Thursday, November 22, 2012

‘‘ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?’’

‘‘10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.

அதனால், சின்ன வயசுக்காரங்க யாரும் ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணக்கூடாது.”

‘‘ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும்போது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?’’

‘‘இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். கான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும் போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம். ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.’’

0 comments:

Post a Comment