Monday, November 26, 2012

மழைக்கால நோய்த் தடுப்புக்கு மூத்த சித்த மருத்துவர் ஜெயா எபிநேசர் வழங்கும் டிப்ஸ்...

மழைக்காலம் என்பதால் தாகம் இருக்காது. இதனால் உடலுக்கு போதுமான நீர் கிடைப்பதில் பிரச்னை வரலாம். அதனால், தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நன்கு கொதிக்கவைத்து ஆற-வைத்த நீரையே குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீரைச் சூடாக்கி இறக்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நீரைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும்

கொசுவால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத களிம்பு, கொசுவத்திச் சுருள் பயன்படுத்தலாம். கொசுவலை கட்டித் தூங்குவது நல்லது.

மழைக்காலத்தில் நோய் அண்டாமல் இருக்க, வீட்டிலேயே இருக்கும் சுக்கு, தனியா (கொத்தமல்லி விதை), வெல்லம், துளசி போன்றவை உதவியாக இருக்கும். மாதுளை பழத் தோல், கறிவேப்பிலை இலை, கொஞ்சம் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தண்-ணீரில் இட்டு கொதிக்கவைத்து மோருடன் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுப்போக்கு வரமால் தடுக்கும், நன்கு பசியைத் தூண்டும், நன்கு ஜீரணம் ஆகும்.

0 comments:

Post a Comment