Saturday, January 26, 2013

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்!

நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னைத் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .

இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர் ..

.கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனை துப்பறிய அனுப்புகிறார்மனைவி . அந்த துப்பறிவு நிபுணர் கமலை பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.

ஒருமுறை துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுற்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரியைப் படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் கமல் மனைவியின் முதலாளி பெயர் என அதில் இருக்கிறது..மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்திச் சென்று கொடுமை படுத்துகின்றனர் .

அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியைக் காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கைதாவில் பயிற்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .

கதை- இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிற்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவுப் படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .

கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .

அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணைக் கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதைச் சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பணியின் பொருட்டே கமல் அவரைக் கல்யாணம் செய்து இருப்பார் .

Chrysanth WebStory Published by WebStory

0 comments:

Post a Comment