Thursday, February 21, 2013

காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆண்டால் இந்தியா திவாலா... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

 
நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொதுக் கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி பிராத்' என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப, உலகப் பொருளாதார விற்பன்னர்கள் எனக் கூறிக் கொள்ளும், நிதியமைச்சரும், பிரதமரும், இந்திய தேசத்தை வெளிநாட்டவர்களுக்கு, அடகு வைக்க முயன்று வருகின்றனர். 
 
இவர்களோடு, இந்தியாவில் உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களில் உள்ள இயற்கை வளங்களை, இங்குள்ள அரசியல் தலைவர்கள், "ஆட்டையைப்' போட்டு, இந்தியாவை கடன்கார நாடாக்கி, "கடன் பட்டார் நெஞ்சம் போல் இந்தியர்களை கலங்க' வைத்து வருகின்றனர். 
 
ஆதர்ஷ் ஊழலில், 1 லட்சம் கோடி; காமன்வெல்த்தில், 1.50 லட்சம் கோடி; "2ஜி'யில், 1.76 லட்சம் கோடி; நிலக்கரியில், 4 லட்சம் கோடி; எஸ்.பாண்டில், 10 லட்சம் கோடி; டெலிகாம் ஊழலில், 15 லட்சம் கோடி, ஹெலிகாப்டர் வாங்கியதில், 360 கோடி ஊழல் என, மெகா ஊழல்களோடு, இன்னும் வெளிவராத உலகப் புகழ் ஊழல்கள் மூலம், இந்தியாவின் இயற்கை வளங்களில் இவர்கள் திருடியது, 50 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். அதனால் தான், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சரி, இந்தியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டியவர்கள், அதை எங்கே முதலீடு செய்துள்ளனர்...? 
 
 
 
இதோ...

பல பல தீவுகளையே, விலைக்கு வாங்கியதோடு உலகில் உள்ள, 30க்கும் மேற்பட்ட நாடுகளில், தங்களிடம் உள்ள பல லட்சம் கோடி பணத்தை தி.மு.க., தலைவர்கள் முதலீடு செய்து விட்டனர்.

காங்., தலைவர்களின், பல லட்சம் கோடியால், சுவிஸ் வங்கி, வீங்கித் தவிக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட, பல லட்சம் கோடி இந்தியப் பணத்தால், "இத்தாலி' என்ற நாடே பெருத்த பெரும் பணக்கார நாடாக,"சீர்' பெற்று வருகிறது.

மேலும், ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்தியா பெற்றிருந்த வெளிநாட்டுக் கடன், வெறும், 5 லட்சம் கோடி ரூபாய் கடனை மட்டுமே வைத்து விட்டு, 2004ல் தன் பதவியை விட்டுச் சென்றார் வாஜ்பாய்.

ஆனால், தொடர்ந்து கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, தி.மு.க., ஆதரவோடு ஆண்டு வரும் மத்திய காங்கிரஸ் ஆட்சி, 2004ல் இருந்த, 5 லட்சம் கோடி கடனை, இன்று அதாவது, 2013ல், 40 லட்சம் கோடி கடனாக, எட்டு மடங்காக உயர்த்தி, இந்தியர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

அதே நேரம், காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க., தலைவர்கள் என, எல்லாருடைய சொத்துக்கள், 10 மடங்குகளுக்கு மேல் உயர்ந்து, பல லட்சம் கோடியாக எகிறியுள்ளதை, 125 கோடி ஏமாளி இந்தியர்கள் நன்கறிவர்.

இதே காங்., கூட்டணியின் ஊழல் ஆட்சி தொடர்ந்தால், இந்தியாவின் பொதுக் கடன், 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து, இந்தியா திவாலாகி விடும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலை ஏற்படாமல் இருக்க, காங்கிரஸ் கூட்டணிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் தக்க பாடம் புகட்டி, தமிழகத்தில் உள்ள, 40க்கும் சைபர் என்ற படுதோல்வியைத் தர, 5.15 கோடி தமிழக வாக்காளப் பெருமக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்...!
 
கடிதம் நன்றி : டாக்டர் ரா.அசோகன், சென்னை
Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment