உங்கள் மனம் தீர்மானிப்பதை உடல் அப்படியே செய்யுமானால், அதை உடல் – மன ஒருங்கிணைப்பின் உச்சம் எனலாம். ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடலை வளைத்து, நெளித்து, வில்லென விறைத்து, அம்பெனச் சீறி என அவர்கள் காற்றில் கவிதை எழுதுவது ஓர் அதிசயம் போலத் தோன்றும், நம்பவே முடியாது. அது ஒரு மாயாஜாலம் போலத்தான் இருக்கும். அவர்கள் சில நேரங்களில் கண்களை மூடிக்கொண்டும் வித்தை காட்டுவர். ஆனால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை...