யமதொங்கா , மஹதீரா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரைலர் இந்த இரண்டிற்காக படத்திற்கு சென்றால் சரியாக பயன்படுத்தப்பட்ட க்ராபிக்ஸ் , மரகதமணியின் இசை , செந்தில்குமாரின் ஒளிப்பதிவு , சுதீப்பின் நடிப்பு இவைகளெல்லாம் படத்தின் பால் நம்மை மேலும் ஈர்க்கின்றன ...
நானி (நானி>எதிர் வீட்டிலிருக்கும் பிந்துவை ">( சமந்தா;) காதலிக்கிறார் ... வெளியில் சொல்லாத காதல் பிந்துவுக்கும் நானியின் மேல் இருக்கிறது ... இதற்கிடையில் சமந்தாவை அடைய நினைக்கும் கோடீஸ்வரர்சுதீப் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் நானியை கொன்று விடுகிறார் ... மறு பிறவியில் ஈயாக உருவெடுக்கும் நானி சுதீப்பை கொன்று பழி தீர்த்தாரா ? தன் காதலியை வில்லனிடமிருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக் கதை ... கதையென்னவோ பல வருடங்களாக பார்த்துப் பழகிப் போன பழி வாங்கும் கதை தானென்றாலும் , மூன்றே முக்கியமான கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிலும் குறிப்பாக வெறும் ஈயை கதையின் நாயகனான நானியாகவே நம்மை பார்க்க வைத்த விதத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான் ஒரு அனுபவசாலி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ...
வெப்பம் படத்தில் முழு நேர ஹீரோவாக வந்தாலும் பெரிதாக கவராத நானி இந்த படத்தில் அரை மணி நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் ... சமந்தா க்யூட்டாக இருக்கிறார் , அளவாக நடிக்கிறார் , ஆனாலும் பட ஆரம்பத்திலிருந்தே சோகமாக இருப்பது போலவே படுகிறது ..
சுதீப்பை இந்த படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட ஆன்டி ஹீரோ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் ... கிராபிக்ஸ் என்ன தான் கலக்கலாக இருந்தாலும் இவர் மட்டும் நடிப்பில் சோடை போயிருந்தால் படம் சப்பென்று ஆகியிருக்கும் ... படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஆன்டியை கரக்ட் செய்வதில் ஆரம்பித்து உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈயை விரட்டுவது , ஈக்கு பயந்து சவம் போல உடம்பெல்லாம் போர்த்திக் கொண்டு படுப்பது ,
ஏனோ தானோ என்று க்ராபிக்ஸ் செய்து எரிச்சலை கிளப்பாமல் அருமையாக க்ராபிக்ஸ் செய்து அட போட வைத்த மேக்ஷிமா குழிவினரே படத்திற்கு முதுகெழும்பு ...மரகதமணியின் பின்னணி இசையும் , செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் மற்ற முக்கிய பலங்கள் ... சந்தானம் மற்றும் கிரேஸியை பற்றி சொல்வதற்கு படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை ...
சட்டென்று ஆரம்பித்து உணர்வதற்குள் முடிந்து போன நானி - சமந்தா காதல் , இது மாதிரி பேண்டசி படங்களுக்கு லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் " ஐ வில் கில் யு " என்றெல்லாம் எழுதிக் காட்டி வில்லனை ஈ மிரட்டுவது உட்பட நம் ஆறாம் அறிவை அதிகமாய் நோண்டிப் பார்க்கும் சில காட்சிகள் , சொத்துக்காக சுதீப் பார்ட்னரை கொல்லும் போது வீசும் தெலுங்கு வாடை போன்ற சில குறைகள் படத்தில் இருந்தாலும் ,
" கோஸ்ட் " படத்திலிருந்து கதையை தழுவியும் கூட அதில் ஈயை புகுத்தி அடுத்தடுத்து என்ன ஆகுமோ என்று நம்மை ஒன்ற வைத்த திரைக்கதை , யுனிவர்சல் தீம் உள்ள கதையை அருமையாக கையாண்ட விதம் , முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு , பின்னணி இசை , ஒளிப்பதிவு , க்ராபிக்ஸ் மற்றும் போரடிக்காமல் நம்மை கொண்டு செல்லும் பொழுதுபோக்கு அம்சங்கள் இவைகளெல்லாம் " நான் ஈ " யை நான் ஸ்டாப் பேன்ட்ஸீயாக பறக்க வைக்கின்றன ...
0 comments:
Post a Comment