மருத்துவத் துறையில் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ என்று சொல்லப்படும் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை இன்றைக்கு எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் அதைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் இந்தியாவில்... ஆனால், அந்த அற்புதம் இங்கேதான் நிகழ்ந்தது. இந்த அறுவைசிகிச்சையை அறிமுகப்படுத்தி, அதன் சூட்சுமத்தை அனைவருக்கும் பயிற்றுவித்தவர் சுஷ்ருதா. கங்கைக் கரை நகரான வாரணாசியில் வாழ்ந்தவர். வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. சுஷ்ருதா எழுதிய...