Monday, December 10, 2012

உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையில் கணவர் பிணத்தை 3 ஆண்டுகள் பாதுகாத்த பெண்

ரஷியாவின் செமிபிராட் டோவா பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 2009-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர். மனைவி பள்ளி ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார். ஆனால் இவர் இறந்த தனது கணவர் உடலை உடனடியாக அடக்கம் செய்யவில்லை. மாறாக, அவர் மீண்டும் உயிர் பிழைப்பார் என்று மூடநம்பிக்கை வைத்தார்.

இந்த நம்பிக்கையை தனது குழந்தைகளிடமும் வளர்த்தார். இறந்த கணவரின் பிணத்தை ஒரு அறையில் படுக்க வைத்தார். அவரது பிணத்துடன் தனது குழந்தைகளை தினசரி பேச வைத்தார். பிணத்துக்கு உணவுகளையும் கொடுத்து வந்தார்.

ஆனால் அவர் மட்டும் பிணம் இருந்த அறைக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார். இதற்கிடையே உனது கணவர் எங்கே? என்று அண்டை வீட்டார் கேட்டபோது, அவர் எழுந்திருக்க முடியாத நிலையில் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்து வருகிறேன் என்று ஏமாற்றி வந்தார்.

பிணவாடை தெரியாத அளவுக்கு வீட்டிலும் கணவர் உடல் வைக்கப்பட்டிருந்த அறையிலும் வாசனை திரவியங்களை தெளித்து வந்தார். அதுபோன்று 3 ஆண்டுகள் கடந்தன.

இதற்கிடையே இறந்த கணவரின் உடல் அழுகி நாற்றம் அடிக்க தொடங்கியது. இதையடுத்து இனியும் கணவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர் குழந்தைகளுடன் சேர்ந்து பிணத்தை கடந்த ஜூலை மாதம் ஒரு கால்வாயில் வீசினார். பிணத்தை தூக்கிச் சென்ற போது வழியில் தலையும், கையும் கீழே விழுந்து விட்டது.

இதற்கிடையே அழுகிய தலை இல்லாத உடல் போலீசாரிடம் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் நடந்த விபரங்கள் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிணத்தின் தலையும், கையும் 2 நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு பெரிய குற்றம் இல்லை என கருதிய ரஷிய போலீசார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கணவர் மீண்டும் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையில் உடலை அடக்கம் செய்யாமல் இருந்த அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையில் கணவர் பிணத்தை 3 ஆண்டுகள் பாதுகாத்த பெண்!!!!!!!!!!!!!!!

0 comments:

Post a Comment