Sunday, April 8, 2012

வான்கோழி வளர்ப்பு முறைகள்

வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
 

1.புறக்கடை வளர்ப்பு(Backyard system)
2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு (Semi-intensive system)
3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)
4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு:

நம்முடைய கிராமபுறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால் புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்கு/ சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்து அக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாது. பழைய, ஊற வைத்த பிண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால் வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.

இடவசதி:
வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு இடவசதி போதுமானதாக இருக்கும். இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை தேவைப்படும். அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டைகளிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்.

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை:
வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு, கொட்டகையில் 5-6 கொட்டகையில் சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும்.

இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.


ஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு:
கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும் ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம். ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோலை, சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நேர்கிகல் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்கவேண்டும்.

இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்ாகழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம். ஒரு சேவல் வான்கோழிக்கச் சுமார் 5-6 சதுர அடி இடவசதியும் ஒரு பெட்டை வான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவை. 40 ஆண் கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டை வான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவை. வளர்ந்த வான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள் வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.


கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு:

அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ் கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானே வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும்.

இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து விடலாம். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம். சிறிய குஞ்சுகளை, கம்பி வலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம் மீது பொருத்திக் கொள்ளலாம். கம்பிவலைச் சட்டத்தின் மேல் விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமான நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

பெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில் பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம் ஏற்படலாம். இதைத் தடுத்திட, பாதி இடம் கம்பிவலைச் சட்ட அமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்கு 2 சதுர அடி இடவசதியும், ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுர அடி இடவசதியும் போதுமானது. முடிந்த அளவிற்கு வளர்ந்த வான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம்.

கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்
கம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கான வான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5 தாது உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும். இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கஷ்டப்படும். மேலும் முட்டையிடக்கூடிய பகுதி ஆழ்கூளமாக இருப்பது சிறந்தது.

அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும். சுத்தமான ஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெற முடியும். சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில் வைத்திட இயலும்.

வான்கோழித் தீவனப் பராமரிப்பு:

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்படவேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்படவேண்டும்.

வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு.
தண்ணீர்
மாவுப்பொருள்
புரதம்
கொழுப்பு
நார்ப்பொருள்
தாது உப்புக்கள்
உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)


வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு:

ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை. வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான்கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்றக் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம். குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில் தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக் குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில் வைக்கவேண்டும். சில சமயங்களில் தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் பளிச்சென்று பீங்கான் குண்டுகளைப் போடுவதால் தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் குஞ்சுகள் தூண்டப்படுகின்றன. முதல் இரண்டு நாட்களுக்குத் தீவனத்தைச் சுத்தமான பழைய செய்தித்தாள் மேல் தூவிவிடலாம்.

ஆரம்ப நாட்களில் தீவனத்தைப் பாத்திரத்தில் நிறையக் குவித்து வைத்து, தீவனம் உட்கொள்ளத் தூண்ட வேண்டும். பொதுவாக குஞ்ச பருவத்தில் இறப்பு விகிதம் 10 விழுக்காடு வரை இருக்கும். குஞ்சுப் பொரித்த முதல் நாளில் இருந்து கால்சியம், பி வைட்டமின் மருந்தினைத் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்கள் வரைத் தவறாமல் கொடுக்கவேண்டும்.

நாம் சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் போது உள்ளூர் சந்தையில் கிடைக்கும் விலை மலிவான தீவனப்பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் தீவனம் தயார் செய்து கொள்ளலாம்.

குஞ்சுத்தீவனம்:
வான்கோழிக் குஞ்சுகளுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு 28 விழுக்காடு புரதமும், 2800 கிலொ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தி அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைபற்றி இங்குக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-40 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-38 பங்கு
மீன் தூள்-9 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-2 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள (வைட்டமின் ஏ, எ 25 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.

நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு 26 விழுக்காகடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும்.

இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-45பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-30 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

வளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:
வளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில் புரதச் சத்தின் தேவைப் படிப்படியாகக் குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாகக் கூடுகிறது. எனவே அந்தந்த வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது. வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள் வரை அளிக்கவேண்டும். இத்தருணத்தில் 22 விழுக்காடு புரதமும் 3000 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும்.

தீவனக்கலவை
மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு -45 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-31 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:

இத்தீவனமானது 14 முதல் 28 வார வான்கோழிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இத்தீவனத்தில் 14 விழுக்காடு புரதமும் 3200 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-15 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 20 கிராம்) கலந்து தரவேண்டும்.

இத்தீவனத்தைப் பொடியாகவோ அல்லது குச்சித் தீவனமாகவோ அளிக்கலாம். இத்துடன் தீவனத் தட்டுக்களில் கிளிஞ்சல் எந்நேரமும் கிடைக்குமாறு போட்டு வைக்கலாம்.
குச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்துச் சத்துக்களும் சமச்சீர் அளவில் வான்கோழிகளுக்குக் கிடைக்கின்றன.

தீவன விரயம் குறைவு மற்றும் சத்துக்கள் உபயோகிக்கும் திறன் அதிகம்.

நச்சுத் தன்மை குறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது.

தீவனம் உட்கொள்ளும அளவம் தீவன மாற்றுத் திறனும் அதிகரிக்கின்றன.

கோழிகளின் உடல் எடை சமச்சீராக இருக்கும்.

முட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:

சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிட ஆரம்பிக்கின்றன. வான்கோழிகளின் முட்டைகள் சுமார் 70 கிராம் இருக்கும். முட்டையிடும் கோழிகளுக்கு 14 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) அடங்கிய தீவனம் அளித்தல் வேண்டும். இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-22 பங்கு
அரிசித் தவிடு-19 பங்கு
மீன் தூள்-5 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

மேலும் முட்டைக்கோழிகளுக்குக் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இதிலிருந்து முட்டை உற்பத்திக்குத் தேவையான கால்சியச் சத்து கிடைக்கிறது.

இனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்:

முதல் 12-16 வாரங்களுக்கு இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும் வான்கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தையே இனப்பெருக்கக் கோழிகளுக்கும் அளிக்கலாம்.

அதன் பின்னர் இக்கோழிகள் கூடுதல் உடல் எடை அடைவதை தடுக்கக் தீவனக் கட்டுப்பாட்டு முறை அல்லது குறைவான புரதத் தீவனம் அளித்தல் முறை மூலம் உடல் பருமன் அடைவதைத் தடுக்கவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளுக்கு 12 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் கொண்ட தீவனம் அளிக்கவேண்டும். இத்தீவனத்தைத் தயாரிப்பது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-55 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
அரிசித் தவிடு-17 பங்கு
மீன் தூள்-5 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம், கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல் 1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்) கலந்து தரவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளில் இருந்து கிடைக்கும் கருமுட்டைகளை அடை வைக்கும் போது சுமார் 10 சதவிகிதம் முட்டைகள் கரு உற்பத்தியாகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் போதிய அளவு வைட்டமின்கள் பி,இ மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் இல்லாமல் இருப்பதாகும்.

