Saturday, June 30, 2012

சிவன் என்பது ஆத்மா

'சிவன் என்பது ஆத்மா. ஆத்மாவை நீ உயி்ர் என்றும் கொள்ளலாம். நீ, உடம்பல்ல... உயிரும் கூட! உன் உயி்ர், எங்கே இருக்கிறது. இந்த, உடலின் நடுமையத்தி்ல் இருக்கிறது. உயிர் மட்டு்ம் இருந்தால் போதுமா? உயி்ர், இருப்பது எப்படித் தெரியும்?
உடல் இருந்தால்தன் தெரியும்.
உயி்ர் - ஆத்மா, சிவன் என்றால் உடம்பு சக்தி.
சக்தி என்பது என்ன? செயல்பாடு.
உயி்ர், எப்படிச் செயல்படும்?
உடம்பின் மூலம் செயல்படும்.
ஆக, செயல்படும் கருவியின் பெயர் சக்தி. செயல்படுவதற்குப் பெயர் சக்தி.
உயி்ர் இல்லாமல் உடம்பு செயல்படாது.
உடம்பு இல்லாமல் உயிரும் செயல்பட முடியாது.
சக்தி இல்லையேல் சிவமில்லை!
- 'உடையார்' நாவலி்ல், எழுத்தாளர் பாலகுமாரன்

திருச்சி அருகில் உள்ள திருச்சமாதிகள்!


திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூரில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில், ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில், ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் அமைந்துள்ளன.
எனவே இந்தத் திருத்தலம், நல்ல அதிர்வுகள் கொண்ட தலம் எனப் போற்றப்படுகிறது. அத்துடன் தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபிரம்மா, நம் தலையெழுத்தையே மாற்றி அருளக் காத்திருக்கிறார்!

Friday, June 29, 2012

ஏ.சி. ஒருகணம் யோசி!

''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.

பொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ் (Actino mycetes). அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.''

Thursday, June 28, 2012

முல்லைப் பூவின் மருத்துவ குணம் !!!!

முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

துபாயில் சுனாமி வந்தால் மிதக்கும் வகையில் கட்டப்படும் ஹோட்டல் ! இன்னும் ஆடம்பரத்தின் உச்சியில் துபாய் ...


சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக துபாயில் கடலுக்கு கீழே 30 அடி ஆழத்தில் பிரமாண்ட ‘டிஸ்க்’ ஓட்டலை துபாய் அரசு ரூ.660 கோடியில் அமைக்க உள்ளது. சுனாமி போன்ற ஆபத்துகள் வந்தால், கடலுக்கு கீழ் இருக்கும் ஓட்டல் டிஸ்க் போல சுழன்று, கடல் மட்டத்துக்கு மேல் வந்துவிடும். துபாய் அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ‘துபாய் வேர்ல்டு’. உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கலிபா’ கோபுரத்தை கட்டியது, பனை மரம் போன்ற ‘பாம் ஐலேண்ட்’ தீவை உருவாக்கியது, உலக மேப் போலவே கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி வருவது ஆகியவை இது செயல்படுத்திய பிரமாண்ட திட்டங்கள். கடலுக்கு அடியில் பிரமாண்ட ஓட்டல் அமைக்கவும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

நிதி நெருக்கடி காரணமாக ஒத்திப்போடப்பட்ட இந்த சூப்பர் பிளானை துபாய் வேர்ல்டு நிறுவனம் மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது. ‘வாட்டர் டிஸ்கஸ்’ என்பது ஓட்டலின் பெயர். மேலும் கீழுமாக இரு டிஸ்க்குகள் இருப்பது போல ஓட்டல் வடிவமைக்கப்படுகிறது. மேல் டிஸ்க், கடல் மட்டத்துக்கு மேல் சில அடி உயரத்தில் இருக்கும். கீழ் டிஸ்க், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 35 அடி ஆழத்தில் இருக்கும். ஓட்டலின் இரு டிஸ்க் பகுதிகளையும் இணைக்கும் மத்திய பகுதியில் மாடிப்படி இருக்கும். இரு டிஸ்க்குகளும் சுழலும் வகையில் அமைக்கப்படும்.

கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் போன்ற பகுதியில் 21 அறைகள் அமைக்கப்படுகின்றன. அறையில் சுகமாக ஓய்வெடுத்தபடியே, பவளப் பாறைகளின் அழகையும் மீன்கள் நீந்தி செல்வதையும் ரசிக்கலாம். கடலுக்கு அடியில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிரத்யேக விளக்குகள் அமைக்கப்படுகின்றன. விருப்பப்பட்டால் நீந்திவிட்டும் வரலாம். ‘அண்டர்ஸீ பார்’ வசதியும் உண்டு. சுனாமி வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஓட்டல் அமைக்கப்படும்.

சுனாமி வரும் சூழலில், கடலுக்கு அடியில் இருக்கும் டிஸ்க் ஓட்டல் சுழன்று கடலுக்கு மேல் பகுதியில் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி செய்யப்படும். கடலடி தரையில் டிரில்லிங் செய்து ராட்சத பில்லர்கள் அமைத்து மொத்த ஓட்டலும் நிறுவப்படும். போலந்து நாட்டின் ஜினியா நகரை சேர்ந்த ‘டீப் ஓஷன் டெக்னாலஜி’ என்ற நிறுவனம்தான் கட்டுமான டிசைனை உருவாக்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிக் இன்வெஸ்ட் கன்சல்ட் நிறுவனம் கடன் உதவி வழங்க, துபாய் வேர்ல்டின் துணை நிறுவனமான ட்ரைடாக்ஸ் வேர்ல்டு நிறுவனம் டிஸ்க் ஓட்டலை கட்டுகிறது. கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ‘வாட்டர் டிஸ்கஸ்’ ஓட்டல் கட்டப்படுகிறது. ரூ.300 கோடி செலவாகும் என்று முதலில் கூறப்பட்டது. ரூ.660 கோடி வரை ஆகலாம் என தெரிகிறது என்று துபாய் வேர்ல்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

லேப் டாப் ரூ.5,000..!

ஏ.சி.ஐ. இந்தியா, 5000 ரூபாய்க்கு லேப் டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த கம்யூட்டரை அலைடு கஃம்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் (ஆசியா) சந்தைப்படுத்தப் போகிறது...!

சந்தைப்படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரி பட்டேல் கூறும் போது,‘‘ விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சூப்பர் லேப் டாப் &ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம்’’ என்றார்.

இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..!

புகைப்படம்: தி ஹிந்து

பீட்ரூட் (Beetroot)

பீட்ரூட்யில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.

மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். ‌பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மலச்சிக்கலை நீக்கும்.

புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

முகப்பொலிவு கூடும்.

சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

Wednesday, June 27, 2012

பறவைகள் மற்றும் விலங்குகள் ஒன்றிணைந்ததாக உள்ளது கோடிக்கரை சரணாலயம் !!!

தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம் இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப் பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.

இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. ஆகவே இந்த உப்பேரியில் நிற்கும் தண்ணீர் கடல் நீர் அளவு உப்பாக இல்லை. இந்த ஏரி அதிக ஆழம் இல்லை. இந்த ஏரி நீரில் உள்ள மீன்கள் ஏராளம். இதோடு கடல் நீர் உயர் அலையின் போது நிலப்பகுதியில் ஏறி வரும். பிறகு வடியும். இப்படி வடியும் போது பள்ளப் பகுதியில் ஏறி வந்த நீர் கடலுக்குத் திரும்பிப் போகாது. பள்ளங்களில் அப்படியே தேங்கிவிடும். இப்படித் தேங்கும் நீரில் சிக்கிக் கொண்ட மீன்கள் கடலுக்குத் திரும்பிப் போக இயலாது தவித்து நிற்கும். இப்படித் தவித்து நிற்கும் மீன்கள் பறவைகளுக்கு நல்ல விருந்தாகும். ஆகவே தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் இந்த இடத்தை நீர்ப்பறவைகள் மிகுதியாக விரும்பி இங்கே வந்து குவிகின்றன. மரங்களில் கூடுகள் அமைத்துக் கொண்டு வாழுகின்றன.

ராஜஹம்சம் (ஹம்சம் - அன்னம்) மரங்களில் கூடுகட்டி வாழக் கூடியது அல்ல. அது பகல் இரவு எந்த நேரமும் தண்ணீரில் இருக்கக் கூடியது. தண்ணீரிலேயே தூங்கவும் கூடியது. இதன் பிரதான ஆகாரம் மீன். இதற்கு தங்குவதற்கான நீர் வசதியும் மீனும் இங்கே கிடைப்பதால் அவையும் இங்கே தேடி வருகின்றன. குஜராத்தில் கட்ச் பகுதியிலிருந்து அக்டோபரில் ராஜஹம்சங்கள் இங்கு வரத் தொடங்குகின்றன. நான்கு மாதங்கள் இங்கு வசிக்கின்றன. பிறகு ஜனவரி பிப்ரவரியில் திரும்பிப் போய் விடுகின்றன. நெடுந்தூரம் பறந்து செல்லும் சக்தியை இழந்த நிலையில் உள்ள அன்னங்கள் மட்டும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. வயோதிக நிலையில் இவை இருப்பதால் இங்கு அவை முட்டையிடுவதும் இல்லை, குஞ்சு பொரிப்பதும் இல்லை. வருடம் சுமார் 40 ஆயிரம் ராஜஹம்சங்கள் இங்கே வந்து போகின்றன.

நீர் வாத்துக்களும் இந்த இடத்தை விரும்பி வருகின்றன. வருடம் சுமார் இரண்டாயிரம் நீர் வாத்துக்கள் பருவ காலத்தில் இங்கு வந்து போகின்றன.

இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு !!!

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது

நன்றி
நண்பர்கள்

மஞ்சளின் மகிமை

பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா...

* காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது.

* கழுத்து, கணுக்கால், முட்டி... போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர, கருமை போயே போச்...

* முகப்பரு பிரச்னையா? காயாத மஞ்சள் கிழங்குடன் வேப்பிலையை அரைத்துப் பூசி, 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

* காயாத மஞ்சள் கிழங்கு ஒன்று, ஒரு எலுமிச்சை இலை - இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால், பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக் கொண்டால், அழகிய நிறத்தோடு கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

* முழு பாசிப்பயறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், கசகசா - தலா 10 கிராம், உலர்ந்த ரோஜா மொட்டு, பூலாங்கிழங்கு - தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை - மூன்றும் சேர்ந்து 2 கிராம் - இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் சிறிதளவு எடுத்துத் தயிரில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன்முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான்!

களவாணி ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!

ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முறை:

உங்கள் மொபைல் போனில் [PDS] இடைவெளி [மாவட்ட குறியீடு] இடைவெளி [கடை எண்] என டைப் செய்து 9789006492 என்ற எண்னுக்கோ அல்லது 9789005450 என்ற என்ணுக்கோ எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.
மாவட்ட இலக்கம், கடை இலக்கம் என்பவற்றை உங்கள் ரேஷன் கார்டில் இருந்து அறிந்துகொள்ள வழிமுறை படத்தில் உள்ளது.

என்ன… களவாணி ரேஷன் கடைக்காரனுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியா…!

Tuesday, June 26, 2012

மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது !!!


மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.

1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார்
கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.

(அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.

Monday, June 25, 2012

உலகத்தை அழிக்கக்கூடிய ஆபத்தான மெத்தேன் வாயுவை வெளியிடும் அதிசய விலங்கு கங்காரு !!!


உலகத்தில் பல விலங்குகள் உள்ளன . ஆனால் அதில் மிகவும் வினோதமாக ஒரு விலங்கு என்று பார்த்தால் கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது .கங்காருக்களில் 56 இனங்கள் இருக்கின்றதாம் .,பெரிய கங்காரு 90 கிலோ வரை எடையிருக்கும் வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும் .ஆபத்து காலத்தில் மணிக்கு 48 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.இரண்டு மீட்டர் உயரமும், 6 மீட்டர் நீளமும் ஒரே மூச்சில் தாண்டவல்லது. பிறக்கும் போது கங்காரு குட்டியின் நீளம் ஓர் அங்குலமே இருக்கும் என்றால் பார்த்திதுக்கொள்ளுங்கள்

பிரித்தானிய நாடோடிகள் முதன் முதலாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்தபோது ஆங்காங்கே ஒரு விசித்திர மிருகம் பல அடி உயரத்திற்கு துள்ளித் திரிவதைக் கண்டார்கள்.அவர்கள் இப்படி ஒரு மிருகத்தை முன்னர் அறியாததால் அதன் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றார்கள்.அங்குள்ள
ஆதிவாசிகளுடன்கேட்பதற்கு இவர்களுக்கு அவர்கள் பாஷை தெரியாததால் சைகையினால் அதன் பெயரென்னவென்று கேட்டார்கள். அவர்கள் அதற்கு ‘ Kan Ghu Ru’ என்று பதிலளித்தார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் ‘ kangaroo’ என்று இவர்கள் புரிந்து கொண்டார்கள். உண்மையில் அந்த ஆதி வாசிகள் ‘ நீங்கள் கேட்பது புரியவில்லை ‘ என்பதைத்தான் தங்கள் மொழியில் ‘ Kan Ghu Ru’ என்று சொன்னார்களாம் . அதுவே காலப்போக்கில் உலகம் முழுவதும் அந்த மிருகத்திற்கு . அதே பெயர் நிலைத்துவிட்டதாம் .

அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உலகத்தை அழிக்கக்கூடிய பல்வேறு சக்திகளில் ஒன்றான, ஆபத்தான மெத்தேன் வாயுவை கங்காருகள் வெளியிடுகிறது. வெளியாகும் அளவு குறைவு என்றாலும் ஆஸ்திரேலியாவில் நிறைய கங்காருகள் இருப்பதால் வாயுவின் வெளிப்பாடும் மொத்தமாகப் பார்த்தால் அதிகமாக இருக்கிறதாம்.

இப்போதைய நிலவரப்படி அங்குள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக மாறும் என ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். இந்த கங்காருகள் யாருக்கும் அடங்குவதில்லையாம். செடி, கொடிகளைப் பழாக்குதல், நீர் ஆதாரங்களை அழித்தல், சுற்றுச்சூழலை மாசுப்படுத்துதல் போன்ற எதிர்மறை செயல்களை செய்கின்றனவாம்.

கங்காரு ஆஸ்திரேலியா நாட்டுச் சின்னம் தான். அதற்காக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுவை அவை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்லவே! எனவே, சென்டிமென்டுக்கு இடம் தராதீர்கள். ஆரோக்கியதிற்கு முன்னுரிமை தாருங்கள்; கங்காருவைச் சாப்பிடுங்கள்! என்கின்றனர் ஆஸ்திரேலியர்கள் .இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு பெற்றுள்ளதாம் .

இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் !!!


மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.

பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!


சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். · வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.

இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. · இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். · மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

Sunday, June 24, 2012

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் !!!


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.
இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

ஊளைச் சதையை குறைக்க சில வழிகள் !!!


இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

ஊளைச்சதையை குறைக்க உடலில் உள்ள திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்து குறைய வேண்டும். ஊளைச் சதையைப்போக்க பல வழிகள் உண்டு, அந்த வழிகளீல் நல்ல வழி சாப்பாட்டின் அளவைக் குறைப்பதும், கீரைவகை உணவுகளை கூட்டியும் இறைச்சி வகைகளை குறைத்து உண்பதோடு உடற்பயிற்சி செய்தலுமாகும்.

உடற் பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு இவை தவிர எளிய பரிகாரங்கள் மூலம் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.

நன்றி
பெட்டகம்

Saturday, June 23, 2012

பார்த்து ரசிக்க வேண்டிய திருவனந்தபுரம் !!!

அரபிக்கடலோரம்... அந்த அரபிக்கடலை மேற்குப் பகுதியாகவும், தமிழ்நாட்டை கிழக்குப் பகுதியாகவும் கொண்ட நிலப்பகுதிதான் திருவனந்தபுரம். ஏழு சிறிய குன்றுகளின் மீது எழுந்து நிற்கும் அழகான நகரம். 1750ம் ஆண்டு வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் நாட்டின் விடுதலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகரமாக தொடருவது சிறப்பாகும்.

பொன்முடி:

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளுகுளு மலைப்பகுதிதான் பொன்முடி. நம்ம ஊர் ஊட்டி போல இங்கு எப்போதும் ஜிலுஜிலு குளுகுளு காற்றுதான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 915 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள பொன்முடி மலைப்பகுதியில் அரியவகை மலர்களையும், படபடத்துச் செல்லும் விதவிதமான வண்ணத்துப் பூச்சி ரகங்களையும் கண்டு களிக்கலாம். பச்சைப் பசேல் தேயிலைத்தோட்டங்களை தழுவிச் செல்லும் மேகக்கூட்டங்கள் நம் உடலை மட்டுமல்ல கண்களையும் குளுமையாக்கும். இங்கு சுமார் 3 கி.மீ தொலைவில் மான்பூங்கா ஒன்றும் உள்ளது.

