Tuesday, March 13, 2012

மார்ச் 16 விற்பனைக்கு வரும் iPad3 பற்றிய அதிரடியான தகவல்கள்

Apple நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வர இருப்பது iPad 3 என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே iPad 3 பற்றிய பல செய்திகள் வெளிவந்தமிருந்தன. iPad 3 யின் வடிவமைப்பு பற்றியும் பாகங்களின் செயல்திறன் பற்றியும் பல தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.


இப்போது iPad 3யின் வெளியீட்டு திகதியும் இன்னும் சில சுவாரஸ்யமான செய்திகளும் வெளியாகியுள்ளது.

பல புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் iPad3 உலகிலேயே முதன்முதலில் Bluetooth 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய Tablet ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் பாட்டரி iPad 2 வின் பாட்டரியை விட 70% வலு கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாதம் (மார்ச்) 16ம் திகதி குறிப்பிட்ட சில (10) நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து 25 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இதே வேளை இந்தியாவில் 2 மாதங்களின் பின்னரே விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சொல்லவா வேண்டும் :(  iPad 2 மற்றும் iPhone 4S போன்றன இரண்டு மாதங்களின் பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்காவில் ஆன்லைன் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. iPad 3 இன் விலை 600$ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆன்லைன் விற்பனை அதிகரித்ததால் புதிய ஆர்டர்கள் மார்ச் 19 ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment