Thursday, December 20, 2012

கும்கி - சினிமா விமர்சனம்



கொடுத்த காசுக்கு மன திருப்தியோடும்,க்ளைமேக்ஸ் தந்த சிறு வலியோடும் வெளியே வந்த படம்.ஒருபுறம் அழகான காடு,மலைகள்,அருவிகள்,மெல்லிய காதல்,மனம் கவரும் இசை என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் மறுபுறம் இன்னும் சாதி,இனம் என்று பழமையை பிடித்துக்கொண்டிருக்கும் ஆதிகாடு வாசிகள் போன்றவர்களை பெருமைப்படுத்தி காண்பிப்பதால் சாதியதிமிரும்,இன திமிரும் இதுபோன்றவர்களிடையே மேலோங்கும் என்பதில் வருத்தமும் சற்று எட்டி பார்க்கிறது.

கும்கி படத்தின் கதை


ஆதிகாடு என்றொரு தமிழக-கேரள, எல்லையில் இருக்கும் ஒரு அழகான மலை கிராமம். பாட்டன்,முப்பாட்டன் என பாரம்பரியமும்,கட்டுப்பாடும் மிகுந்த அந்த கிராமத்தில் 20 குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.பயிர்கள் அறுவடைக்கு வரும் நேரத்தில் “கொம்பன்” எனப்படும் அதிபயங்கர காட்டு யானை பயிர்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அங்கு வாழ்பவர்களையும் மிதித்து கொல்கிறது.


காட்டு யானையை விரட்டாத அரசாங்கம் ஆதிகாடு வாசிகளை புலம்பெயர சொல்கிறது.அதனை மறுக்கும் ஊர் மக்கள் கொம்பனை விரட்ட எங்களுக்கு தெரியும் உங்கள் வேலையை பாருங்கள்..என சவால் விடுகிறார்கள்.


கொம்பனை அழிக்க கும்கி யானை ஒன்றை வரவழைக்க ஊர்மக்கள் முடிவு செய்கிறார்கள்.
(கும்கி யானை என்பது காட்டு யானைகளை விரட்ட பயன்படுத்தப்படும் வலிமையான யானை)

யானை வியாபாரிக்கும்,கும்கி யானை பாகனுக்கும் இடையே ஏற்பட்ட குளறுபடியால் கோயில் யானை வைத்திருக்கும் நம்ம ஹீரோ பொம்மன், கும்கி யானைபாகனாக இரண்டு நாள் மட்டும் நடிக்க சம்மதிக்கிறார்.


இரண்டு நாள் ஆதிகாட்டு வாசத்தில் ஊர் தலைவர் மகளான  அல்லியை பார்த்த மாத்திரத்தில் காதலிக்கிறார் நம்ம ஹீரோ..காதல் மயக்கத்தில் நிஜத்தை மறந்து   கும்கி யானைபாகனாகவே தன் நடிப்பை தொடர்கிறார் நாயகன் பொம்மன்..


தேங்காய் உடைத்தாலே மிரண்டு ஓடும் கோயில் யானை மாணிக்கம், நாசகார காட்டுயானை கொம்பனை எப்படி வீழ்த்தப்போகிறது?


மற்ற ஊர்க்காரங்களுக்கு பொண்ணு கொடுக்கவும் மாட்டோம்,எடுக்கவும் மாட்டோம்னு பரம்பரை பரம்பரையா கட்டுபாட்டோட வாழ்ந்துவரும் ஆதிகாட்டில்.... அதே .ஊர் தலைவரின் மகளான அல்லியை நாயகன் பொம்மனால் மணக்க முடிந்ததா என்பதே மீதமுள்ள கதை.


கும்கி ப்ளஸ் பாய்ண்ட்


இசை,பாடல்கள்,பாடல் வரிகள்,ஒளிப்பதிவு,பொருத்தமான கேரக்டர்கள் தேர்வு,மிக அழகான இயற்கை காட்சிகள் அருவிகள்.....இன்னும்...


காட்டுயானை கொம்பன் எப்பவரும்னு? படம் முழுக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்து இறுதியில் க்ராபிக்ஸ்ல சண்டை வைத்தாலும் ஏமாற்றவில்லை இந்த கொம்பன்.


கும்கி மைனஸ்.


காதலில் ஆழமில்லை - குறிப்பா நாயகி அல்லிக்கு எப்டி காதல் வந்ததுன்னு ஒரு தெளிவே இல்லை...


க்ளைமாக்ஸ் - இன்னும் ஐந்து நிமிடமாவ்து படம் ஓடும் என்று நினைத்த நேரத்தில் வழக்கம்போல முடியாத சோகம்...


குறைவான காதல் காட்சிகள் .


பழமைவாதிகளுக்கு ஊக்குவிப்பானாக இருப்பது.


மொத்தத்தில் கும்கி


யானையை வச்சி என்ன அப்டி சுவாரஸ்யமா சொல்லிட போறாங்கன்னு நினைச்சேன்...யானைக்கும் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டுன்னு படத்தின் நாயகர்களான இயக்குனர் பிரபுசாலமன், இசை அமைப்பாளர் இமான்,தம்பி ராமையா,ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் குழுவினர்கள்  அழகாவே நிரூபிச்சிருக்காங்க..

0 comments:

Post a Comment