Tuesday, March 13, 2012

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஓர் புதிய டேப்லெட்!

Huawei S7 301c
ஹுவேயி நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஹுவேயி எஸ்7-301 சின் என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமும் செய்து இருக்கிறது.
இந்த ஹுவேயி டேப்லெட்டில் ஏராளமான சாப்ட்வேர் மற்றும் ஹார்வேர் வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த புதிய டேப்லெட்டின் 7 இன்ச் டேப்லெட் 1280 x 800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. இதன் திரை வண்ண டிஎப்டி தொடு வசதி கொண்டது. இந்த டேப்லெட்டின் மொத்த எடை 390 கிராம் மட்டுமே.
இந்த ஹுவேயி டேப்லெட் ஆன்ட்ராய்டு வி3.2.1 ஹனிகோம்ப் இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் ப்ராசஸர் 1.2 ஜிஹெர்ட்ஸ் கொண்ட க்வல்காம் ஸ்னாப்ட்ராகன் எம்எஸ்எம்8660 ஆகும். அதுபோல் இந்த டேப்லெட் 2592×1944 பிக்சல் கொண்ட 5 எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் வீடியோ, ஜியோ டேக்கிங் மற்றும் ஆட்டோ போக்கஸ் போன்ற வசதிகளும் உண்டு. மேலும் 0.9 மெகா பிக்சல் கொண்ட துணை கேமராவையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது.

இந்த டேப்லெட் 1ஜிபி சேமிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த சேமிப்பை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எஸ்டி கார்டு, மைக்ரோ எஸ்டிஎச்சி மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் போன்ற வசதிகளும் உண்டு.
இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் டபுள்யுலேன், வைபை 802.11பி, 802.11ஜி, 802.11 என், ப்ளூடூத் வி2.1 மற்றும் டேட்டா ரேட் போன்ற வசதிகளை அளிக்கிறது. ஆனால் இன்ப்ரேர்டு போர்ட் வசதி இந்த டேப்லெட்டில் இல்லை. மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ் மற்றும் எ-ஜிபிஎஸ் சப்போர்ட் ஆகிய வசதிகள் இந்த டேப்லெட்டில் உண்டு.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக இந்த டேப்லெட் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர் போன்றவற்றைக் கொண்டுள்ளன. ஆனால் இதில் எப்எம் ரேடியோ இல்லை. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும், மோனோ மைக்ரோபோனும் மற்றும் ஆடியோ ஜாக்கும் உண்டு. மின் திறனிற்காக இந்த டேப்லெட் 4100 எம்எஎச் சக்தி கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபோல் இந்த டேப்லெட் இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

நன்றி:  oneindia.com

0 comments:

Post a Comment