Saturday, November 24, 2012

வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க…

அனைவருக்குமேசுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரியும். இதனால் வீட்டிற்கு ஒரு மரங்களை வளர்ப்பது, நீரை சேமிப்பது மற்றும் பல என்று அனைத்து வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது. அதிலும் தற்போது பேப்பரின் பயன்பாடு கூட குறைந்து வருகிறது. இருப்பினும், செய்தித்தாள், புத்தகம் போன்றவற்றை நிறுத்த முடியாதல்லவா. அவ்வாறு வீட்டில் வாங்கும் பேப்பர் அனைத்தையும் விற்காமல் அல்லது எரிக்காமல் சேகரித்து வைத்து, வீட்டில் ஒருசில பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். சரி இப்போது அந்த வேஸ்ட் பேப்பரை எப்படியெல்லாம் வீட்டில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
* வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் இருந்தால், அவற்றை நன்கு சுத்தமாக எந்த ஒரு அழுக்குமின்றி அழகாக வைப்பதற்கு, பேப்பரை பயன்படுத்தி, அந்த பொருட்களை சுத்தம் செய்து அழகாக்கலாம். அதற்கு பேப்பரை நீரில் நனைத்து துடைத்து, பின் நீரில் நனைக்காத பேப்பரால் துடைத்தால், கண்ணாடிப் பொருட்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.
* வீட்டின் ஷெல்ப்களில் கவர் போன்று பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் ஷெல்ப்களில் எந்த ஒரு கறை மற்றும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிலும் இதனை கிச்சன், புத்தக அறை, பீரோ போன்றவற்றின் அடியில் வைத்து, அதன் பின்னர் அந்தந்த பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும்.
* அனைவருக்குமே பேப்பருக்கு ஈரத்தை உறிஞ்சும் திறன் அதிகம் உள்ளது என்பது நன்கு தெரியும். ஆகவே அலுவலகத்திற்கு அவசரமாக செல்லும் போது ஷூக்களில் தண்ணீர் பட்டுவிட்டால், அந்த ஈரத்தை பேப்பரால் துடைக்கலாம். வேண்டுமெனில் வீட்டில் எங்கேனும் காப்பி அல்லது டீ போன்றவை ஊற்றிவிட்டால், உடனே பேப்பரை வைத்து துடைத்தால், உடனே அந்த ஈரத்தை பேப்பர் உறிஞ்சிவிடும்.
* வீட்டை பேப்பர் வைத்து அலங்கரிக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதிலும் பூக்களை செய்து, அதற்கு கலர் அடித்து சோக்கேஸில் வைக்கலாம். இல்லையெனில் பேப்பர் லேம்ப் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு தூக்கிப் போட இருக்கும் பேப்பரை வைத்து விளையாட்டுப் பொருட்கள் செய்து தரலாம். அதிலும் அந்த பொருட்களில் கப்பல், விமானம், மிருகம், பறவை போன்றவற்றை செய்து, அவர்களுக்கு விளையாட கொடுக்கலாம். வேண்டுமெனில் அந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து அவர்களது அறையை அலங்கரிக்கலாம்.
* எங்காவது வெளியே செல்லும் போது அதிகமான அளவில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டால், டிஷ்யூ பேப்பர் போல் பேப்பரை வைத்து, பிரஸ் செய்தால், அந்த லிப்ஸ்டிக் சரியாகிவிடும்.
* காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடாமல், பசுமையாக வைப்பதற்கு, பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நன்கு நீண்ட நாட்கள் இருக்கும்.
* தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டும் என்று நனைத்தால், அப்போது அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரினால் சுற்றி, 2 வாரம் வைத்து, பின் பார்த்தால், விதைகள் முளைகட்டியிருக்கும். பின் எடுத்து அந்த விதைகளை விதைத்தால், செடி சூப்பராக வளரும்.
என்ன இதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்திருக்கிறீர்களா? வேற எப்படி பேப்பரை யூஸ் பண்ணலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment