Thursday, January 10, 2013

விஸ்வரூபம் ரூ. 150 கோடியை வசூலிக்காவிட்டால் அது தோல்விப் படம்… கமல் படபடப்பு பேட்டி

all-actors-have-become-businessmen-regrets-kamalவிஸ்வரூபம் குறைந்தது ரூ. 150 கோடியை வசூலித்தாக வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.

தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். இப்படம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் கமல்ஹாசன் படம்குறித்த சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் விஸ்வரூபம் குறித்தும் திரையுலகம் குறித்தும் கூறியிருப்பதாவது…

ரூ. 150 கோடியைத் தாண்ட வேண்டும்

விஸ்வரூபம் ரூ. 150 கோடியைத் தாண்டியாக வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னைப் பொறுத்தவரை அது தோல்விப்படம்தான். எனது முயற்சிகள் பலவீனமானவை என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால் முதல் வாரத்திலேயே நாங்கள் ரூ.150 கோடியைத் தாண்டி விடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மிகப் பெரிய படம்

எனது படங்களிலேயே மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டு, மிகவும் நேர்த்தியாக தயாராகியுள்ள படம் இது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மேலும் நாங்கள் நிறைய சாதிக்கத் திட்டமிட்டு களம் இறங்கிப் பணியாற்றினோம். அதற்கேற்ப அருமையான டெக்னீசியன்கள் கிடைத்தார்கள். அனைவருமே சிறப்பானவர்கள். மிகச் சிறந்த அணியுடன் நான் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.

எல்லோருமே வணிகர்கள்தான்

நடிகர்கள் எல்லாருமோ கிட்டத்தட்ட வணிகர்கள்தான். நீங்கள் என்று ஒரு ஸ்டாராக மாறுகிறீர்களோ, அன்றே வர்த்தகத்திலும் புகுந்து விடுகிறீர்கள். பணம், புகழ் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவீர்கள். ஒரு படம் வந்தால் அதன் வசூலும் கூட முக்கியமானதுதான்.

இன்னும் சாதிக்க வேண்டும்

150 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு திருப்தி என்பது வரவே இல்லை. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகம் இருக்கிறது. இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளது.

நடிப்பு வராவிட்டால் வேறு வேலை பார்ப்பேன்

அடிப்படையில் நான் டெக்னீசியன்தான். தற்செயலாகத்தான் நடிக்க வந்து விட்டேன். எனவே எனது நடிப்பு மக்களால் விரும்பப்படவில்லை என்றால் உடனே வேறு வேலை பார்த்துக்கொண்டு போய் விடுவேன்.

18 வயசு முதல் 65 வரை எனக்குப் போட்டிதான்

எனக்கு நிச்சயம் போட்டிகள் உண்டு.எனக்கு என்றில்லை எல்லோருக்குமே உண்டு. எனக்கு 18 வயது முதல் 65 வயது வரையிலானார் பலர் போட்டியாக உள்ளனர். ஆனால் போட்டி இருப்பதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதானே நாம் சாதிக்க முடியும் என்றார் கமல்.

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment