Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Saturday, May 11, 2013

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 2

 
 
 

குரு ‘குர்ட்ஜிஃப்’பின் உடனிருந்து பலகாலம் பயணம் செய்த சீடரான ஔஸ்பென்ஸ்கி, அடிக்கடி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்ட குரு ‘குர்ட்ஜிஃப்’பால் ஒரு கட்டத்தில் குருவுக்கே எதிரியானார். அப்படி குர்ட்ஜிஃப் என்னதான் செய்தார்? குர்ட்ஜிப் செய்த வம்புகள் இந்தப் பகுதியிலும் தொடர்கிறது.

ஒருமுறை, ரயில் பயணத்தின்போது மிகவும் போதையில் இருப்பவர் போல் நடந்துகொண்டு ஔஸ்பென்ஸ்கியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினார் குர்ட்ஜிஃப். அவரை, அவரது இருக்கைக்கு அழைத்து வந்து அமர்த்தவே பெரும்பாடுபட்டார் ஔஸ்பென்ஸ்கி.

திடீரென கைப்பெட்டி ஒன்றை தான் அமர்ந்திருந்த இருக்கையின் ஜன்னல் வழியே வீசிவிட்டு, “இவ்வளவு தான்” என்றார் குர்ட்ஜீஃப். அதிர்ந்துபோன ஔஸ்பென்ஸ்கி, “யாரோ ஒருவருடைய சூட்கேஸை நீங்கள் இப்படித் தூக்கி எறிந்திருக்கக் கூடாது. பெட்டியின் சொந்தக்காரனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” என்று பதறினார்.

சிறிதும் சலனமின்றி வந்தது குர்ட்ஜீஃப்பின் பதில், “ஔஸ்பென்ஸ்கி, அது உன்னுடைய பெட்டிதான்…”

செய்வதறியாது திகைத்த ஔஸ்பென்ஸ்கி, “நான் செய்த ஆய்வுப் பணி எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே,” என்று பதறினார்.

குர்ட்ஜிஃப் தீர்க்கமாக பதிளித்தார், “நீ செய்த பணி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. பெட்டிதான் சென்றுவிட்டது…”

மற்றொரு முறை உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், “உடனடியாக சந்திக்க வரவும்” என்று லண்டனிலிருந்த ஔஸ்பென்ஸ்கிக்கு தந்தி அனுப்பினார் குர்ட்ஜீஃப். சோவியத் பகுதியை யாரும் எளிதில் கடந்து உயிருடன் செல்ல முடியாத நிலை அப்போது. தனது குருவின் அழைப்பிற்கு இசைந்து, அரும்பாடுபட்டு மூன்று வாரம் பயணித்து பல நாட்டு எல்லைகளை யாருமறியாது கடந்து, குர்ட்ஜிஃப்பின் இருப்பிடத்தை அடைந்தார் ஔஸ்பென்ஸ்கி.

குர்ட்ஜிஃப் காலைக் காபி பருகிக் கொண்டே அவரை பார்த்து, “ஓ… வந்துவிட்டாயா நீ? அப்போ உடனே கிளம்பிவிடு…” என்றார். இதை சற்றும் எதிர்பாராத ஔஸ்பென்ஸ்கி, “இதற்குமேல் என்னால் பொருத்துக் கொள்ள முடியாது,” என்று கூறி, குர்ட்ஜிஃப்பிடமிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

குர்ட்ஜிஃப் எதற்காகவும் கலங்கும் மனிதர் இல்லை, புகைப்படங்களில் அவருடைய முகத்தைப் பார்த்தாலே அது புரியும். ஆனால் உயர்ந்த ஆன்மீக சாத்தியத்தின் மிக அருகில் வந்த ஔஸ்பென்ஸ்கி, கடைசி நேரத்தில் அதை நழுவ விடும் வகையில், அவரை விட்டு விலகிச் சென்றதை நினைத்து, “அவன் மிக அருகில் வந்திருந்தான்… ஆனால் சென்று விட்டானே…!” என்று ஔஸ்பென்ஸ்கியின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுதார்.

முன்னர் குர்ட்ஜிஃப்பின் பணிகளைப் பற்றியும் அவருடன் தான் பெற்ற உன்னத அனுபவங்கள் பற்றியும் உயர்வாக எழுதிவந்த ஔஸ்பென்ஸ்கி, இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு எதிராக எழுத ஆரம்பித்தார். குர்ட்ஜிஃப்பிற்கு அது ஒரு பொருட்டாக இல்லை, ஆனால் ஔஸ்பென்ஸ்கி அவரைவிட்டு விலகிச் சென்றது மட்டுமே, அவரை மீளா துயரில் விட்டுவிட்டது.

Chrysanth WebStory Published by WebStory

குர்ட்ஜிஃப் – ஒரு விசித்திர ஞானி பகுதி 1

 
 

குரு என்பவர், எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறார். ஒரு முறை கண்களில் நீர் பெருகக் கருணையுடன், இன்னொருமுறை நெருங்க முடியாத அதிதீவிர மனிதராய், மற்றொருமுறை சலனமற்ற பேர் இருப்பாய்… 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற குருவான ‘குர்ட்ஜிஃப்’, தனது சீடரே தனக்கு எதிரியாகும் அளவிற்கு, செய்தவை என்ன? இங்கே படிக்கலாம்…

ஒருவர் விருப்பத்துடன் இல்லாத போது, நீங்கள் அவரது எண்ணத்தை அழிக்க முயற்சித்தால், மிக விரைவில் அவர் உங்கள் எதிரியாக மாறுவார். பெற்றோர்-பிள்ளை, முதலாளி- தொழிலாளி போன்ற எந்த உறவிலும் இது பொருந்தும். ஆனால், ஒரு குருவின் செயலோ, நம் விருப்பத்தை எப்படியாவது அழிக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில், தனது நெருங்கிய சீடர்களை, சில நேரங்களில் தங்கள் எதிரிகளாக மாற்றிக்கொண்ட குருமார்களும் உள்ளனர். அந்த வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குர்ட்ஜிஃப்.

குர்ட்ஜிஃப், சாதாரண மக்கள் அறிந்திருந்த ஆன்மீகவாதிகளிடமிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். தனது தேடலில் ஆன்மீக பரிமாணத்தில் உயர்ந்த மக்களை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஆய்வு பயணங்களை தொடங்கினார். அவர், அவரைச் சுற்றியுள்ள மக்களின் விருப்பத்தை அழிக்க மிக வினோதமான வழிமுறைகளை பயன்படுத்தியதுண்டு. குர்ட்ஜிஃப், அவரது நெருங்கிய சீடர்களில் ஒருவரான ஔஸ்பென்ஸ்கியை மட்டும்விட்டு வைத்தாரா என்ன?!

ஔஸ்பென்ஸ்கி, ஏற்கனவே உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு பெரிய தத்துவஞானியாகவும், கணித மேதையாகவும் இருந்தார். பின்னர் இவர் எல்லா இடங்களிலும் குர்ட்ஜிஃபின் வழக்கமான பயணத்துணையாக ஆகிவிட்டார். வெளி உலகில், குர்ட்ஜிஃப் அறியப்பட்டதற்கு பல விதங்களில் ஔஸ்பென்ஸ்கி காரணமாக இருந்திருக்கிறார்.

குர்ட்ஜிஃப்பை முதன்முதலாக பார்க்க விரும்பியபோது இங்கிலாந்திலிருந்து வெகுதொலைவு பயணித்து வந்திருந்தார் ஔஸ்பென்ஸ்கி. குர்ட்ஜிஃப் அந்த நேரத்தில், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மத்திய ஆசியாவில் தங்கியிருந்தார்.

அவர் குர்ட்ஜிஃப்பின் இடத்திற்கு சென்ற போது, அவரை குர்ட்ஜீஃப் காத்திருக்க செய்தார். ஔஸ்பென்ஸ்கி, உலகப் புகழ்பெற்ற தத்துவமேதை என்றறிந்திருந்தும், குர்ட்ஜிஃப் மூன்று நாட்களுக்கு மேலாக அவரை தன் அறையின் வாயிலிலேயே காத்திருக்க செய்தார். இது ஔஸ்பென்ஸ்கிக்கு எரிச்சலாக இருந்தது. இருப்பினும், ஒரு ஞானமடைந்த குருவினை சந்திப்பதைத் தன் வாழ்நாளின் மிகப் பெரிய தருணமாக எண்ணி அவர் காத்திருந்தார். இறுதியில், குர்ட்ஜிஃப் அவரை பார்த்ததும் “ஏற்கனவே நீ உலகறிந்த மேதை என்பதால், உனக்கு தெரிந்ததைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு அவசியமில்லை. உனக்கு தெரியாத சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசப்போகிறேன். அதனால், உனக்கு தெரிந்த அனைத்தையும் இதில் எழுது” என்று கூறி சிறு காகித துண்டினை ஔஸ்பென்ஸ்கியிடம் கொடுத்தார்.

