Thursday, November 29, 2012

தவறான சிகிச்சைக்கு பலியான மனைவி... டாக்டருக்கு தண்டனை வாங்கித் தந்த 84 வயது கணவன்!

''கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள்கூட தவறாமல் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் வாசலில் ஏறி இறங்கியதற்கு தகுந்த நியாயம் கிடைத்துவிட்டது'' 84 வயதில் இப்படி சந்தோஷப்படுகிறார், ஒய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான பி.சி. சிங்க்ஹி.

தவறான சிகிச்சை காரணமாக தன் மனைவியின் உயிருக்கு உலை வைத்த டாக்டருக்கு தண்டனை பெற்றுத்தந்துவிட்ட சந்தோஷம் இது. 1989 - ம் ஆண்டு பி.சி. சிங்க்ஹி-யின் மனைவி லீலா சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே டாக்டர்கள் கொடுத்திருந்த சிகிச்சை ரிப்போர்ட்டில் இருந்த சில விஷயங்களை அலட்சியம் செய்த மும்பையின் புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் (பத்ம பூஷன் விருது பெற்றவர்) டாக்டர் தேசாய், தன் போக்கில் சிகிச்சையை ஆரம்பிக்க... லீலாவின் உயிர் பறிபோனது.

இதையடுத்து, சிங் தொடர்ந்த வழக்கு... கீழ்கோர்ட், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று 23 ஆண்டுகளாக அல்லாடி, தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. டாக்டர் தேசாயின் தவறான சிகிச்சை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தீர்ப்பு தந்திருக்கும் உச்ச நீதிமன்றம், டாக்டர் தேசாய்க்கு ஒரு நாள் தண்டனை விதித்திருப்பதோடு, ‘இழப்பீடாக 70 லட்ச ரூபாய், செலவுகளுக்காக 15 லட்ச ரூபாய் ஆகமொத்தம் 85 லட்ச ரூபாயை சிங்க்ஹிக்குத் தரவேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

''இன்றும் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அந்த டாக்டரை காலம் முழுவதும் ஜெயிலில் தள்ள வேண்டும் என்பது என் ஆசை கிடையாது. தவறான சிகிச்சை அளித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்கவே நினைத்தேன். இறுதிவரை போராடி வெற்றி பெற்று இருக்கிறேன்'' என்கிறார் சிங்க்ஹி.
தவறான சிகிச்சைக்கு பலியான மனைவி...
டாக்டருக்கு தண்டனை வாங்கித் தந்த 84 வயது கணவன்!

0 comments:

Post a Comment