Tuesday, April 30, 2013

புரூஸ்லி ரகசியம் !

 
 

உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம்.

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வளைத்து, நெளித்து, வில்லென விறைத்து, அம்பெனச் சீறி என அவர்கள் காற்றில் கவிதை எழுதுவது ஓர் அதிசயம் போலத் தோன்றும், நம்பவே முடியாது. அது ஒரு மாயாஜாலம் போலத்தான் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டும் வித்தை காட்டுவர். ஆனால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர் துல்லியமாய் அறிவார். அவர் தனது உடலை தரையின் எந்தப் பகுதியில் எந்தப் புள்ளியில் ஊன்ற வேண்டும் என நினைக்கிறாரோ மிகச் சரியாக அதே புள்ளியில் வைக்கிறார். அவர் மனம் நினைப்பதை உடல் அப்படியே சிறிதும் மாற்றமில்லாமல்
செய்கிறது.

உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது.

மனிதனின் உடல், மன ஒருங்கிணைப்பைக் கொண்டு நம்ப முடியாத அற்புதங்களைச் செய்ய முடியும். மேஜிக் கலைஞர் என்ன செய்கிறார் என்று கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கண்களுக்கு முன்பாகவே சிலவற்றை மாயமாய் மறையச் செய்கிறார். ஆனால் உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. அதேபோல உடல், மன ஒருங்கிணைப்பு அதன் உச்சகட்ட தன்மையில் செயல்பட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அருகிலிருப்பவரே தெரிந்துகொள்ள முடியாது. இது ஜோக்கல்ல, அப்படியிருக்க முடியும்!

உங்களுக்குள் நடப்பதை அருகிலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்குள் நடப்பதை அருகில் இருப்பவர் தெரிந்துகொண்டால், நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் உங்களிடம் காரியம் சாதிப்பது எப்படி என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்குள் நடப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது மிகமிக முக்கியமானது. அதற்கு உடல், மன ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

உடல், மன ஒருங்கிணைப்பிற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் புரூஸ்லீ. அவர் செய்த விஷயங்கள் நம்ப முடியாதவை. உங்கள் உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால், உங்கள் தலையில் அடிபடாமல் இலாவகமாய் நாணயத்தை மட்டும் தட்டிவிடுவார். தலை என்ன? தலைமுடிகூட அசையாது. ஆனால் அந்தத் திறமை அவருக்கு சும்மா வரவில்லை. புரூஸ்லீ சிறிது ஊனமுற்றவர், தெரியுமா? அவரது வலதுகால், இடது காலை விட 1½ அங்குலம் உயரம் குறைவு. சின்ன வயதில் காலைச் சாய்த்துதான் நடப்பார். ஆனால் தொடர்ந்த பயிற்சிகளால், அவர் மிகக் கச்சிதமான மனித உயிராகப் பரிணமித்தார். குறைந்தபட்சம் உடல்ரீதியாகவாவது தன் உடலை அப்படி உருவாக்கிக்கொண்டார்.

ஆறேழு ஆண்டு காலப் பயிற்சிதான் என்றாலும் மிகவும் ஒருமுனைப்புடன் ஒரு நாளின் 24 மணி நேரமும் அதற்கான தீவிரத்துடன் நடந்த பயிற்சியால் சாதித்தார். தனக்கு என்ன தேவையோ அதை நோக்கி அவர் கொண்டிருந்த தீவிரம் அளப்பரியது, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது. அப்படித்தான் இருக்கவேண்டும். யோகப் பயிற்சிகள் உடல், மன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்!

Chrysanth WebStory Published by WebStory

ஒருவர் மீது இருவர் சாய்ந்து – திரை விமர்சனம்

 

fa714b5c-e75f-4a1d-9a6f-e665c8988ac7_S_secvpf.gif

நண்பனுடன் வெட்டியாக திரியும் லகுபரனுக்கு டி.வியில் வானிலை அறிவிப்பு சொல்லும் சுவாதி மேல் பிரியம். முதலில் இருவருக்கும் மோதல் மூண்டு பிறகு காதல் வயப்படுகின்றனர்.

தன்னுடன் சிறுவயத்தில் இருந்து ஒன்றாக படித்த தோழியும், நானும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம். இந்த நிபந்தனையை ஏற்றால் திருமணத்துக்கு தயார் என்று சுவாதி நிபந்தனை வைக்கிறார்.

