Showing posts with label சாதனை மனிதர்கள். Show all posts
Showing posts with label சாதனை மனிதர்கள். Show all posts
Tuesday, March 26, 2013
Saturday, March 23, 2013
உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஏழை மாணவன் ஒருவன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் மாரியப்பன் பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார்.
6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார்.மாவட்ட அளவில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான போட்டியில் சாதாரணமானவர்களுடன் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாராம்லிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை.
இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார்.
இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார். இது இந்த பிரிவில் உலக சாதனை.
இதையடுத்து, கோப்பையையும், தங்கப் பதக்கத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்சியரைச் சந்திக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனுடன் வெள்ளிக்கிழமை வந்தார். ஆனால், ஆட்சியர் இல்லாததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
இதுகுறித்து குறித்த மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்,
உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய போது எனக்கு ஊக்கம் அளித்து பயிற்சி அளித்தவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ராஜேந்திரன்.
லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் பாஸ்போர்ட் எடுக்க பணத்தை தயார் செய்ய முடியவில்லை. இதனால்இ அப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டியுள்ளேன். இதுவே, தேசிய அளவிலும், உலக அளவிலும் முதல் பதிவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற உள்ள உலக அளவிலான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.
Thursday, March 21, 2013
'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி
'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.
திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.
பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.
மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.
நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!
Sunday, March 3, 2013
தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரை
இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
முகநூல், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், மின்னஞ்சல் (EMAIL) என்பது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்புரிமை வழங்கியது.
இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.
அண்மையில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது ‘இமெயில்’ பயணத்தை http:// www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அவமதிப்பு
இதே சிவா அய்யாதுரையை இந்திய மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.
Tuesday, February 19, 2013
அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன் பற்றி தகவல் !!!!
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் பி.ஏ பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, 16 வயது தான் நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.
சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
இவர் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் 'சர்' பட்டம் அளிக்கப் பெற்றார். 1954 ல் 'பாரத ரத்னா' பட்டம் பெற்றார்.
Friday, February 15, 2013
ஒடிசாவில் டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார் !!!
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார்.
தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம்.
இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார். இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன.
குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.
பிரகாஷின் பள்ளியில் படித்து வரும் ஜெயா என்ற சிறுமியின் தாய் கூறுகையில், "முன்பெல்லாம் குழந்தைகள் தெருக்களில் சுற்றித்திரிவார்கள். அவர்களில் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பள்ளி ஆரம்பித்த பின் அவர்கள் அனைவரும் மாறி விட்டனர். இப்போது ஒழுங்காக பள்ளி செல்கின்றனர். இப்போது எனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கனவு கண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில், "தாய், தந்தையர்கள் பணிக்குச் சென்ற பின் அவர்களது குழந்தைகள் தெருவில் சுற்றித்திரிவது கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். தற்போது பள்ளி துவங்கியதும் அவர்களது பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிக்கு வந்து விடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக விரோத செயல்கள் செய்தவர்கள் தற்போது திருந்தி விட்டனர். எந்த ஒரு சிறார் சட்டமும் மாற்றங்களைக் கொண்டு வராது. ஒழுக்கக்கல்வியே குழந்தைகளிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றார். கல்விப்பணி மட்டுமல்லாமல், 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள பிரகாஷ், அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்த தானமும் செய்து வருகிறார்.
இன்றைய சிக்கலான, குழப்பமான காலகட்டத்தில், அநேகம் பேர் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவர்களுக்கு உதவி புரிவதிலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்பதை எளிதான வகையில் சுட்டிக்காட்டும் வகையில் வாழ்ந்து வரும் பிரகாஷ் ராவ் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
Wednesday, February 6, 2013
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்..!
ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது. அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.
எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.
இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.
ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...!!!
Monday, February 4, 2013
பசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்…. நாராயண் கிருஷ்ணன்
கை நிறைய சம்பளம்... வெளிநாட்டு வேலை... மகிழ்ச்சியான வாழ்க்கை. மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது.
அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.
எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.
கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.
Sunday, February 3, 2013
ப்ரூஸ்லியின் பயிற்சி முறைகள்
ப்ரூஸ்லியின் பயிற்சி முறைகள்
தேங்கி கிடந்த கராத்தே, குங்க்பூ மாதிரி கலைகளுக்கு புத்துணர்வு ஊட்டியவர் ப்ருஸ்லி. அவருக்கு முன் இதெல்லாம் பாரம்பரியமாக மாற்றம் இல்லாமல் சொல்லிகொடுக்கபட்டு வந்தது. கராத்தே படிப்பவர் குங்க்பூ படிக்க மாட்டார். குங்க்பூகாரர் கராத்தே கலைகளை கற்க மாட்டார். இருவரும் மற்ற விளையாட்டுக்கள், நவீன அறிவியலிடமிருந்து எதையும் தம் கலைக்கு புதிதாக கொண்டு வர மாட்டார்கள்.

ஆனால் ப்ரூஸ்லி கராத்தே, குங்க்பூ, ஜூடோ மாதிரி பல கலைகளில் இருந்தும் பயிற்சிமுறைகளை எடுத்து "ஜீட் குன் டோ" எனும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினார். பளுதூக்கும் பயிற்சிகள் என்றாலே அன்று தற்காப்புகலைவீரர்களுக்கு அலர்ஜி. ஆனால் புரூஸ்லி பாடிபில்டிங் பயிற்சிகளை செய்தார். "பெரிய சதையே வலுவான சதை" எனவும் கூறினார்.
வயிற்று சதையை மிக முக்கியமாக கருதிய ப்ரூஸ்லி "எவ்விதமான பயிற்சிகளை செய்யவும் வயிற்று சதைகள் வலுவாக இருப்பது முக்கியம்" என்றார். சும்மா உட்கார்கையில் கூட வயிற்றுக்கு கர்ல்ஸ், லெக் ரைஸ் மாதிரி பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பார்.
ப்ரூஸ்லியின் உணவு கட்டுபாடு மிக தீவிரமானது. பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும் சீன வம்சாவளியை சேர்ந்தவர் புரூஸ்லி. அமெரிக்க பேக்கரி, மாவில் செய்த உணவுகள் அனைத்தும் குப்பை என இன்று உடல்நலம் குறித்த ஆய்வுகள் சொல்வதை அன்றே கண்டறிந்தவர் புரூஸ்லி. அதிகமான அளவில் புரதம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்டார். மூன்று வெளை உண்பதற்கு பதில் ஆறு வேளைகள் சின்ன சின்ன அளவுகளில் உண்டார்.
புரூஸ்லி தினமும் மூன்று மணிநேரம் உடல்பயிற்சி செய்வார். காலை 7 முதல் 9 மணீவரை ஓடுதல், சைக்கிள், ப்ளெக்சிபிளிட்டி பயிற்சிகளை செய்வார். அதன்பின் 11 மணி முதல் 12 மணிவரை பளுதூக்குதல் மற்றும் சைக்கிளிங் பயிற்சிகளை செய்வார்.
தினமும் ஆறுமைல் தூரத்தை 45 நிமிடத்தில் ஓடிகடப்பார் புரூஸ்லி.
இத்தகைய பயிற்சிகளால் அமெரிக்காவில் நடந்த அனைத்து கராத்தே போட்டிகளிலும் புரூஸ்லியும் அவரது சீடர்களும்மே வென்று வந்தார்கள்.
புரூஸ்லியால் கராத்தே, குங்க்பூ மாதிரி தற்காப்பு கலைகள் சீனாவிலும், உலகம் முழுவதிலும் மீண்டும் உயிர்த்து எழுந்தன. புரூஸ்லி உருவாக்கிய ஜீட் குண்டோ இன்று சீன அரசால் பல்கலைகழக்ங்களில் கற்பிக்கபட்டு வருகிறது.
Thanks: http://en.wikipedia.org/wiki/Bruce_lee

Tuesday, January 29, 2013
நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!
கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00
வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00
இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!
'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...
மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.
இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.
என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.
அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.
பசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்…. நாராயண் கிருஷ்ணன்!!!!!!!
கை நிறைய சம்பளம்... வெளிநாட்டு வேலை... மகிழ்ச்சியான வாழ்க்கை. மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது.
அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.
எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது. இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.
கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.
Tuesday, November 20, 2012
ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...
ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏஎம்வி உணவு விடுதி
அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு
மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை
அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது
பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும்
வைத்துக்கொண்டு நின்றார்கள்.
சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.
உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.
எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.
தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்
இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.
சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.
பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!
உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.
நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த
சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச்
சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு
மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.
எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.
ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு
வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப,
திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு
அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில
நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.
தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்
பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது.
சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல
இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன்,
ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு
ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம்
காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு
பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.
இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.
இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை
தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு
ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில்
எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை
கொடுக்கும் போது சொன்னது இதுதான்...
Sunday, October 14, 2012
கூலி வேலை செய்தவரின் சாதனை !!!
ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை கொழு
கொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான், சமையல்காரர். தாய்
லீ - லீ, வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர்,
குடும்பத்தின் நிலையையையும், குழந்தையின் அழகையும் பார்த்து தானே
தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழை பெற்றோர்கள் மறுத்து
விட்டனர்.
அந்த குழந்தைக்கு சான் காங் - காங் என்று பெயர்
வைத்தனர். அதற்கு 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்று அர்த்தம். இந்நிலையில்
பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடக பள்ளியில்
காங் - காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே குங்பூ என மார்ஷியல்
கலைகள் அனைத்தையும் கற்றான். தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். 8
வயதில் 'பிக் அன்ட் லிட்டில் வாங்க்ஷன்' என்ற படத்தில் முதன் முதலாக
நடித்தான்.
அவனின் 18 வயதில்
புருஸ்லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது.
உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டான்ட் நடிகர்கள்
தயக்கம் காட்ட காங் - காங் உடனே ஓடி வந்து குதித்து புருஸ்லீயை கவர்ந்தார்.
அதன் வாய்ப்புகள் கிடைக்காததால் கட்டிட வேலைகளில் உதவியாளராக கூலி வேலை
செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும் இவரது துறுதுறுப்பையும்,
துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர்கள் ஒருவர் 'லிட்டில்
ஜாக்' என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி' ஆனது. ஹாங்காங்கில் இருந்து
உடனே தந்தி வர ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர் 'பிஸ்ட்
ஆப் ப்யூரி' என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று அவரது
வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அந்த சாதனையாளரின் பெயர் தான் ஜாக்கி சான்
ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை கொழு
கொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான், சமையல்காரர். தாய்
லீ - லீ, வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர்,
குடும்பத்தின் நிலையையையும், குழந்தையின் அழகையும் பார்த்து தானே
தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழை பெற்றோர்கள் மறுத்து
விட்டனர்.
அந்த குழந்தைக்கு சான் காங் - காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்று அர்த்தம். இந்நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடக பள்ளியில் காங் - காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே குங்பூ என மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்றான். தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். 8 வயதில் 'பிக் அன்ட் லிட்டில் வாங்க்ஷன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தான்.
அவனின் 18 வயதில் புருஸ்லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டான்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட காங் - காங் உடனே ஓடி வந்து குதித்து புருஸ்லீயை கவர்ந்தார்.
அதன் வாய்ப்புகள் கிடைக்காததால் கட்டிட வேலைகளில் உதவியாளராக கூலி வேலை செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும் இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர்கள் ஒருவர் 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி' ஆனது. ஹாங்காங்கில் இருந்து உடனே தந்தி வர ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர் 'பிஸ்ட் ஆப் ப்யூரி' என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அந்த சாதனையாளரின் பெயர் தான் ஜாக்கி சான்