Friday, November 23, 2012

அம்மாவின் கைபேசி…. திரைவிமர்சனம்

இந்த தீபாவளிக்கு நம்ம ஒளிதச்சர் தங்கர்பச்சான் அருளிய அம்மாவின் கைபேசி திரைப்படத்தை கானும் பாக்கியம் அருளியது.
இதுதான் கதை….
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் 7,8 அண்ணன் தம்பி அக்காமார்கள், ஒரே ஒரு அம்மா…அந்த அம்மாவிற்கு கடைசி பையன் வாலு, இளமையானவர்..(சந்தனு) எந்த வேலைக்கும் லாயக்கில்லை… திருட்டு நண்பர்களுடன் சகவாசம் என்பதால், வசதியான மாமாவின் ஆதரவும், அவர் பெண்ணின் (இனியா) முத்தம் கிடைத்தும், சந்தர்பவசமாக ஒரு உறவினர் காதுகுத்து விழாவில் காணாமல் போகும் நகைகளுக்கு சந்தனுதான் காரணம் என முடிவு செய்து அம்மா உட்பட செருப்படி, விளக்குமாற்று அடிகொடுத்து ஊரைவிட்டே துரத்துகிறார்கள்.

வழக்கம்போல் நம்ம உறீரோ மாட்டுத்தோல் சுத்தம் செய்யும் ஆம்புர் பாய் முதலாளியிடம் சேர்ந்து நல்லபெயர் எடுத்து, பிறகு கிருஷ்ணகிரி குவாரி முதலாளியிடம் சேர்க்கப்படுகிறார்… குவாரியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதலாளிக்கு விசுவாகமாக இருந்து நல்லபெயரும் எடுத்து சிறிது காலம் கழித்து முதலாளி ஒரு நாள் அவர்பெயருக்கு வீட்டை எளிதித்தர வேண்டிய நாளில் … மில்லியனர் முதலாளி மிகவும் அப்பாவியாக இருக்கிறாரே ஏன்.? .. வில்லன்களும் அவங்கதான்… முடிவு…

அடிரா சக்கை… போடு குத்தாட்டம்
இடைஇடையே… தங்கர்பச்சான் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார்.. கொஞ்சம் தண்ணிபோட்டது போல், தூங்குமூஞ்சி அப்பாவி வேஷம்.. அவருடைய மனைவியாக வரும் நெட்ட கொக்கு பார்ட்டி பலே…. படம் ஆரம்பத்திலேயே குத்தாட்டாட்டம் தான்… வெஸ்டர்ன் டான்ஸ் அப்புறம், சந்தனு இனியா ஒரு டூயட் (விரசமான..), தங்கர்பச்சான் நெட்டகொக்கு பார்ட்டியுடன் ஒரு குத்தாட்டம்… எல்லாம் இருக்கு..

அம்மா எங்கே….
ஒரு வயதான பாட்டிதான் அம்மா, அவருடன் எப்பொழுதும் ஒரு தாய்ப்பசுவும் கன்றும், கஷ்டப்பட்டு ஒரு மொபைலை வாங்கி சந்தனு அவரிடம் சேர்ப்பிக்க அதைவைத்துக்கொண்டு சந்தனுவுடன் தொடர்பு கொள்ளாமல் தவிப்பது… கடைசிவரை மகனைப் பார்க்காமலே உயிரை விடுவது என படம் தொடர்கிறது.. அம்மாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் விரிவாகவே இடம் பெறுகிறது.

வட்டாரமே வட்டாரமே…
வழக்கமா நம்ம தங்கர் கடலூர் மாவட்டத்தை விட்டு விட்டு (புயல் வந்ததால்) இப்போ சேலம் மாவட்டம், மலை சார்ந்த இடங்கள் மேட்டூர் டேம்… அதற்கப்பால் உள்ள கிராமங்கன்னு இதுவரை தமிழ்திரையுலகம் பதியாத இடங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

• போட் (தோணி) மூலம் ஊருக்கு செல்வது….
• முனியப்பன் கோவிலில் ஆணி செருப்பு அணிந்து பாவத்திற்கு தண்டனை பெறுவது…
• மாம்பழக்கூழ் செய்யும் நிறுவனம்
• மாட்டுத்தோல் பதப்படுத்தும் நிறுவனம்
• கிரானைட் குவாரித் தொழில்
• மினரல் வாட்டர் பாக்கெட் தயாரிப்பு நிறுவனம் .. இதையெல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்….
• பழைய காலத்து வீடு.. 13 வயதில் இந்த வீட்டுக்கு வந்தேன் 17 வயதில் நானும் உங்கப்பாவும் பார்த்து பார்த்து கட்டிய வீடுடா இதை இடிக்காதிங்கன்னு உருகுவதும்.
• தண்ணியடிக்காதிங்கன்னு இடைவேளையில் தங்கர் உருகுவதும், பின் ஒரு காட்சியில் அவரே உட்டுக் கட்டுவதும், மருந்துக்குக்கு கூட சிரிப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும்.
• சார்ன்னு சொல்லாதீங்க அய்யான்னு சொல்லுங்கன்னு புத்திமதி வேற சொல்றாரு…
• பேங்கில் இருந்து அதிகப்படியா தொகை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கூட சந்தனுவிற்கு துணையாக அடியாள்கள் யாரும் இல்லாதது நெருடல்…
• சந்தனுவை பழிவாங்கும் காட்சி… வித்தியாசமானது..
• நேர்மையான சந்தனுவை காட்டிவிட்டு கடைசியில் முதலாளியின் பணத்தை ( கொள்ளையடிக்கப்பட்டது ) எடுத்து சந்தனுவின் வீட்டிற்கு கொடுக்க சொல்வது என்ன நியாயம்?
• இனியாவும், மற்ற பெண்களும் காஸ்ட்யூம் மற்றும் பாடி லாங்வேஜ்ல்லாம் ( உயர்தரம் )
• என்ன சொல்ல வருகிறார்? நேர்மையாக இருக்காதேன்னா.. உண்மையா இருந்தா மவனே காலிடான்னா.. தங்கரின் தெளிவில்லாத கேரக்டர் போலவே குழம்புகிறது.
• முடிவை இழுஇழுன்னு இழுத்து காட்சிகளை இடம் மாற்றி மாற்றிப் போட்டு நம்மளை சிந்திக்க விடாமல் செய்ததும் தங்கரின் வெற்றிதான் போலே… இருந்தாலும்… கொஞ்சம் ………..

0 comments:

Post a Comment