இதை கேட்டு லகுபரன் அதிர்ச்சியாகிறார். நிபந்தனையை ஏற்க மறுத்து காதலியை ஒதுக்கி விட்டு ஐதராபாத்தில் அக்கா வீட்டில் போய் தங்குகிறார். அங்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் சானியா தாரா அறிமுகமாகிறார். இருவருக்கும் காதல் துளிர்த்து திருமணத்துக்கு தயாராகிறார்கள்.

அப்போது போலீசுடன் வந்து திருமணத்தை தடுக்கிறார் சுவாதி. யாரை லகுபரன் மணந்தார்? என்பது கிளைமாக்ஸ்…

பழனி முருகன் கோவிலில் காவி கட்டி திரியும் லகுபரனை பாக்யராஜ் சந்தித்து அவரது ‘பிளாஷ் பேக்’-கை கேட்பதுபோல் படம் துவங்குகிறது. மழை வரும் என டி.வி.யில் வானிலை அறிக்கை சொல்லும் சுவாதியிடம் குடையுடன் போய் இன்று மழை வரவில்லை. உங்கள் பேச்சை கேட்டு குடை வாங்கி காசு வீண். அந்த பணத்தை கொடுங்கள் என்று கலாய்த்து காசு பிடுங்கும் லகுபரன் சுவாரஸ்யபடுத்துகிறார்.

சுவாதியின் கைசூப்பும் பழக்கத்தை நீங்கள் வெறும் பிள்ளையா அல்லது கைப்பிள்ளையா என்று டி.வி.க்கு போன் போட்டு கிண்டலடிப்பது தமாஷ்… சுவாதி அழகாய் பளிச்சிடுகிறார்.

சானியா தாரா காதலும் கவர்ச்சியுமாய் ஈர்க்கிறார். பாக்கியராஜும், விசுவும் கிளைமாக்சில் வந்து சிக்கலான முடிச்சை அவிழ்த்து கைதட்ட வைக்கின்றனர்.

கின்னஸ் சாதனைக்காக பின்னால் நடக்கும் சிங்கம் புலி சிரிக்க வைக்கிறார். ஒருவரை மணக்க துடிக்கும் இரு பெண்கள் என்ற வித்தியாசமான கதை கருவில் காட்சிகளை கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்த்துகிறார் இயக்குனர் பாலசேகரன். கதைக்குள் இன்னும் ஜீவன் ஏற்றி இருக்கலாம். ஹரிகரன் இசையும், விஜய கோபால் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

மொத்தத்தில் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ கொண்டாட்டம்.

Chrysanth WebStory Published by WebStory

நான் ராஜாவாகப் போகிறேன் – திரை விமர்சனம்

 

588d9c04-3bd1-4204-ab80-a7c4519a21c8_S_secvpf.gif

சென்னையில் சமூக சேவகர் மணிவண்ணனுக்கு உதவிக்கரமாக இருக்கிறார் சட்டக்கல்லூரி மாணவி சாந்தினி. ஒருகட்டத்தில் மணிவண்ணன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. ஆனால், இது கொலை என்பதை நிரூபிப்பதற்காக சாந்தினி அதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்.

இதனைக் கண்டறியும் கொலைக் கும்பல் சாந்தினியை தீர்த்துக்கட்ட நினைக்கிறது. இந்நிலையில், சாந்தினியை காதலிக்கும் நகுல் சாந்தினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரையும் தீர்த்துக்கட்ட அவர்களை துரத்துகிறது அந்த கொலைக்கார கும்பல்.

மறுமுனையில், இமாச்சலப் பிரதேசத்தில் தன் தாய் சீதா மற்றும் மாமா வாசு விகரமின் ஆதரவோடு செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறார் ஜீவா எனும் நகுல். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக அங்குள்ள மிலிட்டரி கேம்பிற்குள் சென்றுவிடுகிறார். அதனால் அவருக்கு அங்கு சிறு தண்டனை கொடுக்கப்படுகிறது. அப்போது நகுலைப் பார்க்கும் ஒரு இராணுவ அதிகாரி சென்னையில் தன்னுடன் படித்த நண்பனைப் போலவே ஜீவா எனும் நகுல் இருப்பதை கண்டு அவனிடம் சொல்கிறார். அவர் மூலமாக சென்னையில் வசிக்கும் ராஜா என்ற நகுலைப் பற்றிய முழு விபரத்தையும் அறிகிறான் ஜீவா. மேலும், ராஜா நகுலை ஒருதலையாக காதலித்த அவனி மோடியைப் பற்றிய தகவலையும் அவனுக்கு கூறுகிறார்.

தன்னைப் போலவே இன்னொருவர் இருப்பதை அறிந்துகொண்ட ஜீவா எனும் நகுல், அவனைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தாய் மற்றும் மாமாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு பயணமாகிறார். போகும் வழியில் அவனி மோடியைச் சந்திக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.

