Saturday, July 14, 2012

குழ்ந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பு ஊசிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் என்கிற தடுப்பு ஊசியை குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு முறை போட வேண்டும்.

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் கால அளவில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னிக்கான முத்தடுப்பு ஊசி, இன்ஃப்ளூயன்சா-பி தடுப்பு ஊசி, ஹெப-டைடிஸ் - பி தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதோடு போலியோ சொட்டு மருந்தும் கொடுக்கவேண்டும். மேலும் ஒன்றரை வயதில் முத்தடுப்பு முதல் ஊக்க ஊசி மற்றும் இன் ஃ-ப்ளூயன்ஸா - பி ஊக்க ஊசி போட வேண்டும்.

குழந்தையின் ஒன்பதாவது மாத முடிவில் மணல் வாரி அம்மைக்கான முதல் டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டும். 15&வது மாதத்தில் எம்.எம்.ஆர் ஊசி போடவேண்டும்.

ஒரு வயது முடிந்த பின் மஞ்சள் காமாலை ‘ஏ' மற்றும் சின்னம்மைக்கான தடுப்பு ஊசி போட வேண்டும்.

இரண்டு வயதில் டைஃபாய்டு தடுப்பு ஊசி போடவேண்டும்.

நான்கரை வயதில் முத்தடுப்பு இரண்டாவது ஊக்க ஊசி போடவேண்டும்.

10-வயதில் டெட்டானஸ் டாக்ஸைடு ஊசியும் 16 வயதில் டெட்டானஸ் டாக்ஸைடுக்கான இரண்டாவது ஊக்க ஊசியும் போட வேண்--டும். பெண் குழந்தைகளுக்கு 16 வயதில் ரூபெல்லா ஊசி போட வேண்டும்.

0 comments:

Post a Comment