இது முதலில் அவருக்கு அவமானமாக இருந்தாலும், குர்ட்ஜிஃப் கூறியதை அப்போது தட்ட முடியாமல் எழுத முடிவெடுத்தார். ஆனால், பல மணி நேரத்திற்கு பின்பும் அவரால் எதுவும் எழுத முடியாமல் போனது! தான் அந்த விஷயங்கள் எதுவுமே தனது சொந்த அறிவல்ல என்று உணர்ந்த அவர், “எனக்கு எதுவும் தெரியாது” என்று குர்ட்ஜிஃப்பிடம் ஒப்புக்கொண்டார்! அன்று அவரை ஏற்றுக்கொண்டார் குர்ட்ஜிஃப். அதிலிருந்து குர்ட்ஜிஃப்புடன் பயணித்து, அவரது வாழ்க்கை முறை மற்றும் வழிமுறைகள் குறித்து எழுத ஆரம்பித்தார் ஔஸ்பென்ஸ்கி.

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 23, 2013

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல் !

 
 

குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேசி வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…

குண்டலினி, உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. நீங்கள் “மனிதன்” என்று குறிப்பிடும் தன்மை இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால், இந்த சக்தி இன்னும் வெளிப்படாமல் காத்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இன்னும் முழுமையான மனிதனாக இல்லை. உங்களை நீங்கள் மேம்பட்ட மனிதராக வளர்க்க ஒரு தொடர்ச்சியான நோக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும்.

நீங்கள் குரங்காக இருந்தபோது, உங்களுக்கு மனிதனாக மாற விருப்பமில்லை. இயற்கைதான் உங்களை அந்த நிலைக்கு தள்ளியது. ஆனால் மனிதனாக மாறியபின், அதைத்தொடர்ந்து ஒரு விழிப்புணர்வான பரிணாம வளர்ச்சி அங்கே நடைபெறவில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாத பட்சத்தில், அந்த சுழற்சி திரும்பத்திரும்ப நடந்துகொண்டே இருக்கும்.

எந்த ஒரு மாற்றமும் சரி, பரிணாம வளர்ச்சியும் சரி, போதிய சக்தி இல்லாமல் நடப்பதில்லை. இந்த சக்தியை பற்றி உங்களுக்கு கவனமிருந்தால், இதை பயன்படுத்தி அற்புதங்களை படைக்க முடியும். ஒரு புதையலின் மேல் உட்கார்ந்து இருப்பதுபோன்றது இது. ஆனால் நீங்கள் தவறான திசையில் பார்த்துக் கொண்டிருந்தால், அங்கே புதையல் இருப்பதே உங்களுக்குத் தெரியாது.

ஒரு பிச்சைக்காரர் கடுமையான வறுமையில் வாழ்ந்து வந்தார். மரத்தடியில் உட்கார்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவர் இறந்தபிறகு அவர் உடலை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு போய் புதைக்க யாரும் பிரயத்தனப்படாமல் அந்த மரத்தடியிலேயே புதைக்க முடிவு செய்தனர். அங்கே தோண்டும்போது ஒரு சில அடிகளிலேயே பெரும் புதையல் ஒன்று கிடைத்தது.

ஒரு பானை நிறைய தங்கத்தை கீழே வைத்துக்கொண்டு அந்த முட்டாள் தன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். கீழே தோண்டியிருந்தால் அவர் பெரும் பணக்காரர் ஆகியிருக்க முடியும். ஆனால் அங்கேயே உட்கார்ந்துகொண்டு எப்போதும் பிச்சை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தவரை என்ன சொல்ல?

இப்படித்தான் குன்டலினியும். அது அங்கே அடியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இது எப்படி தெரியுமா? ஜாக்பாட்டின் மேல் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் போன்றது. ஆனால் தவறான திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். புதையல் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.

அதனால் குண்டலினி சக்தி இருப்பதையே நீங்கள் உணரவில்லை. குண்டலினி என்பது உங்களுக்குள் இருக்கும் பயன்படுத்தப்படாத, தொடப்படாத சக்தி. உங்களை முற்றிலும் கற்பனை செய்யமுடியாத பரிமாணத்திற்கு மாற்றிட இந்த சக்தியைப் பயன்படுத்த முடியும்.

முறையான யோகப் பயிற்சிகள், குண்டலினி சக்தியை மேலெழுப்ப துணை நிற்கும்!

Chrysanth WebStory Published by WebStory

Saturday, April 13, 2013

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்

 
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
Chrysanth WebStory Published by WebStory

Tuesday, April 9, 2013

ஹிந்துக் கோவில்கள் - நமது ஆத்ம சக்தியைப் பெருக்கும் சக்தி மையங்கள்!!!


பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
Chrysanth WebStory Published by WebStory

Sunday, April 7, 2013

திருப்பதியின் சில சுவாரஸ்சிய ரகசியங்கள்

tirupati-photo1

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. 

அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன  அவைகளில் சில………

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம்.அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை.ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை .

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பிகளின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால்ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள் , நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் . அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது .பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன .

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை,முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் ,தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும் .

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம் , அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் , தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள் .

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ .100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் . ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார்.முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார் .

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது . மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது .

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது . அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர் , நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான்மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார் .

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம் .

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் , வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார் . அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார் .

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாய த்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார் .

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, March 19, 2013

ஸ்ரீ ராகவேந்தர்

ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைரமோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர். யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதி உள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். தலைமை வேதியர் அவரை பார்த்து முகம் சுழித்தார். எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா! என்றார். வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார்.

தலைமை வேதியர் அவரைக் கவனித்தார். இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணுக்கிறதே! என்னைத் திட்டிக் கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம் என்று மனதிற்குள் கருவிக் கொண்டே யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! ஐயோ அம்மா! என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது. சந்தனம் ஏன் சுடுகிறது? நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்! ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே! தலைமை வேதியர் வருத்தப்பட்டார். சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த மகான் யார் தெரியுமா? ஸ்ரீ ராகவேந்தர். அவரை ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வர்.

ஒரு பணக்காரர் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைமை வேதியர் பட்டாடை உடுத்தி, ஏராளமான தங்க நகைகள் அணிந்து, கைகளில் வைரமோதிரங்கள் பளபளக்க அமர்க்களமாக யாக குண்டம் முன் வந்து அமர்ந்தார். பணக்காரரின் உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரம் செய்தபடி இருந்தனர். யாகம் துவங்கியது. அப்போது, கிழிந்த அழுக்கடைந்த ஆடை, மெலிந்த தேகத்துடன் ஒரு வேதியர் உள்ளே வந்தார். தலைமை வேதியருடன் வந்திருந்த மற்ற வேதியர்கள் ஓரளவுக்காவது வசதி உள்ளவர்கள். ஏதோ வீட்டில் இருப்பதில் நல்ல ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். இவரோ, நெற்றியில் சந்தனம் மட்டும் இட்டு, வேதம் ஓத இருந்த அந்தணர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். தலைமை வேதியர் அவரை பார்த்து முகம் சுழித்தார். எழுந்திரும்! இங்கே உட்காரக் கூடாது, நீர் ஒன்றும் வேதம் சொல்ல வேண்டாம். அங்கே ஒரு ஓரமாய் உட்கார்ந்து சந்தனம் அரைத்தால் போதும், புரியுதா! என்றார். வந்தவர் பதிலேதும் பேசவில்லை. தலைமை வேதியர் இட்ட கட்டளையை பணிவுடன் ஏற்றார். சந்தனம் அரைக்க ஆரம்பித்தார். அவர் சூரிய மந்திரத்தை முணுமுணுத்தபடியே சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார்.<br /> <br /> தலைமை வேதியர் அவரைக் கவனித்தார். இவனுக்கு என்ன தைரியம்! வாய் முணுமுணுக்கிறதே! என்னைத் திட்டிக் கொண்டே சந்தனம் அரைக்கிறான் போலும்! யாகம் முடியட்டும், கவனித்துக் கொள்ளலாம் என்று மனதிற்குள் கருவிக் கொண்டே யாகத்தை நடத்தினார். யாகம் முடிந்ததும் எல்லாருக்கும் சந்தனம் அளிப்பது வழக்கம். தலைமை அந்தணர் முறைப்படி முதலில் வாங்க வேண்டும். அவர் சந்தனத்தை வாங்கி உடலில் பூசினாரோ இல்லையோ! ஐயோ அம்மா! என துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டார். குளிர வேண்டிய சந்தனம் உடலைச் சுட்டது. சந்தனம் ஏன் சுடுகிறது? நான் சூரிய மந்திரம் உச்சரித்தபடியே அரைத்தேன். சூரிய பகவான் தன் வெப்பத்தை இதில் கொட்டிவிட்டார் போலும்! ஆச்சரியமாக இருக்கிறதே! நீர் என்னிலும் உயர்ந்தவர். உம்மை அவமதித்து விட்டேனே! தலைமை வேதியர் வருத்தப்பட்டார். சந்தனம் அரைத்தவர் மனம் நெகிழ்ந்து, சூடு தணிக்குமாறு சூரியனைப் பிரார்த்தித்தார். தலைமை வேதியரின் உடலில் இருந்த சூடு தணிந்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த மகான் யார் தெரியுமா? ஸ்ரீ ராகவேந்தர். அவரை ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று சொல்லி பூஜிப்போர், குளிர்ந்த மனதுடன் சகல நலனும் பெற்று வர்.<br /> <br /> <br /> <br /> அன்பு உள்ளங்களுக்கு என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினற்க்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் - சாம்
Chrysanth WebStory Published by WebStory

Friday, March 1, 2013

கோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்!

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. 

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. 

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. 

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த 

சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. 