பெட்டைக் கோழிகளுக்கு மேற்கண்ட சத்துக்களுடன் மெக்னீசயம் சத்தும் கூடுதலாகச் சேர்த்து அளிக்கவேண்டும். வான்கோழிகளின் கருமுட்டை வளர்ச்சியின் போது 5-15 விழுக்காடு வரை கருக்கள் இறந்து விட வாய்ப்புள்ளது.

அதே போல் 10 விழுக்காடு வரை இளம் குஞ்சுகள் குஞ்சு பொரித்த ஓரிரு நாட்களில் இறந்து விடுவதும் உண்டு. இளம் குஞ்சுகள், அதிக எண்ணிக்கையில் இறப்பதைத் தடுக்க இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் தேவையான அனைத்துச் சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.


வான்கோழி பராமரிப்பு முறைகள்:

நாட்டுக் கோழிகள் அல்லது வான்கோழிகள் மூலமாகக் குஞ்சுகள் பொரித்திருந்தால் தாய்க்கோழிகளே தம் குஞ்சுகளுக்குத் தீவனத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்து விடும். தன்னுடைய காலால் கிளறி, தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதை பார்த்துக் குஞ்சுகளும் தான் ஓரிரு தானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்து குஞ்சுகளும் தானியங்களை சாப்பிடப் பழகிவிடும்.

அடைகாத்தல்:
இயந்திரங்கள் மூலமாகப் பொரிக்கப்படும் குஞ்சுகளை கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது போல்
அடைக்காப்பான் அமைத்து மின்சார குண்டு விளக்கைப் பொட்டு தரையில் உமியிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பிவிட்டு அதன் மேல் குஞ்சுகளை விடலாம்.

திறந்த தட்டுக்களில் தீவனம் வைத்திடவேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்திட வேண்டும். தண்ணீர்ப் பாத்திரங்களும் வைத்து விட வேண்டும். இளம்குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம் அளித்திடவேண்டும்.

தாய்க்கோழி எந்த அளவிற்கு வெப்பத்தைத் தன் குஞ்சுகளுக்கு தேவைப்படும் பொழுது அளிக்கிறதோ அந்த அளவிற்கச் செயற்கையாக வெப்பம் அளித்திடவேண்டும்.
நான்கு தீவனத்தட்டுகள், நான்குத் தண்ணீர்த் தட்டுகள் வைத்திடவேண்டும்.

வெப்பம் அளித்திட 100 வாட் மின்விளக்கு நான்குத் தரையிலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் தொங்கும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு 2 அடி நீளமுள்ள இரண்டு மரப்பலகைகளை அல்லது பிளாஸ்டிக் பைப்களை எடுத்துக் கொண்டு கூட்டல் குறி வடிவத்தில் (+) பொருத்திக் கொள்ளலாம். ஓரங்களில் மின்விளக்கு பொருத்தக்கூடிய வகையில் மின் இணைப்பு கொடுக்கவேண்டும்.

இந்தக் கூட்டல் குறி வடிவ அமைப்பினைக் கயிற்றால் கட்டித் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானுக்குள் தரையிலிருந்து 2 அடி உயரத்தில் தொங்கும்படி விடலாம். இரு கட்டைகளின் நான்கு முனைகளிலும் மின்விளக்குகளைப் பொருத்தி மின்இணைப்பு கொடுத்து எரிய விடலாம். இரண்டு மின்விளக்குகளுக்கு ஒரு சுவிட்சு என்றக் கணக்கில் அமைத்துக் கொள்ளவும்.

தேவையான பொழுது நான்கு மின் விளக்குகளையும் எரிய விடலாம். அல்லது இரண்டு மின் விளக்குகளை அணைத்து விடலாம். இந்த அமைப்பினைத் தான் 'அடைகாப்பான்' என்று அழைக்கின்றோம். இதை ஆங்கிலத்தில் 'புருடர்' என்று அழைக்கின்றோம்.
இந்த புருடருக்குள் வான்கோழி, குஞ்சுகள் பொரித்த நாளிலிருந்து சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை வளர்க்கலாம்.

வெயில் காலமாக இருந்தால் செயற்கையாக மின்விளக்குகள் மூலமாக அளிக்கப்படும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது 2 மின்விளக்குகள் மட்டும் எரிய விடலாம். மழைக்காலமாக இருந்தால் 4 மின்விளக்குகளையும் எரியவிடலாம். பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருந்தால் மின்விளக்குகளை அணைத்து விடலாம். இதைக் கண்டறிவது மிகவும் எளிது. உஷ்ணம் புருடரில் போதவில்லையெனில் எல்லாக் குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கும்.

அப்பொழுது சூட்டை அதிகப்படுத்திடவேண்டும். செயற்கை வெப்பம் அதிகமாக இருந்தால் அடைக்காப்பானின் ஓரத்திற்குச் சென்று விடும். சுறுசுறுப்பற்ற நிலையுடன் காணப்படும். மின்விளக்குகளுக்கு அடியில் வருவதற்கு தயங்கும். இதை உற்றுக் கவனித்தால் போதுமான சூடு அடைகாப்பானில் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும.
தாய்க்கோழி அளிக்கும் அளவிற்கே சூடு கொடுத்திட வேண்டும்.

புருடருக்குள் வான்கோழி குஞ்சுகள்:

குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளருவதற்கு பொரித்த நாளிலிருந்து சுமார் 3 வார காலமாகும். அதுவரை தன்னுடைய உடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி பறவையினத்திற்கு கிடையாது. அதற்காகத் தான் செயற்கை முறையில் வெப்பத்தை அளித்து வளர்க்கச் செய்கிறோம். அடைகாப்பான் பொருத்துவது தாய்க்கோழியின் அரவணைப்பில் இருப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வான்கோழிக் குஞ்சுகள் மிகக் குறைந்த காலத்தில் அதிக எடை பெறுவதால் அதனுடைய 2வது வார வயதிற்குள் உடல் முழுவதும் இறகுகள் வளர்ந்து விடும்.


ஆழ்கூள முறையில் வளர்க்கும் சமயத்தில் இரண்டாவது வாரத்திற்குப் பறிகு அதாவது 10 முதல் 14வது நாளுக்குப் பின் அடைகாப்பானை நீக்கிவிட்டு ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி இடவசதி அளித்து வளர்க்கலாம்.

வான்கோழிக் குஞ்சுகள் மூன்று வார வயதிலிருந்து சுமார் ஐந்து வார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியை அதிகரித்து ஒரு சதுர அடி இடவசதியும் அதற்குப்பின் 8 வார வயதினை அடையும் சமயத்தில் 2 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும், 12 வார வயதினை அடையும் சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்கவேண்டும். இடவசதி குறைவாகக் கொடுத்தால் ஆழ்கூளம் ஈரமாகிவிடும். மேலும் பல நோய்ப்பிரச்சினை ஏற்படும்.


இனப்பெருக்கம்

செயற்கை முறைக் கருவூட்டல்:

சாதாரணமாக ஆண் வான்கோழிகள் அதிக எடை இருப்பதாலும், இனச்சோர்க்கையில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதாலும் பெரும்பாலான சமயங்களில் முறையான இனச்சேர்க்கை நடைபெறுவதில்லை. நல்ல முறையில் இனச்சேர்க்கை நடைபெறாத சமயத்தில் இடும் முட்டைகள் கருவுற்ற முட்டைகளாக இருக்காது.

எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவே செயற்கை முறைக் கருவூட்டலைக் கையாளலாம்.

ஆண் கோழிகள் 9 மாத வயதானவுடன் அவைகளைப் பிடித்து மடி மீது உட்கார வைத்து ஒரு கையால் அவற்றின் வயிற்றுப் பகுதியையும் தேய்த்து விட்டால் ஆண் விந்து வெளிப்படும். இவ்வாறு தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால் ஒரு மாதக் காலத்தில் ஆண் கோழிகள் நல்ல முறையில் செயற்கையாக விந்தினை அளிக்கத் தொடங்கிவிடும்.

விந்துவுடன் எச்சம், சிறுநீர், தூசி, இரத்தம் ஆகியவை கலந்திருப்பதாலும் அதனைச் செயற்கைக் கண்ணாடிக் குவளையில் சேகரித்து, உடனடியாக 10 முதல் 15 நிமிடத்திற்குள் ஊசியாக செலுத்தப்படும் குழாயின் மூலம் பெட்டைக் கோழியின் கருப்பையினுள் செலுத்திவிடவேண்டும்.


முட்டையிடும் பருவக் காலத்தில் வாரம் ஒரு முறை மாலை வேளைகளில் முட்டையிட்ட பிறகு, செயற்கை முறைக் கருவூட்டல் செய்தால், கிடைக்கும் முட்டைகள் அனைத்தும் கருவுற்று இருக்கும்.


ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் வான்கோழியிலிருந்து செயற்கையாகக் கால் முதல் முக்கால் மில்லரி வரை விந்தினைப் பெற முடியும். இதைக் கொண்டு 10 முதல் 12 கோழிகளுக்கு செயற்கை முறைக் கருவூட்டல் செய்யலாம்.

மேலும் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் பொழுது அனைத்து வான்கோழிகளுக்கும் ஒரே நாளில் செய்யாமல் சுழற்சி முறையில், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்வது நல்லது.


வான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்:

வான்கோழிகளைப் பராமரிக்கும் முறைகளில ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது அவற்றின் உடல்களில் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன. ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு, கோழிகளைக் காட்டிலும் அதிக நோய் எதிர்ப்புச் சக்திக் கொண்டவை.

உதாரணமா நச்சுயிரி நோய்களான மேரக்ஸ் நோய் மற்றும் சிறு மூச்சுக் குழல் நோய், வான்கோழிகளைப் பெருமளவில் தாக்குவதில்லை. இராணிக்கெட், கோழி அம்மை மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இரத்தக் கழிச்சல் நோய் வான்கோழிகளைக் குறைந்த அளவிலேயே தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பினும், சில வகை நோய்களிலிருந்து வான்கோழிகளால் தப்ப முடிவதில்லை.

குறிப்பாகக் கோழிக் காலரா, கோழி, டைபாய்டு, மைகோபிளாஸ்மா, நீலக் கொண்டை, கருப்புத்தலை, ஏரிசிபிலஸ் மற்றும் குடற்புழுக்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வோம்.


நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்
எந்தவகை நோயாக இருப்பினும், நோய் தாக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், சுறுசுறுப்பில்லாமலும், தீவனம் உட்கொள்ளாமலும், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும். இவைகள் பொதுவான அறிகுறிகள்.


ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது, அவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படும் போது, மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டும், கண்கள் வீங்கியும், நீர் வடிந்து கொண்டும் இருக்கும். ஆனால், உணவுக் குழாய் சம்பந்தமான நோய்களால் அல்லது குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்டிருப்பின், வான்கோழிகளின் எச்சம் வழக்கத்தை விடக் கழிச்சலாகவோ அல்லது இரத்தம் கலந்தோ அல்லது வேறு நிறுத்துனோ காணப்படும்.

அதே சமயம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிக அளவில் வான்கோழிகளைத் தாக்கும் போது, அவற்றின் இறகுகள் பளபளப்பின்றி வறண்டும், தத்தம் அலகுகளினால் இறக்கைப் பகுதிகளையும், உடலையும் அடிக்கடி தேய்த்து விட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம். சிலநேரங்களில், இந்த ஒட்டுண்ணிகள் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம்.
இளம் வான்கோழிக் குஞ்சுகளைப் பொறுத்தவரையில், எந்த ஒரு நோயினால் பாதிக்கப்படும் போதும், போதிய அளவு வெப்பம் இருந்தாலும் ஒன்றொடொன்று, கூட்டமாக மோதிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.


இராணிக்கெட் நோய்

நச்சுயிரி (வைரஸ்) கிருமியினால் உண்டாகும் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள், வெள்ளை நிறத்தில் எச்சமிடுவதால், இது வெள்ளைக் கழிச்சல் நோய் எனவும் கூறப்படுகிறது. முட்டையிடும் பருவத்தில் இருக்கும் வான்கோழிகள் பாதிக்கப்படும் போது முட்டையின் தரம் குறைவதுடன் அவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்து விடுகின்றது.

அதிக எண்ணிக்கையில் இறப்பும் ஏற்படும். மீதமுள்ள பிழைத்த முட்டையிடும் வான் கோழிகள் சுமார் நான்கு வாரங்களுக்குப் பின், பழைய எண்ணிக்கையை அடைந்து விடும். அத்துடன், லேசான சுவாசக் கோளாறுகளுக்கான அறிகுறிகளும் தென்படும். தேவையான தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இந்நோயிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
அம்மை நோய்
இது வான்கோழிகளை அதிகமாகப் பாதிக்கும் நோயாகும். ஒரு வகை நச்சுயிரியால் ஏற்படும் இந்நோய். கோழி அம்மை வகையைச் சார்ந்தது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் மூக்கு, வாய், தலை, கண், இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்று கட்டிகள் தோன்றும். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இருப்பினும், கோழிகளைப் போல் நோய் எதிர்ப்பு சக்தியானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை. மேலும் 3 அல்லது 4 மாத இடைவெளியில் மீண்டும் தடுப்பூசி போடுவதன் மூலம் நோய்த் தாக்குவதைத் தடுக்கலாம். நோய் வந்த பின் போரிக் களிம்பை வேப்பெண்ணையில் கலந்து கொப்புளங்களில் தடவலாம்.


மூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை

நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய், இளம் வான்கோழிக் குஞ்சுகளையே அதிகம் தாக்கக்கூடியது. மூக்கின் உட்பகுதியில் உள்ள எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதுடன் மூக்கின் சுவாசப் பாதை முழுவதும் சளி அடைத்துக் கொள்வதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை, இத்துடன் எச்செரிச்சியா கோலை என்னும் பாக்டீரியா கிருமிகள் சேர்ந்து தாக்கும் போது, மூக்கில் இருக்கும் சளியானது சீழ்போன்று மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அத்துடன், கல்லீரலும், இதயமும் வீக்கத்துடன் இருப்பதையும் காணலாம்.

