கடற்கரையோரம் பெரிய மரமொன்றில் அழகான கூடு கட்டி வாழ்ந்த கடற் குருவிகளின் அன்பின் அடையாளமாக கூட்டில் நான்கு முட்டைகள்.
ஒருநாள் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு...!
கடலில் விழுந்தது கூடு. முட்டையிட்ட பெண் குருவி தாய்மையில் தவிக்க, தன்
துணையைத் தேற்ற ஆண் குருவி அயராது உழைத்து அந்த கடல் நீரை வாயில் மொண்டு
தூரத்தில் கொட்டி கூட்டையும் முட்டையையும் மீட்போம் என ஆறுதல் கூறியது.
இருவரும் கடல் நீரை வாயில் மொண்டு கரையில் ஊற்றும் வேலையை மேற்கொண்டனர். .
அவ்வழியே வந்த மகான் ஒருவர் இக்காட்சியைக் கண்டு தனது ஞான திருஷ்டியால்
நடந்தவற்றை அறிந்தார். அக்குருவிகளுக்கு உதவ தவம் மேற்கொண்டார். கடல் நீர்
உள்வாங்கியது. குருவிகளுக்கு கூடும், முட்டைகளும் கிடைத்தன.
‘‘பார்த்தாயா ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை வற்ற வைத்துவிட்டோம்’’ என்று பெருமையாகச் சொன்னது ஆண் குருவி.
குருவிகளுக்கோ மகானையும் தெரியாது; தவ வலிமை பற்றியு]ம் தெரியாது. இந்த
பலன் மகானால் கிடைத்தது என்றாலும், குருவிகளின் உழைப்பைப் பார்த்ததால்தானே
மகானுக்கு அந்த உதவி செய்யும் எண்ணம் வந்தது.
எனவே நோக்கம்
நியாயமானதாக இருந்து நமது முழு ஆற்றலையும் பிரயோகித்து பலனைப் பற்றி கவலைப்
படாமல் செயலில் இறங்கினால் இறை அருளே பக்க பலமாக வந்து நின்று மகத்தான
சாதனைகள் நிகழ்த்த உறுதுணை செய்யும்.
(இது முதலமைச்சர் ஜெயலலிதா திருமண நிகழ்ச்சியில் சொன்னது.)
0 comments:
Post a Comment