பொன்முடியில் இருந்து சிறிது தொலைவில் அழகான அருவி ஒன்றும் விழுந்து கொண்டிருக்கிறது. இங்கு அகஸ்தியர் கோவில் ஒன்றும் உள்ளது. பவுர்ணமி நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

நெய்யாறு அணை:

அழகு சிந்தும் பிக்னிக் ஸ்பாட்டாக விளங்கும் நெய்யாறு அணை, திருவனந்தபுரத்தில் இருந்து சமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் கள்ளிக்காடு புலிகள் சரணாலயப் பகுதி மற்றும் தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலயப் பகுதியின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ளது. அணையில் படகு சவாரி உண்டு. முதலைப்பண்ணை ஒன்றும் இருக்கிறது.

கோவளம் பீச்:

இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச், திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அசைந்தாடும் தென்னை மரக்கூட்டங்கள், அழகான அரபிக்கடல் ஆகியவற்றை ரசித்துக் கொண்டு கடற்கரையில்... வெண்மணலில் கால்பதித்து நடைபோடுவதே தனிசுகம்தான். இதனாலேயே கோவளத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் சுற்றுலா பயணிகள் ஏராளம்.

சங்குமுகம் பீச்:

இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சங்குமுகம் பீச்சும் பிரபலம். இதன் அருகிலேயே திருவனந்தபுரம் விமானநிலையமும் அமைந்துள்ளது சிறப்பு. சங்குமுகம் பீச்சுக்கு சூரியன் மறையும் காட்சியை ரசிப்பதற்காகவே ஏராளமானோர் வருகின்றனர்.

வர்க்கலா பீச்:

திருவனந்தபுரத்தில் இருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது வர்க்கலா பீச். இங்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான ஜனார்த்தனசுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

இவற்றைப்போல கேரளாவின் 2வது பெரிய சிகரமான அகஸ்தியர் கூடம், ஆங்கிலேயர் தங்களது வாணிபத்துக்காக மலபார் பகுதியில் முதல் முறையாக கட்டிய அஞ்சுன்தெங்கு கோட்டை என பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல் நீளுகிறது.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து

உணவு வசதியைப் பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் அனைத்து வகை உணவு வகைகளும் கிடைக்கின்றன. தரமான நல்ல உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்துக்கு ரயில் வசதி உள்ளது. சர்வதேச விமான நிலையமும் இங்கு உள்ளது.

சகுனி திரைவிமர்சனம்


சகுனி திரை விமர்சனம் (5)ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...
காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.
சகுனி திரை விமர்சனம் (3)கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி.
சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை.
சகுனி திரை விமர்சனம் (8)ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை.
ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!
சகுனி திரை விமர்சனம் (1)வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது.
கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது.
முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.
வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.
இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

நன்றி: அக்னிபுத்திரா

Friday, June 22, 2012

சகுனி - விமர்சனம்




 
கார்த்தி-ன் இன்னொரு ஒன் மேன் ஷோ படம். கார்த்தி பெருசா நடிக்க ஆசைப்படாமல் கட்சிக்கு தேவையான ரியாக்ஷன்களை சரியா காட்டக்கூடிய நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். படத்தோட கதை, கார்த்தி
(கமலக்கண்ணன்) சந்தானத்திடம் (ரஜினி) கொஞ்சம் சீரியசான தனது பிளாஷ்பேக்கை கொஞ்சம் ஜாலியாக சொல்ல ஆரம்பிப்பதில் தொடங்குகிறது. இடையில சந்தானத்தின் மானே தேனே பொன்மானே என்கிற ரீதியிலான பன்ச் வசனமும் கூட கொஞ்சம் ஜாலியாவே போகுது. ஏற்கனவே எல்லார்க்கும் தெரிந்த "தூள்" படத்தோட கதைதான். அது என்னனா கிராமத்தில பாரம்பரியமிக்க தனது வீடு ரயில்வே நீட்டிப்பு காரணமாக இடிக்கப்பட போகிறது என்ற காரணத்திற்காக அதை தடுக்க ரயில்வே அமைச்சரை பார்த்து மனுக் கொடுக்க போகிறார். அவர் மனு கொடுத்த பத்தாவது நிமிடம் அமைச்சர் வீட்டுக்கு எதிரே இருந்த டீ கடையில் பஜ்ஜி மடிக்க வந்துவிடுகிறது. டீக்கடைகாரரின் பேச்சைக் கேட்டு அமைச்சருக்கு தெரிந்தவர் மூலம் மனுகொடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர்கள் எல்லோரும் கார்த்தியின் பணத்தை சரக்கடித்தே காலி செய்கிறார்கள். இதுதான் பிளாஷ்பேக் இதை ஆட்டோ டிரைவர் சந்தானத்திடம் சொல்லிக்கொண்டே வரும் கார்த்தி தனது பணத்தை காலி பண்ணுன டுபாக்கூரை ஒரு டாஸ்மாக் கடையில் பார்த்து அடிபின்னுகிறார். பின்பு அந்த அமைச்சரை பலி வாங்க போகிறார், கடைசியில் கதை இல்லாத தமிழ் சினிமாவில் கதைக்கு உதவிய தரணியின் தூள் படத்திற்கு நன்றி என்று போட்டு படத்தை முடிக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது தவறு கார்த்தி மத்திய அமைச்சருக்குப் பதிலாக தமிழக முதல்வருக்கு எதிராக அரசியலில் தனது சகுனி ஆட்டத்தை ஆடி அடுத்து வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்கட்சி தலைவரை ஆட்சியில் அமர வைக்கிறார். புது முதல்வர் பதவியேற்ற உடன் முதல் வேலையாக அந்த ரயில்வே நீட்டிப்பு காண்ட்ராக்டை ரத்து செய்கிறார். பின்பு கார்த்திக்கு டெல்லியில ரா__ல்ஜி இடமிருந்து அழைப்பு வர டெல்லி செல்கிறார். நன்றி வணக்கம்.


 
இந்த கேவலமான கதைக்கு திரைக்கதை அமைக்க மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள். ஐயோ என்ன விட்டுருங்க என்று இந்த பேஜை குளோஸ் பண்ணிராதீங்க. ஏன்னா நம்ப முடியாத கதையை நம்ப வைக்க நிறைய முயற்சி சம்பந்தமே இல்லனாலும் செய்திருக்கிறார்கள். அது இன்னானா, எப்பா முடியலட சாமி. இந்த படம் நிறைய பேருக்கு பாடம். மொக்க கதைக்கு எப்படி சுமாரான திரைக்கதை எழுதுவது, அப்படியும் படம் சரியா வரலைனா எப்படி ரீ-சூட் பண்ணுவது. அப்படியும் படம் தப்பிக்கிறது கஷ்டமுன்னு தோணுனா, எப்படி அதிக தியேட்டரில் ரிலீஸ் செய்து ஒப்பநின்க் கலக்ஷன் அள்ளுவது, அப்படியும் போட்ட காசை எடுப்பது கஷ்டமுன்னு தோணுனா வேந்தர் மூவீஸ் மாதிரியான பணத்தை பற்றி கவலைப்படாத கம்பனியிடம் படத்தை தள்ளி விடுவது என்று ஏகப்பட்ட ஐடியாவை படம் நமக்கு சொல்லித்தருகிறது. அதிலும் படத்தின் முக்கியமான அந்த கிளைமாக்ஸ் யாராலும் கணிக்க முடியாது, ஏன்னா ஏற்கனவே பல படங்களில் வந்த கிளைமாக்ஷை வைப்பார்கள் என்று யார்தான் எதிபார்பார்கள். திரைக்கதையில ராதிகா, நாசர் இருவரின் கேரக்டரும் நடிப்பும் நன்றாக கைகொடுத்திருக்கிறது. அதுதான் இந்த படத்த காமர்சியலா காப்பத்துதுன்னு தோணுது. கமர்சியலா வெற்றி பெற்ற படங்களில் முடிவு எதை நோக்கினு தெரியும் ஆனா அதை எப்படி செய்கிறார்கள் என்பதுதான் அந்த படத்தினுடைய வெற்றியை தீர்மானிக்கும். ஆனால் சகுனியை பொறுத்தவரை சும்மா காரைக்குடியில இருந்து சென்னைக்கு போனவன் அங்க அத்தை மகளை டாவடிச்சு முதலமைச்சரை பகைச்சு இட்லி வித்த வட்டிகடை ராதிகாவை கவுன்சிலர் ஆக்கி அப்படியே பாக்கிற நம்ம காதுல நமக்கே தெரியாம பூ சுத்தி ராதிகாவை மேயர் ஆக்கி, செயில்ல இருந்த எதிர் கட்சி காரரை முதலமச்சரக்குகிறார். பாடல்கள் கேட்க நல்லா இருந்தது ஆனால் படத்துல ஏன்டா பாட்டு வருதுன்னு தோன வச்சுட்டாங்க, முடியலடா சாமி. எல்லோரும் தியேட்டரில் போய் பாருங்க. அடுத்த வருஷம் கங்கையில குளிச்சு உங்களை பாக்க சொன்ன பாவத்தை கழிவிட்றேன்.

பன்றியை உண்ணத் தடை

இவ்வசனங்களில் பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.

இதற்கான காரணத்தை திருக் குர்ஆனோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ கூறவில்லை. மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள் வதாலும் தான் பன்றி தடை செய்யப் பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை.

இது தான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். சாக்கடை யில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப் படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப் பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ப தற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும் போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.

100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.
சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.

மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும் போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.

ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.

இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும் போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது. பன்றியின் இறைச்சியில் மனித னுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.

இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இக்குறிப்புக்கான வசனங்கள்: 2:173, 5:3, 6:145, 16:11

--Thanks to brother மேலப்பாளையம் ஹுசைன்

பார்பவர்கள் உள்ளம் குளிரும் ஓர் அழகிய இடம் மேகமலை !



வர்த்தகமயமாகாதலால் சீர்கெடாத மலைப் பகுதி. காஃபி தோட்டங்களும் நடுவில் ஓடும் அழகிய நதியும் மேகமலை பகுதியே சிறப்பித்து காட்டுகிறது

மேகமலை ஏரிப்பகுதி

மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைமற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது. மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.

தனியார் நிறுவன உடமை

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும, இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத் தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.

நீர்மின்சக்தி திட்டம்

இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் பேரூராட்சி அமைப்பில் ஊர் ஒன்று உள்ளது. இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது. இம்மலைப்பகுதியில் வெண்ணியார், இரவங்கலார், மகராஜாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் "சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம்" அமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் வசதி!

சிறிய, பெரிய “ரிசார்ட்டுகள்’ உண்டு. தங்குவதற்கு சில ஆயிரம் செலவாகும். இருந்தாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு.தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை.
சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம்.சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.

மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.

வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.

“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’

வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி.

இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். முடிந்தவரை வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் சென்றால், இடங்களின் சிறப்பு பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.

எப்படி செல்ல வேண்டும் :

பஸ்ஸில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பஸ் வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.

மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.

பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

· நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

Thursday, June 21, 2012

குழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கு

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

Ferrari Ki Sawaari-ஹிந்தி சினிமா, பாக்க வேண்டியப்படம்


நடிகர்கள்: சர்மான் ஜோஷி, பொமன் இரானி, ரித்விக், வித்யா பாலன்(ஒரு பாட்டுக்கு)
இயக்கம்: ராஜேஷ் மபுஸ்கர்
இசை: பிரிதம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம பிரகாஷ்ராஜ் இயக்கி, நடிச்சு, தயாரிச்சு வந்த டோனி படத்தோட சாயல்தான் பெர்ராரி கி சவாரி. அதே கிரிக்கெட், அதே அப்பா & பிள்ளை பாசம், ஆனாலும் கொஞ்சமல்ல நிறைய வித்தியாசத்தோட வந்துருக்க ரொம்ப நல்ல படம்.

சரி பெர்ராரி கி சவாரியில என்ன சொல்லியிருக்காங்கன்னு பாப்போம்.
முக்கியமான கதாநாயர்களாக….சர்மான் ஜோஷி, இவர் நம்ம நண்பனில் ஜீவா நடிச்சாரே அந்த கேரக்டருல ஹிந்தி 3 இடியட்ஸ் படத்துல நடிச்சவரு. அருமையான நடிப்பு………3 இடியட்ஸுல விளையாட்டு பையனா நடிச்சவரு…..இந்த படத்துல ஒரு நேர்மையான, பொறுப்புள்ள….. இன்னும்….. நாம ஒரு நல்லவனை பாத்தா சரியான கேனையண்டான்னு சொல்லுவோமே அது மாதிரியான கேரக்டருல வாழ்ந்துருக்கார்.

பொமன் இரானி……சர்மான் ஜோஷியோட அப்பா. இவருக்கு ஏத்த மாதிரி வித்தியாசமான கேரக்டரா கிடைக்குதா இல்லை. அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி இவரு மாறிக்கிறாரா? எப்படியிருந்தாலும்…………இவர் இந்திய சினிமாவின் மாணிக்கம்.