எரிசிபெலஸ்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட 13 வார வயதுக்கு மேற்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியின் தோளில் சொறி போன்ற புண்கள் ஏற்படும். தலையின் மீது இருக்கும் சிறிய சதைப் பகுதி வீங்கிக் காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆண் வான்கோழிகளின் விந்திலுள்ள உயிரணுக்கள், கருவுறச் செய்யும் தன்மையை இழந்து விடுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு, பென்சிலின் போன்ற உயிர்க்கொல்லி மருந்தை ஊசி மூலம் செலுத்தலாம்.

கோழிக் காலரா”

பாஸ்சுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், பத்து வாரங்களுக்கு மேற்பட்ட வான்கோழிகளையே அதிக அளவில் தாக்கும். அப்போது, 50 சதவிகிதத்திற்கு மேலாக இறப்பு நேரிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிகளுக்கு நுரையீரல் பாதிப்பினால் சளிக்காய்ச்சல் ஏற்படும்.

மேலும், நோய்வாய்ப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், மூக்கு மற்றும் கண்ணிலிருந்து நிர் வடிந்து கொண்டும் இருக்கும். துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சலும் ஏற்படும். நாள்பட்ட நோயாக இருப்பின் மூச்சுத் திணறல், கால் நொண்டுதல், கழுத்து திருகிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.

இறப்பறிசோதனை மேற்கொள்ளும் போது உடல் பகுதி முழுவதும் அதிக அளவில் சிவந்து இருப்பதுடன் உள்ளுறுப்புகள் அனைத்தும் இரத்தப் புள்ளிகளுடன் காணப்படும். குறிப்பாக, கல்லீரலின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு வெள்ளை நிறப்புள்ளிகளாகத் தோன்றும்.


கோழி டைபாய்டு:

சால்மொனெல்லா கேலினேரம் எனும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் இந்நோய் குறிப்பாக வளரும் மற்றும் வளர்ந்த நிலையிலுள்ள வான்கோழிகளைத் தாக்கும். தீவனம் உண்ணாமை, சோர்வு, குறவைாக முட்டையிடுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்பட்டாலும், நீர்த்த மற்றும் சளிக் கலந்தாற்போன்ற எச்சமே இந்த நோய்க்கான முக்கியமான நோய் அறிகுறியாகும். இந்த இளங்குஞ்சுகள் பாதிக்கப்படும் போது, மஞ்சள் நிறத்தில் எச்சம் காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, உடல் பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும், குறிப்பாகக் கல்லீரல் கருமைக் கலந்த சிவப்பில் மினுமினுப்பாகக் காணப்படும்.


சுவாச நோய்கள்”

கொரைசா என்றழைக்கப்படும் இந்நோய் போர்ட்டெல்லா ஏவியம் என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் கண்கள் சிவந்தும், மூக்கில் நீர்வடிந்து கொண்டும் காணப்படும். அவைகள் மூச்சு விடும் போது இலேசான இரைச்சல் ஏற்படும். இறந்த கோழிகளில் இறப்பறி சோதனை மேற்கொள்ளும் போது, மூக்கின் துவாரங்களில் சளி அடைத்துக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுமார் 5 வார வயதுடைய கோழிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், முட்டையிடும் தருணத்தில் இந்த நோய் காணப்படும் போது தும்மல் அதிக அளவில் ஏற்படுகிறது.
இரத்தக் கழிச்சல் நோய்

அடினோ வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோய் 35 முதல் 50 நாட்களுக்குட்பட்ட வான்கோழிகளைத் தாக்கும் . பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு இரத்தத்துடன் கூடிய கழிச்சல் ஏற்படும். அதனால் கோழிகளின் பின்பக்க இறகுகள் இரத்தம்பட்டுக் காய்ந்து இருப்பதைக் காணலாம். இரத்தப் போக்கு அதிகம் இருப்பதால், கோழிகள் அதிகம் இறப்பதற்கு வாய்ப்புண்டு. இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, இரத்தச் சோகையால் உடல் வெளிறிக் காணப்படும்.

முகவீக்க நோய்:

மைக்கோப்ளாஸ்மா என்னும் கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்நோயானது மூக்குப் பகுதியில் காணப்படும் மென்மையான குருத்தெலும்புகளைப் பாதிக்கின்றது. அப்போது, அதிக அளவில் அப்பகுதியில் சளி கட்டிக்கொள்வதால், முகம் வீக்கமடைந்து காணப்படும். இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போது, கண்ணாடி போல் காட்சியளிக்க வேண்டிய காற்றுச் சவ்வானது சற்றே அழுக்கடைந்த நுரையுடன் காணப்படும். இந்நோயானது, மேலும் நாள்படும் போது காற்றுச் சவ்வுகளில் மாவு போன்ற பொருட்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இதுவே, இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். மேலும் காலில் மூட்டுகளும் பாதிக்கப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளும்.


பூஞ்சை நோய்கள்:

அஃப்ளோ நச்சு என்பது, ஒரு வகைப் பூஞ்சைக் காளானிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. கல்லீரலையே குறியாக வைத்துத் தாக்கக்கூடிய இந்த நச்சினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், தீனி எடுத்துக் கொள்ளாமலும், இறக்கைகள் தளர்ந்தும் காணப்படும். மேலும், இறந்த வான்கோழிகளைப் பிரேத இறப்பறிசோதனை செய்து பார்த்தால், உடல்பகுதி முழுவதும் சிவந்து வீக்கத்துடன் இருப்பது தெரியவரும். கல்லீரல் அளவில் பெருத்தும் சற்று தொட்டுப் பார்த்தால் கடினமாகவும் இருக்கும்.


கருப்புத்தலை நோய்:

இந்து நோய் ஹிஸ்டோமோனாஸ் மெலியாகிரிடிஸ் எனும் ஓரணு உயிரணுவால் ஏற்படக்கூடியது. இக்கிருமிகள், குடல் மட்டும் ஈரலை, கடுமையாகப் பாதிப்பதால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வான்கோழிகள் அதிக அளவில் இறந்து விடும். அவைகள் மஞ்சள் நிறத்தில் எச்சமிடும். இந்நோய், உருண்டைப் புழுவின் முட்டைகளின் மூலமாகத் தீவனத்துடன் கலந்து, வயிற்றை அடைந்து நோயை உண்டாக்குகிறது. ஆகவே, இந்நோய் வராமல் தடுக்க முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுத்து வரவேண்டும்.
இரைப்பை வீங்கித் தொங்குதல் இரைப்பை தளர்ச்சியுறுவதே இவ்வகை நோய் ஏற்படுவதற்குக் காரணம்.

குறிப்பிட்ட சில வகையைச் சார்ந்த வான்கோழிகளிடையே இது பரம்பரை நோயாகக் காணப்படுகிறது. ஆனால் கடும் வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் கொடுக்காதிருப்பதே மிக முக்கியக் காரணம் ஆகும். இச்சமயத்தில், வான்கோழியின் இரைப்பை பெரிய கால்பந்து அளவில் கூட வீங்கி விடும். இது போன்ற நோயுள்ள வான்கோழி இடும் முட்டைகளையோ அல்லது ஆண் வான் கோழிகளால் அணைந்து கிடைக்கும் முட்டைகளையோ அடை வைத்துப் பொரிக்காமல் இருப்பது நல்லது.


நீலக்கொண்டை நோய்:
கரோனா எனும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியும், தோல் பகுதியும் கருப்பு நிறத்தில் மாறிவிடும். பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகள் சோர்வுடன் தீவனம் உண்ணாமல் இருக்கும். பச்சை நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் எச்சமிருக்கும். உயிர்க்கொல்லி மருந்துகளுடன் வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்து அளிக்கவேண்டும்.


வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்:

அனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.

தரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்கவேண்டும்.

வான்கோழிகளைப் பராமரிக்கும் இடம், தண்ணீர் தேங்காத பகுதியாக இருக்கவேண்டும்.

நோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து, வான்கோழிக் குஞ்சுகளை வாங்கக்கூடாது.

பண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.

குடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம் அக உண்ணிகளையும், தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளை நனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும் கட்டுப்படுத்தவேண்டும்.

சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.

இறந்து போன வான்கோழிகளையோ, குஞ்சு பொரித்த முட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோ அல்லது எரித்தோ விடவேண்டும்.

நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோ அல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோ, உடனே கால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளை இறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாத வண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.

வான்கோழிகளை விற்பனை செய்தபின், ஒவ்வொரு முறையும் ஆழ்கூளம், எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி பண்ணையை, கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத் தகுந்தவாறு தடுப்பூசி போட்டு, வான்கோழிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

குறிப்பாக, இராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப் தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டு சொட்டும், ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில், இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும். அதே போல், அம்மை நோய்க்காக, எப்பிவி என்னும் தடுப்பு மருந்தை இறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில் கொடுக்கவேண்டும்.

மேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கான காரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத் தொழிலை மேற்கொள்ளலாம்.

Saturday, April 7, 2012

3 - சினிமா விமர்சனம்



மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்..
சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!
தனுஷ் நிச்சயமாக பள்ளி மாணவராக, கல்லூரி மாணவராக நடிப்பதை இந்தப் படத்தோடு நிறுத்திவிடுவதே இப்படத்திற்குக் கிடைக்கும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்..!
படத்தின் முதல் பாதியில் இருக்கும் கண்டவுடன் காதலும், அதைத் தொடர்ந்த காதல் தூது விடும் படலங்களும், எதிர்ப்புகளும், புறக்கணித்த திருமணக் கதைகளும் வாரவாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களில் இருக்கும் கதைதான். ஆனால் இதில் உண்மை இருக்கிறது.. உணர்ச்சி இருக்கிறது.. நடிப்பும், இயக்கமும் போட்டி போட்டிருக்கின்றன..!
தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.  பரவசப்படுத்தியிருக்கிறார்.. பள்ளி மாணவர் கெட்டப்பில் அவர் காட்டும் மேனரிசமும், நிமிடத்திற்கொரு முறை மாறும் நடிப்பும் அசத்தல்..! எந்த வகையிலும் தனுஷின் நடிப்பை குறை சொல்லவே முடியவில்லை..! சிவகார்த்திகேயனின் புலம்பலோடு, ஸ்ருதிக்காக காத்திருக்கும் தருணங்களில் அவர் காட்டும் ஆக்சன்கள் காதலிக்காதவர்களைக்கூட அது பற்றிய சிந்தனைக்குள் தள்ளி விடுகிறது..!
ஸ்ருதியை முதல் முறையாக பைக்கில் உட்கார வைத்து ஓட்டிக் காட்டும் காட்சியிலும், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று “இன்னிக்கு நாம சந்திக்கலாமா..?” என்று டென்ஷன்படுத்துவதும், இரவில் தனிமையில் ஸ்ருதியைச் சந்திக்கும் காட்சிகள்.. டியூஷன் சென்டரில் முதல் முறையாக ஸ்ருதி அவரைப் பார்த்து ஸ்மைல் செய்தவுடன் காட்டும் எக்ஸ்பிரஷனும் சொல்ல முடியாதது..! நடிப்பில் தனுஷ் ஒரு படி மேலே போயிருக்கிறார்..!  இதற்கு நேர்மாறாக இடைவேளைக்குப் பின்னான வேறொரு களத்தில் அவர் காட்டும் ஆக்ரோஷம், ஸ்ருதிக்கு தன்னைப் பற்றித் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக தவிக்கும் பரிதவிப்பு.. ஸ்ருதியுடன் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரு மன இடைவெளியில் அவர் வாழும் வாழ்க்கையில் பொய் சொல்லாமல் வாழ்ந்திருக்கிறார் தனுஷ்..!
இதற்கு மிகச் சரியான நடிப்பை ஸ்ருதியிடம் இருந்து வாங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் டைட் குளோஸப் ஷாட்டுகளும், அவருக்கு டப்பிங் பேசியவரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும் சேர்ந்து ஸ்ருதியை நடிப்பு கேரியருக்குள் தள்ளியிருக்கிறது.. ஏ.ஆர்.முருகதாஸ் அவசியம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இதே ஸ்ருதியை வைத்து தான் என்ன செய்தோம் என்பதை அவர் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் அவருக்கும் நல்லது.... அவரது அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருக்கும் ஹீரோயின்களுக்கும் நல்லது..!
முதன்முதலாக தனுஷிடம் அமைதியாக, அடக்கமாக பேசி வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சினையாயிரும் என்று சொல்லும் ஸ்ருதியின் அந்தப் பேச்சு, டியூஷன் சென்டர்வரையிலான தொடர் பார்வையினால் சலனப்பட்டு ஓகே சொல்லும் அந்த ஒரு காட்சியே கவிதைதான்..! 
ச்சும்மா இருக்கும்போது அழகாக இருந்தால் அவர் நடிகையல்ல.. நடிக்கும்போது இன்னும் அழகாக இருந்தால் அவர்தான் நடிகை.. இதில் ஸ்ருதி சென்டமே அடித்திருக்கிறார்..! கோவில் வாசலில் “போடி. அமெரிக்காவுக்கே போயிரு” என்று தனுஷ் கோபப்படும் காட்சியில் கைகளை குறுக்கேக் கட்டிக் கொண்டு அழுதபடியே திரும்பிச் செல்கிறாரே, அந்த ஒரு காட்சிக்காகவே ஸ்ருதிக்கு ஒரு ஓ போடலாம்..! 
அதேசமயம் ஸ்ருதியின் நடிப்புத் திறமை இத்தனை இருக்கிறது என்பதற்காக இன்னும் அவருடைய மிச்ச, மீதி கேரியரில் அழுக வேண்டிய காட்சிகளுக்கு அனைத்தையும் சேர்த்து இந்த ஒரு படத்திலேயே அழுது தீர்த்திருக்கிறார் என்பதையும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!
இப்போதுதான் மயக்கம் என்ன படத்தில் இதே போன்ற ஒரு கதையைப் பார்த்து நொந்து போயிருக்கும் நிலையில் இதே பேட்டர்னில் மீண்டும் ஒரு கதையை செய்ய ஐஸ்வர்யாவுக்கு எப்படி தைரியம் வந்த்து என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தைரியத்திற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.  கதைக் களன் மட்டுமல்ல.. திரைக்கதையையும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை உரித்துக் காட்டினாற்போல் எடுத்திருக்கும் விதம் அசர வைக்கிறது..!
முதல் பாதிக்கு சிறிதுகூட சம்பந்தமே இல்லாத இரண்டாம் பகுதியில்தான் ஐஸ்வர்யா நிறையவே ஜெயித்திருக்கிறார். இதற்காக அவர் கொடுத்திருக்கும் ஓப்பனிங் லீடிங் எந்தவொரு இயக்குநருக்கும் வராத தைரியம்.. கணவர்தானே நடிகர் என்பதோடு சொந்தத் தயாரிப்பு என்பதாலும் துணிந்திருக்கிறார் ஐஸ்.. மானசீக நடிகர் பிணமாக இருக்கும் காட்சியோடு துவக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தினை ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களா என்ற கேள்விக்குறியோடு வரும்கால இயக்குநர்கள் பாலோ அப் செய்தால் என்னவாக இருக்கும்..? யோசித்துப் பார்த்தால் வேறு எந்த இயக்குநருக்கும் இந்த அளவுக்கு நிச்சயமாக தைரியம் வராது..! வெல்டன் ஐஸ்..!
இயக்கத்தில் குறையே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபு-பானுபிரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் எதிர்பாராதது..! எத்தனை பணக்கார வீடுகளில் இது போன்று பக்குவப்பட்டு போயிருக்கிறார்கள்..! இதற்கு நேரெதிராக ஸ்ருதியின் வீட்டைக் காட்டுகிறார் ஐஸ்வர்யா. ஸ்ருதியின் அப்பா தனுஷை பார்த்தவுடனேயே அறைகிறார். வீட்டிலும் கோபப்படுகிறார்.. அம்மா ரோகிணியும் ஆத்திரப்படுகிறார். வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஒரு மிடில் கிளாஸ் பேமிலியர்கள் என்றாலே இப்படித்தானோ என்று பேச வைத்திருக்கிறார் ஐஸ். திருமணம் முடிந்து தனுஷ் ரோகிணி வீட்டிற்கு வந்து அழைக்கும்போது அவரது பேச்சில் மருமகனது உண்மைத்தனத்தை ரோகிணி மட்டுமே கண்டறிவதாக இயக்கம் செய்திருப்பது நன்று..! 
தனுஷ்-ஸ்ருதி முதல் இரவு காட்சி மிகவும் ரசனையானது..! உண்மையாகவே ஆண், பெண் அடிமைத்தனம், திருமண பந்தம் என்ற சங்காத்தமே இல்லாமல் துவங்கியிருக்கும் அந்தக் காதல் வாழ்க்கைக்கு முதல் காட்சியே அமர்க்களம்..! “என்ன பேண்ட் போட்டிருக்க..?” என்ற தனுஷின் கேள்விக்கு “நீயென்ன வேஷ்டியா கட்டிருக்குற..?” என்ற ஸ்ருதியின் பதில் ரசனையானது..!  பிரச்சினை இப்படித்தான் வேறு கோணத்தைத் தொடப் போகிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் இடைவேளைக்குப் பின்பு அது வேறொருவிதமாகப் போகும் என்று நினைக்கவேயில்லை..!
தனது இயக்கத் திறமைக்கு தீனி போடும்விதமான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறார் ஐஸ். தனுஷின் நண்பர் சுந்தரிடம் விசாரிக்கத் துவங்கி அவர் மூலமாக காட்சிகளை தொடர்ச்சியாக பின்ன வைத்து, இடையிடையே ஸ்ருதியின் கதறலோடு படத்தின் முழு பாரத்தையும் தனுஷின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். ஹோட்டல் கார் பார்க்கிங் ஏரியாவில் நடக்கும் சண்டை காட்சியில் தனுஷ் தனது உச்சக்கட்ட நடிப்பைக் காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்..! 
நடிப்பு, இயக்கத்திற்கு தோதான வேல்ராஜின் கேமிராவும் அழகையே பதிவு செய்திருக்கிறது..! சென்னையின் எந்த ஏரியாவில் தனுஷ் சைட் அடிக்கும் அந்தப் பகுதியைப் படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. லாங் ஷாட்டில் பார்ப்பதற்கு ஸ்கிரீனெஸ் சூப்பர்ப்..! கிரேடிங்கை கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பது பலவித காட்சிகளிலும் தெரிகிறது..! 
பல லட்சம் பேர் ஏற்கெனவே கேட்டு முடித்து ஆவலுடன் எதிர்பார்த்ததாலோ என்னவோ, கொலைவெறிடி பாடல் காட்சி மட்டும் சப்பென்றுதான் இருக்கிறது ரசிகர்களுக்கு.. எனக்கு ஓகேதான்.. வேறென்ன செய்ய முடியும்..? ஏர்செல்லின் 2 கோடி ரூபாய் ஸ்பான்ஸரில் இந்த ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்..! படத்தின் தரத்திற்கு இதுதான் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது..! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பின்பு ஒரே படம், ஒரே பாடலின் மூலமாக மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பது அனிருத்திற்குத்தான்.. இதனை இவர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று பார்ப்போம்..! படத்தின் மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. ஒவ்வொரு ஷாட்டிலும் ஸ்ருதியும், தனுஷும் பின்னிப் பிணைந்து கொண்டிருக்க.. யார் பாடலைக் கேட்டிருப்பார்கள்..!
மனைவி என்றில்லை.. ஒரு தமிழ்ப் பெண் இயக்குநராக இருந்ததினால் கிஸ் சீன்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, தனுஷிற்கு பெரும் ஏமாற்றமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே ஹிந்தி, தெலுங்கு படமென்றால் ஸ்ருதியின் மூக்கிற்கு பதிலாக உதடுகள் புண்ணாகிப் போயிருக்கும்.. தப்பித்தார் ஸ்ருதி..!
தமிழகம் முழுவதும் படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்க.. வழக்கம்போல படத்திற்கு எதிர்ப் பாட்டுக்களும் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன..! காரணம் என்ன என்றுதான் தெரியவில்லை. கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் என்ற வரிசையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத படம்தான் இது..!
மயக்கம் என்ன படத்திலேயே பார்த்துவிட்டோம் என்பதுதான் இவர்கள் சொல்லும் விளக்கமெனில் அதனைவிட அழகாக, அழுத்தமாக இப்படம் அந்த நோயின் கொடுமையை பதிவு செய்திருக்கிறது என்பதுதான் ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் செய்தி..! தமிழ்ச் சினிமாவிற்கு ஒரு மிகச் சிறந்த பெண் இயக்குநர் கிடைத்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி..
தமிழகம் முழுவதிலும் படத்திற்கு நல்ல வசூல் என்று விநியோகஸ்தர்கள் பாராட்டுகிறார்கள். போட்ட காசை முதல் வாரத்திலேயே கலெக்ட் செய்துவிடலாம் என்பது லேட்டஸ்ட் எதிர்பார்ப்பு. அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம்தானாம்..! முதல் மூன்று நாட்களிலேயே ஒன்றரை கோடியை சென்னையில் மட்டும் வசூல் செய்திருப்பது சாதனைதான்..! ஐஸ்வர்யா அவரது அப்பனுக்கும் சேர்த்தே கொஞ்சம் சவால் விட்டிருக்கிறார் போல் தெரிகிறது..! படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்..!
 