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! 

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! 

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். 

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. 

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" 

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது
Chrysanth WebStory Published by WebStory

Friday, February 8, 2013

துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு

7 Feb நோய் வாய்ப்பட்டு இருந்த இந்தக் குழந்தை இனி பிழைக்காது என்று எண்ணிய பெற்றோர்கள் ஆசிரம வாசலில் விட்டு விட்டு சென்று விட துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு!


அதிகாலை 4 மணிக்கு எழுந்து பஜ்ராங்கிக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொடுக்கும் சாது, “கணிதத்தில் இப்போது இவன் 25 எண் வரை சொல்கிறான்,” என்று பெருமிதம் கொள்கிறார்.

பஜ்ராங்கிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பசு ஒன்றை வளர்க்க துவங்கியிருக்கும் இந்த சாதுவின் பிண்ணணியை சற்று பார்த்தால் ஆன்மீகத் தேடுதலில் இவருக்கு இருக்கும் தீவிரம் புரியும்.

‘சாது தியாகி’ என்று அழைக்கப்படும் இவர் ஒரு நாள் வெள்ளப்பெருக்கின் போது ஒரு மரத்தின் மீதேறி யோக நிலையில் அமர்ந்து விட்டார். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கீழே இறங்காத இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இறங்குமாறு வேண்டினர். அப்படியும் இறங்க மறுத்துவிட்ட இவருக்கு ‘வெள்ள பாபா’ என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டுவிட்டது.

தனது வீடு, வெற்றிகரமான நெசவுத்தொழில் பஞ்சாபில் இவருக்கு சொந்தமான ஏராளமான நிலம், ஸ்ரீகாந்த நாராயண் தாஸ் என்ற தனது இயற்பெயர் இவை எல்லாவற்றையும் துறந்துவிட்ட இவருக்கு இந்த குழந்தையை வளர்ப்பதற்கு எந்த வருமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலர் இவரை குழந்தையை கடத்தியவர் என்று பழி சுமத்துகிறார்கள்.

சிலர் இவர் இந்த குழந்தையை அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடவும் சொல்கிறார்கள்.

பிறர் இவர் அந்த குழந்தையை விட்டுவிடச் சொல்லும்போது அவரது அன்பு கோபமாக வெடிக்கிறது!

யாராவது அக்குழந்தையை அநாதை என்று அழைத்தால் அவ்வளவுதான்!

“அநாதை ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகள் தெருவில் பிச்சை எடுக்கவே விடப்படுவார்கள்!” என்று இவர் கூறுகையில் இவரது அரவணைப்பு தெளிவாகிறது.

“இது கடவுளின் விருப்பம்” என்று சொல்லும் இவரது கண்களில் பேரானந்தம்.

அன்பு அழகானது, மலரைப்போன்றது! அது மலர்வதை யார் தான் தடுக்க முடியும்! அன்பற்ற நிலை ஆன்மீகம் இல்லை!

அன்பு வயப்பட்ட நிலைதான் ஆன்மீகமோ!

Chrysanth WebStory Published by WebStory

Wednesday, February 6, 2013

கும்பமேளா – வண்ணமிகு சங்கமத்தில் ஒர் ஆனந்தக் குளியல்

 
 

அலகாபாத்தில் இவ்வருடம் ும்பமேளா துவங்கி இருக்கிறது. உலகின் பலதரப்பட்ட மக்கள் ஒருசேரும் இந்த பாரம்பரியக் கொண்டாட்டம் பற்றி சத்குரு பேசுகிறார்.

இந்தியா, பல வகைகளையும், வண்ணங்களையும் கொண்ட அதிஅற்புதமான கலாச்சாரம். இங்கே வாழும் மக்கள், அவர்கள் பேசும் மொழி, உணவு, அவர்கள் உடை உடுத்தும் விதம், இசை, நாட்டியம் என அனைத்துமே ஒவ்வொரு 50, 100 கிலோமீட்டருக்கும் மாறுபடுகிறது. இப்படி வேறுபட்டு நிற்கும் இந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால், அது கும்பமேளா.

அங்கு போலிச் சாமியார்களும் இருந்தனர், யோகத்தில் உயர்ந்தவர்களும் இருந்தனர். போலியானவர்களுக்கு அவர்கள் தொழில் பிரதானமாய்ப் போக, சித்தி பெற்ற யோகிகளோ தங்கள் நோக்கமே கதி என்றிருந்தனர்.

2001 ஆம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில், 6 கோடி மக்கள் அலகாபாத்தில் சங்கமித்தார்கள். இது போன்ற இடங்களுக்குச் செல்ல நான் ஏங்கியதில்லை, ஆனால் இதைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிப்பட்டதால் கற்பனைக்கு எட்டாத இந்த பிரம்மாண்ட நிகழ்வைப் பார்க்க நான் கோவையிலிருந்து காரில் பயணப்பட முடிவு செய்தேன்.

