ஊட்டியில் ஃபாரஸ்ட் ஆஃபிஸர் விஷால். காட்டை பாதுகாத்து மரங்களோடு பேசிக்கொண்டிருந்ததால் காதலில் கோட்டைவிட காதலி சுனைனா கழட்டிவிட்டுவிட்டு பாங்காங் போய் விடுகிறார்.
3 மாதம் கழித்து ஒரு லெட்டர் அவரிடமிருந்து. விஷாலை மிஸ் பண்ணுவதாகவும், பாங்காக் வரச்சொல்லி ஒரு ப்ளைட் டிக்கெட்டும். அட்ரெஸ் இல்லை, போன் நம்பர் இல்லை. ஒரு இடத்தில் காத்திருக்க சொல்லி குறிப்பு மட்டும்.
விஷாலும் பாங்காக் கிளம்பி விடுகிறார். இதுவரை ப்ளைட்டிலேயே ஏறிடாத அவர், பாங்காக் போகும் சக பயணியான த்ரிஷாவிடம் உதவி கேட்க, அவரும் ஸ்கானிங், செக்கிங், கூடவே காபி என உதவி செய்ய, பக்கத்து சீட்டாய் வேறு அமைய, தன் காதலியைப் பற்றி த்ரிஷாவிடம் பேசியபடியே பாங்காக் போகிறார் விஷால். அங்கே அந்த இடத்தில் காத்திருக்க.. சுனைனா வரவில்லை. இரவுதான் வருகிறது. அங்கிருக்கும் ஒரு தமிழ் போலிஸ்காரர் சம்பத் விஷாலோடு சரக்கடித்து, இரவு தங்க இடமும் குடுக்கிறார்.
அடுத்த நாளும் விஷால் காத்திருக்க, சுனைனா வர வில்லை. ஆனால் வேறு ஒரு பிரச்சினை வருகிறது. ஒரு கும்பல் இவரைத் கொல்ல துரத்துகிறது. விஷால் ஓடத்துவங்குகிறார். அதன் பின் அடுத்த ஒரு மணி நேரம் நடக்கும் சம்பவங்கள் ஒரு அட்டகாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் சீக்வென்ஸ். பல அதிர்ச்சிகள், எதிர்பாரா திருப்பங்கள் என நம்மை நிமிர்ந்து நிற்க வைக்கிறது. ஊட்டி சக்தியான விஷாலை பாங்காக்கின் மிகப்பெரும் தொழிலதிபர் சக்தி என நினைத்து பல சம்பவங்கள் நடக்கின்றன.
அவரது உருவம் பெயர் மட்டுமில்லை கையெழுத்து கூட மேட்ச் ஆகிறது. எப்படி? என விஷால், த்ரிஷா கூடவே நாமும் குழம்பித் தவிக்கிறோம். வேண்டாம்டா சாமி என ஊரைப்பார்க்க கிளம்புகிறார் விஷால். ஆனால் ஏர்போர்ட்டில் த்ரிஷாவை சிலர் கடத்த முயல அங்கேயே தங்கி பிரச்சினையை நேரடியாய் சந்திக்க முடிவு செய்கிறார்.
அப்புறம் மறுபடி டிவிஸ்டுகள் என நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது கதை.
ஒரு பிரம்மாண்டமான காரணத்தை, அதன் தொடர்ச்சியான சம்பவங்களை நாம் எதிர்பார்க்க, அப்போதுதான் வருகிறார்கள் இரண்டு வில்லன்கள். இங்கிருநது தான் கதை திருஷ்டி பட்டதுபோல கந்தலாக ஆரம்பிக்கிறது.
லைஃப்ல போரடிக்கிற ரெண்டு மெகா பணக்கார வில்லன்கள் தெலுங்கு ஜே.டி.சக்கரவர்த்தியும், ஹிந்தி மனோஜ் பாஜ்பாயும். அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்களை பணக்காரர்களாக்கி, ஏழைகளாக்கி, பிரச்சினைகளை உருவாக்கி, சாகிறார்களா இல்லையா என பெட்கட்டி இருவரும் விளையாடுவார்களாம். அதற்காக ஒரு 11 பேர் கொண்ட குழு வைத்திருக்கிறார்களாம். அவர்கள் போடும் ட்ராமா தான் இதெல்லாமாம்.
ஒரு தடவை காதலில் தோற்ற விஷால் மறுபடி இன்னொரு அழகான தேவதை மாதிரி பொண்ணோட பழகி காதல்ல விழுந்து மறுபடி அந்த பொண்ணும் கழட்டி விட்டா அந்த பொண்ண விஷால் கொல்லுவாரா இல்லையான்னு பெட் கட்டி விளையாடுறாங்களாம். என ஆரம்பத்தில் ஒன்றரை மணி நேரமாய் ஸ்கோர் பண்ணிய எல்லா விசயங்களையும் கிட்டதட்ட வீணாக்கிவிட்டார்கள் என்பது தான் வருத்தமான விசயம்.
முதலில் விஷால்.. பஞ்ச் டயலாக்குகள் குறைந்து, உடல் முறுக்கேறி, சண்டைக்காட்சிகளில் மிரட்டி என நன்றாகவே உழைத்திருக்கிறார். ரொமான்டிக் பர்பார்மென்ஸ் தான் ஏனோ வரவில்லை. டல்லாகவே இருக்கிறார். த்ரிஷா பக்கத்துல இருந்தாலும்.
த்ரிஷா.. என்னா அழகு! காஸ்ட்யூம்களில் காட்டியிருக்கும் பர்பெக்சன், பர்பார்மென்ஸில் காட்டும் வேரியேசன் என புகுந்து விளையாடுகிறார். பத்துவருடத்திற்கு மேலாகிவிட்டது இவர் நடிக்க வந்து.. அழகும் இளமையும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஆச்சர்யம்.
அடுத்த ஹீரோ. ரிச்சர்ட் எம். நாதன். ஒளிப்பதிவாளர். காட்டிலாகட்டும், பாங்காங்கிலாகட்டும், பாடலாகட்டும், தெருவோர சண்டையாகட்டும். அட்டகாசமான ப்ரேமிங் & பிரம்மாண்டம்.
டைரக்டர் திரு திரைக்கதையில் பாதி கிணற்றை அட்டகாசமாய் தாண்டிவிட்டு மீதிப் பாதியில் தொபுக்கடீர் என விழுந்துவிடுகிறார்.
வில்லன்களின் எபிசோடை வேறு மாதிரி கையாண்டிருந்தால் ஒரு மிகத்தரமான பிரம்மாண்டமான சஸ்பென்ஸ் த்ரில்லராய் வந்திருக்கவேண்டிய படம். சப்பென சம்பந்தமில்லாமல் முடிந்துவிட்டது.
பெரும் பணக்காரர்கள் சைக்கோக்களாய் இருந்துட்டு போகட்டும் தப்பில்லை. அதற்காக என்னேரமும் கேணத்தனமாய் கெக்கே பிக்கே சிரிப்பும், வேறு வேலையே இல்லாமல் வீடியோ கேம் மாதிரி டிவி மானிட்டர்களையே பார்த்துக்கொண்டும் சகிக்கமுடியலை.
சூப்பராய் ஆரம்பித்து ரொம்ப சுமாராய் முடிகிறது சமர். இது ஓடினால் அது ஆரம்பத்தில் காட்டிய வித்தியாச திரைக்கதைக்கு ரசிகர்கள் குடுக்கும் மரியாதையாய் இருக்கும். ஓடாவிட்டால் அதற்கு படத்தின் வில்லன்களின் பாத்திரப்படைப்பும், கடைசி 30 நிமிடங்களும் தான் காரணமாய் இருக்கும். எளிதாய் 4 ஸ்டார்களை வாங்கியிருக்க வேண்டிய படம் மேற்கண்ட காரணங்களால் 3 ஸ்டாரை பெறுகிறது.
0 comments:
Post a Comment