சென்னைக்கு வரும் ஜீவா நகுல், சென்னையில் ராஜா நகுலை சந்தித்தாரா? கொலை கும்பலிடம் இருந்து சாந்தினியை காப்பாற்றி ராஜா நகுல் சாந்தினியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நகுல் ஜீவா-ராஜா என இருவேறு கதாபாத்திரங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக வெகுளித்தனம் காட்டுவதிலும், கிக்-பாக்ஸிங்-ல் மிரட்டுவதுமாக ரசிக்க வைக்கிறார்.

இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். சாந்தினி ஹோம்லி என்றால், அவனி மோடி கிளாமரில் கலக்கியிருக்கிறார். நடிப்பிலும் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். மணிவண்ணன், தூங்காநகரம் இயக்குனர் கௌரவ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், சுரேஷ், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமூக சேவகராக வரும் மணிவண்ணனின் கெட்டப்பும், செயற்கை விதைகளால் மனித இனத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை எடுத்துக்கூறும் பேச்சும் பிரமாதம்.

புதுமுக இயக்குனர் பிருத்வி ராஜ்குமார் படம் பார்ப்பவர்களுக்கு நகுல் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இறுதியில் ஜீவா-ராஜா ஆகிய இருவரும் ஒருவரே என முடித்திருப்பது சுவாரஸ்யம்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. எரிச்சலூட்டும் இடங்களில் இவருடைய பாடல்கள் காதுகளுக்கு இனிமையை கொடுத்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, வெற்றிமாறனின் வசனம், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன.

செயற்கை விதைகளை இறக்குமதி செய்தால் மண்வளம் நாசமாகப் போவதைவிட எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பதை விளக்கும் நல்ல படமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குனர் சொதப்பி விட்டார். மேலும், இயற்கை உபாதை போவதை எல்லாம் காமெடி என்ற பெயரில் படம்பிடித்து காட்டியிருப்பது எரிச்சலைத் தூண்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ராஜாவாக்க முயன்றிருக்கிறார்கள்.

Chrysanth WebStory Published by WebStory

Wednesday, April 24, 2013

கௌரவம்- திரை விமர்சனம்

23-gouravam-review5-600
நடிகர்கள்: சிரீஷ், யாமி கவுதம், பிரகாஷ்ராஜ், குமரவேல்
இசை: எஸ்எஸ் தமன்
ஒளிப்பதிவு: ப்ரீதா
தயாரிப்பு: பிரகாஷ் ராஜ்
இயக்கம்: ராதா மோகன்

படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.

இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை… இதையெல்லாம் முதல் முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த ‘கௌரவ’த்தில்தான்!

gouravam review
கௌரவம் படங்கள்
குடும்ப கவுரவம் என்ற பெயரில், தன் சாதி கவுரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.

தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் ஹீரோ சிரீஷ். நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போதுதான் அவன் உயர்சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பிறகு அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குநர் ராதாமோகன், அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார் இந்தப் படத்தில் என்பதையும் சொல்லாமலிருக்க முடியாது.

ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ் ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கவுரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.

பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே!

Gouravam Review

ஹீரோ சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தேர்வுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை. ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின. நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே!

நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வரும் பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கம்போல குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளன. ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் ‘நாம அடிச்சா ரத்தம் வராதாடா’ என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில், வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அந்த வலியை உணர வைக்கிறது.

ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ… என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன.

தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன்.

நல்ல முயற்சி.. முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது!

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல் !

 
 

குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.

எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

இப்படித்தான் குன்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!

Chrysanth WebStory Published by WebStory

Saturday, April 13, 2013

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

 
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 9, 2013

கல்லணை ( Tiruchirapalli (Trichy), India )


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.


via - Aatika Ashreen
கல்லணை ( Tiruchirapalli (Trichy), India )<br /> <br /> பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .<br /> நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.<br /> <br /> நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.<br /> <br /> ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .<br /> <br /> உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.<br /> <br /> <br /> via - Aatika Ashreen
Chrysanth WebStory Published by WebStory

சென்னையில் ஒருநாள் -திரைவிமர்சனம்

 

6fe6949b-50cb-4ba0-8eed-e3061cae7d58_S_secvpfகேரளாவில் வெற்றி பெற்ற ‘டிராபிக்’ என்ற மலையாள படமே தமிழில், ‘சென்னையில் ஒரு நாள்’ ஆகியிருக்கிறது. ஹிதேந்திரனின் இதய தானம் சம்பவம்தான் கதையின் கரு.

ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் விபத்தில் சிக்குகிறான். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலை. ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார். இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற போலீசார் அனைவரும் பின்வாங்கும்போது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’

போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி, படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.

தானம் பெற்ற இதயத்தை வேலூருக்கு மின்னல் வேகத்தில் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு மிகுந்த போலீஸ் கார் டிரைவராக சேரன். போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதையே நினைத்து வருந்தும்போது அவர் முகத்தில் காட்டிய உணர்ச்சிகளை, பயங்கர வேகத்தில் காரை ஓட்டிச் செல்லும்போதும் காட்டியிருக்கலாம்.

செல்வாக்கு மிகுந்த நட்சத்திர நடிகராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அவருடைய மனைவியாக ராதிகா. பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா ராதிகாதான்.

மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா. உருக்கி விடுகிறார்கள். மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில், படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டாக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள்.

கதையை அதன் போக்கில் நகர்த்தி செல்லும் அம்சங்களாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஷஹித் காதர்.

பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் மகள் இதய நோயாளி என்பதை ஆரம்ப காட்சிகளில் காட்டியிருக்கலாம் அல்லது உணர்த்தியிருக்கலாம். அதேபோல் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை, இன்னும் சிரத்தை எடுத்து படமாக்கியிருக்கலாம்.

ஆஸ்பத்திரியில் சச்சின் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காதலி பார்வதி கலங்கிய கண்களுடன் அங்கு வருவதும், அவரை ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா பார்ப்பதும், சச்சின் இறந்தபின் பார்வதியிடம், ‘‘அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?’’ என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பதும், சோகமும் சுகமும் கலந்த கவிதை.

மொத்தத்தில் ‘சென்னைக்கு ஒருநாள்’ போகலாம்.

Chrysanth WebStory Published by WebStory

கேடி பில்லா கில்லாடி ரங்கா - திரைவிமர்சனம்

6b16e528-0d4f-48fe-aff0-989c1474ed6f_S_secvpf
அரசியல் வாதியாக துடிக்கும் இரு வெட்டி இளைஞர்களின் கலகலப்பான காமெடி கதை….

விமல், சிவகார்த்திகேயன் இருவரும் நண்பர்கள். வேலை இன்றி பெற்றோர் பணத்தில் குடி, கும்மாளம் என இருக்கிறார்கள். மாநகராட்சி கவுன்சிலர் ஆவதே இவர்கள் லட்சியம். இதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. நமோ நாராயனணை அண்டிக் கிடக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் விமலுக்கு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பிந்து மாதவி மீதும் சிவகார்த்திகேயனுக்கு ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெஜினாவிடமும் காதல் மலர்கிறது. அப்பெண்களோ வெறுப்பு காட்டி துரத்துகிறார்கள்.

இந்நிலையில் தேர்தலும் வருகிறது. கவுன்சிலர் பதவிக்கு இருவரும் போட்டியிட்டார்களா? காதல் வென்றதா என்பது கிளைமாக்ஸ்…

முழு நீள காமெடி படம். காட்சிகளை தொடர் சிரிப்பில் நகர்த்துகிறார் இயக்குனர் பாண்டிராஜ். மது பாட்டில்களை பரப்பி வைத்து இந்த சனியனை தலை முழுக வேண்டும் என்று விமல், சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.

விமலுக்கு மைல்கல் படம். காதல், காமெடியில் விளாசுகிறார். பிந்துமாதவி அழகில் வழிந்து ஆஸ்பத்திரிக்குள் அவர் போவதை பார்த்து என் மனைவி டாக்டர் என தனக்குதானே சொல்லி மகிழ்வதும் பிறகு நர்சு உடை அணிவதை பார்த்து பரவாயில்லை என விரக்தியாய் சமாதானமாவதும் டோக்கன் கொடுப்பதை கண்டு அதிர்வதும் தியேட்டரை குலுங்க வைக்கிறது.

சிவகார்த்திகேயன் காதல் இன்னொரு ரகளை… ரெஜினாவின் கடைக்கு போய் ஜெராக்ஸ் எடுத்து காதல் யாசிப்பது தமாஷ்.. கண்ணை சிமிட்டி சாந்தமாக வரும் பிந்துமாதவி அப்புறம் இன்னொரு முகம் காட்டி விளாசுகிறார். விமலை தாவி குதித்து அடித்து இம்சிப்பதும் அவர் அடி தாங்காமல் ஓடுவதும் தமாஷ்..

