மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை, 890 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம், “கட்’ ஆனதால், முந்தைய சிலிண்டர் விலையான, 398 ரூபாயை விட, கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
மேலும், மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவதில், “ஏஜென்சி’ நிறுவனங்கள், முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானிய விலை அல்லாத சிலிண்டர்களை திரும்ப தரும் நடவடிக்கையை, நுகர்வோர் துவக்கி உள்ளனர்.
“குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்தது. செப்., 14ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அறிவிப்பின்படி, மார்ச், 31ம் தேதி வரையிலான, நடப்பு நிதியாண்டில், மூன்று சிலிண்டர்களை மட்டும், மானிய விலையில் நுகர்வோர் பெற முடியும்.”மானிய விலை காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, செப்., 14ம் தேதி மற்றும் அதற்கு பின், போடப்படும் ரசீதுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட வேண்டும்’ என, மத்திய அரசு, தெளிவாக அறிவித்துள்ளது.
ஆனால், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், “ஏஜென்சி’ நிறுவனங்களில் பெரும்பாலானவை, செப்., 14ம் தேதிக்கு முன் போடப்பட்ட, “பில்’ களுக்கான சிலிண்டர்களையும் கணக்கிடு கின்றன.இத்தகைய முறைகேட்டால், நடப்பு நிதியாண்டில், தங்களுக்கு மானிய விலையில், இரு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என, நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:இரு தினங்களுக்கு முன், இம்மாதத்திற்கான சிலிண்டர் வந்தது. “நடப்பு நிதியாண்டிற்கான, மூன்று மானிய விலை சிலிண்டர்களை ஏற்கனவே நீங்கள் வாங்கி விட்டீர்கள்; எனவே, மானிய விலை அல்லாத இந்த சிலிண்டருக்கு, 890 ரூபாய், தர வேண்டும்’ என, கேட்டனர்.விசாரித்தபோது தான்,செப்டம்பர்., 12ம் தேதி, “பில்’ போடப்பட்டு, 15ம் தேதி வினியோகம் செய்யப்பட்ட சிலிண்டரையும், மானிய விலை சிலிண்டர் கணக்கில் சேர்த்துள்ளது தெரிந்தது.அரசு அறிவித்தப்படி, டிச., மாதத்திற்கான சிலிண்டரும், எனக்கு மானிய விலையில் வர வேண்டும். அதை தர மறுத்ததால், சிலிண்டரை வாங்காமல் திரும்ப தந்து விட்டேன். இதுபோன்ற முறைகேடு பல இடங்களில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மானிய விலை சிலிண்டர்கள் குறித்த, அரசின் அறிவிப்பை பின்பற்றாத ஏஜென்சிகள் குறித்து, நுகர்வோர் புகார் செய்தால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐ.ஓ.சி.,
நிர்வாகம்தெரிவித்துள் ளது.சிலிண்டரை திரும்பத்தரும் இல்லத்தரசிகள் :சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு, கடந்த இரண்டாண்டுகளில், அதிகரித்துள்ளது. தற்போது, தமிழகத்தில் நீடிக்கும் பல மணி நேர மின்வெட்டால், மின்சார அடுப்பையும், பயன்படுத்த முடியாத நிலைக்கு, இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், பெரும்பாலான வீடுகளில், மாதத்திற்கு ஒரு காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால், நடப்பு நிதியாண்டிற்கான, மானிய விலை சிலிண்டர்களைபெரும்பாலோர், நவ., மாதத்திற்குள் பெற்று விட்டனர்.
அரசின் மானியத்துடன், 398 ரூபாய் கொடுத்து, சிலிண்டர் வாங்கி வந்த, இல்லத்தரசிகள், தற்போது மானியமில்லாமல், 890 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டியிருப்பதால், கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை, குரோம்பேட்டையில், “இண்டேன்’ நிறுவனத்தின், குறிப்பிட்ட, “ஏஜென்சி’யின் வாடிக்கையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று, மானிய விலை அல்லாத சிலிண்டரை வாங்க மறுத்துள்ளனர். இதே போல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சிலிண்டர் வாங்காமல் மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். “மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த வேண்டும். இல்லையெனில், இதன் விளைவை, வரும், லோக்சபா தேர்தலில் அரசு சந்திக்கும்’ என்கின்றனர் நுகர்வோர் அமைப்பினர்.
0 comments:
Post a Comment