Tuesday, July 24, 2012

நெல்லையப்பர் கோயிலில் சூரிய ஒளி மின்சாரம்!

நாடெங்கும் மின்பற்றாக்குறை இருப்பதோடு, மின் கட்டண உயர்வும் தாண்டவமாடுகிறது. எளிய முறையில், நிரந்தர தீர்வுகாணும் திட்டம்தான் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம்.

திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் 2 மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், திருவிழாக்காலங்களில் 80 ஆயிரம் வரையிலும் மின் கட்டணம் ஆகிறது. இந்த கட்டணத்தை வெகுவாக குறைக்கும் எண்ணத்தில் இக்கோயிலில் சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செய்து தர அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பக்தர்கள் முன்வந்துள்ளார்கள்.

சூரிய ஒளி மூலும் தயாரிக்கப்படும் மின்சாரம், மழைக்காலத்திலும், அதாவது 15 டிகிரி செல்சியசிலும்கூட 75 சதவிகித மின் உற்பத்தியைக் கொடுக்கக்கூடியது.

திட்டம் செயல்படுத்தப்பட்டால் பண விரயமும் குறையும், மின் தட்டுப்பாடும் இருக்காது. நல்ல உள்ளம்படைத்த பக்தர்களை வாழ்த்துவோம். நாமும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாறுவோம்..!

0 comments:

Post a Comment