நான் காலை 2 மணியளவில் அங்கே சென்றபோது நாட்டின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரையிருக்கும் பலதரப்பட்ட மக்கள் வந்திருந்தனர். பார்ப்பதற்கே ஒருவரை வியப்படையச் செய்யும் அற்புதக் காட்சி அது. அவர்கள் தூங்குவதற்குக்கூட இடமில்லை, அதனால் தீயை மூட்டி, அதைச் சுற்றி தத்தமது மொழிகளில் பேசிக் கொண்டு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் இருந்தனர்.

kumbhmela, isha, sadhguru, yoga, yogi, maha kumbhmela

அங்கு போலிச் சாமியார்களும் இருந்தனர், யோகத்தில் உயர்ந்தவர்களும் இருந்தனர். போலியானவர்களுக்கு அவர்கள் தொழில் பிரதானமாய்ப் போக, சித்தி பெற்ற யோகிகளோ தங்கள் நோக்கமே கதி என்றிருந்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் இதுபோல் இவ்விடத்தில் கூடுகின்றனர். இது அழிக்க முடியாத ஒரு கலாச்சாரமாக வடிவம் பெற்றிருக்கிறது. சமூக நிலையிலும் உசிதமானதாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை அமைவதற்கு அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக பலமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த பூமியும் நிலவும் சுழற்சியில் பயணிக்கிறது. நாம் அனைவரும் இந்த சுழற்சிக்கு உட்பட்டவர்கள் தான். இது பிணைப்பிற்கான சுழற்சியாகவும் மாறலாம் அல்லது பிறவியைக் கடந்து செல்வதற்கான ஒரு வழியாகவும் அமையலாம். முக்திக்காக ஏங்குபவர், தான் உருவாக்கிய சுழற்சிகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறார்.

பலவித சுழற்சிகள் உள்ளன, அதில் 144 வருடங்களுடைய சுழற்சியே மிக நீண்டது. ஒவ்வொரு 144 வருடங்களுக்கும் சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏற்படும், அதனை ஒட்டித்தான் மகாகும்பமேளா நடைபெறுகிறது. இது சென்ற முறை 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது.

நாட்டின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்தான் இந்த மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. அதைச் சுற்றி சக்தி நிலையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூமி சுழல்வதால், மையவிலக்கு விசையை உண்டு செய்கிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகை வரை உள்ள பகுதிகளில், மையவிலக்கு விசை உங்கள் உடலில் செங்குத்தாக வேலை செய்கிறது, குறிப்பாக 11 டிகிரியில், சக்தி உடலில் நேர்கோடாக மேலே செல்கிறது.

இதன் அடிப்படையில்தான் முன்காலத்தில், இந்த பூமியில் எந்தெந்த இடங்கள் மக்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை கணித்தும், அந்த இடங்களை குறித்தும் வைத்தார்கள்.

இப்படி கணிக்கப்பட்ட இடங்களில் பல, நதிகள் சங்கமிக்கும் இடமாகவே இருந்தன. அந்த குறிப்பிட்ட நாளில் ஒருவர் அவ்விடத்தில் இருந்தால், அரிதான வாய்ப்புகள் அவருக்குக் கிட்டும். இதை அறிந்த மக்கள் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதற்காக அங்கு சென்றனர்.

இந்த மக்களில் பலர் கல்வியறிவு இல்லாத, மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட கிராமப்புற மக்களே. ஆனால் முக்திக்காக ஏங்கி, நெடுந்தூரம் பயணம் செய்து அவ்விடத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்றனர். இந்த உலகில் வேறு எங்கும், மக்கள் தொகை முழுவதுமே இவ்வளவு தீவிரமாக முக்திக்காக ஏங்கியதில்லை.

பெரும்பாலான இந்தியர்களுக்கு இங்கு வழக்கத்தில் உள்ள ஆன்மீக செயல்முறைகள் பற்றியும் ஞானத்தின் ஆழம் பற்றியும் கவனமில்லை.

இந்த பாரதம்தான் உலகின் ஆன்மீகத் தலைநகரம் என்று அறியப்பட்டிருக்கிறது. இதைப்போல வேறு எந்த கலாச்சாரமும் உள்நிலைக்கான விஞ்ஞானத்தை இவ்வளவு ஆழமாக பார்த்ததில்லை. இங்கே முக்தி மட்டும்தான் உச்சபட்ச இலக்காக இருந்தது. கடவுள்கூட முக்திக்கான ஏணிப்படியாகத்தான் கருதப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக இன்று நாம் காணும் ஆன்மீகக் கலாச்சாரம், படையெடுப்பினாலும், நீண்ட கால வறுமையினாலும் பல விதங்களில் சிதறடிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருந்தாலும், அடிப்படை ஆன்மீகப் பண்பு இங்கு இன்னும் அழியவில்லை, அதை அழிக்கவும் முடியாது. இந்த ஆழமான பாரம்பரியத்தின் பலன்களை, அதன் முழுப் பெருமையும் ஓளிரும் விதமாக அறுவடை செய்வதற்கான சரியான நேரம் இதுவே.

Chrysanth WebStory Published by WebStory

Tuesday, January 8, 2013

தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு!!!






ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித் தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரி நாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் ராமதேவர்  திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அவ்வையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகைநமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கவுசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கவுதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திரிகோணச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலத்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தாச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள்  போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மவுனச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு  திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர்  திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்  சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலாக்  கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி

நிறைவுப்பாடல்:
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத்  தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதம்(திருமந்திரம் 3047)

மேற்கண்ட 131 சித்தர்கள்,மகான்களின் திருவடிகளை தினசரி காலையும்,மாலையும் போற்றி பூஜை செய்வதே சிறப்பறிவாகும்.சிறப்பறிவு பெற்றவர்களுக்கு குடும்ப ஒற்றுமை,புத்திரபாக்கியம்,உடல் ஆரோக்கியம் போன்ற நல்வினைகள் பெருகும்;அதே சமயம் மது அருந்துதல், புலால் உண்ணுதல், சூதாடுதல் போன்ற தீவினைகள் நீங்கிவிடும்;

மேலும் மாதம் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் வந்தால்,பாவம் புண்ணியம் பற்றி உணர்ந்து புண்ணியம் பெருகி ஞானியாவார்கள் என்பது சத்தியம்.
நன்றி: ஞானத் திருவடி,சன்மார்க்க உண்மை பத்திரிகை,மாத இதழ்,நந்தன ,மார்கழி,2012.      
Chrysanth WebStory Published by WebStory

Saturday, January 5, 2013

ஒரு காசிப் பயணம்

சினிமா பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப் படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன? காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லை ன்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் இருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

திரும்பி வரவேண்டும் அலாஹாபாதுக்கு. இலவச பாஸ் அலாஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்திய மில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள் தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித் தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

மாலை வரை தான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு விடுமுறையில் போக, கட்டக் வரை பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து கல்கத்தா மெயிலில் ஊருக்கும் செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது என்னுடன் இன்னும் சிலர் ஹிராகுட் வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக் காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.
 
கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப் பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இது காறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

முதலில் கங்கைக் கரையடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க் கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

பார்க்க ஆனந்தமாகத் தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இட மெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல் தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள் இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணத் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன். இது நடந்தது 1956-ம் வருடம்.

அதன் பிறகு கிட்டத் தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக் கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசி வாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்து வார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றுவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக் கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப் பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக் கொள்பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.
அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்த கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடியிலிருந்து, ராமநாதபுரத்திலிருந்து, இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத் தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தர்ணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை.  வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.
என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.
யாருக்குத் தெரியும்? நேர்காணலும் தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிகைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.

Wednesday, December 19, 2012

மாயன் காலண்டரின் மாயம் என்ன?



2012ல் உலகம் அழியப் போவதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
சத்குரு
எங்கிருந்து 2012 என்னும் இந்த எண் தோன்றியது? எது நேரம், எது பெரியது, எது சிறியது? இவையெல்லாம் மனிதனின் கருத்துக்கள் தானே? இந்த உலகமோ, இந்த சூரிய மண்டலமோ, ஏன் இந்த அண்டவெளியோ கூட 2012 ஐ விரல் விட்டு எண்ணி இருக்காது. இந்த பூமித்தாய்க்கு 2012 என்றால் என்னவென்றே தெரியாது. இவையெல்லாம் மனித மனதின் குப்பைகளே. ஏதோ போகும் வழியில் எண்ணிக்கையை கற்றுக் கொண்ட நாம், ‘எண்கள்’ மிகுந்த முக்கியத்துவம் உடையவை என்று எண்ணத் துவங்கி விட்டோம். இந்த பூலோகம் இது 2012ம் வருடம் என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? முட்டாள் மனிதர்கள்தான் 2012 என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எனவே 2012ல் உலகம் அழியும் என்பதில் உண்மையில்லை, இது நாம் இட்டுக் கட்டிய கட்டுக் கதைதான்.
ஆனால் உலகம் முழுவதும் பல கணிப்புகள், இது நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்கிறதே?
சத்குரு
நான் உங்களுக்கு ஒரு நாணயம் தருகிறேன். அதனை நீங்கள் சுண்டுங்கள். நீங்கள் தலை என்று சொன்னால் தலை விழும் வாய்ப்புள்ளது, பூ என்றால் பூ விழும் வாய்ப்புள்ளது. ஆனால் வெற்றிக்கு 50% வாய்ப்பு மட்டுமே உண்டு. பலர் கூறும் கணிப்புகளும் இப்படித்தான். தலை விழுந்தாலும் வெற்றி அவர்களுக்கே, பூ விழுந்தாலும் வெற்றி அவர்களுக்கே!
ஒரே சமயத்தில் அனைவரும் கணிக்கும்போது அதில் சிறிதளவுக் கூட உண்மை இல்லாமலா போய்விடும்?
சத்குரு
இந்த கணிப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளிகள். அடுத்து வரும் 6 வருடங்களில் கதிரவனின் கரும்புள்ளிகளில் பலத்த மாற்றம் ஏற்படப் போகிறது. கதிரவன் செயல்படும் விதத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் மனித விழிப்புணர்வில் அமானுஷ்ய மாற்றங்கள் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் இது திசை திருப்பப்பட்ட மாற்றம் அல்ல, இது வழிகாட்டுதலின் பெயரில் நடைபெறும் மாற்றம் அல்ல. எப்படி அமாவாசை, பௌர்ணமி ஏற்படுகிறதோ அதைப் போலவே இந்நாட்களிலும் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலான மனிதர்களால் இந்த மாற்றத்தை உணரக் கூட முடியாது.
எம்மாதிரியான மனிதர்கள் இதை உணர்வார்கள்?
சத்குரு
தியானத் தன்மையில் இருப்பவர்களால் உணர முடியும். மனதளவில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் உங்களால் தெளிவாக உணர முடியும். இவர்கள் இந்நாட்களில் சற்று அதிகமாகவே சமநிலையற்றுப் போவார்கள். ஆனால் யார் ஒருவர் தியானத் தன்மையில் இருக்கிறாரோ அவருடைய தியானத் தன்மை மேம்படும். நீங்கள் உங்களை சுற்றி நடக்கும் சக்திகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்டு போபவராய் இருந்தால், தினம் தோறும் நடக்கும் இந்த மாற்றங்களில் சிக்கி அலைக்கழிக்கப்படுவீர்கள். இதனால்தான் யோகத்தில் ஹட யோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஹட யோகம் உங்களுக்குள் சமநிலை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கதிரவனின் இந்த கரும்புள்ளிகளால் ஏற்படும் பாதிப்பை பற்றிக் கூறுங்களேன்?
சத்குரு
நிச்சயமாக இந்த கரும்புள்ளிகள் துரிதமாக செயல்படக் கூடிய சக்தியை உருவாக்கும். அது மனிதன் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை மனிதன் நிச்சயித்துக் கொள்ள முடியும். நாம் கணிப்புகளுக்கு காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஆனால் கணிக்கப்பட்ட அந்த சமயத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவே நம்மிடம் திட்டம் இருந்தால் புலப்படாத சூழ்நிலைகளும் அற்புதமான சாத்தியங்களாக மாற முடியும். நமக்கு எப்படி தேவையோ அப்படி உருவாக்கிக் கொள்ள இதுவே சரியான தருணம். இயற்கையின்படி, இந்த புவியின் செயல்பாடுகளின்படி, விண்ணுலகம் சார்ந்த அமைப்பிலும் சரி அடுத்து வரும் 6 வருடங்கள் சற்றே வித்தியாசமானதாய் இருக்கும்.
இந்த பாதிப்பை எப்படி கையாள்வது?
சத்குரு
இயற்கையில் ஏற்படும் இந்த தீடீர் மாற்றத்தை நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், ஆன்மீக சாதனாவில் தன்னை நிலைப்படுத்தி, தான் செய்யும் செயலில் போதிய கவனம் கொள்ளும் மக்கள் தேவை. இப்படிப்பட்ட மக்கள் அமைந்தால், எப்போதும் இல்லாத வகையில் மனித விழிப்புணர்வு, முன்னோக்கி மாபெரும் படி எடுத்து வைக்கும்.
உங்கள் திட்டம்?
சத்குரு
வரும் ஆறாண்டு காலத்தில், சூரியக் கரும்புள்ளிகளில், புறக்கணித்துவிட இயலாத அளவு மாற்றங்கள் நடைபெறும். இதனால் நாம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு கிரகங்களின் பயணத்தில் மாற்றங்களை உணர முடியும். இதனால் நாம் மேல் எழும்பலாம் அல்லது அகல பாதாளத்தில் விழுந்து போகலாம். என்னிடம் மேலே எழும்புவதற்கான திட்டம் உள்ளது, என்னோடு பயணியுங்கள்!