இதோ
வருவார், அதோ வருவார் என்று ரஜினியை ஒவ்வொரு முறையும் அரசியலுக்கு இழுத்து
பார்த்தனர் அவரது ரசிகர்கள். திடீரென அவருக்கேற்பட்ட உடல்நலக்குறைவு
ரசிகர்களை உலுக்கி பார்த்தது.
மீண்டும்
அவர் நல்லபடியாக வர ரசிர்கள் செய்யாத பிரார்த்தனை கிடையாது. ரஜினியும்
குணமாகி மீண்டு வர உற்சாகமானார்கள் ரசிர்கள். ரஜினியை அரசியல் தலைவராக
பார்க்க அவரது ரசிர்களுக்கு ஆசை.
ஆனால்
ரஜினியோ தொடர்ந்து மவுனம் சாதித்தார். ஒருகட்டத்தில் அரசியல் வேண்டாம்
என்ற முடிவுக்கு வந்தார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் மெளனத்தை கோபமாக
கொப்பளிக்க தொடங்கினர்.
எங்களுக்கு
மன்றம் வேண்டாம், லெட்டர் பேடு வேண்டாம், தலைவர் இன்னும் எத்தனை நாள் தான்
மவுனம் சாதிப்பார், எங்களுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று ரஜினியை நெருக்க
தொடங்கினர்.
இந்தநிலையில்
தான் ரஜினியின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது. ரசிகர்கள் முன் எப்போதும்
இல்லாத அளவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் நெடியோடு வாசகங்கள்
எழுதிய பேனர்களை நாடு முழுவதும் ஒட்டினர்.
நாளைய முதல்வா,
உங்கள் ஆணைக்கு காத்திருகோம் என்றெல்லாம் பேசினார்கள். இதனால் ரஜினி மனதில்
ஒரு சிறிய மாற்றம். பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்தித்தார்.
அதுமட்டுமின்றி சென்னையில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த பிறந்தநாள்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
இது ரசிகர்களை
உற்சாகமாகியது. ரசிகர்களை சிகரெட் பிடிக்க கூடாது என்று அன்பு கட்டளை
போட்டார், ரசிகர்களும் அதை செய்தனர். கூடா நட்பு பற்றி பேசினார்.
நிமிர்ந்து உட்கார தொடங்கினர் ரசிகர்கள். அடுத்ததாக ஒரு புத்தக வெளியீட்டு
விழாவில் கலந்து கொண்ட ரஜினி நான் அரசியலுக்கு வந்தால் அரசியலில் என் வழி
தனி வழி என்றார்.
இதற்கிடையே
சென்னையில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை
அழைத்து பேசினார் ரஜினி. இதில் பல மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்
பங்கேற்றுள்ளனர். அப்போது அந்தந்த மாவட்ட நிலைமைகளை கேட்டறிந்தார்.
இதுவரை பல
மாவட்ட பொருளாளர்களை சந்தித்து பேசயுள்ளார். இனியும் தொடர்ந்து சந்திக்க
உள்ளார். ரசிகர்களிடம் பொருளாதார ரீதியாக உங்களை முதலில்
வலுப்படுத்துங்கள், எந்த ஒரு காரியத்தையும் நாம் முதலில் தொடங்கும் போதும்
நம்மை முதலில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அடுத்தடுத்து உங்களை
சந்திக்கிறேன் பேசுவோம், நான் உங்களை ஏமாற்றமாட்டேன் என்று ரசிகர் மன்ற
தலைவர்களிடம் ரஜினி பேசி உள்ளது, ரஜினி ரசிகர்களிடம் ஒரு உற்சாகத்தை
ஏற்படுத்தி உள்ளது.
இந்த
வார்த்தைக்காகத்தான் தாங்கள் காத்திருந்ததாக ரஜினி ரசிகர்கள் பூரிப்பு
பொங்க, முதல்கட்டமாக அரசியல் வேலைகளில் களம் இறங்கியுள்ளனர்.
இனி மாவட்டம்
தோறும் ரஜினியின் புதுக்கொடி பறக்கும், சிவாஜி படத்தில் அதிரடிக்காரன்
மச்சான் மச்சான் என்று பாடல் பாடியது போல பல அதிரடி அறிவிப்புகள் வரலாம்.
எத்தனை தலைவர்கள் வேண்டுமானாலும் வரட்டும், மக்களை சுரண்டாத நல்ல தலைவர் வந்தால் நாமும் கை குலுக்கி வரவேற்போம்.
0 comments:
Post a Comment