Wednesday, September 5, 2012

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நம் வாழ்வில் விளக்கேற்றிய, விளக்கேற்றும் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ( செப்டம்பர் 5 ) ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இளமையில் வறுமையில் வாடினாலும், கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரை உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்கப் பணம் இல்லாமல், இவரின் உறவுக்காரர் பயன்படுத்திய புத்தகங்களை இரவல் பெற்றுப் படித்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி கல்வித் துறையில் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுத்தார்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே யுனெஸ்கோவுக்கான இந்தியப் பிரதிநிதி, விடுதலைக்குப் பின் கல்வி ஆணையத் தலைவர் என தன் சேவையைத் தொடர்ந்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.

இரண்டு முறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்து, 1962-ல் ஜனாதிபதி ஆனார்.

ஜனாதிபதி ஆனதும் இவரைச் சந்தித்த இவருடைய மாணவர்கள் சிலர், இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். 'என்னுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் மகிழ்வேன்’ என்றார். அதன்படி, 1962-ல் உதயமானது ஆசிரியர் தினம்!

கல்விக்கு வறுமை தடையில்லை என நிரூபித்து பலர் மனங்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்நாளில் ஆசிரியர்களைப் போற்றுவோம்.. !

0 comments:

Post a Comment