Monday, July 23, 2012

ஒப்பந்த தொழிலாளர்கள்; மாருதி முடிவு சரியா?

கடந்த வாரம் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையில் துயர சம்பவம் நடந்தேறியது. இந்த சம்பவம் அந்நிறுவனத்தின் 29 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. பிரச்னைக்கு காரணம் ஒப்பந்தப் பணியாளர்கள் என்பதால் இனிமேல் ஒப்பந்த தொழிலாளர்களை முக்கிய பிரிவுகளில் நியமிப்பது இல்லை என முடிவெடுத்துள்ளது.

மாருதி நிறுவனத்தில் 10,000 நிரந்தர தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் சராசரி மாத சம்பளம் 18,000 ஆயிரம் ரூபாய். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் வெறும் 6,000 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். ஆனால் 29 ஆண்டுகளாத்தில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வைத்துதான் நிறுவனம் அதிக லாபம் அடைந்தது. உற்பத்தியையும் பெருக்கியது.

ஆனால் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கவில்லை. சம்பளம் மிககுறைவு. அதிக வேலைபளு. நிறுவனம் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்வது போன்ற சம்பவங்களை அடிக்கடி நடத்தியது நிர்வாகம்.

இதை எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கு, பதில் உடனடி பணி நீக்கம்தான் தீர்வாக இருந்தாது. இந்த செயல்களால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தின் மீது தாக்கதல் நடத்தினார்கள். இதில் ஒரு உயிர் தீயிக்கு இறையானது.

ஆனால் மாருதி நிறுவனம் இப்போது நடந்து முடிந்த எந்த சமயவத்தையும் பற்றி கவலைக் கொள்ளாமல் இனி ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தமாட்டோம் என அறிவித்து இருக்கிறது.

இதுநாள்வரை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து லாபம் சம்பத்தித்து விட்டு இப்போது அவர்கள் கோரிக்கை என்ன? அவர்கள் ஏன் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து எந்த ஆலோசனையும் செய்யாமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது சரியா?.

0 comments:

Post a Comment