Monday, December 31, 2012

உலகில் நமக்கு தெரியாத எட்டாவது கண்டம் ஓன்று இருக்கிறது !!!

உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.

இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று. இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார். இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார். இந்த உலகில் 100,200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.

அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர். 1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன. அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.

அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார். என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டுபிடிப்புகள் சாத்தியம்.

எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றை ஆராயும் பணிக்கு 'காட்டுக்கூரை' என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.
உலகில் நமக்கு தெரியாத எட்டாவது கண்டம் ஓன்று இருக்கிறது !!!

உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.

இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று. இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார். இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார். இந்த உலகில் 100,200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. 

அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர். 1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன. அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.

அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார். என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டுபிடித்தார். அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டுபிடிப்புகள் சாத்தியம்.

எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றை ஆராயும் பணிக்கு 'காட்டுக்கூரை' என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது.  

நன்றி 
ரேவதி

முதலில் நாம் கொடைகானால் பற்றி பார்க்கலாம் !!!

விடுமுறையே உற்சாகமாக கொண்டாடகொடைக்கானலுக்கு நண்பர்கள் அதிகமாக சென்று உள்ளனர் !!

அவர்களுக்கு உபயோகமாக கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே
பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்

முதலில் நாம் கொடைகானால் பற்றி பார்க்கலாம் !!!

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.

கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :

வெள்ளி நீர்வீழ்ச்சி:

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

ப்ரயண்ட் பூங்கா:

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).

டால்பின் மூக்கு:

பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.

பசுமை பள்ளத்தாக்கு(suicide point):

கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்தாதும் உண்டு

தலையர் நீர்வீழ்ச்சி:

இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:

கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர். அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.

Pine forest:
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி(Bear shola Falls):
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.

Kodaikanal solar observatory:

கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.

திறந்திருக்கும் நேரம்

காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

பாம்பர் அருவி:

இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.

செண்பகனூர் அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.

தமிழக 'சிலந்தி மனிதன்' !

செங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல், விறு, விறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும்அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்.

அவரது பெயர் ஜோதிராஜூ. அவர் 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான சுவரில் எந்தவித பிடிமானமும்இல்லாமல் கைகளை ஊன்றியபடி சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரசெய்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலந்திமனிதனின் சாகசத்தை பார்த்து அதிசயித்து போகிறார்கள். அவரது சாகசத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடுக்கும்பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.

இந்த சிலந்தி மனிதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்.

இவரது சாதனைக்கு பின்னால் சோதனையும் புதைந்து இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது, ஜோதி ராஜூவுக்குபடிப்பு ஏறவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பிறகு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போதுவிரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்கொலை முடிவை தேடினார். அதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவேஇப்போது சாதனையாளராக உருவெடுத்து இருக்கிறார்.

கட்டிட தொழிலாளியாக இருந்த ஜோதிராஜூவுக்கு சிலந்தி மனிதன் ஆகும் வினோத ஆசை எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டால், 'நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது, குரங்குகள் வந்தால் அவற்றை கூர்ந்து கவனிக்கஆரம்பித்து விடுவேன். மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் அவற்றின் குறும்பு தனம் எனக்குபிடிக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஏன் அவ்வாறு சுவரில் ஏறி இறங்கமுடியாது என்று. அதன் விளைவுதான் நான் சிலந்தி மனிதன் ஆன கதை' என்று சொல்லி முடித்தார், ஜோதிராஜூ

குரங்கிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஜோதிராஜூவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் சூட்டிய பெயர் என்னதெரியுமா? குரங்கு ராஜா.

அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், குரங்கு ராஜா என்று கேட்டால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்ட ஜோதிராஜூவிடம் வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்டால், '4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரணமனிதன். அப்போது நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள்என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனதுஅவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது' என்றார்.

அவரிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், 'எனக்கு உலகளவில் சிறந்த சிலந்தி மனிதனாக உருவாகவேண்டும் என்பதே லட்சியம். இதற்காக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற வேண்டும்' என்று கூறிய ஜோதிராஜூஅருகில் இருந்த சுவரில் விறு, விறுவென வேகமாக ஏறினார்.
தமிழக 'சிலந்தி மனிதன்'  !!!

செங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல், விறு, விறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும்அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்.

அவரது பெயர் ஜோதிராஜூ. அவர் 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான சுவரில் எந்தவித பிடிமானமும்இல்லாமல் கைகளை ஊன்றியபடி சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரசெய்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலந்திமனிதனின் சாகசத்தை பார்த்து அதிசயித்து போகிறார்கள். அவரது சாகசத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடுக்கும்பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.

இந்த சிலந்தி மனிதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்.

இவரது சாதனைக்கு பின்னால் சோதனையும் புதைந்து இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது, ஜோதி ராஜூவுக்குபடிப்பு ஏறவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பிறகு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போதுவிரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்கொலை முடிவை தேடினார். அதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவேஇப்போது சாதனையாளராக உருவெடுத்து இருக்கிறார்.

கட்டிட தொழிலாளியாக இருந்த ஜோதிராஜூவுக்கு சிலந்தி மனிதன் ஆகும் வினோத ஆசை எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டால், 'நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது, குரங்குகள் வந்தால் அவற்றை கூர்ந்து கவனிக்கஆரம்பித்து விடுவேன். மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் அவற்றின் குறும்பு தனம் எனக்குபிடிக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஏன் அவ்வாறு சுவரில் ஏறி இறங்கமுடியாது என்று. அதன் விளைவுதான் நான் சிலந்தி மனிதன் ஆன கதை' என்று சொல்லி முடித்தார், ஜோதிராஜூ

குரங்கிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஜோதிராஜூவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் சூட்டிய பெயர் என்னதெரியுமா? குரங்கு ராஜா.

அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், குரங்கு ராஜா என்று கேட்டால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்ட ஜோதிராஜூவிடம் வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்டால், '4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரணமனிதன். அப்போது நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள்என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனதுஅவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது' என்றார்.

அவரிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், 'எனக்கு உலகளவில் சிறந்த சிலந்தி மனிதனாக உருவாகவேண்டும் என்பதே லட்சியம். இதற்காக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுவெற்றி பெற வேண்டும்' என்று கூறிய ஜோதிராஜூஅருகில் இருந்த சுவரில் விறு, விறுவென வேகமாக ஏறினார்.

நன்றி 
கோவை ராஜா

Thursday, December 27, 2012

நிர்வாகத்தி​ல் மேலாண்மை

managementஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.
 
முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.
 
Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people" என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.
 
மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.
 
1. Planning
2. Organizing
3. Staffing
4. Leading
5. Monitoring
6. Motivation
 
Planning - திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.
 
தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி - ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.
 
இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.
 
Organizing - ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.
 
முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..
 
Staffing - ஆளெடுத்தல். அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.
 
தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.
 
Leading - வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.
 
Monitoring - கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.
 
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.
 
Motivation - ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.
 
வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.
 
மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.
 
பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.
 
இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
 
இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.

Wednesday, December 26, 2012

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : விஞ்ஞானிகள் வியப்பு


அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.



மேலும் அவ்வளவு ஆழத்தில் அந்த உரினங்கள் வாழ்வதில் இன்னொரு அசாதாரணமான விடயமும் உள்ளது. கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளுக்கு மேலாக அந்த உயிரினங்கள் காணப்படுகின்றன.அந்த எரிமலைகள் சீறும்போது கரும்புகையைக் கக்குகின்றன. அப்போது 380 டிகிரி அளவுக்கு வெப்பநிலை உயருகிறது.

காரீயத்தையே உருக்கிவிடக் கூடியதுதான், இந்த வெப்பநிலை. சூரிய வெளிச்சத்துக்கே முற்றிலும் வாய்ப்பில்லாத நிலையில் இருக்கும் இருட்டில் அந்த உயிரினங்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. எரிமலைக் கரும்புகையில் உள்ள அதீத நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை உடைப்பதன் மூலம் அந்த உயிரினங்கள் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகின்றன.இந்தப் பாதாள உலகத்தில் காணப்படும் இரு டஜன் புதிய உயிரினங்களில் “யெட்டி கிராப்“ என்ற உயிரினம்தான் அதிகளவில் உள்ளது. தலா 16 சென்டிமீற்றர் நீளமுடைய இவை, எரிமலை வாய் அருகே சுமார் 600 என்ற எண்ணிக்கையில் குவிந்திருக்கின்றன.

மற்றவகை நண்டுகளைப் போல் இல்லாமல் இவை தங்களின் மார்புப் பகுதியில் ரோமத்தாலான அடர்த்தியான அடுக்கைக் கொண்டிருக்கின்றன. இதில் பாக்டீரியாவை வளர்த்து, இவை உண்ணுகின்றன என்று கருதப்படுகிறது.இங்கு ஒரு புதிய வகை ஆக்டோபஸையும் கண்டியிடித்திருக்கும் விஞ்ஞானிகள். அது இதுவரை அறியப்படாத ஒரு புது இனம் என்கிறார்கள். ஆனால், அதை விஞ்ஞானிகளால் பிடிக்க முடியவில்லை. மேலும், இங்கு காணப்பட்ட, ஏழு கரம் கொண்ட நட்சத்திர மீன் போன்ற உயிரினங்களும் விஞ்ஞானிகளின் ஆர்வத்தைக் கிளறியுள்ளன.

Tuesday, December 25, 2012

வேப்ப இலை மகத்துவம்.....!


* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது...
வேப்ப இலை மகத்துவம்.....!

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது...

நன்றி -பரமக்குடி சுமதி

Sunday, December 23, 2012

2013இல் உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளது விக்கி லீக்ஸ்!!!

விக்கி லீக்' இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அவரை கைது செய்து தண்டிக்க அவரை தேடி வந்தது.

இதை தொடர்ந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவர் மீது சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சுவீடனுக்கு அனுப்ப இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 6 மாதமாக தஞ்சம் புகுந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈகு வேடார் தூதரகம் முன்பு ஏராளமானவர்கள் கூடினர். தூதரகத்தில் உள்ள பால்கனியில் தோன்றிய ஜுலியன் அசாங்கே தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், கற்பழிப்பு வழக்கில் என்னை சுவீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டுள்ளது.

அது குறித்து பேச்சு நடத்த தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்கள் விக்கி லீக் வெளியிட்டது. அது போன்று அடுத்த ஆண்டில் (2013) உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம். அதில் சிரியா உள்பட பல நாட்டு ரகசியங்களும் அடங்கும் என்றார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
2013இல் உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிட உள்ளது விக்கி லீக்ஸ்!!!


விக்கி லீக்'  இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை தனது இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா அவரை கைது செய்து தண்டிக்க அவரை தேடி வந்தது. 

இதை தொடர்ந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்த அவர் மீது  சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு விசாரணைக்காக சுவீடனுக்கு அனுப்ப இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 6 மாதமாக தஞ்சம் புகுந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஈகு வேடார் தூதரகம் முன்பு ஏராளமானவர்கள் கூடினர். தூதரகத்தில் உள்ள பால்கனியில் தோன்றிய ஜுலியன் அசாங்கே தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினர். பின்னர் அவர்களிடம் பேசிய அவர், கற்பழிப்பு வழக்கில் என்னை சுவீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. 

அது குறித்து பேச்சு  நடத்த தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அமெரிக்கா குறித்த ரகசிய ஆவணங்கள் விக்கி லீக் வெளியிட்டது. அது போன்று அடுத்த ஆண்டில் (2013) உலக நாடுகள் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம். அதில் சிரியா உள்பட பல நாட்டு ரகசியங்களும் அடங்கும் என்றார். அவரது இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மூளை நன்கு செயல் பட என்ன சாப்பிடலாம்......

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.


மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...
நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு  ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...


நன்றி :- முகநூல் நண்பர்கள்

Saturday, December 22, 2012

உலகம் ஏன் அழியவில்லை?-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் விளக்கம்

உலகம் அழியப்போகின்றது என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணிய பலரும் உலக அழிவுக்கு 2 நாட்கள் முன்னதாகவே ஒன்றும் நடைபெறாததைக்கண்டு தமது முடிவுகளை மெதுவாக மாற்றிக்கொண்டார்கள்.ஒட்டு மொத்தமாக மாயன்கள் மீதும் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள்.ஆனால் சிலரோ இல்லை இல்லை நாஸா மறைக்கின்றது(உலகத்தில்  விஞ்ஞானிகள் உள்ள  ஒரே ஒரு இடம் நாஸா மட்டும்தானாம் ரஷ்யா,சீனா,இந்தியாவில் எல்லாம் விஞ்ஞானிகள் இல்லையாம்) நாஸா வெளியே சொல்லவில்லை அது இதுவென்று ஆயிரம் காரணங்களைக்கூறினார்கள்.இப்படி பம்மாத்துவிட்டு  பொய்ப்பிரச்சாரம் செய்ததில் சீனாவில் பலபேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது வேறுகதை.பேஸ்புக்கில் போலியான புகைப்படங்களை  பகிர்ந்து உலகம் அழிந்துக்கொண்டிருக்கின்றது என்றும் பகிர்ந்துகொண்டார்கள் நம்ம விஞ்ஞானிகள்.3,4 வருடங்களுக்கு முன்னர் நடந்த நில நடுக்கங்கள் தோன்றிய விண்வெளி  மாற்றங்களை எல்லாம் இன்று தோன்றியதாகவும் அவை செய்திகளில் ஒளிபரப்பட்டுவருவதாகவும் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அழியும் என்று கூறிய 99% ஆனவர்கள் அழியும் என்று கூறிய இன்னாளில் தாம்  நம்பியது முட்டாள்தனம்தான் என்று பின்வாங்கிவிட்ட நிலையில் ஒரு சிலர் இலைங்கை,இந்திய நேரம் 4.42 pm  இல்தான் உலகம் அழியும் அதுவரை நான் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்(ஏதோ காதலிக்கு வெயிட்பண்ணுவதுமாதிரி) என்று காத்திருந்துவிட்டு நேரம் சென்றபின்னும் கூட அதை ஒத்துகொள்ளவில்லை.மாயன்கள் கூறியவிடயங்கள் திரிபடைந்துவிட்டனவாம்.மாயன்கள் பற்றி 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்தவர்கள் கூட ஆராய்ந்து கண்டுபிடிக்காத விடயங்கள் இவை.

அதோடு உலகம் அழியப்போகின்றது என நம்பிய ஒரு விவசாயி செய்த விசித்திரமான வேலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

//தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.


பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.//


அப்படி  உலகம் அழியும் என  இலவு காத்த கிளியாக காத்திருந்த ஒரு சகபாடி உலகம் அழியவில்லை என்றதும் கூறிய விஞ்ஞான விளக்கம் இது.ஹார்ட் பேஸண்ட் யாராவது இருந்தால் வாசிக்கவேண்டாம்.


"இப்போது நேரம் 4.42 pm.....இதுவரையிலும் உலகம் அழிந்தது போன்று எனக்குத் தோன்றாததால் என் மீது கொலை வெறியுடன் இருக்கும் நண்பர்களுக்காக இந்த ஸ்டேடஸ்..... முதலில் மாயன்கள் விவகாரம் எக்கச்சக்கமாக திரிபடைந்து விட்டதால் அது குறித்தும் எனது நிலைப்பாடு குறித்தும்....
மாயன்கள் கூறியதன்படி 5125 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் தனது ஒரு முழுச்சுற்றைப் பூர்த்தி செய்கின்றது... அதாவது அவர்களின் கலண்டர் கி.மு 3114-08-11 ஆம் திகதி 0,0,0,0,0 இல் ஆரம்பித்து இன்று 13,0,0,0,0 ஐ எட்டி மீண்டும் 0,0,0,0,0 இற்குச் சென்றுள்ளது.... அவ்வாறு பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ஐந்தாவது தடவையும் (25625 வருடங்கள்) அது பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கின்றது... அந்த இடத்தில் ஒரு Dark Rift உண்டு, அதன் விளைவாக பூமி அழியும் அல்லது பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது தான் கருதுகோள்... இதற்கிடையில் சுமேரியர்களின் கூற்றுப்படியான நிபுரு பூமியைத் தாக்கும் என்ற நம்பிக்கை கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை எனக்கு இதனுடன் சேர்ந்து இருந்திருந்தாலும், அது பூமியை நோக்கி வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை நாஸா மறைக்க நினைத்தாலும் கூட, சுயாதீன விண்வெளி ஆய்வாளர்களின் கண்ணில் ஒரு மாதத்துக்கு முன்பே தட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு வாரத்தில் எமது வெற்றுக்கண்ணுக்கே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு முன்னரே அந்த நம்பிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்து விட்டது.... ஆகவே இன்றுவரை நான் நம்பியது Dark Rift ஐத் தான்... ஆனால் இன்னமும் உலகம் அழியவில்லை... இந்த 25625 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் நிகழ்வு மாயன்களின் புராதன பந்து விளையாட்டுடனும், அவர்களது மரணத்தின்கடவுள் வாழும் இடமான 'ஷிபால்பா' வில் நிகழ்ந்த பந்து விளையாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது... அக் கதையின்படி, “ஒவ்வொரு 25625 வருடங்களும் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன்வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான்.”
ஆகவே இப்போது சூரியன் வென்று விட்டதாகக் கொள்ளலாம்...
ஒவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒருமுறையும் சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் போது அழிவை நெருங்குகின்றது... அதற்காக ஒவ்வொரு முறையும் அழிந்து கொண்டா இருக்கின்றது...?
இன்று அழியலாம் என்று நம்பினேன்... அழியவில்லை... ஜஸ்ட் அவ்வளவு தான் மேட்டர்.... இதைப் புரியாதவர்கள் நீங்கள் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள்/ ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலறியடித்துக் கொண்டு சுனாமி எச்சரிக்கை விடுவதையும் பின்னர் சுனாமி வரவில்லை என்று தெரிந்தபின் எச்சரிக்கையை வாபஸ் பெறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...
ஆனாலும் பூமியை இன்னும் ஒரு 25625 வருடங்களுக்கு சும்மாவிட்டு வைக்க விரும்பாத காரணத்தால்.... நாஸ்டராமஸ் ஐ உதவிக்கு இழுக்கிறேன்....
நாஸ்டராமஸ் 2012 ஐ மைல்கல்லாக வைத்து பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்...
நாஸ்டராமஸ் கூறியதன்படி, “எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது....” இதனை நாம் மாயன்களின் காலண்டர் முடிவுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்... மாயன் காலண்டர் 2012 இல் முடிவடைந்த போதிலும் எமக்கு அழிவு கிடைக்கவில்லை....
மேலும் கங்ணம் ஸ்ரைல் பாடல் ஒரு பில்லியனைத் தொடும்போது உலக அழிவு நிகழும் என்று நாஸ்டராமஸ் சொன்னதாக சில நாட்களுக்கு முன்பு இன்னொரு மேட்டரையும் மாயன்களோடு இணைத்தார்கள்... அது ஒருவேளை அவ்வாறு ஒரு பில்லியனைத் தொடும் போது உலகம் அழிவது சம்பந்தமாக உலக மக்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று தான் அவர் ஆரூடம் சொன்னார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்... :) இப்போது அது 998,088,796 views.. இதை விளக்கமுடியாதவர்கள் வழக்கம் போல கோயின்சிடன்ஸ் என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியது தான்...

