என் அலுவலகம் அருகில் அந்த நாலு திரையங்க காம்ப்ளெக்ஸ் இருப்பதால் நானும் நண்பர்களும் லட்டு தின்ன ஆசை அயிந்து லட்டு (டிக்கெட்) வேண்டுமென்று என் மகன் போன்செய்தான்.

இருபது வருடமாகப் பழக்கப்பட்ட அந்த நாலு தியேட்டர் மேலாளரை போனில் தொடர்புகொள்ள முயன்றேன் முடியவில்லை அங்கு வேலை செய்யும் நிறைய நண்பர்கள் பழக்கம் நேரில் ஆள் அனுப்பினேன் எல்லோரும் லட்டுக்குப் பதிலாக அல்வாதான் கொடுத்தார்கள்
இருந்தாலும் லட்டு திங்கும் ஆசை எனக்கு விடவில்லை காணும் பொங்கல் காணாத பொங்கல் எல்லாம் முடிந்து நேற்று மீண்டும் மால் மேலாளரைத் தொடர்பு கொண்டபோது ஒரு டிக்கெட் வேண்டுமெனில் தருகிறேன் என்று நள்ளிரவு காட்சிக்கு கொடுத்தார்

சரி..படத்தைப் பார்ப்போம்....
டைட்டிலில் நன்றி-மூலக்கதை இயக்குனர் பாக்கியராஜின் இன்று போய் நாளை வா அப்போது நிறைய தடவை பார்த்த ஞாபகம் ஒரு நிமிடம் அந்தப் படத்தை நினைத்துக்கொண்டேன்
லட்டுவில் காலத்துக்கு ஏற்றவாறு அறிமுகமே அதிரடி காமெடியில் துவங்குகிறது.அதிலும் பவரின் அறிமுகம் அமர்க்களம் தியேட்டர் கூச்சலில் வசனங்கள் காதில் சரியாக விழவில்லை

நிறையக் காட்சிகள் மூலக்கதையிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன இயக்குனர் மணிகண்டனின் திறமை வார்த்தைகளிலும் காட்சிகளிலும் தெரிகிறது.
சந்தானம் எல்லாப்படங்களிலும் நடிப்பது போல் நக்கல் சந்தானமாக இதிலும் அவருக்கே உரிய தனித்தன்மை- பவர் மேல் அவர் காட்டும் நக்கலும் பவரின் விக்கலும் அருமை
சேதுவின் நடிப்பு கதைக்கு ஏற்றபடி குறைவில்லாதது.விசாகாவின் வரவும் அப்படியே....கோவை சரளா போன்று இந்த லட்டுக்கு சுவைகூட்ட இன்னும் நிறைய இனிப்புப் பூந்திகள்,சிம்பு லட்டுவில் உள்ள முந்திரி!

ஆனால் தமிழ் திரையுலகுக்கு லட்டு ஓர் ஆரோக்கியமான வரவா?தமிழ் திரையுலகுக்கு அன்று இருந்த சொந்த சரக்கு இன்று இல்லையா?இப்படியே போனால் அடுத்து காதலிக்க நேரமில்லை படம்கூட வேறு வடிவில் வரும் வெற்றிநடை போடும் அதிலும் பவர் தலைகாட்டினால்..?
பவருக்கு ஏழரைச் சனி முடிந்துவிட்டது தமிழ் சினிமாவுக்கு ஏழரைச் சனி பிடித்துவிட்டதா...? எப்படியோ எல்லோரும் சிரிச்சா சரி...சினிமா சமுதாயத்தை கெடுக்காமல் இருந்தால் சரி...? கண்ணா லட்டு தின்ன ஆசையா-அந்தவகையில் இது அருமையான படம் வாழ்த்துவோம் இணிக்கும் இந்த லட்டுக்கு காரணமான அனைவரையும்....
0 comments:
Post a Comment