Wednesday, July 4, 2012

பருவ மழையை நம்பி இருக்கும் நம் பொருளாதாரம்!


பருவ மழைக்கும், பொருளாதாரத்துக்கும் என்ன சம்பந்தம்..? வழக்கமா ஐரோப்பிய நாடுகளில் கடன் பிரச்னை, அமெரிக்காவுல ஏராளமானோர் வேலை இழப்பு அதனால இந்திய பொருளாதாரம் சரிவு அப்படீன்னுதானே செய்தி வருது.

உள்நாட்டு பொருளாதாரத்துல இயற்கைச் சூழலுக்கும் பருவ மழை மற்றும் பருவ நிலைகளுக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது. பருவ மழை பொய்த்துப் போனால், உள்நாட்டு உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து உணவு இறக்குமதிக்கு அதிக செலவிட வேண்டி வரும். இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை, தென் மாநிலங்களில் 31 சதவிகிதம் வரை குறைவாகப் பெய்துள்ளது. இந்திய அளவிலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 172 மில்லி மீட்டர் பெய்த மழை இந்த ஆண்டு 119.3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது.

ஆனால், இந்த குறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இரண்டு நாட்கள் மேகம் கறுத்திருந்ததைப் பார்த்து சொல்லி இருக்கலாம்.

பணத்துக்கு ஆசைப்பட்டு விளைநிலங்களை வீடுகட்டும் நிலங்களாக விற்பனை செய்துவிட்டு, வீதி எங்கும் பச்சை பசேல் என பருவ மழைகளுக்கு காரண கர்த்தாவாக இருந்த மரங்களை வெட்டி எரிந்துவிட்டு மழை பருவத்தில் பெய்யவில்லையே என கூப்பாடுப்போட்டால் இயற்கைக்கு அது கேட்கவாப் போகிறது.

0 comments:

Post a Comment