மேலும் நாஸ்டராமஸ் 2012-2025 கால கட்டம் இந்த உலகத்துக்கு மிகவும் கடினமான கால கட்டமாக இருக்கும் என்றும் வறட்சி, பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்றும், 2014 இற்கிடையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மூளும் போர் மூன்றாம் உலக யுத்தமாகப் பரிணமிக்கும் எனவும் கூறியுள்ளார்.... அதிலும் குறிப்பாக ராகு-சனி சேர்க்கை நிகழும் போது இவை நிகழும் என்றும் கூறியுள்ளார்... இப்போது, வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த 02-12-2012 உம் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 22-12-2012 ம் ராகு–சனி சேர்க்கை நிகழ்ந்து அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நீடிக்குமாதலால் அதகளத்துக்கு ரெடியாக இருக்கவும்... மேலும் நாஸ்டராமஸ் கூறியதன்படி 3797 இல் மனித இனம் முழுமையாக அழியும்..., 4007 இல் இப் பூமியிலுள்ள சகல உயிரினங்களும் அழியும் என்பதால்... என்ச்சாய்..



இவரை விட்டுவிடலாம்.ஆனால் சீரியஸ்ஸாக கவனிக்கப்படவேண்டிய ஒருவிடயம் இருக்கின்றது.உலக அழிவு  என்று ஒரு பேஸ்புக் எக்கவுண்டை ஓபின் செய்து.அதில் உலகம் இருண்டு கொண்டிருக்கின்றது.வானில் வால்வெள்ளி தோன்றியது. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று  வதந்திகளை பரப்பிவருகின்றார்கள் இவர்களை என்ன செய்யலாம்?


இப்படி செய்திகளைப்பரப்பும் பேஸ்புக் எக்கவுண்ட்கள் கீழே..

இங்கே கிளிக் 1

கிளிக் 2



டுபாய் இருட்டில் முழ்கியது .
டுபாய் மாலை 3 மணிக்கே இருட்டியது நாம் கூறியது போல, இது அங்கே தற்போது எடுத்த புகைபடம், உங்கள் நண்பர்கள் அங்கிருதால் வினவி பாருங்கள் நாம் சொல்வது உண்மையா அல்லவா என்று நாம் நடப்பதை தான் சொல்வோம்


பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக 
பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !
ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. நேற்றைய தினம் மாலை 8.45 மணிக்கு வாணில் பெரும் வட்ட தீப்பிளம்புடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்துள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து ஒரு ஒளிக்கீற்று ஒன்று பூமையை நோக்கி வந்துகொண்டுள்ளது .


எச்சரிக்கை ரிப்போட் உலக அழிவின் முந்தய செயலாக உலகு இன்று 3 மணி நேரங்களுக்கு முன் இருட்டில் மூழ்கும் .அதாவது பிற்பகல் 3 மணிக்கே நாடுகள் இருட்டிடும்.



புவி தனது ஒரு சுழற்சியை பூர்தி செய்து கொள்ளும் நேரம் தான் புவியின் சாய்வு அதிகரித்து புவி தகடு வெடிக்கும் என நாசா விஞ்ஞான யோன் டைமன் தெரிவித்துள்ளார், இது அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு நிகழும் என நாசா கணக்கிட்டுள்ளது, உலக மக்கள் வன்முறைகளில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என வலியுறுதபட்டுள்ளது, உலக நாடிகளிடையே அவசரகால நிலை தற்போது பிரகடனபடுதப்பட்டுள்ளது என தெருவிக்கபட்டுள்ளது


தற்போதைய செய்தி ... இலங்கை , இந்தோனேசியா,மியான்மார், யப்பான் ஆகியன முதலில் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க பூகோள மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக ஏற்படும் எனவும் தெரிவித்தார், தனக்கு உலக அழிவு பயம் தற்போது தான் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார், இச் செய்தியாலும் தொடர் பாரிய நில நடுக்கதாலும் மக்கள் பீதியின் உச்சியில் இருபதாக றொயிட்ரர் மேலும் தெரிவித்துள்ளது.

மக்களே இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்?இவற்றைப்பார்த்து ஒருவன் தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது?முதலில் இவ்வாறானவர்களை உள்ளே தள்ளவேண்டும்.

