தில் தடை தொடர்கிறது. விஸ்வரூபம் படத்திற்கு தமிழக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசு 2 வாரத் தடை விதித்துள்ளது. ஆனால் விஸ்வரூபம் கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவிலும் லண்டனிலும் மட்டும் வசூல் தொடர்கிறது. காரணம், முடிவில்லாமல் தொடரும் பிரச்சினைகள்.

நாம் முன்பே சொன்ன மாதிரி, இந்தப் படத்துக்கு இந்த பப்ளிசிட்டி இல்லாமல் போயிருந்தால் மக்கள் இத்தனை பரபரப்புடன் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சர்ச்சைகள் முடிவின்றி தொடர்வதால், படத்தைப் பார்க்க அமெரிக்காவில் தொடர்ந்து மக்கள் கூடுகின்றனர்.

முதல் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்

முதல் நான்கு நாள் வசூல் 32.24 கோடிகள்.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு.

இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை இல்லாமல் இருந்திருந்தால்கூட, பெரும் நஷ்டத்திலிருந்து கமல் தப்பித்துவிட்டிருப்பார் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வளைகுடா நாடுகளில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது.
Chrysanth WebStory Published by WebStory

Saturday, January 19, 2013

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாளருக்கு மட்டுமல்ல,நுகர்வோருக்கும் வேட்டு !

''இந்திய நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் மிகப்பெரிய சாபம், இடைத்தரகர்கள். தானியங்களை, மரக்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அடிமாட்டு விலைக்கு மொத்தமாக கொள்முதல் செய்த பின், இடைத்தரகர்கள் அவற்றை பல மடங்கு லாபம் வைத்து, விற்பனை நிலையங்களுக்கு விற்கின்றனர். இதை நிவர்த்தி செய்யும் பொருட்டே, வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறோம். நேரடியாக உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யலாம். இது விவசாயிகளுக்கு மாத்திரம் அல்ல... அனைத்து சிறு வர்த்தகர்களுக்கும் லாபம் தரக்கூடியது. நுகர்வோர்களாகிய பொதுமக்களுக்கும் லாபம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே வந்துவிட்டால்... விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும்!''

- இப்படி இந்திய அரசாங்க மும், பன்னாட்டு நிறுவனங் களும் சேர்ந்து அடிக்கிற அடியில், தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகின்றன.
'அந்நிய நிறுவனங்களுக்கு... இந்திய விவசாயி மற்றும் நுகர்வோர் மீது எவ்வளவு அக்கறை பார்!' என நீங்கள் ஆனந்தக் கண்ணீர்விட்டால், கொஞ்சம் துடைத்துக் கொள்ளுங்கள். ஆம்... அந்த நிறுவனங்களின் வரலாறு அப்படி!
வால்மார்ட் நிறுவனம், உலகளவில் மிகப்பெரிய வலைப்பின்னல் உடைய, 27 நாடுகளில் வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் நிறுவனம். 2012-ல் உலகளவில் பிஸினஸ் செய்த தொகை, சுமார் 444 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 24 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்). அவர்களுக்கு கோடிகளில் வியாபாரம் செய்வது என்பது, நாம் சில்லறை கொடுத்து சேட்டா கடையில் 'எக் பஃப்ஸ்' சாப்பிடுவது போல.
இவ்வளவு பிரமாண்டமான பின்புல மூலதனப் பணத்தை வைத்திருக்கும் அவர்களுக்கு, 'ஒரு பிரதேசத்தில் தொழில் தொடங்கிய மாதமே வருவாயை ஈட்ட வேண்டும், இல்லை என்றால் தொழில் முடங்கிவிடும்’ என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. எனவே, தொழில் தொடங்கிய ஆரம்ப மாதங்களில் உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யவும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கொடுக்கவும் முடியும். இதனால் ஏற்படும் நஷ்டத்தை, தாம் வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்தை வைத்து சரிகட்டவும் முடியும். இதன் காரணமாக உற்பத்தியாளர்கள், சில வருடங்களுக்குகூட நிச்சயமாக முன்பைவிட லாபம் ஈட்டுவார்கள். நுகர்வோருக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
ஆனால், இவை எல்லாம் எத்தனை நாட்களுக்கு என்பதுதான் கேள்வி!
வால்மார்ட் கொடிகட்டிப் பறக்கும் 27 நாடுகளில் கவனமாக ஆராய்ச்சி செய்தவர்கள், ''ஓரிடத்தில் புதிதாக தொழில் ஆரம்பிக்கும் வால்மார்ட் நிறுவனம், அங்கு கால் ஊன்றிய சிறிது காலத்துக்கு மூன்று பிரதான கொள்கைகளுடன் இயங்கும்'' என்கின்றனர்...
உற்பத்தியாளர்களின் நன்மதிப்பைப் பெறுவது
நுகர்வோரின் நன்மதிப்பைப் பெறுவது
போட்டியாளர்களை ஒழிப்பது.
''இடைத்தரகர்களைவிட அதிக பணம் கொடுத்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதால், சுலபமாக அவர்களின் நன்மதிப்பைப் பெறும் பன்னாட்டு நிறுவனங்கள், அரிசி, பருப்பு என பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோரின் நன்மதிப்பையும்பெற்றுவிடும். இப்படி உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் லகுவாக கைக்குள் போட்டுக் கொள்ளும் இந்நிறுவனங்கள், இந்த இரு தரப்பும் தமது போட்டியாளர்கள் பக்கம் செல்வதைத் தடுப்பதன் மூலம், அவர்களை சீக்கிரமே துரத்தியடிக்கும். அப்படி போட்டியாளர்களை முழுவதுமாக ஒழித்து, விற்பனையில் தனிக்காட்டு ராஜா ஆன பின்புதான் ஆரம்பிக் கிறது வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் மங்காத்தா!'' என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.
அப்படி என்ன செய்வார்கள்..?
போட்டியாளர்களை அறவே ஒழித்த பின் அல்லது கணிசமாகக் குறைத்த பின், அவர்கள் வைப்பதே சட்டம். அவர்கள் நிர்ணயிக்கும் அடிமாட்டு விலைக்கு பொருட்களை கொள்முதலுக்குக் கொடுக்க உற்பத்தியாளர்கள் தள்ளப்படுகின்றனர். முன்பாவது பரவாயில்லை... 10 அல்லது 15 இடைத்தரகர்கள் இருப்பார்கள், எவர் அதிகமாக பணம் கொடுக்க முன் வருகிறாரோ, அவரிடம் விற்பனை செய்யக்கூடிய விற்பனைத் தெரிவு உற்பத்தியாளர்களுக்கு இருந்தது. ஆனால், போட்டியாளர்களை ஒழித்து தனிக்காட்டு ராஜா ஆன பின், பன்னாட்டு நிறுவனங்களிடம் மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர் உற்பத்தியாளர்கள். அதாவது... எலியிடம் தப்பி, புலியிடம் சிக்கிய கதை.
அடுத்த இலக்கு... நுகர்வோர். பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள். பின் பொருட்களின் விலையை உயர்த்துவார்கள். மக்களும் வேறு வழியில்லாமல் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுவார்கள். சீனாவில் வால்மார்ட் இதே விளையாட்டை செயல்படுத்த, விழித்துக்கொண்ட சீன அரசாங்கம், வால்மார்ட் மீது பல கிடுக்கிப்பிடிகளைப் போட, 'பிச்சை போட வேண்டாம்... நாயையாவது இழுத்துப் பிடி' என்கிற கதையாக தமது கிளைகளை சத்தமில்லாமல் மூடிக்கொண்டு அங்கிருந்து 'எஸ்’ ஆகிக்கொண்டு இருக்கிறது வால்மார்ட். சீன அரசு, தன் மக்கள் மேல் கொண்டிருக்கும் அக்கறையை, இந்திய அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
மக்கள்தான் உஷாராக இருந்து எதிர்ப்பு காட்ட வேண்டும்... அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க வேண்டும்!

'வால்மார்ட் வந்தால்..?’ - பதறும் சிலரின் வார்த்தைகள்!
மோகன், 'கோவை டிபன் செயின்’, பெங்களூரு: ''அமெரிக்காவின் உற்பத்தியாளர்கள், சில்லறை வணிகர்களின் வயிற்றில் அடித்த நிறுவனம்தான் இந்த வால்மார்ட். அங்கு வெற்றிகரமான தொழில்அதிபராக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த எனது நண்பன், வால்மார்ட்டின் ஏகாதிபத்தியத்துக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் இங்கேயே வந்துவிட்டான். ஒரு உணவக முதலாளியாக இடைத்தரகர்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் இப்போது இடைத்தரகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்குகிறேன். கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. எனவே, இடைத்தரகர்களின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதற்கு நிச்சயமாக வால்மார்ட் தீர்வாகாது. சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்தது போலத்தான் ஆகிவிடும்!''
அஜித் பீட்டர், சிறுதொழில் வணிகர், கேரளா: ''வால்மார்ட்டை இந்தியாவில் அனுமதிப்பது என்பது, என்னைப் போன்ற சிறு வர்த்தகர்களை தற்கொலை செய்யச் சொல்வதற்குச் சமமானது. ஏனெனில், வால்மார்ட் அனைத்து நாடுகளிலும் சிறு வர்த்தகர்களை ஒழிப்பதை தனது பிரதான கொள்கையாக செய்து வருகிறது. என்னைப் போன்ற சிறு வர்த்தகர்களுக்கு, ஆள் பலம், வாகன வசதி என உற்பத்தியாளர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பொருட்களை வாங்கும் வளங்கள் இல்லை. அதனால் இடைத்தரகர்களை நம்பி இருக்கிறோம்.
வால்மார்ட் வந்தால் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி இடைத்தரகர் களை அறவே ஒழித்து, உற்பத்தி யாளர்களிடம் இருந்து பொருட்களை தாங்களே நேரடியாக வாங்குவார்கள். உற்பத்தியாளர்களை கைக்குள் போட்ட பின்பு, அவர்களை தங்களுக்கு மாத்திரமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்து வார்கள். ஒரு கட்டத்தில் சிறு வர்த்தகர்களாகிய நாங்கள் உற்பத்திப் பொருட்கள் கிடைக்காமல் வியா பாரத்தையே முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை வரும். இது, என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிறு வர்த்தகர்களின் வாழ்க்கைப் பிரச்னை. என் வீட்டில் அடுத்த வருடம் அடுப்பு எரியுமா, இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கியிருக்கும் ஆட்சியாளர்களின் கீழ்தான் வாழ்ந்து வருகிறோம். வேறென்ன செய்ய?''
Chrysanth WebStory Published by WebStory

Friday, January 18, 2013

ஏழைகள் கேண்டீன்… இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5: ஜெ. அறிவிப்பு

tamilnadu-chennai-corporation-opened-1000-canteen

சென்னை: ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்களை திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உண்ணத் தெரிந்தவனுக்கு வியாதியில்லை என்று ஒரு பழமொழி உள்ளது. அதாவது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவினை சரியான வேளையில் பசி எடுத்தப் பின் புசிப்பவனுக்கு எந்த விதமான நோயும் ஏற்படாது.

எனவே, நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகளை ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் குடிசைப் பகுதிகளில் வாழும் பெரும்பாலான ஏழை மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள்.

இது தவிர, சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து, சிறிது காலம் தங்கி செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது குறைந்த வருவாயில் உணவுக்கென அதிகம் செலவு செய்ய இயலுவதில்லை. எனவே, வயிற்றுக்குச் சோறிடவேண்டும் இங்கு வாழும் மனிதர்கெல்லாம் என்ற பாரதியாரின் கூற்றுப்படி, அனைவருக்கும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சலுகை விலையில் தரமான உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சிப் பகுதியில் சென்னை மாநகராட்சியின் மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்களைத் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் மேலும், இத்திட்டத்திற்காக 500 மெட்ரிக் டன் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Chrysanth WebStory Published by WebStory

Thursday, January 10, 2013

விஸ்வரூபம் ரூ. 150 கோடியை வசூலிக்காவிட்டால் அது தோல்விப் படம்… கமல் படபடப்பு பேட்டி

all-actors-have-become-businessmen-regrets-kamalவிஸ்வரூபம் குறைந்தது ரூ. 150 கோடியை வசூலித்தாக வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் கமல்ஹாசன் படம்குறித்த சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் விஸ்வரூபம் குறித்தும் திரையுலகம் குறித்தும் கூறியிருப்பதாவது…

ரூ. 150 கோடியைத் தாண்ட வேண்டும்

விஸ்வரூபம் ரூ. 150 கோடியைத் தாண்டியாக வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம்தான். எனது முயற்சிகள் பலவீனமானவை என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால் முதல் வாரத்திலேயே நாங்கள் ரூ.150 கோடியைத் தாண்டி விடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மிகப் பெரிய படம்

எனது படங்களிலேயே மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு, மிகவும் நேர்த்தியாக தயாராகியுள்ள படம் இது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மேலும் நாங்கள் நிறைய சாதிக்கத் திட்டமிட்டு களம் இறங்கிப் பணியாற்றினோம். அதற்கேற்ப அருமையான டெக்னீசியன்கள் கிடைத்தார்கள். அனைவருமே சிறப்பானவர்கள். மிகச் சிறந்த அணியுடன் நான் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.

எல்லோருமே வணிகர்கள்தான்

நடிகர்கள் எல்லாருமோ கிட்டத்தட்ட வணிகர்கள்தான். நீங்கள் என்று ஒரு ஸ்டாராக மாறுகிறீர்களோ, அன்றே வர்த்தகத்திலும் புகுந்து விடுகிறீர்கள். பணம், புகழ் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவீர்கள். ஒரு படம் வந்தால் அதன் வசூலும் கூட முக்கியமானதுதான்.

இன்னும் சாதிக்க வேண்டும்

150 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு திருப்தி என்பது வரவே இல்லை. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கிறது. இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

நடிப்பு வராவிட்டால் வேறு வேலை பார்ப்பேன்

அடிப்படையில் நான் டெக்னீசியன்தான். தற்செயலாகத்தான் நடிக்க வந்து விட்டேன். எனவே எனது நடிப்பு மக்களால் விரும்பப்படவில்லை என்றால் உடனே வேறு வேலை பார்த்துக்கொண்டு போய் விடுவேன்.

18 வயசு முதல் 65 வரை எனக்குப் போட்டிதான்

எனக்கு நிச்சயம் போட்டிகள் உண்டு.எனக்கு என்றில்லை எல்லோருக்குமே உண்டு. எனக்கு 18 வயது முதல் 65 வயது வரையிலானார் பலர் போட்டியாக உள்ளனர். ஆனால் போட்டி இருப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதானே நாம் சாதிக்க முடியும் என்றார் கமல்.

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Madras Hc Refutes Stay Viswaroopam
விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் Posted by: Sudha Published: Tuesday, January 8, 2013, 13:46 [IST] Ads by Google Best Intraday Stock Tips Get Daily Equity Calls, F&O Tips, Commodity Tips & Investment Calls www.profitkrishna.com Share / Stock / Nifty Tip Assured Return of Rs.50,000 PM Register for ONE DAY free trial www.amstocktips.com Madras Hc Refutes Stay Viswaroopam சென்னை: விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. எனவே படத்தைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதற்கு தடை ஏதும் இல்லை. விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ரீஜென்ட் சாய் மீரா என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அதில், கமல்ஹாசன் நடித்த மர்மயோகி திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தக்கு, கமல் 10.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்குக்குக் கமல்ஹாசன் சார்பி்ல தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரது தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்தால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், படத்துக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகெங்கும் விஸ்வரூபம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Chrysanth WebStory Published by WebStory

Sunday, January 6, 2013

என்றும் மக்கள் மனதில் உ.சகாயம் ஐ.ஏ.எஸ் !!

கற்றவராக இருந்தால் மட்டும் போதாது, தான் கற்ற கல்வியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போது சிறப்பு

மாவட்ட ஆட்சியர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள், ஆனால், ஒரு சிலரே மக்கள் மனதில் ஆழமாக, நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

அப்படி, மக்கள் இடத்தே ஒரு பெரும் மதிப்பைப் பெற்றவர், திரு. உ. சகாயம் அவர்கள். இவரை அறியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இங்கே!

சிறுவயதில் என்ன நமக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறதோ, அது தான் ஆழமாக மனதில் நிற்கும். இவர் இந்த நிலையில், இத்தனை நல்லவராய் இருக்க முக்கியக் காரணம் இவரது தாய் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சிறுவயதில், கீழே விழுந்து கிடந்த மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வந்து இவர் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அந்த மாம்பழம் இவர்களுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணத்தால், அதைத் தூக்கி ஏறியச் செய்திருக்கிறார் அவரது அம்மா. மற்ற சிறுவர்களும் மாம்பழம் எடுத்துச் சென்றதாகச் சொல்லி இருக்கிறார் இவர்.

எல்லோரும் செய்தார்கள் என்பதால், தவறு என்றுமே சரியாகிவிடாது, என்று அறிவுரை சொல்லி இருக்கிறார், அம்மா.

அன்று அம்மா சொன்னதன் பயன் தான் இன்று, இவ்வளவு நேர்மையானவராக நிற்கிறார், நிமிர்ந்து நிற்கிறார் நமது சகாயம் அவர்கள்.

கொள்கை:

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும், அந்த கொள்கை எத்தகையது என்பதே, அவர் எத்தகையவர் என்பதைத் தீர்மானிக்கும். இதோ, நமது சகாயம் அவர்களின் கொள்கைகள் நாம் அறிந்தவையே,
"உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து" “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து”

குறிப்பாக ஏழைகளுக்காக உழைப்பவர். தீமைகள் எங்கிருந்தாலும் எதிர்ப்பவர். அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணி, என்றுமே இவர் அஞ்சியதில்லை.

இவரது தன்னலமற்ற நல்ல சேவைக்குக் கிடைத்த பெரிய பரிசு என்ன? நாம் அறிந்தது போல,பதினெட்டு முறை வேலை மாற்றம் இருபது ஆண்டுகளில்! இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், பத்தொன்பது முறை இருபத்தி ஒரு ஆண்டுகளில்!

இது போல் நல்ல நல்ல பரிசுகளை எல்லாம், உயர்ந்த சேவை செய்பவர்களுக்குக் கொடுக்க, இங்கு நம் நாட்டில் தானே முடியும்?

ஏழைகளுக்கு மட்டும் அல்ல, மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் சகாயம் அவர்கள். மாணவர்களோடு பேசும் போது, மாணவர்கள் யாராவது நானும் உங்களைப் போல ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று சொன்னால், " இன்று நீங்கள் நேர்மையாக இருப்பேன் என்று சொல்வது எளிது, ஆனால், இறுதி வரையில் உங்கள் வேளையில் நீங்கள் நேர்மையாக இருப்பீர்களா?" என்று கேட்பாராம்.

ஒரு நல்ல சமூகம் உருவாக வேண்டும், மாணவர்கள் மனத்திலும் நேர்மையை இப்போதே விதைக்க வேண்டும் என்ற அவரது அக்கறையை, இதை விட விளக்கமாக சொல்ல வேண்டுமா என்ன?

ஒரு பெரியவர் புகார் கொடுத்திருக்கிறார், தான் வாங்கிய பெப்சியில் ஏதேதோ மிதப்பதாக, உடனே அந்த பெப்சியை பரிசோதனைக்கு அனுப்பி, பரிசோதனை முடிவு - அந்தப் பெப்சி அருந்த ஏற்றது இல்லை என்று வந்ததும், உடனே அந்த பெப்சி தயாரிக்கும் "யூனிட்டிற்கு" "சீல்" வைத்திருக்கிறார்.

அப்போது அவர் காஞ்சிபுரத்தில் டி.ஆர்.ஓ-வாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார், "சீல்" வைக்க அவரோடு வந்த தாசில்தார் பயந்திருக்கிறார், "இதெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்க வேண்டும்", என்று. அவருக்கும் தைரியம் கொடுத்து, இதைச் செய்யே நமக்கே அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி சீல் வைக்க அழைத்துச் சென்றிருக்கிறார்.

தனது மகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, கையில் நான்காயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கி வைத்தியம் பார்த்தவர் இவர். அப்போது அவருக்கு மதுபானக் கடைகள் ஒரு கடைக்கு பத்தாயிரம் ரூபாய் தர தயாராக இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்கவில்லை, தெரிந்தவரிடம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்துவிட்டு கடனை உடனே அடுத்தமாதம் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

பொதுமக்கள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று அவரது தொலைபேசி எண்ணி அவர் வெளியிட்டிருக்க, "சார், கேஸ் கம்பனிக்கு போன் போட்டா எடுக்க மாட்டிக்காங்க", இப்படி எல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. ஆனாலும், பொறுமையாக இது போன்ற அழைப்புகளையும் விசாரித்து உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.

மதுரையில் சரியாக தேர்தல் நடைபெறுவதற்கு இவர் ஆற்றிய பணியை சொல்லவும் வேண்டுமா? திருமங்கலம் தேர்தல் மிகவும் நேர்மையான முறையில் நடக்க இவர் தானே காரணமாய் இருந்தார்.

இன்று நடந்து கொண்டிருக்கும் "கிரானைட் ஊழல்" வழக்கு, அந்த ஊழல் குறித்த விபரங்கள் வெளி வருவதற்குக் கூட, இவர் முதன் முதலில் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்தது தான் காரணம்.

எதற்கும் பயம் இல்லை, நேர்மை, அது தான் இவரது கொள்கையாக இருக்கிறது.

ஆற்றிய பணிகள்:

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி

திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)

கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி

காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி

திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர்

கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்
சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி

தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்
மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர்

நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்
மதுரை மாவட்ட ஆட்சியர்

கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குகனர் (தற்பொழுது)
சொந்தம்:

ஊர் : புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமம்.

பெற்றோர்: உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள்.

மனைவி: விமலா.

பிள்ளைகள்: யாழினி, அருண்.

இவர், இவரது பெற்றோருக்கு நான்கு மகன்களில், இளையவர். இவரது அப்பாவின் ஆசைக்காக, லட்சியத்தோடு படித்து இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி இருக்கிறார்.இப்போது, இவரது மகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பது லட்சியமாம்.

இன்னும் வருங்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம் இன்னொரு பெண் சகாயம் அவர்களை.

இது போன்று நேர்மையானவர்கள் குறைவு தான், காரணம், நூறு தீயவர்களை அழிக்க, ஒரு நல்லவர் போதும். தீமையும் நன்மையையும் சமமான சக்தி கொண்டவை இல்லை தானே? அதனால் தான் போலும், சக்தி கொண்ட நல்லவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்!

நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒருவர் தற்போது கோஆப்டக்ஸ் நிர்வாக இயக்குனராக
பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்றாகும்....
Chrysanth WebStory Published by WebStory

மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை, 890 ரூபாய்

மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை, 890 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம், “கட்’ ஆனதால், முந்தைய சிலிண்டர் விலையான, 398 ரூபாயை விட, கூடுதல் விலை கொடுத்து வாங்க  வேண்டியிருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேலும், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவதில், “ஏஜென்சி’ நிறுவனங்கள், முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானிய விலை அல்லாத சிலிண்டர்களை திரும்ப தரும் நடவடிக்கையை, நுகர்வோர் துவக்கி உள்ளனர்.

“குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்தது. செப்., 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பின்படி, மார்ச், 31ம் தேதி வரையிலான, நடப்பு நிதியாண்டில், மூன்று சிலிண்டர்களை மட்டும், மானிய விலையில் நுகர்வோர் பெற முடியும்.”மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, செப்., 14ம் தேதி மற்றும் அதற்கு பின், போடப்படும் ரசீதுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும்’ என, மத்திய அரசு, தெளிவாக அறிவித்துள்ளது.

ஆனால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், “ஏஜென்சி’ நிறுவனங்களில் பெரும்பாலானவை, செப்., 14ம் தேதிக்கு முன் போடப்பட்ட, “பில்’ களுக்கான சிலிண்டர்களையும் கணக்கிடு கின்றன.இத்தகைய முறைகேட்டால், நடப்பு நிதியாண்டில், தங்களுக்கு மானிய விலையில், இரு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:இரு தினங்களுக்கு முன், இம்மாதத்திற்கான சிலிண்டர் வந்தது. “நடப்பு நிதியாண்டிற்கான, மூன்று மானிய விலை சிலிண்டர்களை ஏற்கனவே நீங்கள் வாங்கி விட்டீர்கள்; எனவே, மானிய விலை அல்லாத இந்த சிலிண்டருக்கு, 890 ரூபாய், தர வேண்டும்’ என, கேட்டனர்.விசாரித்தபோது தான்,செப்டம்பர்., 12ம் தேதி, “பில்’ போடப்பட்டு, 15ம் தேதி வினியோகம் செய்யப்பட்ட சிலிண்டரையும், மானிய விலை சிலிண்டர் கணக்கில் சேர்த்துள்ளது தெரிந்தது.அரசு அறிவித்தப்படி, டிச., மாதத்திற்கான சிலிண்டரும், எனக்கு மானிய விலையில் வர வேண்டும். அதை தர மறுத்ததால், சிலிண்டரை வாங்காமல் திரும்ப தந்து விட்டேன். இதுபோன்ற முறைகேடு பல இடங்களில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மானிய விலை சிலிண்டர்கள் குறித்த, அரசின் அறிவிப்பை பின்பற்றாத ஏஜென்சிகள் குறித்து, நுகர்வோர் புகார் செய்தால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஓ.சி.,

நிர்வாகம்தெரிவித்துள் ளது.சிலிண்டரை திரும்பத்தரும் இல்லத்தரசிகள் :சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு, கடந்த இரண்டாண்டுகளில், அதிகரித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் நீடிக்கும் பல மணி நேர மின்வெட்டால், மின்சார அடுப்பையும், பயன்படுத்த முடியாத நிலைக்கு, இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், பெரும்பாலான வீடுகளில், மாதத்திற்கு ஒரு காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால், நடப்பு நிதியாண்டிற்கான, மானிய விலை சிலிண்டர்களைபெரும்பாலோர், நவ., மாதத்திற்குள் பெற்று விட்டனர்.

அரசின் மானியத்துடன், 398 ரூபாய் கொடுத்து, சிலிண்டர் வாங்கி வந்த, இல்லத்தரசிகள், தற்போது மானியமில்லாமல், 890 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டியிருப்பதால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை, குரோம்பேட்டையில், “இண்டேன்’ நிறுவனத்தின், குறிப்பிட்ட, “ஏஜென்சி’யின் வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, மானிய விலை அல்லாத சிலிண்டரை வாங்க மறுத்துள்ளனர். இதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சிலிண்டர் வாங்காமல் மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். “மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த வேண்டும். இல்லையெனில், இதன் விளைவை, வரும், லோக்சபா தேர்தலில் அரசு சந்திக்கும்’ என்கின்றனர் நுகர்வோர் அமைப்பினர்.

Chrysanth WebStory Published by WebStory

அரசியலுக்கு அஸ்திவாரம் - பரபரப்பான ரஜினி ரசிகர்கள்

இதோ வருவார், அதோ வருவார் என்று ரஜினியை ஒவ்வொரு முறையும் அரசியலுக்கு இழுத்து பார்த்தனர் அவரது ரசிகர்கள். திடீரென அவருக்கேற்பட்ட உடல்நலக்குறைவு ரசிகர்களை உலுக்கி பார்த்தது.

மீண்டும் அவர் நல்லபடியாக வர ரசிர்கள் செய்யாத பிரார்த்தனை கிடையாது. ரஜினியும் குணமாகி மீண்டு வர உற்சாகமானார்கள் ரசிர்கள். ரஜினியை அரசியல் தலைவராக பார்க்க அவரது ரசிர்களுக்கு ஆசை.

ஆனால் ரஜினியோ தொடர்ந்து மவுனம் சாதித்தார். ஒருகட்டத்தில் அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் மெளனத்தை கோபமாக கொப்பளிக்க தொடங்கினர்.

எங்களுக்கு மன்றம் வேண்டாம், லெட்டர் பேடு வேண்டாம், தலைவர் இன்னும் எத்தனை நாள் தான் மவுனம் சாதிப்பார், எங்களுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று ரஜினியை நெருக்க தொடங்கினர்.

இந்தநிலையில் தான் ரஜினியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் நெடியோடு வாசகங்கள் எழுதிய பேனர்களை நாடு முழுவதும் ஒட்டினர்.

நாளைய முதல்வா, உங்கள் ஆணைக்கு காத்திருகோம் என்றெல்லாம் பேசினார்கள். இதனால் ரஜினி மனதில் ஒரு சிறிய மாற்றம். பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்தித்தார். அதுமட்டுமின்றி சென்னையில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இது ரசிகர்களை உற்சாகமாகியது. ரசிகர்களை சிகரெட் பிடிக்க கூடாது என்று அன்பு கட்டளை போட்டார், ரசிகர்களும் அதை செய்தனர். கூடா நட்பு பற்றி பேசினார். நிமிர்ந்து உட்கார தொடங்கினர் ரசிகர்கள். அடுத்ததாக ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நான் அரசியலுக்கு வந்தால் அரசியலில் என் வழி தனி வழி என்றார்.

இதற்கிடையே சென்னையில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசினார் ரஜினி. இதில் பல மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது அந்தந்த மாவட்ட நிலைமைகளை கேட்டறிந்தார்.

இதுவரை பல மாவட்ட பொருளாளர்களை சந்தித்து பேசயுள்ளார். இனியும் தொடர்ந்து சந்திக்க உள்ளார். ரசிகர்களிடம் பொருளாதார ரீதியாக உங்களை முதலில் வலுப்படுத்துங்கள், எந்த ஒரு காரியத்தையும் நாம் முதலில் தொடங்கும் போதும் நம்மை முதலில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அடுத்தடுத்து உங்களை சந்திக்கிறேன் பேசுவோம், நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என்று ரசிகர் மன்ற தலைவர்களிடம் ரஜினி பேசி உள்ளது, ரஜினி ரசிகர்களிடம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார்த்தைக்காகத்தான் தாங்கள் காத்திருந்ததாக ரஜினி ரசிகர்கள் பூரிப்பு பொங்க, முதல்கட்டமாக அரசியல் வேலைகளில் களம் இறங்கியுள்ளனர்.

இனி மாவட்டம் தோறும் ரஜினியின் புதுக்கொடி பறக்கும், சிவாஜி படத்தில் அதிரடிக்காரன் மச்சான் மச்சான் என்று பாடல் பாடியது போல பல அதிரடி அறிவிப்புகள் வரலாம்.

எத்த‌னை தலைவர்கள் வேண்டுமானாலும் வரட்டும், மக்களை சுரண்டாத நல்ல தலைவர் வந்தால் நாமும் கை குலுக்கி வரவேற்போம்.

Monday, December 31, 2012

தமிழக 'சிலந்தி மனிதன்' !

செங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல், விறு, விறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும்அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்.

அவரது பெயர் ஜோதிராஜூ. அவர் 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான சுவரில் எந்தவித பிடிமானமும்இல்லாமல் கைகளை ஊன்றியபடி சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரசெய்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலந்திமனிதனின் சாகசத்தை பார்த்து அதிசயித்து போகிறார்கள். அவரது சாகசத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடுக்கும்பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.

இந்த சிலந்தி மனிதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்.

இவரது சாதனைக்கு பின்னால் சோதனையும் புதைந்து இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது, ஜோதி ராஜூவுக்குபடிப்பு ஏறவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பிறகு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போதுவிரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்கொலை முடிவை தேடினார். அதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவேஇப்போது சாதனையாளராக உருவெடுத்து இருக்கிறார்.

கட்டிட தொழிலாளியாக இருந்த ஜோதிராஜூவுக்கு சிலந்தி மனிதன் ஆகும் வினோத ஆசை எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டால், 'நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது, குரங்குகள் வந்தால் அவற்றை கூர்ந்து கவனிக்கஆரம்பித்து விடுவேன். மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் அவற்றின் குறும்பு தனம் எனக்குபிடிக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஏன் அவ்வாறு சுவரில் ஏறி இறங்கமுடியாது என்று. அதன் விளைவுதான் நான் சிலந்தி மனிதன் ஆன கதை' என்று சொல்லி முடித்தார், ஜோதிராஜூ

குரங்கிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஜோதிராஜூவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் சூட்டிய பெயர் என்னதெரியுமா? குரங்கு ராஜா.

அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், குரங்கு ராஜா என்று கேட்டால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்ட ஜோதிராஜூவிடம் வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்டால், '4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரணமனிதன். அப்போது நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள்என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனதுஅவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது' என்றார்.

அவரிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், 'எனக்கு உலகளவில் சிறந்த சிலந்தி மனிதனாக உருவாகவேண்டும் என்பதே லட்சியம். இதற்காக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற வேண்டும்' என்று கூறிய ஜோதிராஜூஅருகில் இருந்த சுவரில் விறு, விறுவென வேகமாக ஏறினார்.
தமிழக 'சிலந்தி மனிதன்'  !!!

கோவை ராஜா

Wednesday, December 26, 2012

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : விஞ்ஞானிகள் வியப்பு

அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது.

காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.

மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

Sunday, December 23, 2012

2013இல் உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளது விக்கி லீக்ஸ்!!!

விக்கி லீக்' இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அவரை கைது செய்து தண்டிக்க அவரை தேடி வந்தது.

இதை தொடர்ந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவர் மீது சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சுவீடனுக்கு அனுப்ப இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 6 மாதமாக தஞ்சம் புகுந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈகு வேடார் தூதரகம் முன்பு ஏராளமானவர்கள் கூடினர். தூதரகத்தில் உள்ள பால்கனியில் தோன்றிய ஜுலியன் அசாங்கே தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், கற்பழிப்பு வழக்கில் என்னை சுவீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.

