Wednesday, July 11, 2012

உயிர்காக்கும் இரத்த தானம் தானத்தில் சிறந்த தானமாக அமையும் இரத்த தானம் சரியாகப் பயன்பட்டால் !!!!

அறுவை சிகிச்சை, விபத்து போன்ற காரணங்களால் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுசெய்யவே இரத்தம் தானமாக பெறப்படுகின்றது. முன்பெல்லாம் இரத்த தானம் செய்ய மக்கள் பயந்தனர், அதன் காரணமாக விளம்பர வாசகங்களும், பலகைகளும் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டன. இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், அதனால் உடலுக்கு ஒரு பாதிப்பும் இல்லை, பெறப்படும் இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் இதுபோன்ற விவரங்களை நாம் அறிந்தோம். இதனால் இப்பொழுது இரத்த தானம் செய்ய மக்களை தேடும் நிலைமை இல்லை. பல தன்னார்வ நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும் பல இணைய தளங்களில் பெயரைப் பதிவு செய்து கொண்டு எந்நேரமும் இரத்த தானம் செய்யத் தயாராக உள்ளனர்.

இவ்வாறு முகாம்கள் வாயிலாகவும், நேரடியாகவும் இரத்தம் பெறப்படுகிறது. ஆனால் பெறப்படும் இரத்தம் சரியான நபர்க்கு சரியான நேரத்தில் பயன்படுகிறதா என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் காசுக்காக இரத்தம் விற்கப்படும் அவலங்களும், காலாவதியான இரத்தக் கலன்கள் குப்பைகளில் கிடக்கும் செய்தியும், சில பள்ளிச் சிறுவர்கள் (சிறுவர்கள்???) 200 ரூபாய் பணத்துக்காக இரத்தம் தரும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விலை மதிப்பற்ற இரத்தம் இப்படி விரயமாவது எவ்வளவு கொடூரமானது. இவற்றையெல்லாம நம்மால் தடுக்க இயலாவிடினும் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

ஆகவே இரத்த தானம் செய்யும் முன் கீழ்காணும் சில கருத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்

முடிந்த அளவு முகாம்களில் இரத்தம் தராமல் நேரடியாக இரத்த தானம் செய்யுங்கள்.

அப்படி தருவதென்றால் சரியான மருத்துவமனை, வங்கிக்கு போய்ச் சேருகின்றதா என்பதனை விசாரியுங்கள்.

இரத்தம் பெறுபவருக்கு உண்மையிலே அவசரத் தேவைதானா என்பதை தெரிந்து கொண்டு இரத்த தானம் செய்யுங்கள்.

நான் இரத்த தானம் செய்வது தவறு என்று சொல்லவில்லை, விவரங்களைத் தெரிந்து கொண்டு செய்வது நல்லது .சிலர் இதிலும் பணம் சம்பாதிகிரார்கலாம்

0 comments:

Post a Comment