ஆம்பிளையை கை நீட்டி அடிப்பது தப்பு என்று பிந்துமாதவி தந்தையிடம் முறையிட அவர் என் மனைவி மாமியாரிடமும் அடி வாங்கி இருக்கிறேன். இது பரம்பரையா வருது என்று பதிலுரைக்க தியேட்டரே குலுங்குகிறது. ரெஜினா வசீகரிக்கிறார்.

மனைவி, மாமனார் குடும்பத்தினரின் கேவல பேச்சை பொருட்படுத்தாமல் அவர்கள் தயவில் இருக்கும் புரோட்டா சூரியும் கலகலப்பூட்டுகிறார். மாமனார் வெட்கங்கெட்டவன் என் செருப்பை போட்டுட்டு போறான் என்று சூரியை திட்ட, அது பரவாயில்லை காலையில் என் பிரஸ்ஸில் பல் தேச்சான் என்று மாமியார் புலம்புவது சிரிப்பை அடக்க முடியாமல் செய்கிறது.

அரசியல்வாதி நமோ நாராயணன் பொதுக்கூட்டத்தில் தெரியாதவர்கள் பெயரை அடியாட்கள் மூலம் தெரிந்து பெயர் சொல்லி அழைப்பது தனக்கு போட்ட சால்வைகளை ஜவுளி கடைகளில் விற்பது அரசியல் காமெடி.

டெல்லி கணேஷ், மனோஜ்குமார் தந்தை கேரக்டரில் அழுத்தம் பதிக்கின்றனர். கிளைமாக்சில் இருவரையும் கடவுள், ஹீரோ அளவுக்கு உயர்த்தி உருக வைத்து விழிகளில் நீர் மூட்ட செய்கிறார் பாண்டிராஜ்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. விஜய் ஒளிப்பதிவு பலம்.

Chrysanth WebStory Published by WebStory

சேட்டை - திரை விமர்சனம்

fcd68d67-afe5-48aa-9bdc-559ecd4a1b85_S_secvpf
மும்பையில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் ஆர்யா, அவருடைய நண்பனாக அதே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கும் பிரேம்ஜி, இருவரும் ஒரே ரூமில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள். இதே பத்திரிகையில் ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைப்பெயருடன் வேலைக்கு சேரும் சந்தானமும், இவர்களுடன் ஒரே அறையில் தங்குகிறார். ஆர்யாவின் காதலியாக ஹன்சிகா. இவர் ஏர் ஹோஸ்டஸாக வேலை பார்க்கிறார்.

ஒருநாள் ஏர்ப்போர்ட்டில் ஒரு வெளிநாட்டுக்காரன் மூலம் பொம்மைக்குள் வைரம் வைத்து கடத்தப்படுகிறது. அந்த தொழிலை செய்பவர் ஹன்சிகாவின் தோழிதான். வெளிநாட்டிலிருந்து வரும் வைர பார்சலை வாங்குவதற்காக ஹன்சிகாவை ஏர்போட்டுக்கு அனுப்புகிறாள் அவரது தோழி. ஆனால் ஹன்சிகாவுக்கோ அந்த பார்சலில் வைரம்தான் வருகிறது என்பது தெரியாது.

பார்சலை வாங்கிய ஹன்சிகா அந்த பார்சலை உரியவரிடம் ஒப்படைக்குமாறு தனது காதலன் ஆர்யாவிடம் கொடுக்கிறார். ஆர்யா அந்த பொறுப்பை சந்தானத்திடம் ஒப்படைக்கிறார். பார்சல் கொடுக்கப் போகும் வழியில் சந்தானம் சாப்பிடும் சாப்பாடு அவரது வயிரை பதம் பார்க்கிறது. இடைவிடாத வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படும் சந்தானம் மருத்துவ சோதனைக்காக தன்னோட ‘க…கா’ வை சாம்பிள் எடுத்து டப்பாவில் அடைத்து பார்சல் செய்கிறார்.

தன்னால் எழுந்து நகரமுடியாததால் அந்த சாம்பிள் பார்சலையும், ஆர்யாவிடம் இருந்து வாங்கிய பார்சலையும் பிரேம்ஜியிடம் கொடுத்து அனுப்புகிறார். பார்சல் கொடுக்கவேண்டிய இடத்தில் இரண்டையும் மாற்றிக் கொடுத்துவிடுகிறார் பிரேம்ஜி. அதாவது வைரம் இருந்த பார்சலை ஆஸ்பத்திரியிலும், பரிசோதனைக்கு கொடுக்க வேண்டிய பார்சலை வில்லன் நாசர் இடத்திலும் கொடுத்துவிடுகிறார்.

வைரம் இருக்குமென்று பார்சலை திறந்த நாசருக்கு அதில் வைரம் இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அதே நேரம் ஆஸ்பத்திரியில் வைரம் இருக்கும் பொம்மையை காட்சிப் பொருளாக வைத்துவிடுகிறார்கள். தொலைந்துபோன வைரத்தைத் தேடி நாசர் கும்பல் புறப்படுகிறது.

இதற்குள் ஆங்கில பத்திரிகையில் வேலைபார்க்கும் அஞ்சலி, ஆர்யா மற்றும் அவருடைய நண்பர்களுக்கு அறிமுகமாகிறார். அவர் ஆர்யாவை ஒருதலையாய் காதலிக்கிறார்.

இறுதியில் பொம்மைக்குள் இருந்த வைரத்தை யார் கைப்பற்றினார்கள்? ஹன்சிகா-அஞ்சலி இருவரில் யார் ஆர்யாவை கைபிடித்தார்கள் என்பதே மீதிக்கதை.

நாயகனாக வருகிற ஆர்யா, ஆள் பார்க்க படு ஸ்மார்ட்டா இருக்கிறார். சில இடங்களில் தூக்கத்தில் இருந்து எழுந்துவந்த மாதிரியே முகத்தை வைத்திருக்கிறார். படத்துல இவரின் கதாபாத்திரத்தோட பலம் குறைவுதான். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அதை நிறைவாக செய்ய ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

ஏர்-ஹோஸ்டஸ் மதுவாக வரும் ஹன்சிகா மொத்வானி, தனது முந்தைய படமான ஓகே.ஓகே.வில் காட்டிய அதே முகபவானைகளையே இப்படத்திலும் காட்டியுள்ளார். ஆர்யாவுடன் இரண்டு பாட்டுக்கு ஆடுகிறார் என்பதால் படத்தின் நாயகியாக கொள்ளலாம். இப்படத்தில் கொஞ்சம் தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை.

அளவான மேக்கப், அழுக்கு முகமாக பார்த்த அஞ்சலியை ஓவர் மேக்கப்பில் பார்க்க சகிக்கவில்லை. கண்ணுக்கு இவர் தீட்டின மை உறுத்தலை ஏற்படுத்துகிறது. படத்துக்குப் படம் இவர் பெருத்துக்கொண்டே போகிறார். ஆதி-பகவன் நீது சந்திரா ஒரேயொரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆர்யாவோட நண்பனாக வருகிற பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரம் படத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளதாக தோணுகிறது. இவர் வரும் பெரும்பாலான காட்சிகள் மொக்கையாக இருந்தாலும் காதல் தோல்வியில் மட்டும் பரிதாபம் காட்டுகிறார்.

காமெடி சூப்பர் ஸ்டார் என்ற புதிய பட்டத்தோட சந்தானம் நடிக்கிற முதல் படம் இது. வழக்கம்போல் டைமிங் காமெடியில் ரசிக்க வைத்தாலும், அநேக இடங்களில் மூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான காமெடியில் நாறடித்திருக்கிறார். நாசர் காமெடி கலந்த வில்லத்தனத்தில், அவருடைய சாயலில் ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்தியில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட ‘டெல்லி பெல்லி’ படத்தோட ரீமேக்தான் இந்த படம். டெல்லி பெல்லியின் வெற்றிக்குக் காரணம் அப்படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்களும், அதிகப்படியான கவர்ச்சியும்தான். ஆனால் இங்கு ‘யு’ சர்டிபிகேட்டுக்காக வசனங்களை வடிகட்டி, கவர்ச்சியைக் கொடுத்துள்ளதால் அது எந்த தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை. இந்தி கலாச்சாரத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் இடையே வேறுபாடு காட்டுவதில் இயக்குனர் கண்ணன் தடுமாறியிருக்கிறார் என்றே கூறவேண்டும்.

தமன் இசையில் ‘அகலாதே’ பாடல் மட்டும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. மற்ற பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. பாடல்கள் அனைத்தும் 3 நிமிடங்கள் என்பது மட்டும் ஆறுதலை தருகிறது. பின்னணி இசையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. வெளிநாட்டு லொகேஷன்களில் வரும் பாடல் காட்சிகளை ரசிக்கும்படி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ’சேட்டை’ பெருத்த ஓட்டை.

Chrysanth WebStory Published by WebStory

ஹிந்துக் கோவில்கள் - நமது ஆத்ம சக்தியைப் பெருக்கும் சக்தி மையங்கள்!!!


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
Chrysanth WebStory Published by WebStory

Sunday, April 7, 2013

திருப்பதியின் சில சுவாரஸ்சிய ரகசியங்கள்

tirupati-photo1

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. 

அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன  அவைகளில் சில………

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள் , நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் . அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம் , அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் , தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாய த்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Chrysanth WebStory Published by WebStory

Wednesday, April 3, 2013

சென்னையில் ஒருநாள் (2013) - விமர்சனம்


படத்தோட கதை என்னனா ...

ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதிகளின் ஒரே மகன் சச்சின். டி.வி நிருபராக சாதிக்க வேண்டும் என்பது கனவு. முதல்நாளே முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜை பேட்டி எடுக்கும் வாய்ப்பு. நண்பனுடன் பைக்கில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி, தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.

அதே நேரத்தில், பிரகாஷ்ராஜ்–ராதிகாவின் ஒரே மகள் இதய நோய் காரணமாக ஆபத்தான நிலையில் வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாள். யாராவது இதய தானம் செய்தால், அவர் பிழைத்துக் கொள்வார் என்கிற நிலை. ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா தம்பதிகள் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கள் மகனின் இதயத்தை தானம் செய்ய முன் வருகிறார்கள்.

தானமாக பெற்ற இதயத்தை சென்னையில் இருந்து வேலூருக்கு கார் மூலம், ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு போனால்தான் அந்த பெண் பிழைப்பார். சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூருக்கு 170 கி.மீட்டர். அதை ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டும். நெரிசலான போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலையில் சீறும் வாகனங்கள். இதைத்தாண்டி சவாலை எதிர்கொள்கிறது, போலீஸ் கமிஷனர் சரத்குமார் தலைமையிலான டீம். இத்தனை குறுகிய காலத்தில், வேலூருக்கு போகமுடியாது என்று மற்ற போலீசார் அனைவரும் பின்வாங்கும்போது, சேரன் மட்டும் துணிச்சலாக முன்வருகிறார்.

அவர் சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில், காரில் வேலூர் போக முடிந்ததா? தானமாக பெற்ற இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டதா? அவர் உயிர் பிழைத்தாரா? என்பது, இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’


படத்துல எனக்கு பிடித்த சில ....

சேரன்
டிராபிக் கான்ஸ்டபிள் சேரனின் வாழ்க்கை அழுத்தமானது. லஞ்சம் வாங்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு பணியில் சேரும் போது, அவருடைய தங்கையே அவரை மதிக்காமல் இருக்க, எப்படியாவது இந்த கலங்கைத்தை போக்க வேண்டி, இந்த பணியை தான் செய்வதாக ஒப்புக்கொள்கிறார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கறைகளை துடைப்பதற்கான முயற்சியில், சென்டிமெண்ட் ஏரியாவை சொந்தமாக்குகிறார்.

ஜெயப்பிரகாஷ் vs லட்சுமி ராமகிருஷ்ணன்
மகனின் உயிர் இயற்கையாக பிரிவதற்கு முன்பே அவருடைய இதயத்தை தானம் கொடுக்கிற அனுதாபத்துக்குரிய தந்தை–தாயாக ஜெயப்பிரகாஷ்–லட்சுமி ராமகிருஷ்ணா. உருக்கி விடுகிறார்கள்.

"யாரோ ஒரு உயிரை காப்பாத்தறதுக்காக, என் மகனை கொன்னுடாதீங்க" என்று உருகும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியர் கலங்க வைக்கின்றனர். "அப்பாவும், அம்மாவும் வீட்டில் இருக்கிறோம். நீ கொஞ்சம் வர முடியுமாம்மா?" என்று ஜெயப்பிரகாஷ் போனில் கேட்பது, சோகமும் சுகமும் கலந்த கவிதை. மகனின் இதயத்தை சுமந்து கொண்டு கார் போகிற காட்சியை பார்த்து, இருவரும் வாய்விட்டு கதறுகிற இடத்தில், படம் பார்ப்பவர்களின் கண்களும் குளமாகி விடுகின்றன.

பிரகாஷ்ராஜ்
புகழ் போதையிலும், பணத்திலும் மிதக்கும் முன்னணி நடிகராக பிரகாஷ்ராஜ். கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மகளின் பாசத்தையே பரபரப்புச் செய்தியாக்கும் தந்திரம், யதார்த்தம் புரியாமல் தன் செல்வாக்கால் எதையும் சாதித்து விடலாம் என்ற இறுமாப்பு என பிரமாதப்படுத்துகிறார்.



புதுமுகங்கள்
விபத்துக்குள்ளாகும் இளைஞராக சச்சின், அவருடைய காதலியாக பார்வதி, டாக்டராக பிரசன்னா ஆகிய மூவரும் அந்தந்த கதாபாத்திரங்களாக கண்ணுக்குள் நிற்கிறார்கள். சச்சினின் காதலியாக வரும் பார்வதியின் அழகும், நடிப்பும் பிரமிக்க வைக்கிறது. மின்னல் போல் வந்து மறையும் சச்சின், ஆழமாகப் பதிகிறார்.

ராதிகா
பிரகாஷ்ராஜின் மனைவி. கேரக்டர் பவர்புல். "நாளைக்கு நீங்க மார்க்கெட் இல்லாம வீட்ல இருக்கும்போது, உங்க பக்கத்துல இருக்குறது நானும், உங்க மகளும் மட்டும்தான்" என்று நெற்றிப்பொட்டில் அடித்து உட்கார வைக்கிறார். பெரிய நட்சத்திர நடிகராக இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு பொறுப்பை உணர்த்துகிற காட்சியில், ராதிகா... ராதிகா தான்.

சரத்குமார்
பொறி பறக்கும் சண்டை, படபடக்கும் துப்பாக்கி, மாடிப்படியில் ஏறி இறங்கும் ஸ்டைல், பஞ்ச் டயலாக் இல்லாமல், மிடுக்கான போலீஸ் கமிஷனர் வேடத்தில் சரத்குமார், கம்பீரம் காட்டுகிறார். சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் வயர்லஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கார் காணாமல் போனதும் அவரும் பதறி, படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கிறார்.



இயக்குனர் ஷஹித் காதர் & டீம்
ஒரு வரி நிஜக்கதையை, இரண்டு மணி நேர திரைக்கதையாக மாற்றிய விதத்திலேயே மிரட்டுகிறார்கள். வித்தியாசமான ஒரு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார். விபத்து ஏற்பட்டு விட்டது. ஆனால், அது யாருக்கு ஏற்பட்டு விட்டது என்பதில் சிறு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி, படத்தின் ஆரம்பத்திலே ரசிகர்களை கதையின் வசம் இழுத்து விடும் இயக்குநர் ஷஹித் காதரின் திறமைக்கு ஆயிரம் அப்ளாஸ்கள்.

வில்லன் இல்லாமல், சூழ்நிலைகளையே வில்லனாக்கி, பரபரப்பான ஆக்ஷன் படத்தை உண்மைக்கு நெருக்கமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஷஹித் காதர்.

இதயத்தை எடுத்துச் செல்ல ஒரு டீம் சின்சியராக வேலை செய்ததைப் போல், இப்படத்தை எடுத்துச் செல்ல அவரது தலைமையில் இசையமைப்பாளர் மெஜோ ஜோசப், ஒளிப்பதிவாளர் ஷேஹநாத் ஜே.ஜலால், வசனகர்த்தா அஜயன் பாலா, எடிட்டர் மகேஷ் நாராயண், ஸ்டண்ட் இயக்குனர் மிராக்கிள் மைக்கேல் என, ஒரு பட்டாளமே கடினமாக உழைத்துள்ளது. சிறப்புத் தோற்றத்தில் வரும் சூர்யா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், எனர்ஜி டானிக்.

இசை - மொஜெ ஜோசப்
பாடல்கள் இந்த படத்திற்கு தேவை இல்லை என்றாலும், நேரத்தைக் கறுதி முதலில் ஒரு காதல் பாடல், பிறகு ஒரு சிறிய பாடல், பிறகு இறுதியில் ஒரு பாடல் என்று மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மொஜெ ஜோசப்பின் இசையில் பாடல்கள் சாலையில் கடக்கும் வேடத்தடைகளாக இருந்தாலும், படத்தின் பின்னணி இசை திரைக்கதையை வேகமாகவும், அதே சமயம் உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைக்கிறது.

படத்துல குறையே இல்லையா...? என்று கேட்டால்.... இருக்கு.... என்று சொல்வேன். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஒரு சில நிமிட அஜாக்கிரதை வாழ்வில் எத்தனை பெரிய சோகத்தை ஏற்படுத்தும்… என்பதை வலியோடு சொல்கிறது ‘சென்னையில் ஒரு நாள்’… இந்த படம் வந்த பிறகாவது விழிப்புணர்வு வரட்டும்..!

சென்னையில் ஒருநாள் - காட்டாயம் பார்க்கவேண்டிய படம்.!
Chrysanth WebStory Published by WebStory