அது குறித்து பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்கள் விக்கி லீக் வெளியிட்டது. அது போன்று அடுத்த ஆண்டில் (2013) உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம். அதில் சிரியா உள்பட பல நாட்டு ரகசியங்களும் அடங்கும் என்றார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Saturday, December 22, 2012

உலகம் ஏன் அழியவில்லை?-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் விளக்கம்

உலகம் அழியப்போகின்றது என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணிய பலரும் உலக அழிவுக்கு 2 நாட்கள் முன்னதாகவே ஒன்றும் நடைபெறாததைக்கண்டு தமது முடிவுகளை மெதுவாக மாற்றிக்கொண்டார்கள்.ஒட்டு மொத்தமாக மாயன்கள் மீதும் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள்.ஆனால் சிலரோ இல்லை இல்லை நாஸா மறைக்கின்றது(உலகத்தில்  விஞ்ஞானிகள் உள்ள  ஒரே ஒரு இடம் நாஸா மட்டும்தானாம் ரஷ்யா,சீனா,இந்தியாவில் எல்லாம் விஞ்ஞானிகள் இல்லையாம்) நாஸா வெளியே சொல்லவில்லை அது இதுவென்று ஆயிரம் காரணங்களைக்கூறினார்கள்.இப்படி பம்மாத்துவிட்டு  பொய்ப்பிரச்சாரம் செய்ததில் சீனாவில் பலபேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது வேறுகதை.பேஸ்புக்கில் போலியான புகைப்படங்களை  பகிர்ந்து உலகம் அழிந்துக்கொண்டிருக்கின்றது என்றும் பகிர்ந்துகொண்டார்கள் நம்ம விஞ்ஞானிகள்.3,4 வருடங்களுக்கு முன்னர் நடந்த நில நடுக்கங்கள் தோன்றிய விண்வெளி  மாற்றங்களை எல்லாம் இன்று தோன்றியதாகவும் அவை செய்திகளில் ஒளிபரப்பட்டுவருவதாகவும் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அழியும் என்று கூறிய 99% ஆனவர்கள் அழியும் என்று கூறிய இன்னாளில் தாம்  நம்பியது முட்டாள்தனம்தான் என்று பின்வாங்கிவிட்ட நிலையில் ஒரு சிலர் இலைங்கை,இந்திய நேரம் 4.42 pm  இல்தான் உலகம் அழியும் அதுவரை நான் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்(ஏதோ காதலிக்கு வெயிட்பண்ணுவதுமாதிரி) என்று காத்திருந்துவிட்டு நேரம் சென்றபின்னும் கூட அதை ஒத்துகொள்ளவில்லை.மாயன்கள் கூறியவிடயங்கள் திரிபடைந்துவிட்டனவாம்.மாயன்கள் பற்றி 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்தவர்கள் கூட ஆராய்ந்து கண்டுபிடிக்காத விடயங்கள் இவை.

அதோடு உலகம் அழியப்போகின்றது என நம்பிய ஒரு விவசாயி செய்த விசித்திரமான வேலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

//தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.

பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.//

அப்படி  உலகம் அழியும் என  இலவு காத்த கிளியாக காத்திருந்த ஒரு சகபாடி உலகம் அழியவில்லை என்றதும் கூறிய விஞ்ஞான விளக்கம் இது.ஹார்ட் பேஸண்ட் யாராவது இருந்தால் வாசிக்கவேண்டாம்.

"இப்போது நேரம் 4.42 pm.....இதுவரையிலும் உலகம் அழிந்தது போன்று எனக்குத் தோன்றாததால் என் மீது கொலை வெறியுடன் இருக்கும் நண்பர்களுக்காக இந்த ஸ்டேடஸ்..... முதலில் மாயன்கள் விவகாரம் எக்கச்சக்கமாக திரிபடைந்து விட்டதால் அது குறித்தும் எனது நிலைப்பாடு குறித்தும்....
மாயன்கள் கூறியதன்படி 5125 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் தனது ஒரு முழுச்சுற்றைப் பூர்த்தி செய்கின்றது... அதாவது அவர்களின் கலண்டர் கி.மு 3114-08-11 ஆம் திகதி 0,0,0,0,0 இல் ஆரம்பித்து இன்று 13,0,0,0,0 ஐ எட்டி மீண்டும் 0,0,0,0,0 இற்குச் சென்றுள்ளது.... அவ்வாறு பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ஐந்தாவது தடவையும் (25625 வருடங்கள்) அது பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கின்றது... அந்த இடத்தில் ஒரு Dark Rift உண்டு, அதன் விளைவாக பூமி அழியும் அல்லது பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது தான் கருதுகோள்... இதற்கிடையில் சுமேரியர்களின் கூற்றுப்படியான நிபுரு பூமியைத் தாக்கும் என்ற நம்பிக்கை கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை எனக்கு இதனுடன் சேர்ந்து இருந்திருந்தாலும், அது பூமியை நோக்கி வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை நாஸா மறைக்க நினைத்தாலும் கூட, சுயாதீன விண்வெளி ஆய்வாளர்களின் கண்ணில் ஒரு மாதத்துக்கு முன்பே தட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு வாரத்தில் எமது வெற்றுக்கண்ணுக்கே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு முன்னரே அந்த நம்பிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்து விட்டது.... ஆகவே இன்றுவரை நான் நம்பியது Dark Rift ஐத் தான்... ஆனால் இன்னமும் உலகம் அழியவில்லை... இந்த 25625 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் நிகழ்வு மாயன்களின் புராதன பந்து விளையாட்டுடனும், அவர்களது மரணத்தின்கடவுள் வாழும் இடமான 'ஷிபால்பா' வில் நிகழ்ந்த பந்து விளையாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது... அக் கதையின்படி, “ஒவ்வொரு 25625 வருடங்களும் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன்வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான்.”
ஆகவே இப்போது சூரியன் வென்று விட்டதாகக் கொள்ளலாம்...
ஒவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒருமுறையும் சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் போது அழிவை நெருங்குகின்றது... அதற்காக ஒவ்வொரு முறையும் அழிந்து கொண்டா இருக்கின்றது...?
இன்று அழியலாம் என்று நம்பினேன்... அழியவில்லை... ஜஸ்ட் அவ்வளவு தான் மேட்டர்.... இதைப் புரியாதவர்கள் நீங்கள் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள்/ ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலறியடித்துக் கொண்டு சுனாமி எச்சரிக்கை விடுவதையும் பின்னர் சுனாமி வரவில்லை என்று தெரிந்தபின் எச்சரிக்கையை வாபஸ் பெறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...
ஆனாலும் பூமியை இன்னும் ஒரு 25625 வருடங்களுக்கு சும்மாவிட்டு வைக்க விரும்பாத காரணத்தால்.... நாஸ்டராமஸ் ஐ உதவிக்கு இழுக்கிறேன்....
நாஸ்டராமஸ் 2012 ஐ மைல்கல்லாக வைத்து பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்...
நாஸ்டராமஸ் கூறியதன்படி, “எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது....” இதனை நாம் மாயன்களின் காலண்டர் முடிவுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்... மாயன் காலண்டர் 2012 இல் முடிவடைந்த போதிலும் எமக்கு அழிவு கிடைக்கவில்லை....
மேலும் கங்ணம் ஸ்ரைல் பாடல் ஒரு பில்லியனைத் தொடும்போது உலக அழிவு நிகழும் என்று நாஸ்டராமஸ் சொன்னதாக சில நாட்களுக்கு முன்பு இன்னொரு மேட்டரையும் மாயன்களோடு இணைத்தார்கள்... அது ஒருவேளை அவ்வாறு ஒரு பில்லியனைத் தொடும் போது உலகம் அழிவது சம்பந்தமாக உலக மக்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று தான் அவர் ஆரூடம் சொன்னார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்... :) இப்போது அது 998,088,796 views.. இதை விளக்கமுடியாதவர்கள் வழக்கம் போல கோயின்சிடன்ஸ் என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியது தான்...

மேலும் நாஸ்டராமஸ் 2012-2025 கால கட்டம் இந்த உலகத்துக்கு மிகவும் கடினமான கால கட்டமாக இருக்கும் என்றும் வறட்சி, பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்றும், 2014 இற்கிடையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மூளும் போர் மூன்றாம் உலக யுத்தமாகப் பரிணமிக்கும் எனவும் கூறியுள்ளார்.... அதிலும் குறிப்பாக ராகு-சனி சேர்க்கை நிகழும் போது இவை நிகழும் என்றும் கூறியுள்ளார்... இப்போது, வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த 02-12-2012 உம் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 22-12-2012 ம் ராகு–சனி சேர்க்கை நிகழ்ந்து அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நீடிக்குமாதலால் அதகளத்துக்கு ரெடியாக இருக்கவும்... மேலும் நாஸ்டராமஸ் கூறியதன்படி 3797 இல் மனித இனம் முழுமையாக அழியும்..., 4007 இல் இப் பூமியிலுள்ள சகல உயிரினங்களும் அழியும் என்பதால்... என்ச்சாய்..

இவரை விட்டுவிடலாம்.ஆனால் சீரியஸ்ஸாக கவனிக்கப்படவேண்டிய ஒருவிடயம் இருக்கின்றது.உலக அழிவு  என்று ஒரு பேஸ்புக் எக்கவுண்டை ஓபின் செய்து.அதில் உலகம் இருண்டு கொண்டிருக்கின்றது.வானில் வால்வெள்ளி தோன்றியது. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று  வதந்திகளை பரப்பிவருகின்றார்கள் இவர்களை என்ன செய்யலாம்?

இப்படி செய்திகளைப்பரப்பும் பேஸ்புக் எக்கவுண்ட்கள் கீழே..

இங்கே கிளிக் 1

கிளிக் 2

டுபாய் இருட்டில் முழ்கியது .
டுபாய் மாலை 3 மணிக்கே இருட்டியது நாம் கூறியது போல, இது அங்கே தற்போது எடுத்த புகைபடம், உங்கள் நண்பர்கள் அங்கிருதால் வினவி பாருங்கள் நாம் சொல்வது உண்மையா அல்லவா என்று நாம் நடப்பதை தான் சொல்வோம்

பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக
பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !
ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. நேற்றைய தினம் மாலை 8.45 மணிக்கு வாணில் பெரும் வட்ட தீப்பிளம்புடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்துள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து ஒரு ஒளிக்கீற்று ஒன்று பூமையை நோக்கி வந்துகொண்டுள்ளது .

எச்சரிக்கை ரிப்போட் உலக அழிவின் முந்தய செயலாக உலகு இன்று 3 மணி நேரங்களுக்கு முன் இருட்டில் மூழ்கும் .அதாவது பிற்பகல் 3 மணிக்கே நாடுகள் இருட்டிடும்.

புவி தனது ஒரு சுழற்சியை பூர்தி செய்து கொள்ளும் நேரம் தான் புவியின் சாய்வு அதிகரித்து புவி தகடு வெடிக்கும் என நாசா விஞ்ஞான யோன் டைமன் தெரிவித்துள்ளார், இது அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு நிகழும் என நாசா கணக்கிட்டுள்ளது, உலக மக்கள் வன்முறைகளில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என வலியுறுதபட்டுள்ளது, உலக நாடிகளிடையே அவசரகால நிலை தற்போது பிரகடனபடுதப்பட்டுள்ளது என தெருவிக்கபட்டுள்ளது

தற்போதைய செய்தி ... இலங்கை , இந்தோனேசியா,மியான்மார், யப்பான் ஆகியன முதலில் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க பூகோள மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக ஏற்படும் எனவும் தெரிவித்தார், தனக்கு உலக அழிவு பயம் தற்போது தான் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார், இச் செய்தியாலும் தொடர் பாரிய நில நடுக்கதாலும் மக்கள் பீதியின் உச்சியில் இருபதாக றொயிட்ரர் மேலும் தெரிவித்துள்ளது.

மக்களே இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்?இவற்றைப்பார்த்து ஒருவன் தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது?முதலில் இவ்வாறானவர்களை உள்ளே தள்ளவேண்டும்.