கும்கி – விமர்சனம்


மேலும் படங்கள்

கொம்பன் என்ற காட்டு யானையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள், பெண்கள், குழந்தைகளெல்லாம் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என்கிறார்கள். 200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை தொலைத்துவிட்டு எங்கே போவது.
நாங்களே எங்களை பாதுகாத்துக்கொள்கிறோம் என முடிவு செய்கின்றனர் அந்த கிராமத்து தலைவரும் மக்களும். இந்த கதிர் அறுப்புக்கு பாதுகாப்புக்கு இந்த காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருவதென.
ஆனால் வரவேண்டிய கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க சப்ஸிட்யூட்டாய் வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் டம்மி பீஸானா திருவிழா யானை மாணிக்கம். அதன் பாகனாய் விக்ரம் பிரபு, அவரது மாமனாய் தம்பி ராமையா, அந்த கிராமத்து தலைவரின் மகள் அல்லியாய் லட்சுமி மேனன்.
இரண்டு நாள் அங்கே வந்த விக்ரம் பிரபுவுக்கு லட்சுமி மேனனை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.மைனா என்ற மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் மீண்டும் அதே காடு சார்ந்த இடங்களிலேயே மொத்தமாய் சூட் பண்ணியிருக்கும் படம் இந்த கும்கி. மைனா அளவுக்கு இந்த படம் தரமாய் இருக்கிறதா?
முதலில் கும்கி யானை என்ற அந்த, காட்டு யானையை அடக்க பயிற்சி பெரும் இன்னொரூ யானை, என்ற புது விசயத்தை பிடித்ததுக்காக பிரபு சாலமனை பாராட்டலாம்.
முற்றிலும் புதிய களம். படத்தின் ஆரம்பக்காட்சிகள் மிரட்டலாய் இருக்கின்றன. கொம்பன் என்ற அந்த கொடூர யானையின் அறிமுகம் நம்மையும் பயமுருத்தி அடுத்த என்னாகப்போகிறதோ என்ற படபடப்பை ஏற்படுத்துகிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், உறுத்தாத கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருக்கின்றன அந்த 10 நிமிடங்களுக்கு.
இவ்வளவு பிரமாதமான ஆரம்பம், பின் அங்கே டம்மி யானையுடன் வரும் விக்ரம் பிரபு கோஷ்டி. அவர்களை நிஜமான கும்கி ஆட்கள் என நம்பி அவர்களை கடவுளுக்கும் மேலாய் பில்டப் பண்ணி மரியாதை செய்யும் கிராம மக்கள் என அழகான தொடக்கத்தில் காதல் என்ற ஒன்று வருகிறது.
அதன் பின் நடப்பவையெல்லாம் தான் துரதிஷ்டவசமாய் ஒன்றன் பின் ஒன்றாய் ஏமாற்றம் தரும் சறுக்கல்கள்.
படத்தின் இறுதிவரை விக்ரம் பிரபு காதலில் உருகிக்கொண்டேயிருக்கிறார். கொம்பன் வரும் வரும் என காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். கடைசியில் கொம்பன் வருகிறது. அந்த நேரத்தில் லேசாய் மதம் பிடித்த நிலையிலிருந்த மாணிக்கம் யானை தன் பாகனை கொல்லப்போகும் காட்டு யாணையை முட்டி மோதி கொன்று பாகனைக் காப்பாற்றுகிறது. விக்ரம் பிரபு தன் மாமாவையும், உதவியாளனையும் இழந்து அழுகிறார். அடுத்த சில நொடிகள் ப்ளாக் ஸ்கீரீன். திரையரங்கில் அனைவரும் என்னமோ வரப்போகிறது..ஏதோ நடக்கப்போகுது என ஒருவித எதிர்பார்ப்பில் இருக்க, எ ஃபிலிம் பை பிரபு சாலமன் என டைட்டில் கார்டு போட்டு படத்தை முடித்துவிட்டார்கள்.
களம் புதிது என நம்பிக்கை கொடுத்த பிரபு சாலமன் “தன் மீது பாசமாய் இருந்த தன் பாகனை கடைசியில் காப்பாற்றி செத்துப்போகும் யானை “என்ற எம்.ஜி.ஆர் காலத்து கதையைக் கொடுத்து பெரிய ஏமாற்றத்தை தருகிறார். அதிலும் திரைக்கதை என்பது சுத்தமாய் இல்லை. காதலிக்கிறார் காதலிக்கிறார் காதலிக்கிறார். கடைசியில் யானை வருது. இவ்வளவுதான் இவர் பண்ணிய திரைக்கதை. ஏன் சார்? மைனாவின் இருந்த திரைக்கதை ஆளுமையும் சின்ன சின்ன காட்சிகளிலும், ஷாட்களிலும் இருந்த நுணுக்கமும் இதில் மொத்தமாய் மிஸ்ஸிங்.
மேலும் படத்தின் ஒரே ஒரு நம்பிக்கையாய் இருந்த மாணிக்கம் யானைக்கும் கொம்பன் யானைக்கும் இடையிலான இறுதிகட்ட மோதல் என்பது சப்பென முடிந்துவிட்டது. எதிர்பார்த்த பிரம்மாண்டத்தையோ, வியப்பையோ தராமல்.
இமானின் இசை சில பாடல்களில் தாளமிட வைக்கிறது.
விக்ரம் பிரபு நன்றாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். லட்சுமி மேனன் சொன்ன வேலையை செய்திருக்கிறார். தம்பி ராமையா சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், வளவள ராமையாவாய் இரட்டை அரத்தங்களை வலியத்திணித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து என்ன அடுத்து என்ன என்ற விருவிருப்பு எதுவும் இல்லாத நிலையில் அழகாய் காண்பிக்கப்பட்ட காடும், கேமரா வேலைகளும் எந்த அளவுக்கு படத்தை ரசிக்க வைத்துவிட முடியும்.
மைனா அட்டகாசமாய் உயரப் பறந்தது என்றால் கும்கி சோம்பேறியாய் அசைந்தபடி நிற்கிறது. ஏமாற்றமே.

சட்டம் ஒரு இருட்டறை – விமர்சனம்


 
ஹீரோயின் ஒரு கொலையை நேர்ல பார்த்துடறா,வில்லன்க 3 பேரும் அவளைப்போட்டுத்தள்ளிடறாங்க. ஆனா அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியல . ஆல்ரெடி அவங்க ஜெயிலுக்குள்ளே இருந்த மாதிரி பொய் ரெக்கார்டு வெச்சிருக்காங்க .
அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஹீரோ எப்படி பழிக்குப்பழி வாங்கறார் என்ற புளிச்சுப்போன மாவில் பழைய மொந்தையில் புதிய கள்ளு  ஃபார்முலா படி  விஜய்காந்த் எஸ் ஏ சி கூட்டணியின் பழைய படத்தை இப்போ ரீமேக் பண்ணி இழுக்கறாங்க சாரி ரீமேக் பண்ணி இருக்காங்க..
ஹீரோவா தமன். இவர் லவ் சப்ஜெக்ட் எல்லாம் 10 பண்ணிட்டு அப்புறமா இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் பண்ரது நல்லது. ஏன்னா  அதுக்கு எல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும். சிறு புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு . மற்றபடி காதல் காட்சிகளில் ஓக்கே .
ஹீரோயின் நெம்பர் ஒன்னா சுருட்டை கூந்தல் அழகி பியா. இவர் மேக்கப் இல்லாமயே ரொம்ப அழகான சிரிப்பழகிதான் , ஆனா இதுல மேக்கப் , ஹேர் ஸ்டைல் சொதப்பல் . படம் பூரா அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒரே ஒரு ஷார்ட்ஸ் , டி சர்ட் மட்டும் தான் ..
ஹீரோயின் நெம்பர் டூ வா பிந்து மாதவி . இவருக்கு பிளஸ் என்னன்னா இவருக்கு மேல் உதடை விட கீழ் உதடு  ஒரே ஒரு செ மீ அகலம் அதிகம். லிப்ஸ்டிக் போடாமயே இலஞ்சிவப்பு , ஆனா மெரூன் கலர் லிப்ஸ்டிக் போட்டு படுத்தறாங்க
அடுத்து திமிறும் காட்டாறு , உருமும் குதிரை  ரீமா சென் . போலீஸ் ஆஃபீசரா வர்றார். கெத்து ஓக்கே ,  விஜயசாந்தி கம்பீரத்துல பாதி கூட வர்லை
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 
1. உயிரே உயிரே உன்னை ஒரு வரம் கேட்கிறேன் அழகான மெலோடி நல்ல பிக்சரைசேஷன் , ஒளிப்பதிவு , லொக்கேஷன்ஸ்  எல்லாம் அழகு
2. படத்துல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஃபிகருங்க ( அதுல 1 ஆண்ட்டி ) ளை வளைச்சு போட்டது . பிந்து + பியா 2 பேரையும் படம் பூரா நல்லா வேளை வாங்குனது  ( நடிப்பில் அல்ல )
3. படத்துக்கு தேவை இருக்கோ இல்லையோ ஒரு லிப் கிஸ் டூ பிந்து மாதவி
இளைய தளபதி அருகில் இருப்பது படத்தின் இயக்குநர்
இயக்குநரிடம் பல சரமாறி கேள்விகள்
1. ஹீரோயினை வில்லன்க 3 பேரும் கார்ல அடிச்சுட்டு போறாங்க, அப்போ ஹீரோ ஐஸ் க்ரீம்கடைல ஐஸ் வாங்கிட்டு இருக்கார். கடைக்காரர் சொல்லித்தான் ஹீரோவே கொலையைப்பார்க்கறார். அவர் போய் ஹீரோயினைப்பார்த்து அழுது 3 நிமிஷத்துக்குள்ள கார் பறந்திருக்கனும், ஆனா 4 நிமிஷம் கழிச்சு ஒரு வில்லன் “ டேய், அவ என்ன ஆனா?னு பாரு?” அப்டினு சொல்ல  3 பேரும் எதுக்கு அங்கே பார்த்து தங்களை ஹீரோவுக்கு அடையாளம் காட்டறாங்க?வந்தமா? கார்ல இடிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கறதுதானே? கேனங்க மாதிரி தங்கள் முகத்தை ஏன் காட்டனும்?
2. வில்லன் பாட்டுக்கு  துரை  தயாநிதி மாதிரி தலைமறைவா ஃபாரீன்லயே இருந்தா ஹீரோவுக்கு அவன் எங்கே இருக்கான்னே தெரியாது . பேக்கு மாதிரி வில்லன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு வர்றார்  “ எமனுக்கு இன்விடேஷன் தர்ற முத ஆள் நீதான்” அப்டினு சவடால் பேசி லூஸ் மாதிரி இங்கே வந்து உயிரை விடறார்.. ஹய்யோ அய்யோ
3. போலீஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கும் ஈரோடு  மகேஷ் , பிந்து மாதவி 2 பேரும் ஆக்சுவலி பம்மிட்டு இருக்கனும், ஆனா பிந்து சொல்லுது “ நீ ஆம்பளையா இருந்தா எங்க காலேஜ் பக்கம் வந்து பாரு” இப்படி சொல்லிட்டு ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேசனை  விட்டு வெளீல போயிட முடியுமா? இப்போ ரேப் சீசன் வேற .மகேஷ் காமெடிங்கற பேர்ல போலீஸை கலாய்ப்பது படு கேவலம் , இப்படி எல்லாம் நிஜத்துல நடந்தா லாடம் கட்டிடுவாங்க
4. ஒரு சீன்ல ஈரோடு மகேஷ் போலீஸ் கமிஷனர்ட்ட
“ சார் , உங்களுக்கு ஒயிஃப் இருக்கா?
இருக்கு ஏன்?
ஒயிஃபை கூட்டிக்கொடுப்பதும் ,  நண்பனைக்காடிக்குடுப்பதும் ஒண்ணுதான்
அப்டினு பஞ்ச் டயலாக் பேசி ஹாயா வெளீல வந்துடறார். போலீஸ் கமிஷனர் தேமேன்னு பார்த்துட்டு இருக்கார் . சென்சார்ல எப்படி விட்டாங்க? கைதட்டல் வரும்னு நினைச்சாங்க போல.. ஒரு பய கண்டுக்கலை
5. லாக்கப் ரூம்;ல  ராதாரவி & கோ சீட்டு விளையாடிட்டு இருக்காங்க, அப்போ கமிஷனர்   & போலீஸ் பட்டாளமே வருது , யாரும் எந்திரிச்சு நிக்கலை. போலீஸும் என்னப்பா விளையாடிட்டு இருக்கீங்க?ன்னு கேட்கலை
6. கொலையாளையை பியா ஃபோட்டோ எடுக்குது.  ஆனா டி வி ல  அவர்  எடுத்த வீடியோ காட்சின்னு ஒளிபரப்பறாங்க. அடுத்த சீன்ல யே வில்லன் “ அவ ஃபோட்டோதானே எடுத்தா? ஒரு ம… ரும் புடுங்க முடியாதுங்கறார், அதுக்கு அடுத்த சீன்ல ஹீரோ  வீடியோ அப்டிங்கறார், எடிட்டிங்க்ல கூட கவனிக்கலையா?
7. பியா தன் பாய் ஃபிரண்ட்னு முதல் முதலா ஹீரோவை தன் அக்கா கிட்டே அறிமுகம் பண்றா , முதன் முதலா  ஹீரோவைப்பார்க்கும் பியாவின்  அக்கா ஸ்வீட் பாய்னு ஹீரோ முகத்தை தடவிக்குடுக்குது , எதிர்ல்யே  அக்கா புருஷன் மிக்சர் சாப்பிட்டுட்டு நிக்கறாரு  ஹய்யோ அய்யோ
8. ஹீரோ ஹீரோயினை  ஃபாரீன்ல மீட் பண்றார். நீ யார்? எதுக்கு  நாலஞ்சு டைம் என் லைன்ல யே கிராஸ் பண்றே? அப்டினு ஹீரோயின் கேட்டதும்  ஹீரோ விதி நம்ம தலை விதி நாம லவ் பண்ணனும்னு இருக்குன்னு உளர்றாரு, அதுக்கு அந்த பதி விரதை சொல்லுது “ ஓக்கே இதே ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்ல காலைல இருந்து மாலை வரை ரவுண்ட் அடிப்போம் , எதேச்சையா நாம மீட் பண்ணிக்கிட்டா லவ் க்கு ஓக்கேன்னு கெக்கே பிக்கேக்கேன்னு இளிச்சுக்கிட்டு சொல்லுது. அதே போல் மீட் பண்றாங்க , அந்த கேனம் தன் மோதிரத்தை கழட்டி ஹீரோவுக்கு போட்டு விட்டு  கி கி ந்னு இளிக்குது,.இதான் லவ்வா? ஹய்யோ