நன்றி: உண்மைதமிழன்

திமிங்கிலம்

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.
திமிங்கிலம் என்று சொன்னவுடன் நாம் எல்லோரும் உணரக்கூடிய ஒன்று மிகப் பெரிய மீனாகத்தான் இருக்கும் என்பதாகும். இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைச் சாராத பாலூட்டி ஆகும். பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.
பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.
உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும்,” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
நாம் எல்லோருக்கும் இதுநாள் வரை மீன்கள் என்றால் நீரில் மட்டும்தான் வாழும் என்று தெரியும். அதிலும் இந்த திமிங்கிலங்கள் போன்ற மிகப்பெரிய மீன்கள் என்றாலே கடலைத் தவிர வேறு எங்கும் வாழாது என்பது மட்டுமே நாம் அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும். ஆனால் இந்த மீன்கள் ஒரு காலத்தில் தரைகளிலும் வாழ்ந்திருக்கின்றன என்றால் நம்புவீர்களா?
உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது.
இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.
இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 80 நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.
இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.
பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.
மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.
1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்று சொன்னால் மூளையின் முன்புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல – ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமாக சிந்தித்து சாமர்த்தியமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.
பாகிஸீட்டஸ் ஆய்வுத்தாள் கூறுவதாவது: “படிப்படியான பரிணாம மாற்றம் அடைந்து நிலத்திலிருந்து நீருக்கு வந்த திமிங்கில பரிணாம வளர்ச்சியில் பாகிஸீட்டஸ¤ம் தொடக்க ஈயோஸீன் காலத்தினைச் சார்ந்த இதர திமிங்கிலங்களும் நீர்-நிலம் இரண்டும் சார்ந்த வாழ்க்கையினை வாழ்ந்த நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சான்றுகள் கூறுகின்றன.” அடுத்த முக்கியமான தொல்லெச்சம் ஆம்புலோஸீட்டஸ் நடன்ஸ் (Ambulocetus natans) என்பதாகும். நடமாடும் நீந்தும் திமிங்கிலம் என்பது இந்த தொல்லெச்சத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பெயரின் பொருளாகும். ‘பரிணாமவாதிகளின் பாதிப்பான பார்வைக்கு அப்பால் இது நீந்தியது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ (Darwinism Refuted’ பக்.125) என்பது யாகியாவின் வாதம். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் முன்வைக்கும் வாதங்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் அம்புலோஸீட்டஸ் நிலத்தில் வாழும் பிராணி என்பதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். ஆனால் பரிணாம அறிவியலாளர்கள் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அம்புலோஸீட்டஸ் நிலத்திலும் நீரிலுமாக வாழ்ந்த பிராணி என்பது பரிணாம அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளும் ஒரு வினோத சான்றிதழ் ஆகும்.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.

சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

http://www.mysixer.com/wp-content/gallery/suriya-nagaram-gallery/suriya-nagaram.jpg

யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக்..ஹீரோயின் புதுமுகம்.. லட்சணமான, லட்சுமிகரமான முக அமைப்பு. படம் பூரா பாந்தமா பாவாடை தாவணில  சொக்க வைக்கிறார்.. ஆனா ஒரு முழுப்படத்தை ஹீரோயின் மட்டுமே காப்பாத்த முடியாதே?


இதுல செம காமெடியான சீன் என்னான்னா வேலை வெட்டியே இல்லாத ஹீரோ ரோட்ல நிக்கறப்ப ஒரு கார் அங்கே வந்து நிக்குது.. கார்க்கதவு வழியா ஒரே ஒரு கை மட்டும் வெளீல வந்து பூ வாங்குது.. பிக்காலிப்பையன் இதுவரை பொம்பளை கையையே பார்த்தது இல்லை போல..  உடனே அந்த காரை ஃபாலோ பண்ணி கண்டு பிடிச்சு ஹீரோயினை பார்த்து நெக்ஸ்ட் செகண்ட்டே ஐ லவ் யூ சொல்லிடறான்..

 அதைக்கூட ஜீரணீச்சுக்கலாம்.. கோயில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுக்கற ஆளுக்கு அவ போட்ட ஒரு ரூபா காசை 100 ரூபா குடுத்து வாங்கறான். அவனோட இந்த வெட்டி வேலையை பார்த்து நமக்கு ஆத்திரம் வருது.. ஆனா ஹீரோயினுக்கு காதல் வருது

 ஹீரோயின் அவனுக்கும் மேல.. ஆம்பளையையே பார்த்ததில்லை போல. உடனே அவளும் ஈ ஈ ந்னு பல்லை காட்டி லவ்க்கு ஓக்கே சொல்றா. 2 தத்திங்களும் ஜாலியா டூயட் பாடி லவ்வுதுங்க. நிற்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi93-wFc3GONUhV4lijPS5xbX8jgdoWRgX2-vvnb1ujDOiRhosKUK6jpXTax_THzifRDZs5Elxg0dfGqXgY-lLGMnc21h6fm526qvS0KOtUmfixQuGaRwKVF_ue40xyEg1EL26ym_q_Vgw/

 ஹீரோயின் அப்பா தான் வில்லன்.. டைரக்டர் ஆர் வி உதய குமார்.. அவர் என்னமோ விஜய குமார்க்கு வாரிசு மாதிரி ஜாதி வெறி பிடிச்ச பெரிய மனுஷனா வந்து லவ்வை எதிர்க்கறார்.

வேற மாப்ளை பொண்ணுக்கு பார்க்கறார்.. இப்போ தான் அடுத்த காமெடி.. ஹீரோவுக்கு தில் இருந்தா ஹீரோயினை கூட்டிட்டு ஓடனும்.. தில் இல்லைன்னா கிராமத்தை விட்டே அவர் மட்டும் தனியா ஓடனும்.. அவர் 2ம் பண்ணலை.. இன்னா பண்றார்னா சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடும்கற மாதிரி மாப்ளையை கொலை பண்ணிடறார்..

 திரைக்கதையில் செம கேனத்தனம் இதுதான். ஹீரோ புள்ள பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்தாளை கொல்லனும்?அப்படியே ஹீரோ அந்த மாப்ளையை கொலை பண்ணனும்னா வில்லன் ஹீரோயினை ரேப் பண்ற மாதிரி காட்டி இருந்தா சீனுக்கு சீனும் ஆச்சு. லாஜிக்கு  லாஜிக்கும் ஆச்சுன்னா அமைதியா இருந்துருப்போம்..


ஹீரோ ஜெயில்ல . ஹீரோயின் எத்தனை வருஷம் ஆனாலும் ஹீரோவைத்தான் கட்டுவேன்னு ஒரே அடம்..

 வில்லன் ஆர் வி உதய குமார்க்கும் பட டைரக்டர்க்கும் ஏதோ சண்டை போல. அவசர அவசரமா திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாம வில்லனை பாதிலயே ஒரு கோஷ்டி தாதா சண்டைல கொலை பண்ணிடறார்.

ஹீரோயினுக்கு ஒரு தம்பி.. அவன் 12  வயசுல இருந்து 23 வயசு இளைஞன் ஆகறவரை ஹீரோ ஜெயில்லயே களி சாப்பிட்டு இருக்கான்..

இனிமே என்ன ஆகுதுங்கறதை யாரும் பார்க்கவே வேணாம்.. ஹி ஹி

http://middaytimes.com/wp-content/uploads/2012/01/meera-nandan-suriya-nagaram00-1-640x424.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இவர் தான் எங்க ஊர் புரூஸ்லீ

 என்னது பெருச்சாளியா?


2. டேய்.. எதுக்காக நீ இப்போ சிரசாசனம் பண்றே?

 நம்ம சாதி சனத்தை காப்பாத்த தலைகீழா நின்னாவது பாடுபடனும்னு நீங்கதானே சொன்னீங்க?

3.  கண் உறுத்துது


என்ன விழுந்துச்சு?

 ம். நயன் தாரா

4.  குத்து விளக்கு மாதிரி ஃபிகர் வேணும்னா கோயில்ல தான் அதை பிடிக்கனும்.


5. ஏண்டி அவனை லவ் பண்ணலை?

 போடி. அவன் கிட்டே ஒரு கார், பைக் எதுவும் இல்லை.. எல்லா இடங்களுக்கும் நடந்து தான் போறான்.. அவனை லவ் பண்ணுனா பாத யாத்திரை தான் போகனும்.

6.  புள்ளையை பெத்துப்போடச்சொன்னா எமனைப்பெத்துப்போட்டிருக்கு பக்கிக. இவனால என்னென்ன நடக்கப்போகுதோ.




7.  நீ ஐ ஐ டி ஃபெயிலா?

 ஆமா.. எப்படி கண்டு பிடிச்சே?

 பழைய கவிதையா சொல்லி அறுக்கறியே?

http://3.bp.blogspot.com/-ixJsAdQweQc/TgjeIj4r3-I/AAAAAAAABZo/TD0S187f8ag/s1600/MeeraChandhan281210_014.jpg


8. அவங்க மாலையை போட்டுட்டாங்க.. வில்லன் ஆளூங்க அடுத்து உங்களை போடப்போறாங்க./.

9. நமக்கு நாமளே தீயை வைக்கற மாதிரி இருக்கு.


10.  உன் கல்யாண பத்திரிக்கையை பார்த்தேனே?

 அச்சடிச்ச பேப்பரை நம்பறே.. உசுரோட இருக்கற என்னை நம்ப மாட்டேங்கறே..


11. நான் ஒரு மரத்தடி ஜோசியர்ங்க.. யார் யார் கையையோ பிடிச்சு பலன் சொன்ன எனக்கு என் கையை பிடிச்சவ பற்றி தெரியாம போச்சு.. அவ கையை எவனோ பிடிச்சு கூட்டிட்டு போய்ட்டான்.. அவனைப்போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு வந்து இருக்கேன்..


12. இந்த ரேகைப்படி நாம 2 பேரும் 1 சேர முடியாது டியர்


 அப்போ இந்த ரேகையே வேணாம்

 அடிப்பாவி.. எதுக்கு கத்தியால கையை கிழிச்சே?

உன்னையும், என்னையும் சேர்க்காத இந்தக்கை ரேகை எதுக்கு?

13.  ஒரு ஆம்பளை கடைசி வரை தனியா வாழ்ந்துடலாம், ஆனா ஒரு பொம்பளையால அப்படி வாழ முடியாது..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGEF60OCUNYIHbN3teUPVHzWZW3nmzXe86bVQkyJxTEhLcZ6Wz_s-DI31rkgTAy3y-zzsZAhWOJsbcHrERoRD1wHmpOCLM98jxECFOvDyTfS-6sUe-HDX5odbvRT5dT3Hii-Rt1W5SPjU/s1600/oridathoru-postman-22.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  படத்துல காமெடியனாவும், ஹீரோ ஃபிரண்டாவும் வர்றவர் கோயிலுக்குள்ள லுங்கியோட வர்றாரே? எந்த ஹிந்துக்கோயில்ல அலோ பண்றாங்க?


2. ஹீரோயின் ஊர்லயே பெரிய பணக்காரர் வீட்டுப்பொண்ணு.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோ வேலை செய்யற ஒர்க்‌ஷாப்க்கு வருது?அதுவும் நடந்து வருது?

3. வில்லனோட ஆட்கள்ல ஒருத்தன் ஹீரோயினை பார்த்துடறான்.. உடனே கோயில் திருவிழாவுல விற்கற முகமூடியை ஹீரோயின்  மாட்டிக்கறா.. ஃபேஸ் மட்டும் தானே அது மறைக்குது? 18 வருஷமா வேலை செஞ்ச அடியாளுக்கு அந்த ஹீரோயின் உடம்பு ஞாபகம் இருக்காதா?அல்லது டவுட்னா முகமூடியை கழட்டி பார்க்க மாட்டானா?

4.  ஹீரோ ஹீரோயின் 2 பேரும் மெக்கானிக் ஷாப்ல சைக்கிள் டியூப்பை மாலையா மாத்தி கல்யாணம் பண்ணீக்கறது செம காமெடி.. ஏன் சார் ஏன்?

5.  சின்னப்பையன் அதாவது ஹீரோயின் தம்பி வேணும்னே கீழே விழுந்து காயத்தை வாங்கி நிச்சய தார்த்தத்தை நிறுத்துறது எல்லாம் ரொம்ப ஓவரு..

6.  ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போக கிளம்பிட்டாங்க.. 2 பேரும் வெறுங்கையை வீசுட்டு வர்றாங்க? ஒரு பேக் கூட இல்லாம கிளம்ப அவங்க என்ன பேக்கா?

7. கொலைக்குற்றவாளி எப்படி பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகறார்? அவருக்கு செக்யூரிட்டியாய் நியமிக்கப்படும் 2 கான்ஸ்டபிள்ஸ்-ம் ஒரே டைமில் டீ குடிக்க வெளீல போறாங்களே. அது எப்படி?

8. ரிலீஸ் ஆகி வர்ற ஹீரோவை வரவேற்க ஹீரோயின் தம்பியோ. ஹீரோவின் நண்பர்கள் யாரும் போகலை.. ஆனா வில்லன்கள்க்கு மட்டும் தகவல் தெரிஞ்சு போறாங்களே?

9. கிராமம் பூரா காதலுக்கு எதிர்ப்புன்னு தெரிஞ்சும் ஏன் அந்த ஊர்க்கோயில்ல மேரேஜ் பண்ண லூசு த்தனமா முடிவு பண்றாங்க? ஊரை விட்டு ஓட வேண்டியதுதானே?

10 . க்ளைமாக்ஸ் மகா அபத்தம்.. ஊர்மக்களிடம் இருந்து காதல் ஜோடியை காப்பாற்ற ஹீரோயினின் தம்பியே அந்த ஜோடியை வெட்டி கொலை செய்து கருணைக்கொலை செய்யறார்.. அடங்கோ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL9kyJjDT9p8VJ5fXtthfh6WUBSnHzAZ1_q9LK_uBpT_Toub7qncJf2aKZT_nyoaMbywIdZ4Y6ue_qEAlykWlpb-QpN0tlrKaXMED_V0w1Z4Q3j-UBxmdMv7KSr2v5mFP0sll17Jejbbz-/s1600/Meera+Nandan+at+prithviraj+marriage+reception+_6_.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்