சென்னை:""அரசியலுக்கு
வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல்
என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற
முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.
பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.
அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள்.
என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள்.
கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.
கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

0 comments:
Post a Comment