இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து 2007-ஆம் ஆண்டு வெளியான ’சிவாஜி’ படத்தை ஏ.வி.எம் நிறுவனம் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ’3D அனிமேஷன்’ சேர்த்து ரஜினியின் பிறந்த நாளான 12-12-12 அன்று வெளியிடுகிறது. 3Dமட்டுமல்லாமல் ‘டால்பி அட்மோஸ்’ என்ற ஒலியமைப்புடன் இந்தியாவில் வெளியாகும் முதல் படம் சிவாஜி-3D.
ரஜினி உருக்கம்!
தனது நடிப்பில் வெளியான படம் 3D-யில் வெளிவருவது பற்றி பேசிய ரஜினி ” சிவாஜி படத்தை ஏ.வி.எம் 3D -யில் மாற்றுவதற்கு பதிலாக 3 பிரம்மாண்டமான படங்களை எடுத்திருக்கலாம். என் ரசிகர்களுக்காகவும், என் பிறந்தநாளுக்காகவும் ஏ.வி.எம் இந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்வது பெருமை அளிக்கிறது” என்று கூறினார்.
படத்தை இயக்குனர் ஷங்கர், இயக்குனர் கே.வி.ஆனந்த்(சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளர்), கவிப்பேரர்சு வைரமுத்து, சிவாஜி பட வில்லன் சுமன் ஆகியோர் பார்த்தனர். பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர் “ சிவாஜி படத்தை 2D-யிலிருந்து 3D-க்கு மாற்றியிருக்கிறார்கள். இதுபோல் 2D-யிலிருந்து 3D-க்கு மாற்றிய பல ஆங்கில படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த படத்திலும் இது போன்ற சிறப்பம்சங்கள் இருந்ததில்லை. நாங்களே வியக்கத்தக்க விதத்தில் அற்புதமாக 3D-க்கு மாற்றியிருக்கிறார்கள்” எனக்கூறினார்.
பின்னர் பேசிய வைரமுத்து “ரஜினியை திரையில் பார்த்து ரசிகர்களுக்கு பழகிவிட்டது. ஆனால் சிவாஜி 3D-யில் கண்ணுக்கு மிக அருகில் தொடும் தொலைவில் காட்டி ரசிகர்களை ரஜினிக்கு நெருக்கமாக்கிவிட்டார்கள். வாஜி வாஜி பாட்டில் ’ஆம்பல் ஆம்பல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறேன். ஆம்பல் என்றால் அல்லிப்பூ என்று அர்த்தம். அது புராண கால
வார்த்தை. அந்த பாட்டில் நீர்த்தொட்டியில் அல்லிப்பூ வைத்திருப்பது 3D- படத்தில் தெரிகிறது” என்று கூறினார்.
சிவாஜி படத்தின் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் பேசிய போது “ சில டெக்னிக் எல்லாம் உபயோகப்படுத்தி தான் சிவாஜி படம் எடுத்தோம். நாங்கள் படம் எடுத்த போது எங்களுக்கே தெரியாமல் இருந்த சிறப்பு அம்சங்களை இதில் முக்கியமாக காட்டியிருக்கிறார்கள்” என்று ஆச்சர்யத்துடன் கூறினார்.
சிவாஜி பட வில்லன் சுமன் பேசிய போது“ 12-12-12 ரஜினியின் பிறந்தநாள். அதைக் கூட்டினால் 36. ரஜினி திரைவாழ்க்கைக்கு வந்து 36 வருடங்கள் ஆகின்றன. அதை மாற்றிப் போட்டால் 63. ரஜினிக்கு 63 வயது ஆகின்றது. சிவாஜி 3D-யின் ரிலீஸ் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டமாக பல நாட்கள் கடந்து கொண்டாட்டத்துடன் கண்டிப்பாக ஓடும்”
0 comments:
Post a Comment