Tuesday, November 20, 2012

தாண்டவம் சினிமா விமர்சனம் – விக்ரம், அனுஷ்கா மற்றும் பலர்.


  முதலில் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் மற்ற கலைஞர்கள் எல்லோருக்கும் ஒருமுறை சுத்திப்போட வேண்டும். இப்போதெல்லாம் ஒவ்வொரு படமும் சிறப்பாகக்கொடுத்து மோசம் என்று சொல்வதே அரிதாகிவிட்டது.

  தாண்டவம் – முதல்பாதி விறுவிறுப்பு+கலகலப்பு. இரண்டாவது பாதி ஓகே. மொத்தத்தில் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கவேண்டிய படம்.


கதை:

  சர்ச்சில் பியானோ வாசிக்கும் கண்பார்வையற்ற விக்ரம், மற்ற நேரங்களில் எங்கோ போய் கொலை செய்துவிட்டு வருகிறார். அவர் போகும்போதெல்லாம் சந்தானம் டாக்ஸியில் போவதும் போலீஸ் சந்தானத்தை பிடித்து விசாரிப்பதும், சந்தானம் போலீஸ் ஆபீசர் நாசரை கலாய்ப்பதும் செம! மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன் சர்ச் வருகிறார். விக்ரமை காதலிக்கிறார். நான்காவது கொலையை செய்ய முயற்சிக்கும்போது போலீஸ் வந்துவிடுகிறது. – இடைவேளை!



  பிளாஷ்பேக் - இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய மாப்(வரைபடத்தாள்) ஒன்று பார்சலில் லண்டன் போகிறது. அதை வைத்து நாலே மணிநேரத்தில் குண்டு வெடிக்க வைக்க முடியுமென்பதால் அதைத்தேடி ரா ஏஜன்ட் சிவா (விக்ரம்) லண்டன் போகிறார். ஆனால் போன இடத்தில் விக்ரமின் நண்பரே (ரா ஏஜன்ட்) பணத்திற்காக வரைபடத்தாளை தீவிரவாதிகள் கைக்கு கொடுத்துவிடுகிறார். குண்டு வெடித்து விக்ரம் மனைவி அனுஷ்காவும், நண்பர் கென்னியும் இறந்துவிடுகிறார்கள். விக்ரமிற்கு கண்பார்வை போய்விடுகிறது. கண்பார்வை போனபின்பு இவர்களை எப்படி பலி வாங்குகிறார் என்பதே கதை.

  எக்கோ கான்சப்ட் – அதாவது வவ்வால் எப்படி ஒலியெழுப்பி அதை திரும்ப பெறும்போது எதிரிலுள்ள பொருள்களை அறிந்துகொள்கிறதோ அதேபோல் மனிதர்களும் ஒலியெழுப்பி அறிந்துகொள்ள முடியும். கண்பார்வையற்ற விக்ரம் அதை உபயோகித்துத்தான் எல்லோரையும் கொல்கிறார்.


சிறப்புகள்:

  விக்ரம் – காசியில் கலக்கிய நடிகனுக்கு கண்பார்வை அற்றவனாக நடிக்கச் சொல்லியா தர வேண்டும்? இதெல்லாம் ஜுஜுபி என்பதுபோல அட்டகாசமாய் நடித்துக்கொடுத்திருக்கிறார்.

  அனுஷ்கா – மழையில் நனைந்து அறிமுகமாகும்போதே தியேட்டரில் விசில். விக்ரமை காதலிக்கும் சீன்கள் கவிதை.

  சந்தானம் - காமெடி கலக்கல். "போன முறையும் இதே பதிலைத்தானே சொன்னே நீ? போனமுறையும் நீங்க இதே கேள்வியத்தானே கேட்டீங்க, கொஸ்டீன மாத்தி கேளுங்க பதிலை வெரைட்டி வெரைட்டியா கொடுக்கிறேன்" "கூகிள்ல சர்ச் பண்ணாலும் என்ன மாதிரி ஒரு குட்பாய் கிடைக்க மாட்டான்" செம டச்சிங்.

நாசர், எமி ஜாக்சன், லட்சுமிராய், பாஸ்கரின் “மாப்ளே” காமெடி, தம்பி ராமையாவின் “தப்பாச்சே” காமெடி என ஒவ்வொருவரும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.
பின்னணி இசை அருமை – “will you be there” மெலடி பாடல் அருமை.



இயக்குனர் பல்பு வாங்கும் இடங்கள்:

  • பரபரப்பான கிளைமாக்ஸ் வரும்போது உங்க ஆளை வச்சு ஒரு மெலடி பாட்டை போடுவதை எப்போ நிறுத்த போறீங்க? தியேட்டரே செம கடுப்பு ஆகிறது. (ஆனால் அந்தப்பாடலில் கடற்கரை மணலில் வரைந்து ஆடும் ரொமான்ஸ் சூப்பர்)
  • குண்டு வெடிக்கும் சீன் அப்பட்டமான அனிமேசன் என்று அப்படியே தெரிகிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.

  • ரா ஏஜன்ட்டைக் கல்யாணம் செய்த பின்பு மனைவி, “கணவன் எங்கு வேலை செய்கிறான்” என்றுகூடவா கேட்காமல் இருப்பாள்? அவளே நீங்கள் எஸ்.பி என்று சொல்லிக்கொள்வாளாம், எந்த ஸ்டேஷன் என்று கேட்க மாட்டாளாம்.

  • ஒரு ரா ஏஜன்ட் வீட்டுக்குகூடவா போன் செய்ய மாட்டார்? இல்லை பண்ணத்தெரியாதா? அப்படிப் பண்ணியிருந்தால் மனைவியை குண்டு வெடிப்பதற்கு முன் சந்திக்கவேண்டி வந்திருக்காதே?

0 comments:

Post a Comment