Sunday, July 22, 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு புது பாலிசி!

‘‘இப்போது புதிதாக ஒரு பாலிசி வந்திருக்கிறது. ஆனால், அந்த பாலிசியை சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். 26 வயது முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு மட்டும் இந்த பாலிசி கிடைக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே இந்த பாலிசியில் மருத்துவம் கிடைக்கும். அதாவது சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மட்டுமே இந்த பாலிசியைப் பயன்படுத்த முடியும். இந்தக் குறிப்பிட்ட நோய்கள் தவிர மற்ற நோய்கள் எதற்கும் இந்த பாலிசியால் பலன் கிடைக்காது. (இதர நோய்களுக்கு வேறு பாலிசி எடுக்க வேண்டி இருக்கும்.) ஒருவேளை சர்க்கரை நோயின் விளைவுகளுக்கு ஏற்கெனவே சிகிச்சை எடுத்திருக்கும் பட்சத்தில், இந்த பாலிசியை எடுக்க முடியாது. இந்த பாலிசிக்கான ப்ரீமியம் கொஞ்சம் குறைவுதான். (ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 2,000 ரூபாய்). அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய்க்கு இந்த பாலிசி எடுக்க முடியும்.’’

0 comments:

Post a Comment