தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது
வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை
நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து
வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, சிம் கார்டு பெறுவது
எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
உச்ச நீதி மன்றம்
அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு
கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த
விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை
மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு
வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க
வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என
உறுதி செய்யப்படும்.
நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.
மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை
ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம்
செயல்படுத்தப்படும்.
தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய
சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான
நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர்
மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை
செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள்
பதிவு நீக்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல்
சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின்
வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.
உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம்பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவணங்களின் நகல்களை மட்டும் அளித்தால் பெற முடியாது. யாருடைய பெயரில் சிம் கார்டு வழங்கப்படுகிறதோ, அவர் அதனை வழங்கும் மையத்திற்கு நேரில் சென்று வாங்க வேண்டும். அளிக்கப்படும் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் அவருடையதுதானா என உறுதி செய்யப்படும்.
நுகர்வோர் பணம் செலுத்தியவுடன், ஏற்கனவே இயக்கப்பட்ட சிம் பெறும் பழக்கம் எல்லாம் இனிமேல் செல்லுபடியாகாது.
மேலும், அனைத்து ஆவணங்களை அளித்து, நேரில் சென்று வந்தாலும், துறை ரீதியாக, கொடுக்கப்பட்ட முகவரியில் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சிம் செயல்படுத்தப்படும்.
தவறான அல்லது போலியான ஆவணங்களைக் கொடுத்து வாங்கிய சந்தாதாரர் மட்டுமின்றி, வழங்கிய விற்பனை மையமும் சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். புதிதாக சிம் வாங்குவோர் மட்டுமின்றி, ஏற்கனவே சிம் வைத்திருப்போர் குறித்த தகவல்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாத சிம் கார்டுகள் பதிவு நீக்கப்பட்டு வருகின்றன. மேற்காணும் நடவடிக்கைகள் அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, பல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5% அளவிற்கு சராசரியாகக் குறைந்துள்ளது.
0 comments:
Post a Comment