Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Tuesday, April 30, 2013

புரூஸ்லி ரகசியம் !

 
 

உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம்.

ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வளைத்து, நெளித்து, வில்லென விறைத்து, அம்பெனச் சீறி என அவர்கள் காற்றில் கவிதை எழுதுவது ஓர் அதிசயம் போலத் தோன்றும், நம்பவே முடியாது. அது ஒரு மாயாஜாலம் போலத்தான் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டும் வித்தை காட்டுவர். ஆனால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை ஒரு ஜிம்னாஸ்டிக் வீரர் துல்லியமாய் அறிவார். அவர் தனது உடலை தரையின் எந்தப் பகுதியில் எந்தப் புள்ளியில் ஊன்ற வேண்டும் என நினைக்கிறாரோ மிகச் சரியாக அதே புள்ளியில் வைக்கிறார். அவர் மனம் நினைப்பதை உடல் அப்படியே சிறிதும் மாற்றமில்லாமல்
செய்கிறது.

உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது.

மனிதனின் உடல், மன ஒருங்கிணைப்பைக் கொண்டு நம்ப முடியாத அற்புதங்களைச் செய்ய முடியும். மேஜிக் கலைஞர் என்ன செய்கிறார் என்று கவனித்திருக்கிறீர்களா? உங்கள் கண்களுக்கு முன்பாகவே சிலவற்றை மாயமாய் மறையச் செய்கிறார். ஆனால் உங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. அதேபோல உடல், மன ஒருங்கிணைப்பு அதன் உச்சகட்ட தன்மையில் செயல்பட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அருகிலிருப்பவரே தெரிந்துகொள்ள முடியாது. இது ஜோக்கல்ல, அப்படியிருக்க முடியும்!

உங்களுக்குள் நடப்பதை அருகிலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்குள் நடப்பதை அருகில் இருப்பவர் தெரிந்துகொண்டால், நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் உங்களிடம் காரியம் சாதிப்பது எப்படி என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்குள் நடப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பது மிகமிக முக்கியமானது. அதற்கு உடல், மன ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

உடல், மன ஒருங்கிணைப்பிற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் புரூஸ்லீ. அவர் செய்த விஷயங்கள் நம்ப முடியாதவை. உங்கள் உச்சந்தலையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால், உங்கள் தலையில் அடிபடாமல் இலாவகமாய் நாணயத்தை மட்டும் தட்டிவிடுவார். தலை என்ன? தலைமுடிகூட அசையாது. ஆனால் அந்தத் திறமை அவருக்கு சும்மா வரவில்லை. புரூஸ்லீ சிறிது ஊனமுற்றவர், தெரியுமா? அவரது வலதுகால், இடது காலை விட 1½ அங்குலம் உயரம் குறைவு. சின்ன வயதில் காலைச் சாய்த்துதான் நடப்பார். ஆனால் தொடர்ந்த பயிற்சிகளால், அவர் மிகக் கச்சிதமான மனித உயிராகப் பரிணமித்தார். குறைந்தபட்சம் உடல்ரீதியாகவாவது தன் உடலை அப்படி உருவாக்கிக்கொண்டார்.

ஆறேழு ஆண்டு காலப் பயிற்சிதான் என்றாலும் மிகவும் ஒருமுனைப்புடன் ஒரு நாளின் 24 மணி நேரமும் அதற்கான தீவிரத்துடன் நடந்த பயிற்சியால் சாதித்தார். தனக்கு என்ன தேவையோ அதை நோக்கி அவர் கொண்டிருந்த தீவிரம் அளப்பரியது, அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. உங்கள் உடலையும் மனதையும் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினால் மிகவும் ஒருமுனைப்புடன் தீவிரமாய் உங்கள் விஷயங்களைச் செய்வீர்கள், மற்றவர்களால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாது. அப்படித்தான் இருக்கவேண்டும். யோகப் பயிற்சிகள் உடல், மன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்!

Chrysanth WebStory Published by WebStory

Saturday, March 30, 2013

யாருக்கு இது பிடிக்கும்?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...! —
Chrysanth WebStory Published by WebStory

Friday, March 15, 2013

தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு !!


நமது கதையின் கதானாயகன் ஒரு மாற்றுத்திறனாளி ஒரு போரில் இரண்டு கால்களையும் இழந்தவர்.ஒரு நாள் அவர் ஊனமுற்றோர் சைக்களில் தன்னுடைய தோட்டத்தை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தார் அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணின் அலறல் சத்தம் அவருக்கு கேட்டது.

சத்தத்தை கேட்டு பதறி அடித்துக்கொண்டு அவருடைய சைக்கிளை வேகமாக கைகளால் சுழற்றினார்.அவர் சைக்கிள் புற்களின் மீதும்
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அதை பொருட்படுத்தாமல் அவர் தன் கைகளால் முன் நோக்கி நகர ஆரம்பித்தார்.தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.

ஒரு வழியாக அவர் பக்கத்து வீட்டில் சத்தம் வந்த இடத்தை அடைந்துவிட்டார்,அங்கே ஒரு அம்மா கண்ணீருடன் என் மூன்று வயது பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள் அவளை எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கெஞ்சினாள்.அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கதறினாள்.

நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை பார்த்தவுடன் சட்டென நீச்சல் குளத்தில் பாய்ந்து ஒரு வழியாக குழந்தையை வெளியே கொண்டுவந்தார்.குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது, உடனடியாக வாய் மூலமாக தண்ணீரை எடுக்க முயற்ச்சித்து கொண்டு இருந்தார்.குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை அவள் தாய் கதறி அழ ஆரம்பித்தாள்.

அவர் சொன்னார் நீச்சல் குளத்தில்’ அவளுக்கு கையாக இருந்து நான் அவளை வெளியே கொண்டு வந்தேன் இப்போது அவளுக்காக நான் சுவாசிப்பேன் அவளும் சுவாசிக்க ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள் ’என்று சொன்னார்.அவர் சொன்ன அடுத்த நிமிடம் குழந்தை இரும ஆரம்பித்தது மூச்சு சீராக வர ஆரம்பித்த உடன் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

அந்த பெண் கேட்டாள் எப்படி உங்களால் என் குழந்தை பிழைத்துவிடும் என்று உறுதியாக கூற முடிந்தது என்றார்,அதற்கு அவர் சொன்னார்’ எனக்கும் தெரியாது’ நான் வியட்னாம் போரில் குண்டு அடிப்பட்டு இரண்டு கால்களையும் இழந்து போர்களத்தில் கிடந்தேன் அந்த வழியாக சென்ற பக்கத்து கிராமத்து பெண் என்னை முதுகில் சுமந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கே என்னை பார்த்து சொன்னாள்’ நீங்கள் இறக்கவில்லை உங்கள் காலுக்கு காலாக கடைசி வரை இருந்து நான் உங்களை காப்பாற்றுவேன்’ என்றார்,அவர் கொடுத்த அந்த தன்னம்பிக்கை தான் இன்று வரை என்னை காப்பாற்றியது.அவள் சொன்ன அதே தன்னம்பிக்கை வர்த்தையைதான் உங்ளுக்கும் சொன்னேன் என்றார்.

இரண்டு கால்கள் இல்லாத என்னால் உங்கள் குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று எண்ணாமல், என்னால் முடியும் என்று முயற்ச்சி செய்து தன்னம்பிகையுடன் வந்தேன் காப்பாற்றினேன் என்றார்.

நம்பிக்கை தாங்க வாழ்க்கை...தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.
 
Chrysanth WebStory Published by WebStory

Saturday, October 20, 2012

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;
1. தன்னம்பிக்கை
2. ஆர்வம்
3. செயல் ஊக்கம்
4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல்
6. உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் – வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் – தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறுசுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை 

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் 

மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். 

Monday, September 17, 2012

‎500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க..

Sunday, September 9, 2012

கல்லூரியில் கணித வகுப்பு.


உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத

இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்

, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.

சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.

அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.

அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்

என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

மறுநாள் விடையுடன் வந்தான்.

அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்

ஜார் ஜ்டாந்த்ஸிக்.

அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.

எனவே என்னால் முடிந்தது”.

Tuesday, August 21, 2012

"தன்னம்பிக்கை' தளராத கிருஷ்ணாராம்

வயதான நிலையில், வறுமையில் தவித்தபோதும், நகரெங்கும் நடந்தே சுற்றி பிளாஸ்டிக் மாலைகள் விற்று வயிற்றை கழுவுகிறார் முதியவர் கிருஷ்ணாராம்,- 78.

திருநகர் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மேட்டுக்காலனியில் வசிக்கும் அவரது மனைவி, பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் தனிநபராக வசிக்கிறார். திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை என பல பகுதிகளுக்கும் நடந்து செல்லும் அவர், பிளாஸ்டிக் பூமாலைகளை விற்கிறார். வயதானவர் என கருதி காசு, பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் அவர், மாலைகளை வாங்கி உதவும்படி கூறுகிறார்.

அவர் கூறுகையில், ""தினமும் ரூ. 50 வரை கிடைக்கும். போதுமானதாக இல்லாவிட்டாலும், சமாளிக்கிறேன். வியாபாரம் ஆகாதபோது, சரிவர உணவு உண்ண முடியாமலும் போகிறது. முதியோர் உதவித் தொகை கேட்டு 2 ஆண்டுகளில் பலமுறை விண்ணப்பித்தேன். இன்னும் கிடைக்கவில்லை,'' என்றார்.

உதவித் தொகையை எதிர்பாராமல், தள்ளாத வயதிலும் "தன்னம்பிக்கையுடன்' வலம் வரும், கிருஷ்ணாராம் பாராட்டுக்குரியவரே.

via - Nagoorkani Kader Mohideen Basha

வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி.....

வயது 73.. ஆனாலும்.. மகன் மாதம்தோறும் செலவுக்குத் தரும் பணத்தில் சேமித்து மரக்கன்றுகள் வாங்கி ராஜபாளையம் பகுதியில் முக்கிய இடங்களில் நட்டுப் பராமரித்து வருகிறார் ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி என்கிற இடத்தைச் சேர்ந்த கருப்பையா.

நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூர், முறம்பு எனப் பல பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பசுமை, குளிர்ச்சி தரும் மரங்கள் தற்போது பரவலாக உள்ளன. இந்த மரங்களை 2003-ம் ஆண்டு முதல் நட்டு வருகிறார் கருப்பையா.

இவர் இளைஞராக இருந்தபோது அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அத்துடன் மரங்களின் அவசியம் குறித்தும் நன்கு தெரிந்து கொண்டார். இளைஞராக இருந்தபோதே மரம் வளர்ப்பதில் அதிக அக்கறை கொண்டார்.

மரக்கடையில் வேலையில் சேர்ந்து தனது ஒரு மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆசிரியராக்கினார். தற்போது கடந்த பத்தாண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு சேவை செய்து வருகிறார்.

இவரது மகன் இவருக்கு மாதச் செலவுக்கு தரும் 1500 ரூபாயை சிக்கனமாக செலவு செய்து மாதம்தோறும் ரூ.500-க்கு மரக்கன்றுகளை வாங்கி நட்டு வருகிறார். இவரது சொந்த ஊரான ராஜபாளையம் அருகேயுள்ள நக்கனேரி மற்றும் தெற்கு வெங்காநல்லூர், முறம்பு ஆகிய பகுதிகளில் புங்கை, வேம்பு போன்ற குளிர்ச்சி தரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

கன்றுகளை நடுவதோடு இல்லாமல் கோடை காலத்தில் வறட்சியான நாள்களில் மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்கத் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வளர்த்து வருகிறார்.

இன்று முறம்பு முதியோர் இல்லம், பள்ளிகள், நக்கனேரி, தெற்கு வெங்காநல்லூரில் பசுமையுடன் வளர்ந்து வரும் மரங்கள் இவர் நட்டதே எனப் பலரும் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

சிறந்த சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு தளவாய்புரம் ரோட்டரி கிளப், ராஜபாளையம் இன்னர் வீல் கிளப், வார் அமைப்பு ஆகிய சேவை சங்கங்கள் விருது வழங்கி கெüரவித்துள்ளன.

ராஜபாளையம் பகுதி மட்டுமின்றி எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள பொது இடங்களில் தவறாமல் மரக்கன்று வாங்கி நடுவார். மறுமுறை அதே ஊருக்குச் செல்லும்போது தான் நட்ட மரக்கன்று எந்த நிலையில் உள்ளது எனப் பார்க்கத் தவறுவதில்லை கருப்பையா.

இது குறித்து கருப்பையாவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

""பறவைகளுக்கு மரம் புகலிடம் கொடுக்கும். மரம் மழையை வரவழைக்கும். மரத்தினால் ஆக்ஸிஜன் அதிகமாகி எங்கும் பசுமையுடன் வெப்பத்தை தணிக்கும் என்பதால் எனக்கு சிறு வயது முதலே இதில் அதிக ஈடுபாடு இருந்தது.

என் மகன் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் எனக்கு மாதம்தோறும் செலவுக்கு கொடுக்கும் பணத்தில் பெரும் பகுதி மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறேன்.

தற்போது வனத் துறையினர் எனக்கு மரக்கன்றுகளை அதிக அளவில் தருகின்றனர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கத் தள்ளுவண்டியையும் இலவசமாகத் தந்துள்ளனர். பல ஊர்களில் உள்ள பொதுநல அமைப்புக்கள் என் சேவையைப் பார்த்து என்னை வரவழைத்து மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யச் சொல்கின்றனர்.

என் போன்று ஊருக்கு ஒருவர் இந்த சேவையை ஆர்வத்துடன் மேற்கொண்டால் நாட்டில் வறட்சியே வராது. சுற்றுப்புறச்சூழல் நல்ல நிலையில் இருக்கும்'' என்றார் கருப்பையா.

Thanks - Thanambikkai

Wednesday, July 11, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - பத்தோடு பன்னிரண்டு..

சராசரிகளின் காலம் முடிந்துவிட்டது. போன தலைமுறையில், நீங்கள் வெற்றி பெறவேண்டுமென்றால் மற்ற எல்லோரையும்போல் "சராசரி'யாக உழைத்தாலே போதும், "சராசரி'யான திறமையே போதும், படிப்படியாக முன்னேறி நன்கு வெளிச்சத்துக்கு வந்துவிடலாம்.

ஆனால் இப்போது, "சராசரி'யாக இருப்பது போதாது. பத்தோடு பதினொன்றாக நிற்பவர்களை யாரும் மதிப்பதில்லை, காலம் அவர்களைச் சுலபமாக ஒதுக்கிச் சென்றுவிடுகிறது, போட்டி மிகக் கடுமையாகிவிட்ட இன்றைய சூழலில், மற்றவர்களைவிட ஏதேனும் ஒருவிதத்தில் ரொம்ப அபூர்வமாக இருந்தால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும்.

"சராசரி' வட்டத்தைத் தாண்டி மேலே வருவது எப்படி? அபூர்வமானவர்களாக நம்மை முன்னிறுத்திக் கொள்வது எப்படி? இதற்கான டிப்ஸ் நிரம்பி வழிகிற ஓர் அட்டகாசமான புத்தகம், "தி பிக் மூ' (The Big Moo). பல புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மேனேஜ்மென்ட் நிபுணர்கள் இணைந்து எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தை சுவாரஸ்யமாகத் தொகுத்திருப்பவர் சேத் கோடின்.

ஆங்கிலத்தில் மூ என்றால், மாடுகள் எழுப்பும் குரல். ஒரு தொழுவத்தில் இருக்கும் எல்லா மாடுகளும் ஒரேமாதிரி கத்திக் கொண்டிருக்கும்போது, நாம் மட்டும் கொஞ்சம் சத்தமாகக் குரல் எழுப்பினால்தான், கூட்டத்திலிருந்து வெளிப்பட்டுப் "பளிச்'சென்று தெரிவோம். அதற்கான வழிகள் என்னென்ன? ஏராளமான உதாரணங்கள், குட்டிக்கதைகள், நிஜச் சம்பவங்களோடு இவற்றைச் சொல்லித் தருகிறது "தி பிக் மூ'.

அதிலிருந்து சில முக்கியமான டிப்ஸ் இங்கே:

* "அது சரிதான். ஆனா...' என்று அடிக்கடி சொல்கிறீர்களா? அந்தப் பழக்கத்தை முதலில் விடுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறை "ஆனா...' என்று இழுக்கும்போதும் ஒரு நல்ல விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதற்குப் பதிலாக "ஆமா...' என்று சொல்லிப் பழகுங்கள்.

* மற்றவர்களைவிட ஒரு படி முன்னே சிந்திப்பது நல்ல பழக்கம். ஆனால், அது போதாது, இப்போதெல்லாம் எல்லோரும் ஒரு படி முன்னே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, நீங்கள் குறைந்தபட்சம் மூன்று படிகள் முன்னோக்கிச் சிந்திக்கப் பழகுங்கள்.

* ஒரு படம் ஜெயித்துவிட்டால், அதேமாதிரி பத்துப் படங்கள் வரும், ஒரு பாட்டு ஹிட்டாகிவிட்டால், அதேமாதிரி பத்தப் பாட்டுகள் வரும். காப்பியடிப்பது சுலபம், ஆனால் அடுத்தவர்களால் காப்பியடிக்கப்படும் அளவு ஒரிஜினலான ஓர் ஐடியாவைச் சிந்தித்து உருவாக்கி வெளியிடுவது கஷ்டம். நீங்கள் எதைச் செய்வது நல்லது? யோசியுங்கள்!

* நீங்கள் ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறீர்கள், அதைப் பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள், அதற்கு மற்ற பெரிய ஹோட்டல்களை மட்டும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தால் போதாது, பெரிய தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், சாஃப்ட்வேர் நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்கள், சினிமா கம்பெனிகள் என்று சகலத்தையும் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் தங்களுடைய துறையில் ஜெயிக்க என்னென்ன செய்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். ஐடியாக்கள் எங்கிருந்தும் கிடைக்கலாம், உங்களுடைய கண்களும் காதுகளும் எப்போதும் திறந்திருக்கட்டும்

Tuesday, July 10, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - The Best Advice I Ever Got !!

அநேகமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒன்றிரண்டு "டர்னிங் பாயின்ட்'களாவது நிச்சயம் இருக்கும். தினமும் ஒரேமாதிரி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் யாராவது நமக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அதைப் பின்பற்றி நடந்தவுடன் நம்முடைய உலகமே தலைகீழாக மாறியிருக்கும். இல்லையா?இந்த விஷயம் நமக்கு மட்டுமில்லை, பெரிய நட்சத்திரங்கள், பிரபலங்கள், வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.

அவர்களுடைய வெற்றிப் பயணத்தையும் ஒரு சின்ன அறிவுரை திசைமாற்றியிருக்கும்.அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பிரபலம் கேட்டி கௌரிக். அவருக்குத் திடீரென்று ஒரு யோசனை, "இதுபோல் பல துறைகளில் பெரிய அளவில் ஜெயித்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய அறிவுரை எது? ஏன்? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டால் எப்படி இருக்கும்?'கேட்டியின் இந்த திடீர் சந்தேகம் ஒரு சுவாரஸ்யமான புத்தகமாக மலர்ந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் "தி பெஸ்ட் அட்வைஸ் ஐ எவர் காட்'(The Best Advice I Ever Got). பில் கிளின்டன், காண்டலீஸா ரைஸ், இந்திரா நூயி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், சல்மான் ருஷ்டி, பில் கேட்ஸின் மனைவி மெலிண்டா கேட்ஸ், மனோஜ் நைட் ஷ்யாமளன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குக் கிடைத்த மிக நல்ல அறிவுரைகள், ஆலோசனைகள், அனுபவங்களை இதில் கொட்டியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு, எந்தக் கட்டுரையும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களைத் தாண்டுவதில்லை. சின்னச் சின்ன டிப்ஸ்கள் சுலபமாக மனதில் பதிகின்றன, பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கின்றன.பல பிரபலங்கள் வழங்கிய இந்த "பிராக்டிகல் அட்வைஸ் மழை'யிலிருந்து, உங்களுக்காகச் சில துளிகள் இங்கே

:* வாழ்க்கை என்பது சமையல் குறிப்பு அல்ல. இதற்குப் பிறகு இதைச் செய்யவேண்டும், இவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் விதிமுறை போட்டுவைக்கவில்லை. நீங்கள் எந்தக் கட்டாயங்களையும் பின்பற்றவேண்டியதில்லை. ரிலாக்ஸ், ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவியுங்கள், வாழ்க்கையின்போக்கில் மிதந்து செல்லுங்கள்.

* உங்களுக்கு ஒரு விஷயம் தேவை என்றால் அதை நேரடியாகக் கேட்கத் தயங்காதீர்கள். அப்படிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தால், கூச்சப்பட்டால் வேலை நடக்காது.

* நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? ஏன்? இந்த விஷயத்தை நீங்களே கூர்மையாக ஆராய்ந்து பாருங்கள். அதனைத் தாண்டுங்கள்.

* அதற்காக, "நான் பயமே இல்லாமல் வாழ்வேன்' என்று ஆரம்பித்துவிடாதீர்கள். பயம் நல்லது. பல சமயங்களில் அதுதான் உங்களைச் சரியான பாதையில் நகர்த்திச்செல்கிறது.

* பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள், அவை மாறுவேஷத்தில் வரும் வாய்ப்புகள்!

* முயற்சி தவறிவிட்டதா? சறுக்கிக் கீழே விழுந்துவிட்டீர்களா? தப்பில்லை, மறுபடி எழுந்து நிற்காவிட்டால்தான் தப்பு.

* எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? என்று புலம்பாதீர்கள். எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கிறது. டென்ஷனை விட்டு முன்னே போகிற வழியைத் தேடுங்கள்.

* எது சுலபமாக இருக்கிறதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியோ அதைச் செய்யுங்கள்

Friday, July 6, 2012

தோல்விக்கு என்ன காரணம்? (வெற்றிப் பெற உதவும் தாமஸ் ஆல்வா எடிசனின் தன்னம்பிக்கை மந்திரங்கள்...)


வணக்கம் நண்பர்களே..!

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? எனக்குத் தெரிந்தவரை அனைத்துக் குழந்தைகளுமே பிடிவாத குணம் கொண்ட வர்களே..! குழந்தைகள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வார்கள்? தங்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள்களை() வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் பிடிவாதம் செய்வார்கள். தனக்குப் பிடித்தமான திண்பண்டங்களை வாங்கித் தரவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள். தாங்கள் விரும்பும் இடங்களுக்கு(பொருட்காட்சி, மிருகக் காட்சிசாலை, கடற்கரை...) அழைத்துச் செல்லவில்லை என்றால் பிடிவாதம் செய்வார்கள்.

ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை(School Holidays) நாள்கள் வரும்போது இவ்வாறான இடங்களுக்கு அழைத்துப் போகச் சொல்லி விடாமுயற்சியுடன் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.
குழந்தைகளின் இதே பிடிவாத குணத்தையும், விடாமுயற்சியையும் படிப்பிலும், பிற திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட அவர்களுக்கு நாம் பழக்க வேண்டும். இப்படிப்பட்ட பிடிவாத குணத்தினாலும் விடாமுயற்சியினாலும் இன்று உலகம் புகழும் அறிஞராக(Bulge scholar), பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவரே தாமஸ் ஆல்வா எடிசன்(Thomas Alva Edison).

தாமஸ் ஆல்வா எடிசன் ஓர் ஆய்வினைத் தொடங்கிவிட்டால், அதன் முடிவைக் கண்டறியும்வரை ஓய்வே எடுக்க மாட்டார். ஒரு நாள், எடிசனின் சோதனைச்சாலையில்(Laboratory) அவரது உதவியாளர்கள் இசைத்தட்டு(Record) ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று இரவுக்குள் இசைத்தட்டினை உருவாக்கிவிட வேண்டும் என உதவியாளர்களுக்கு எடிசன் கூறியிருந்தார்.

உதவியாளர்களுள் ஒருவர் கிராமபோன் இசைத்தட்டினைத் தயாரிப்பதற்காக மெழுகு(Wax) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பலமுறை முயற்சி செய்தும் மெழுகினைப் பக்குவமான தேவையான பதத்தில் தயார் செய்ய அவரால் முடியவில்லை. எரிச்சலும் வெறுப்பும் அடைந்தார்.

எடிசனிடம் சென்று, பலமுறை முயன்றும் மெழுகு சரியான பதத்தில் வரவில்லை. நாம் செய்த செயல்முறையின் அடிப்படையில்(Based on the process) ஏதோ ஓர் தவறு உள்ளது. ஆகையால், அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். இன்றைய ஆய்வினை இத்துடன் நிறுத்தி விடலாம். நாளை புதிதாக முயற்சி செய்யலாம் என்றார்.

தாமஸ் ஆல்வா எடிசன் கோபத்துடன், மெழுகு சரியான பதத்தில் வரவில்லையெனில், அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும். தாங்கள் சரியாகச் செய்யாமல் அடிப்படையில் தவறு என்று இன்னொன்றின் மீது குறையைச் சுமத்தக் கூடாது. திரும்பத் திரும்பச் செய்வதுதான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டுவிட்டு ஓடுவது வெற்றிக்கு வழிவகுக்காது என்றார்( True facts of Thomas Alva Edison ).

ஒரு முறை, விஞ்ஞானிகளுக்கு வேண்டிய தகுதிகள்( Eligibility for scientists ) பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எடிசன் என்ன பதில் கூறினார் தெரியுமா?

ஒரே நேரத்தில் நான் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்ததில்லை. பல காலம் இடைவிடாமல் தொடர்ந்து செய்த முயற்சிகளின்(Continued attempts) விளைவுதான் என் வெற்றிகள். இதில் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. விஞ்ஞானிகளில்(Scientists) சிலர் ஓரிரு சோதனைகளைச் செய்து பார்த்துவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் விரும்பியதை அடையும்வரை நான் மேற்கொண்ட சோதனையை இடையில் நிறுத்தியதே இல்லை.

100 முறை தோல்வியடைந்த ஒருவர் 101 ஆவது முறை வெற்றியடைந்துவிட முடியும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். எனக்கு அபாரமான அறிவும் ஆற்றலும் இருப்பதால்தான் நான் வெற்றி பெறுவதாகச் சிலர் சொல்கிறார்கள். அது என் நண்பர்கள் கூறும் புகழ்ச்சி உரையே தவிர அதில் உண்மையில்லை என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

விடா முயற்சியுடன் தொடர்ந்து பாடுபடுபவர்களும் என்னைவிடச் சிறப்பான வெற்றிகளைப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன்.

எல்லாப் பாடங்களையும் விரும்பிப் படிக்கும் குழந்தைகள் மிகச் சிலர்தான். ஒரு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் படிக்கச் சிரமப்படும் குழந்தைகள், அப் பாடத்தைத் திரும்பத் திரும்பப் படித்து, அதனைப் புரிந்து மனதில் பதிய(memory) வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பதிய வைத்த பாடங்களைப் பிழையின்றி எழுதுகின்ற பழக்கத்தையும்(Writing) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பயற்சி செய்து பாடங்களைப் படித்தால் போதும். அறிவியல் பாடம் எனக்கு ஆகாது. கணக்குப் பாடமென்றாலே எனக்கு உடம்பெல்லாம் படபடக்கும் என்பதெல்லாம் வெறும் பிரமை. அவர்களை இத்தகைய மாயமான பிரமையான எண்ணங்களிலிருந்து மீட்டுக் கொண்டுவந்து மீண்டும் மீண்டும் அவற்றை எளிய முறையில் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களும் அனைத்துப் பாடங்களிலும் சிறந்து விளங்குவார்கள்.

எல்லோரும் எல்லாம் தெரிந்து கொண்டு பிறப்பதில்லை. நமது அறிவைப் பயன்படுத்தி, நாம்தான் ஏன்(what), எதற்கு(which), எப்படி(How to) என்ற கேள்விகளால் பகுத்தறிந்து சிந்தித்துச் செயல்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பிறந்து அகிலப் புகழ் பெற்ற விஞ்ஞானி எடிசன் மின்விளக்கு(Electric light), கிராமபோன்(Phone), ஒலிபெருக்கி(Speaker), திரைப்படம்(Movie) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, பள்ளியில் சென்று படிக்காதவர். வீட்டில் தன் தாயிடமே அரைகுறையாகக் கல்வி பயின்றவர். இருப்பினும், எடிசன் தன் ஆய்வுகளைத் திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்து பல வெற்றிகள் பெற்றுள்ளார்.

பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டில் தன் தாயிடம் அரைகுறையாகக் கல்வி கற்ற எடிசனே இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளார் என்றால், தினமும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களின்,பெற்றோர்களின் அன்பில், அரவணைப்பில் இருக்கிற குழந்தைகள், முறைப்படி பாடங்களை முழுமையாகப் பயிலும் நமது குழந்தைகள் இது போல பல சாதனைகளை நிகழ்த்தா முடியாதா என்ன?

தேவை தன்னம்பிக்கை, விடாமுயற்சி.. கூடுதலாக எடிசனின் வார்த்தைகளில் சொல்வெதன்றால் பிடிவாதம் மற்றும் எடுக்கும் முடிவுகளில் உறுதி, ஒரு செயலைச் செய்யும்போது ஏற்படும் விளைவால் துவண்டு விடாமல், அதை எப்படி செய்தால் சரியான முறையில் செய்யலாம் என்பதை தீர்மானித்து அதற்குரிய செய்முறையை மாற்றி திரும்பத் திரும்பச் செய்தல் ஒன்றே நாம் தேடும் தேடலுக்கு விடை கிடைக்கும். செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றியின் ரகசியம்.( True facts of Thomas Alva Edison ).

ஆரோக்கியமான செயல்களில் பிடிவாதமும் வெற்றித்தரும் என்பதை அவர் செயல்களிலிருந்தே நாம் கற்றுக்கொள்ளலாம். இதையே ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.

தாமஸ் ஆல்வா எடிசனின் வாக்குக்கு ஏற்ப பிடிவாதமும், திரும்ப, திரும்ப அச்செயலை செய்து, செய்து விழுந்து.. எழுந்து.. மீண்டும் விழுந்து.. எழுந்து.. தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கத்தான் வேண்டும். அப்போதுதான் நாம் நினைக்கும் செயல் வெற்றியடையும். அறிஞர் ஒருவர் சொன்னது போல எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல.. எத்தனை முறை எழுந்து நின்றாய் என்பதுதான் முக்கியம். நாமும் கற்றுக்கொள்வோம்.. நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த வெற்றிமுறையை கற்பிப்போம்.

Friday, June 15, 2012

பலன் தானே வரும்..!


கடற்கரையோரம் பெரிய மரமொன்றில் அழகான கூடு கட்டி வாழ்ந்த கடற் குருவிகளின் அன்பின் அடையாளமாக கூட்டில் நான்கு முட்டைகள்.
ஒருநாள் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு...!

கடலில் விழுந்தது கூடு. முட்டையிட்ட பெண் குருவி தாய்மையில் தவிக்க, தன் துணையைத் தேற்ற ஆண் குருவி அயராது உழைத்து அந்த கடல் நீரை வாயில் மொண்டு தூரத்தில் கொட்டி கூட்டையும் முட்டையையும் மீட்போம் என ஆறுதல் கூறியது. இருவரும் கடல் நீரை வாயில் மொண்டு கரையில் ஊற்றும் வேலையை மேற்கொண்டனர். .

அவ்வழியே வந்த மகான் ஒருவர் இக்காட்சியைக் கண்டு தனது ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்தார். அக்குருவிகளுக்கு உதவ தவம் மேற்கொண்டார். கடல் நீர் உள்வாங்கியது. குருவிகளுக்கு கூடும், முட்டைகளும் கிடைத்தன.

‘‘பார்த்தாயா ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை வற்ற வைத்துவிட்டோம்’’ என்று பெருமையாகச் சொன்னது ஆண் குருவி.

குருவிகளுக்கோ மகானையும் தெரியாது; தவ வலிமை பற்றியு]ம் தெரியாது. இந்த பலன் மகானால் கிடைத்தது என்றாலும், குருவிகளின் உழைப்பைப் பார்த்ததால்தானே மகானுக்கு அந்த உதவி செய்யும் எண்ணம் வந்தது.

எனவே நோக்கம் நியாயமானதாக இருந்து நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து பலனைப் பற்றி கவலைப் படாமல் செயலில் இறங்கினால் இறை அருளே பக்க பலமாக வந்து நின்று மகத்தான சாதனைகள் நிகழ்த்த உறுதுணை செய்யும்.

(இது முதலமைச்சர் ஜெயலலிதா திருமண நிகழ்ச்சியில் சொன்னது.)

Thursday, June 7, 2012

ஜெயிக்கவைத்து ஜெயிக்க ஆசைப் படும் பயிற்சி மையம்!


உங்கள் பார்வையில் ஓர் தெளிவு இருந்தால், சமுதாயத்தின் நெளிவு சுளிவுகளை களைந்து, சமுதாயத்தை அழகாக்க முடியும். அந்த சமுதாயத்துக்கு உங்கள் பங்குக்கு, நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் புரிந்து கொள்ள முடியும். அதன்படி நீங்கள் செயற்படுவீர்கள்.
      மேற்கண்ட வரிகள் ஏதோ கவிதை போல் தோன்றினாலும், அந்த வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காண்பித்துக் கொண்டிருக்கிறார் குமரேஸ்வரி. சமுதாயத்திற்கு நேர்மையான அதிகாரிகளை உண்மையான சேவை மனப்பான்மையோடு உருவாக்கி தர பாடுபட வேண்டும். அப்போது இந்த சமுதாயத்தில் தவறுகள் களையப்பட்டுவிடும். குற்றமற்ற சமுதாயம் உருவாகும் என்பது தான் ஐஏஎஸ்* பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் குமரேஸ்வரியின்  ஒரே ஆசை.

       இதற்காகவே முழு மூச்சுடன் அவர் களம் இறங்கியிருக்கிறார். P.L. RAJ MEMORIAL STUDY CIRCLE என்கிற பெயரில், சென்னை அண்ணாநகரில் பயிற்சி வழிகாட்டி மையம் (Coaching Center) நடத்தி வருகிறார். 2006 இல் தொடங்கிய இந்த பயிற்சி நிலையத்திலிருந்து வருடாவருடம் தேர்ச்சிப் பெற்று போனவர்கள் அதிகம். அத்தனை பேர்களும் நேர்மையானவர்கள் என்று இன்றுவரை நிரூபித்துக் கொண்டிருப்பதுதான் குமரேஸ்வரிக்கு அவர்கள் செய்யும் கைமாறு.

(சுடரொளி)
  குமரேஸ்வரிக்கு இப்போது குரூப் 1 இல் பதவி கிடைத்திருப்பதால், அவரால் நேரடியாக இந்த பயிற்சி வகுப்பைக் கவனிக்க முடியவில்லை. அவருடன் 15 வருடங்களாக கூடவே இருந்து வளர்ச்சிக்குப் பாடுபட்ட சுடரொளி (புகைப்படத்தில் இருப்பவர்) இப்போது இந்த நிலையத்தைக் கவனித்துக் கொள்கிறார். இவ்விழிப்புணர்வு சேவை பலர் அறிந்திருப்பார்களாயின் இதனை முன்மாதிரியாக பின்பற்றலாம் என்ற நோக்கில் குமரேஸ்வரியிடம் தொடர்ந்து பேச்சை தொடர்ந்தோம்.
சொல்லுங்கள், இம்மையத்தின் நோக்கமென்ன?
இங்கு ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்கிற கனவுகளுடன் வருகிறவர்கள் பலர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமைகள் அவர்களுக்கேத் தெரியாது. அதைப் புரிய வைத்து, தெரிய வைத்து அவர்களை தயார் படுத்துவது என்பதே பெரிய கலை. நான் அதைத்தான் செய்கிறேன். குழந்தைக்குத் தாய்ப் பாலோடு கொஞ்சம் வீரத்தையும், நாட்டு பற்றையும் அந்த காலத்துத் தாய்மார்கள் ஊட்டினார்கள். ஆனால் இந்த காலத்துத் தாய்மார்கள் வீரத்தை சிறுவயதிலேயெ விதைத்துவிட  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறுகிறார்கள். அதை நாம் இப்போது கல்வியுடன் சேர்த்து தருகிறேன்.
     
தினம் தினம் பாடம் எடுக்கும் போது, வீரம், நாட்டுப் பற்று இரண்டையும் விதைக்காமல் விடுவதில்லை. இப்படித் தருவதனால் மட்டுமே ஒரு நேர்மையான அதிகாரியை உருவாக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என்னிடம் படித்தவர்களில், பாதிபேர்கள் பணம் கட்டிப் படித்தவர்கள் என்றால் மீதி பாதிபேர் நான் பணம் கட்டிப் படிக்க வைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வெளியில் சென்று இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நான் செய்ததை அவர்கள் பிறருக்கு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
நம்பிக்கைதான் வாழ்க்கை, தவிர நான் அவர்கள் மனதில் விதைத்த விதையின் வீரியம் எனக்குத் தெரியும். எனவேதான் பிறரை ஜெயிக்க வைப்பதன் மூலம், நல்ல சமுதாயத்தைத் தரவேண்டும் என்கிற என் எண்ணமும் ஜெயிக்கிறது. இது எனக்கு போதும், நான் படிக்க வைத்தவர்கள் பின்னால் என்னைக் கவனிக்க வேண்டும் என்கிற சுய நலண்ணம் எனக்கு இல்லை. இன்னும் நாலுபேரை ஜெயிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான்.
எப்படி இந்த சிறிய வயதில் இவ்வளவு தேடல் வந்தது?

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகில் சிவலூர்தான் நான் பிறந்த ஊர்.அப்பா பெரியசாமி  பெரிய பண்ணையார். இல்லை என்று வருபவர்களுக்கு கணக்கு பார்க்காமல் தந்தவர். அது என் மனதில்  பதிந்து போனது. அண்ணா லிங்கராஜ் ஊருக்கு நல்லது செய்தே இறந்து போனார். அவருக்கு நான்  ஐஏஎஸ் ஆகி  சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. அவர் நினைவாகத்தான் இந்த பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தேன். அவர் என் மனதில் விதைத்த விதையின்  வீரியம்தான் இன்று இப்படி வளர்ந்து நிற்கிறது.

   அத்துடன், அந்த ஊரில் பிள்ளைகளை கோடை விடுமுறையில் ஊருக்கெல்லாம் அனுப்ப மாட்டார்கள். அங்கு 'விவேகானந்தா கேந்திராலயா' என்று ஒரு பயிற்சிப்  பள்ளி உண்டு. விவேகானந்தரின் கொள்கைகள் பாட்டாகப் பயிற்சி தருவார்கள். அது எனக்குள் ஏற்படுத்திய வீரியமிக்க மாற்றங்கள் ஏராளம். அந்த வீரியம்தான் எனது இந்த சிறிய அளவிலான தொடக்கம். இன்னும் நான் இந்த சமுதாயத்துக்கு செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது.
 
விவேகானந்தா கேந்திராலயா பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

விவேகானந்தரின் கொள்கை என்பது தேசப் பற்றுதான். அவர் சாதிமதங்களை மதித்ததில்லை, இளைஞர்கள், குழந்தைகள் மனதில் பெரிய மாற்றம் கொண்டு வர முடியும் என்று நம்பினார். இமயம்  முதல் குமரிவரை மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றுதான் விரும்பினார். எனவே அந்த கொள்கைதான் எங்களுக்கு பாடலாக கற்றுக் கொடுக்கப் பட்டது. இன்றுகூட நான் கவலையாக இருந்தால் உடனே நான் விவேகானந்தா கேந்திராலயா பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவேன்.

(கூறிக்கெண்டே  சட்டென  மிக இனிமையாக மனதைத் தொடுவதுபோல சில வரிகளைப் பாடினார்)
புதிய பாரதம் படிக்க பூபாளம் படுவோம்
இளைய கரங்கள் ஆயிரம் உறுதியோடு கூடுவோம்
எட்டு திக்கும் நாமினி சுட்டுவிரல் நீட்டுவோம்
பட்டறுந்து தீமைகள் தட்டு கெட்டு ஓடிடும்.

நிலவு கூட இன்று நம் கைகளுக்குள் ஆடுது
கனவு மெல்ல நடைபயின்று உண்மையினைத் தேடுது
பழையகால குமிழ் உடைந்து பாதைகளும் மாறுது
புதிய கீதம் விண்ணிலே புயலைப்போல சீறுது.

சாதி மத வெறியுடைத்து சமத்துவம் பேணுவோம்
நீதியிங்கு எல்லோருக்கும் பொதுவென ஓதுவோம்
நாளை வரும் வரலாறு நம் முகத்தைக் காட்டிடும்
நட்பு அமைதி முன்னேற்றம் நல்ல உலகை ஆக்கிடும்.

பனி படர்ந்த மலை முகட்டில் பாரத தாய் சிரிக்கிறாள்
அலையடிக்கும் குமரியில் பாதங்களை நனைக்கிறாள்
பாலையுடன் சோலைகளை தன்னிடத்தேக் கொண்டவள்
பல மொழி பல இனம் அரவணைத்து  நின்றவள்.
இப்படி விவேகானதா கலாகேந்திராலயாவில் பாடல்கள் மூலமே குழந்தைகளுக்கு நாட்டுப் பற்று மற்றும்  நாம் அனைவரும் ஒன்று என்கிற ஒற்றுமை உணர்வையும் ஊட்டி விட்டார்கள். இதில் பயின்றவர்கள்தானே என் அண்ணாவும், அக்காவும் எனவே எனக்குள் புதைந்த விதை அவர்களுக்குள்ளும் இருந்தது. அவர்கள் என்னை உருவாக்கினார்கள். 

உங்களுக்கு உதபுவர்கள் பற்றி?


(குமரேஸ்வரியின் அக்கா & மாமா)
         அக்கா தென்னரசியும், மாமா செல்வராஜும் கூட எனக்கு பண நெருக்கடிக் காலங்களில் உதவி செய்வாகள். எனக்கு இப்போது குரூப் 1 இல் பதவி கிடைத்திருப்பதால், என்னால் நேரடியாக இந்த பயிற்சி வகுப்பைக் கவனிக்க முடியவில்லை. என்னுடன் 15 வருடங்களாக கூடவே இருந்து வளர்ச்சிக்குப் பாடுபட்ட சுடரொளி இப்போது இந்த நிலையத்தைக் கவனித்துக் கொள்கிறார். இங்கு பணிபுரியும்,பார்கவி, லாவண்யா, சபரீஷ், ஜெயலக்ஷ்மி, கருப்பையா, சுபாஷ் அனைவருமே என் சிந்தனை உள்ளவர்கள். பணம் ஒரு பொருட்டாக நினைப்பவர்கள் இல்லை.

        சேவை மனப்பான்மையோடு ஒன்றுபட்ட சிந்தனை உள்ளவர்கள் சேர்ந்து நடத்திவரும் பயிற்சி நிலையம் இது. இங்கு பணம் இருப்பவர்களுக்கும், கற்றுத் தரப்படும். பணம் இல்லாதவர்களுக்கும் அரவணைப்புடன் பயிற்சி தரப்படும்.

உங்களிடம் கற்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாங்கள் உங்கள் மனதில் விதைத்த நேர்மை, உண்மையை நீங்களும் அதிகாரப் பூர்வமான அதிகாரிகளாகி நான்கு பேர் மனதில் விதையுங்கள். எங்களின் ஒரே எதிர்பார்ப்பு இதுதான்.
(ஐ.ஏ.எஸ்* எனப்படுவது இந்திய அரசில் ஆட்சிப்பணியினை மேற்கொள்ள சிறப்பு அமைப்பாக இந்திய அரசால் கட்டமைக்கப்பட்டது. சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் குடியுரிமை தேர்வின் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் குறந்த அளவு கல்வி தகுதியாக உள்ளது.

Sunday, May 27, 2012

காற்றாய் வீசு மனிதா !



,

      அமங்கலமாக பேசகூடாது நல்ல வார்த்தைகளை அதுவும் மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகுங்கள் கோபம் வரும் போது கூட அத்து மீறி வார்த்தைகளை வெளியிடாதீர்கள் காரணம் ஒருவேளை நீங்கள் கோபத்தால் சொல்லுகின்ற சொல் பலித்துவிட போகிறது. வீணாக மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்த பாவம் உங்களை வந்து சேர்ந்துவிடும் என்று நமது பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லவதை பலமுறை கேட்டுருக்கிறோம். அந்த அறிவுரை அப்போது நமக்கு எரிச்சலாக தேவையற்றதாக தெரிந்தாலும் வயது ஏற ஏற அதிலுள்ள சத்தியம் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. நாமும் பெரியவர்களை போல நமது குழந்தைகளுக்கு இதே உபதேசத்தை செய்கிறோம்.

கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை வேதனைபடுத்துவது ஒருவித குற்றமென்றால் அதே வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை தானே நோகடித்து கொள்வதும் குற்றம் தான் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் எந்த ஒரு சிறிய துன்பம் வந்தாலும் நான் செத்து விட போகிறேன். சாவதை தவிர எனக்கு வேறு வழியே இல்லை என்பார்கள். வேறு சிலர் எனக்கு வந்த கஷ்டமட்டும் மற்றவர்களுக்கு வந்திருந்தால் தூக்கில் தொங்கியிருப்பார்கள் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து உயிரை மாய்த்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். தான் செத்துவிடுவேன் என்று சொல்வதும் அவர்களும் செத்துவிடுவார்கள் என்று சொல்வதும் மங்கலமல்ல அமங்கலமே ஆகும்.

பூமியில் பிறந்த அனைவருமே ஒருநாள் சாகபோகிறோம். கடன்காரனிடமிருந்து தப்பிக்கலாம் வருமான வரிதுரையிடமிருந்து தப்பிக்கலாம். தாலிகட்டிய பாவத்திற்காக கூடவே இருந்து சித்தரவதை கொடுக்கும் மனைவியிடமிருந்து கூட தப்பிக்கலாம் ஆனால் கையில் பாச கயிற்றுடன் நெருங்கி வரும் எமனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்று அவன் என்றால் நாளை நான் சாக வேண்டும். முன்பின் என்று கால வித்தியாசம் இருக்குமே தவிர சாவு என்பது சர்வ நிச்சயமானது. அப்படி மரணம்வந்து நமது வாசல் கதவை தட்டி நிற்கும் காலம்வரை ஓரளவாவது பண்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும். படுபாவி ஒழிந்தான் என்று எதிர்த்த வீட்டுக்காரன் சந்தோசப்படும் படி சாக கூடாது.

நிம்யதியாக வாழ்வதற்கும் நிம்மதியாக சாவதற்கும் விரும்பாத மனிதர்கள் யாருமே இல்லை ஆனால் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பது தான் யாருக்கும் புரியவில்லை ஆனால் அது புரியாத புதிரல்ல மிகவும் சுலபமான வழி அது ஒருவன் நம்மை பார்த்து காரி உமிழ்வது நமக்கு பிடிக்காது. ஓங்கி அறைய வருவது நமக்கு ஆகாது. ஆபாசமான வார்த்தைகளை யாரும் நம்மை நோக்கி பிரயோகம் செய்ய கூடாது. என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாமும் இந்த கொள்கையை மற்றவர்களிடத்தில் கடைபிடிக்க வேண்டும். அதற்கு ஒரே அருமருந்து கரடுமுரடான வார்த்தைகளை விட்டு விட்டு இனிமையான அன்பான மங்களகரமான வார்த்தைகளை பேசி பழகவேண்டும். அன்பால் உங்கள் இதையத்தில் இருந்து புறப்படுகிற ஒரு சிறிய சொல் கொலைகாரனை கூட சிந்திக்க வைத்துவிடும். வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

நீ புதியதாக எதையும் பேசவில்லை நேற்று யாரோ ஒருவர் பேசியதை இன்று நீ பேசுகிறாய் இதே வார்த்தையை வருங்காலத்திலும் யாரவது ஒருவர் பேசுவார்கள் சீசாவில் அடைக்கப்பட்ட காற்று எப்படி சுற்றி சுற்றி சீசாவிற்குள்ளையே வீசுமோ அதே போலவே நாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒலி அதிர்வுகளாக அயன வெளியில் சஞ்சாரம் செய்துகொண்டே இருக்கிறது. நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும். மரணம் என்பதே கிடையாது. பேசுகின்ற நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம் ஆனால் நான் பேசுகின்ற வார்த்தை எப்போதுமே இல்லாமல் போகாது. அதனால் தான் நமது பெரியவர்கள் நல்லதை சிந்தனை செய் நல்லதை பேசு நல்லதை மட்டுமே பேசு என்று சொல்கிறார்கள்.

அயல்நாட்டில் ஒரு விஞ்ஞானி ரோஜா செடி ஒன்றிற்கு திட்டிக்கொண்டே தண்ணீர் ஊற்றினானாம் இன்னொரு ரோஜா செடிக்கு அமைதியாக தண்ணீர் ஊற்றினானாம் மற்றொரு செடிக்கோ புகழ் மொழிகளை பாராட்டு வார்த்தைகளே மட்டுமே சொல்லி கொண்டு தண்ணீர் ஊற்றினானாம். திட்டி வளர்க்கப்பட்ட செடி காய்ந்து போனதாம் மவுனமாக தண்ணீர் ஊற்றிய செடி அப்படியே இருந்ததாம் மாறாக பாராட்டு மொழிகளை கேட்டு தண்ணீர் பெற்ற செடி தளதளவென வளர்ந்து பூத்து குலுங்கியதாம். பேசவே பேசாத செடிகள் கூட நல்ல வார்த்தைக்கும் தீய வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து வைத்திருக்கின்றன. ஆனால் எல்லாம் அறிந்த மனிதன் மட்டும்தான் உணர்ச்சியற்று இருக்கிறான்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளில் உள்ள ஒலி அதிர்வுகள் நம்மை சுற்றியே எப்போதும் இருக்கிறது. அந்த அதிர்வுகள் நல்லதாக இருந்தால் நாமும் உற்சாகமாக இருப்போம் நம்மை நாடி வருபவர்களும் குதூகலத்தோடு பேசு மகிழ்வார்கள். கெட்டதாக அமைந்துவிட்டால் நம்மை அறியாமலே நமக்குள் ஒரு மந்த கதி புகுந்து விடும். நம்மை நாடி வருபவர்கள் கூட ஏனடா இவனிடம் வந்தோமென்று சலித்து கொள்வார்கள். நோய்வந்து படுக்கையில் கிடக்கும் போது கூட நான் தேறிவிடுவேன் எழுந்து வந்துவிடுவேன். இது என்ன பிரம்மாதமான நோய் இதைவிட கொடிய நோய் வந்தால் கூட என்னால் அதை வெற்றிகொள்ள முடியும். என்று நினைப்பவனே நினைத்தை சொல்பவனே பரிபூரண குணமடைய முடியும்.

ஆனால் இந்த ரகசியம் பலபேருக்கு தெரிவதில்லை எனக்குதெரிந்த ஒரு பொற்கொல்லர் இருந்தார் எப்போது அவர் என்னை பார்கிறாரோ அப்போதெல்லாம் அழுது புலம்புவார் தொழிலே சரியில்லை மனைவி மக்களுக்கு சோறு சமைக்க அரிசி வாங்க கூட கையில் காசுயில்லை என்பார் ஆனால் அதிசயம் என்னவென்றால் போனமாதம் நன்றாக வியாபாரம் நடந்தது இப்போது தான் சரியில்லை என்பார் இதே வசனத்தை தான் கொஞ்சம் கூட மாறாமல் போனமாதம் சொல்லியிருப்பார். இவருக்கு வியாபாரத்தில் ஒன்றும் குறைவு கிடையாது. வருவது போதும் என்ற மன நிறைவு இல்லாததனால் எதிலும் அவரால் திருப்தியாக சந்தோசமாக மன சாந்தியோடு வாழமுடியவில்லை அவர் மட்டுமல்ல அவரிடம் வேலைபார்க்கும் சிறு பையன் கூட இப்படியே தான் பேசுவான்.

திருப்தியில்லாதவன் வாழ்க்கை ஓட்டை படகு போன்றது. அது எந்த பயணத்திற்கும் உதவாது இருப்பதை வைத்து கொண்டு வாழ நினைப்பவன் யாரென்றால் எப்போதும் பார்த்தாலும் சிரித்த முகத்தோடும் மங்களகரமான வார்த்தை பரிமாற்றங்களோடும் இருக்கிறானோ அவன் தான் எனவே மனதில் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் தராமல் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசி பழகி பாருங்கள் வாழ்க்கையில் உள்ள சுவைகள் அனைத்தும் தெளிவாக உங்கள் கண்களுக்கு தெரியும்.

நமது தோட்டத்தில் மேய்கின்ற கோழிகளை பாருங்கள் அவைகள் எவ்வளவு சுதந்திரமாக சுகமாக நடமாடுகிறது என்பதை உணர்வீர்கள் இதே கோழிகளை பிடித்து கசாப்பு கடைக்காரனிடம் கொடுங்கள் உற்சாகமாக இதுவரை கொக்கரித்து கொண்டிருந்த கோழி பெட்டி பாம்பாக கப்சிப் என்று அடங்கி விடும். காரணம் நமது வீட்டு தோட்டத்தில் யாரும் கோழிகளை கொல்ல வேண்டும். அதன் மாமிசத்தை துண்டு துண்டாக வெட்டி எடைபோட வேண்டும். என்று நினைப்பதில்லை ஆனால் கசாப்பு கடையில் அந்த சிந்தனையை தவிர வேறு எதுவுமே இல்லை கோழியை கூட மனித சிந்தனை பாதிக்கிறது. நீங்கள் நல்லது நினைத்தால் உங்கள் செல்ல பிராணிகள் கூட சந்தோசப்படும். கெட்டது நினைத்தால் அவைகளும். துக்கப்படும்.