9 ஹீரோயின் ஒல்லி , அவங்க மோதிர விரல்ல போட்டிருக்கும் மோதிரம் பாடியா இருக்கும் ஹீரோ சுண்டு விரல்ல கூட பொருந்தாது , ஆனா க்ளோசப்ல காட்டறாங்க  , கனகச்சிதமா நாஞ்சில் , அதிமுக மாதிரி பின்னிப்பிணைஞ்சிருக்கு , எப்படி?
10. ஹீரோ 2 வதா ஒரு கொலை பண்ணிட்டு ஹேரே போச்சுன்னு போய்ட்டே இருக்கறதுதானே? எதுக்கு லூஸ் மாதிரி போலீஸ்க்கு ஃபோன் பண்ணி லொக்கேஷன் சொல்லி மாட்டிக்கறார்?
11. ஹீரோவோட நண்பர்கள் 3 பேரும் ஹீரோவுக்கு முன்னாலயே ஹீரோயின் அங்கத்தை ஸ்டெப் ஸ்டெப்பா வர்ணிக்கறாங்க. என்ன கண்றாவிக்காதல் இது? கேனம் மாதிரி எல்லாரும் சிரிக்கறாங்க ஹீரோயின்க்கு கூச்சம்கிடையாதா? ஹீரோ தமிழனா? ஃபாரீனரா?
12. வில்லனை அரெஸ்ட் பண்ணும் போலீஸ்  ஏன் அவர் கிட்டே இருக்கும் செல் ஃபோனை கைப்பற்றலை? ஃபோனை ஆஃப் பண்ணச்சொல்லவும் இல்லை.. போலீஸ் ஒரு கைதியை  ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது அவன் கிட்டே செல் ஃபோன் எல்லாம் விட்டு வைக்க மாட்டாங்க , போலீஸ் எதிரேயே அவன் செல் ஃபோன் எடுத்து பேசறான்
13. ஓப்பனிங்க் ஷாட்ல கொலை நடந்த இடத்தை பார்வையிட வரும் ரீமா சென் அங்கே இருக்கும் எஸ் ஐ கிட்டே அங்கே ஒரு கார் இருக்கே? அது யாரோடது? அப்டினு கேட்டபின் அந்த எஸ் ஐ பக்கத்துல நிக்கும் ஆசாமியிடம் அந்த கார் யாரோடதுன்னு கேட்கறார், அவருக்கு சொந்தமா கிட்னி நஹி?
14. ஹீரோ ஜிம்முக்குப்போறேன்னு சொல்லிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டுப்போறார் ஹய்யோ அய்யோ
15. வில்லன் சுரேஷ்க்கு பவர் கண்ணாடியை பிடுங்கிட்டதும் அவர்க்கு கண் மங்கலாத்தெரியுது, சுத்தமா பார்வையெல்லாம் போகலை. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னா மேட்டர் ஓவர் , அவர் ஏன் கேனம் மாதிரி ரோட்டை கிராஸ் பண்ணி வாகனங்கள் மேல மோதிக்கறார்?
16. அசிஸ்டெண்ட் கமிஷனர் கொலை நடந்த இடத்துக்கு வந்ததும் மீடியா கிட்டே “ அது விபத்து இல்லை கொலைன்னு பேட்டி தர்றார். அவர் இன்னும் இன்வெஸ்டிகேஷனே ஆரம்பிக்கலை அதுக்குள்ளே யாராவது லூஸ் டாக் விடுவாங்களா?
17. வாட் டூ யூ திங்க் அபவுட் மீ?
நத்திங்க்
இதே கான்வர்சேஷன் படத்துல ஹீரோ & ஹீரோயின் 13 டைம் பேசிக்கறாங்க, செம போர்
18. ஈரோடுமகேஷ் 1980ல வந்த SMS  ஜோகஸை சாரி மொக்கைகளை எல்லாம் சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு அம்மா தாங்க முடியல  . விகரமனின் சென்னைக்காதல்ல இப்படித்தான் கோவை குணா சொதப்பினார்.  ஈரோடு மகேஷ் மதுரை முத்து கிட்டே இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அவர் அப்பப்ப பத்திரிகக்கைகள்ல வர்ற அடுத்தவங்க ஜோக்ஸ் எல்லாம் மனப்பாடம் பண்ணி தன்னுது மாதிரியே சன் டி வி ல சண்டே காலை 10.30க்கு சுடச்சுட அப்டேட் பண்ணிடுவார், ஆனா மகேஷ் இன்னும் பழைய மொக்கைகளையே ஒப்பேத்துனா எப்படி?
19. ஈரோடு மகேஷ் படத்துல  மொத்தம் 7 இடத்துல ஜோக் அடிக்கறார்.  ஒரு நமீதா சோற்றுக்கு ஒரு இலியானா பதம்கற மாதிரி ஒரு சாம்ப்பிள்
ஹேய், ஹேப்பி தீபாவளி மாப்ளை
டேய், இது பர்த் டே பார்ட்டிடா.. ஹேப்பி பர்த் டேன்னு சொல்லனும்
ஹே ஹே ஹே ஹ்ய்ய்  அப்படியா ஹேப்பி பர்த் டே ஹே ஹே
அப்டினு என்னமோ செம ஜோக் சொன்ன மாதிரி இவரே சிரிச்சுக்கறாரு
20 . ஹீரோவோட ஃபிளாஸ் பேக் கதை போலீஸ் ஆஃபீசர்  ரீமாவுக்கு ஆல்ரெடி தெரியும், ஆனா வில்லன்க 2 பேர் கொலை செய்யப்பட்டப்ப அவருக்கு தன் தம்பி மேல டவுட்டே வர்லை, ஆனா அவருக்கு கீழே ஒர்க் பண்ணும்  சாதா போலீஸ்க்கு டவுட் வருது ம் எபப்டி?
21. கொலையை நேரில் பார்த்த 2 ஹையர் ஆஃபீசர் இருக்கும்போது , ஹீரோ ஜெயில்ல இருந்ததா ஜெயிலர் சொல்லும் சாட்சி எப்படி செல்லுபடியாகும்? இது எப்படி இருக்குன்னா சி எம் ஜெ  ஒரு  கவர்னர் 2 பேரும் ஒரு அரசாணை வெளியிடும்போது டம்மி பீஸ்  ஓ பி எஸ் “ இது செல்லாது”ன்னு சொல்ற மாதிரி இருக்கு
22. ஹீரோவோட முதல் லவ்வர் கொலை செய்யப்ப்டறா. அடுத்த லவ்க்கு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கூடவா எடுத்துக்கக்கூடாது ? கிடைச்சா போதும்னு 2 வதுக்கு ஆள் ரெடி பண்றாரே? எப்படி? ஒரு சீன்ல கூட அவர் சோகமாவே இல்லையே?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. பசங்களோட சேர்ந்து நீயும் பீர் குடிக்கறியே , இது உனக்கே நல்லாருக்கா?
எஸ் , நல்லாருக்கே?
ஷட்டப்
2.  புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணு பின்னால பொன ஆணும் பிழைக்க சான்ஸே இல்லை  ( 1989 எஸ் எம் எஸ் ஜோக்)
3.  ஏய்! என் செல் ஃபோன்ல சார்ஜ் இல்லை, சார்ஜ் ஏத்தித்தர்றியாடா?
நான் சார்ஜ் ஏத்தினா ஏடாகூடம் ஆகிடும் ( டபுள் மீனிங்க் )
4. பசங்க மனசு ரஜினி மாதிரி , சொல்றதைத்தான் செய்யும் , செய்ய்றதைத்தான் சொல்லும், ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி  அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ( 2001 எஸ் எம் எஸ் ஜோக் )
5.  என்னடா ஜிம் பாடின்னே , டெட் பாடி வந்திருக்கு ?  ( மவுலி யின் நாடக வசனம் )
6. உங்க தியேட்டர்ல மெயின் கேட் தவிர வேற ஏதாவது வழி இருக்கா?
நோ மேடம், நீங்க சொன்னா இனிமே வேணா ஏற்பாடு பண்ணிடறேன் ( படத்தில் உள்ள ஒரிஜினல் ஒரே ஒரு ஜோக் இதுதான்)
7 . என்னடா , லவ் ஸ்டோரியை விளம்பரம் மாதிரி சுருக்கீட்டே?
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் – 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் – சுமார்
டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங் – 2.5 /5

புதினாக்கீரையின் மகத்துவங்கள் Pudina

Pudina
 
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.
 
புதினா - 50
 
1. புதினா அஜீரணத்தை அகற்றும். 
2. வயிற்றுப்போக்கை நிறுத்தும் 
3. குடல்பிணிகளை நீக்கும். 
4. சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். 
5. சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். 
6. குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். 
7. ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
8. சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும். 
9. கபநோயும், வயிற்றுப்போக்கும் நீங்கும். கீல் வாத நோய்கள் கட்டுப்படும். 
10. கண் நோய்கள் நிவர்த்தியாகும். 
11. கர்ப்பகால வாந்திக்குச் சிறந்த நிவாரணியாகும். 
12. தலைவலி, நரம்பு வலி, வாத வலிகளுக்குப் பயன்படுத்தினால் நோய்கள் நிவர்த்தியாகும். 
13. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கும்  வெள்ளைப் படுதல் பெரும்பாடுகளை நீக்குகிறது. 
14. சருமப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகிறது. 
15. பொதுவில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுகிறது.
16. அசைவ உணவுகளைச் செரிமானம் ஆக்கவும் கொழுப்புப் பொருள்களைக் கரைக்கவும் பயன்படுகிறது.
17. கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது. 
18. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.
19. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
20. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.
21. வாய்த்துர்நாற்றத்தைப் போக்கும் புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது.
22. புதினாக்கீரையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டால்  தொடர்ந்து நீடிக்கும் விக்கல் குணமாகும்.
23. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
24. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
25. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். 
26. இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. 
27. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 
28. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்
29. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
30. புதினா பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.
31. புதினா புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலுமிச்சை சாறு சேர்த்திருப்பது பசியின்மையையும் போக்கும்.
32. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். 
33. மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும். 
34. கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.
35. புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
36. வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். 
37. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
38. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.
39. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும் 
40. புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 
41. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. 
42. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
43. மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
44. புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
45. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
46. பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
47. புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .
48. பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.
49. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.
50. 'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பார்கள், விலை மலிவாகக் கிடைக்கிறதே என்று அலட்சியப்படுத்தாமல் புதினாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அமெரிக்காவில் 99 சென்ட்ஸ் மட்டுமே, இது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு வேளை புதினா சாதத்திற்கு உதவும்.. புதினா சாதம், புதினா புலாவ், புதினா துவையல், புதினா சப்பாத்தி, புதினா சூப், புதினா இட்லி என்று பலவிதங்களில் செய்து அசத்தலாம்..
 
 
படித்தும் தொகுத்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததும் ஆதலால் உங்களுக்கும் பயன் பெறும் நோக்கில் பகிர்கிறேன். 
 
என்ன புதினா வாங்கக் கிளம்பி விட்டீர்கள் தானே ?