Thursday, March 8, 2012

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்

வாயுப் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது ,அதன் வகைகள்
என்னென்ன என்று பார்த்தோம்.


படிக்காதவங்க அதனை ஒரு முறை படித்து விடுங்கள்
முகவரி இங்கே


இன்று வாயுப் பிரச்சனை தீர …



சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .


சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் 
கொண்டால் வாயு சேராது.


பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி 
குடித்தால் வாயு சேராது .


இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித 
வாயுக் கோளாறும் தீரும்.


புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு 
வர வாயு அகலும்.


வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான் 
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.


ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு , 
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும் 
வாயுவைப் போக்கும்.


மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது , 
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு 
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத் 
தடுத்திட முடியும்,


வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :


காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும் 
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன் 
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.


திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால் 


ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக் 
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.


ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு 
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,


முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால் 
உண்டான உடல் அசதித் தீரும்.


இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை 
அறவே நீங்கும்.






புளியேப்பம் தீர :


இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம் 
ஆகியவை தீரும்.


சூதக வாய்வுக்கு :


கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி 
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.


சூலைவாய்வு தீர :


சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி 
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து 
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு 
குணமாகும்.


கபால வாய்வுக்கு :


வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து…..


250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன் 
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.


                                            குப்பை மேனி இலை


வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :


தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி 
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு 
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல் 
கலகலப்பாகும்.


வாய்வு ,வயிற்று வலி தீர :


பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்


வாய்வு தீர :


வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.


எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால் 
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்


வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு 
தொல்லைத் தீரும்.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள தகவல் நான் விரும்புகிறேன் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. பாரிச வாயு நீங்க என்ன செய்ய வேண்டும் plz சொல்லுங்க 🙏🙏🙏🙏

    ReplyDelete