உங்கள் கெட்ட எண்ணங்களுக்கு பிராணிகளை கூட தாக்கும் சக்தி இருக்கும் போது சதா அதே சிந்தனையில் நீங்கள் உங்கள் வீடுகளில் வாழ்ந்தால் அந்த வீட்டிற்குள் நல்ல அதிர்வுகள் எப்படி இருக்கும். வீட்டில் உள்ள மற்றவர்களின் மன நிலையும் எப்படி குளறுபடியாகும் என்பதை சற்று நினைத்து பாருங்கள் சிலர் சொல்வார்கள் எவ்வளவு நேரம் வெளியில் சுற்றினாலும் அலுப்பு தெரியவில்லை வீட்டுக்குள் வந்ததும். சோர்வு வந்துவிடுகிறது. என்பார்கள் இதற்கு காரணம் எதிர்மறை எண்ணங்கள் வீடு முழுவதும் நிறைந்திருப்பதே ஆகும்.

நாம் வாழுகின்ற வீட்டை வடமொழியில் கடாக்க்ஷா என்று அழைப்பார்கள் அதாவது அன்பு,அருள்,தயவு என்பதன் இதன் பொருளாகும். அன்பு,அருள்,தயை என்பது தான் அன்னை மாகாலக்ஷ்மியின் அடையாளமாகும். நல்ல எண்ணங்களும் நல்ல வார்த்தைகளும் எந்த வீட்டில் நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டிலேயே மகலக்ஷ்மியாகிய திருமகள் வாசம் செய்வாள் என்று நமது முன்னோர்களின் கூற்று நல்ல எண்ணத்தின் அலைகள் மட்டுமே வெற்றியை தேடி தரும். எனவே இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவன் சொன்னானே அதை உங்கள் வாழ்க்கை தத்துவமாக கொள்ளுங்கள். அண்டம் சிதறினாலும் கடல்பொங்கி எழுந்தாலும் கலங்கிடவே மாட்டேன் என்று உறுதியை இதையத்திற்குள் நிரப்புங்கள் உங்களால் நல்லதை மட்டுமே சிந்திக்க முடியும். நல்லதை மட்டுமே பேச முடியும்.

மங்களகரமான வார்த்தைகள் வாழ்க்கை பாதையையே மாற்றி விடும். நேற்றுவரை தூக்கத்தில் இருந்தவன் கூட நன்றாக சிரித்து பழகும் ஒருவரின் நட்பு கிடைத்துவிட்டால் தனது தூக்கத்தை மறந்து துக்கத்தை துறந்து ஒரு போராட்ட காரனாக எழுந்து நிற்பான் எனவே அமங்கலம் தவிர்த்து மங்களம் மட்டுமே பேசுங்கள் இனிய தென்றல் காற்றாய் எங்கும் வீசுங்கள்.
 
நன்றி: உஜிலாதேவி

Friday, May 18, 2012

எட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்!


மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.  


1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் இங்கிலாந்தின் பெர்க்லி (Berkeley) என்ற நகரில் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். அப்போது தொழிற்புரட்சி ஏற்படாத காலம். பசுமை மாறாத வயல்களையும், பண்ணைகளையும் அந்த பிஞ்சு வயதிலேயே காதலிக்கத் தொடங்கினார் ஜென்னர். இயற்கையை அதிகம் நேசித்த அவர் நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். எனவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் பிஞ்சு வயதிலேயே அவர் மனதில் வளரத் தொடங்கியது. வயல்வெளிகளில் சுற்றும்போது பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்தே அது எந்த பறவை என்பதையும், வயல் ஓரங்களில் இருந்த அத்தனை செடிகளின் பெயர்களையும் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் அவரது சிறந்த பண்புதான் பின்னாளில் 'Vaccination' எனப்படும் அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது.

பனிரெண்டு வயதானபோது அவர் டாக்டர். டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கையை உற்றுக் கவனித்தார்.  'cowpox' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க cowpox நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ள ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத்தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார். 

1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். Gloucestershire என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை அவர் தேடிய விடையை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்த்தால்தானே உலகம் நம்பும் அதற்கும் தயாரானார் 1796-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு மே 14-ஆம் நாள் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர்.  Sarah Nelmes என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு  cowpox நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான். 

சில வாரங்கள் கழித்து Smallpox கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் எண்ணித் துணிந்ததால் சற்றும் மனம் தளராமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தடுப்பூசியை குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். 

பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். 


மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. 

எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்ஸிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன். அதனை அறிந்த ஜென்னர் பிரான்ஸில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது. அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார். முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம். 


Catherine Kingscote என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார். 

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு. தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு, சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு, உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு. இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

உலகத்தின் வாயை ஊற வைக்க போகும் சாதனை சொக்லேட்

அமெரிக்காவில் பிரமிட் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள சொக்லேற்றானது உலகின் மிகப்பெரிய சொக்லேற் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.மெக்ஸிகோவில் சிச்வென் லிட்சாவில் உள்ள குகுல்கன் பிரமிட்டின் தோற்றத்தில் வடிமைக்கப்பட்டுள்ள இச்சொக்லேற் வடிவமானது 18,239 இறாத்தல் நிறையுடன் காணப்படுகின்றது. இது இரண்டு யானைகளின் நிறைக்கு சமமானதாகும்.



இந்தத் சொக்லேற்றானது இதற்கு முன்பு இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட 10,736.5 இறாத்தல் நிறைக் கொண்ட சொக்லேற்றின் சாதனையை முறியடித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள விசேட உணவுத்துறை நிபுணரான கசினா என்பவர் இதனை வடிவமைத்துள்ளார்.
10அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மேற்படி சொக்லேட்டை உருவாக்குவதற்காக 400 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன.
சொக்லேற் மற்றும் பேஸ்ரி கற்கை நிலையமான கசினாவின் 30 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக இந்த சொக்லேற் உருவாக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 15, 2012

மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!

வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.  

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.


மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.


1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. 

வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.


வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும்.

Saturday, May 5, 2012

"ஆங்கிலமா... நானா?'

 
பெங்களூரு செயின்ட் ஜோசப் மாலை கல்லூரியின் முதல் பெண் முதல்வர் கிரேஸ்லெட் ஸ்டேன்லி: நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தான் என் சொந்த ஊர். என் உடன் பிறந்தவர்கள் 16 பேர். சின்ன வயதில் இருந்தே, என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, என் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உண்டு. அதற்குக் காரணம் என் அம்மா. படிப்பு மட்டுமல்ல, பேச்சு, கட்டுரை, கவிதை என்று அனைத்திலும் உற்சாகப்படுத்துவார். நான், பிளஸ் 2 வரை தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். அதனால், எனக்கு வசப்படாமல் இருந்த ஆங்கிலம் மீது கோபமும், காதலும் சேர்ந்து வந்தது. கல்லூரியில், பி.ஏ., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன்; ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினேன். ஆனால், "நானா - ஆங்கிலமா'ன்னு மல்லுக்கட்டிப் படித்தேன். பல்கலைக்கழக முதல் மாணவியாக வந்தேன். பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில், பேராசிரியராக வேலை கிடைத்தது. மாலை கல்லூரி மாணவர்களில் பாதி பேர் பெண்கள். இன்று உள்ளது போல், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு கிடையாது. ஏட்டுக் கல்வியை மட்டும் கொடுக்காமல், சமூகத்தில், தான் சந்திக்கும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத் தரவேண்டும் என்பது என் எண்ணம். அதை நான் செயல்படுத்தினேன். காதல், பாலியல், கல்வி சார்ந்த சரியான பார்வையைப் பெறவும் வழிகாட்டினேன். கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நான் தான் பொறுப்பு. அதை நான் சிறப்பாகக் கையாண்டதால், "கல்லூரி கவர்னர்' பதவி கொடுத்தனர். அதையும் சிறப்பாகச் செய்தேன். கல்லூரியில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கான அங்கீகாரமாக, என் னை முதல்வர் ஆக்கினர். இந்த அங்கீகாரம் கிடைத்ததில் நிறையவே பெருமையடைகிறேன். சமூக மாற்றத்தின் சாவியான கல்வி, ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இனி என் பயணம் தொடரும்.

நன்றி: தினமலர்