மாஸ்டர் ரித்விக்………..இந்த காலத்து பசங்க எல்லாமே ரொம்ப திறமைசாலியான பசங்கதான்…அந்த பசங்க என்ன கத்துக்கிறாங்க இல்லை நாம என்ன சொல்லி குடுக்கறோம் என்பதை விட…………….நாம அவங்க முன்னாடி எப்படி நடந்துக்குறோம் அப்படிங்கரதுதான் ரொம்ப முக்கியம். நடிப்பு……சுறுசுறுப்புன்னு எல்லா வகையிலயும் சூப்பர் பாய்……..ரொம்ப நேர்மையானவர் தன் அப்பான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது தன் அப்பாவும் தனக்காக தன் கிட்டயே பொய் சொல்லிட்டாரேன்னு நினைச்சு கலங்கும் இடம், பின்ன அதை புரிஞ்சுக்கரதுன்னு கலக்கல்….…ஜோஷி சொல்றது மாதிரி………..பையன் பெரிய ஆளுதான்.

விது வினோத் சோப்ரா, படத்தோட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுதுறதுல கொஞ்சம் உதவியிருக்கார். இவர் சினிமாவுல ஒரு பல துறை மன்னன். இவர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே மிக சிறந்த படங்கள்தான். உதாரணமா லேட்டஸ்டா வந்த 3 இடியட்ஸ்.
ராஜேஷ் மபுஸ்கர், இவருதான் படத்தோட இயக்குநர். 3 இடியட்ஸ் படத்தோட அஸோசியேட் இயக்குநர். இவர் ஒரு திரைக்கதை மன்னன். இவோரட திரைக்கதையில வந்த படங்கள் எல்லாமே பேர் சொல்லும் படங்கள்தான்.

இசை, படத்தோட போக்குல இயல்பா வரவேண்டியதுதான் இந்த படத்துக்கான தேவை. அதை ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கிட்டு தந்துருக்கார். அதும் அந்த கிரிக்கெட் மேட்சின் பரபரப்பான நிமிடங்களில், ஜோஷி தன் அப்பாவோட பிளாஷ் பேக் சொல்லும் இடத்துல, பொமன் இரானிக்கு கோபம் வரும் இடங்களில்……..நல்லாவே ஸ்கோர் பன்னிருக்கார். வித்யாபாலன் வர குத்து பாட்டு மாலா ஜாவுதே………….நல்லக் குத்து.

கதை, சர்மான் ஜோஷி(அப்பா), ரித்விக்(பையன்), பொமன் இரானி(தாத்தா) எனும் மூன்று பேர் மட்டுமே உள்ள ஒரு சாதாரன மிடில் கிளாஸ் குடும்பம். ஜோஷி ஒரு ஆர்டிஓ ஆபிஸ் கிளார்க், நேர்மையின் சிகரம்தான் ஜோஷி. ஸ்கூட்டருல போகும் போது….சாலை விதிகளை ரொம்ப சரியா கடைப்பிடிக்கரது, தெரியாம சிக்னல கிராஸ் பன்னிட்டதுக்காக….டிராபிக் கான்ஸ்டபில தேடி போயி பைன் கட்டுரதுன்னு, என்ன ஆளுங்க…..சூப்பரா நடிச்சுருக்காரு.

அப்பாதானே பிள்ளைங்களோட ரோல் மாடல்…..அப்பாவோட நேர்மைய பாத்து வளரும் பையனும் ஒரு நேர்மையாளனாகத்தானே இருக்க முடியும். கிரிக்கெட்டுல அவன் பிடிச்ச கேட்சை அம்பயரே சரியா பாக்காம அவுட் கொடுத்தாலும்…இல்ல சார்…நான் கேட்சை சரியா பிடிக்கலைன்னு சொல்லி திருத்துர அளவுக்கு நல்ல பையன்.

ஜோஷியோட பையனுக்கு கிரிகெட்டுன்னா உயிர். பையனோட சந்தோஷமே ஜோஷியோட சந்தோஷம். ஜோஷியோட அப்பா பொமன் ஒரு முன்னாள் கிரிக்கெட்டர்…….தன்னோட சின்ன வயசுலயே……..தன் நண்பன் செய்த துரோகத்தால் இந்திய அனிக்கு விளையாடும் வாய்ப்பை இழந்துட்டு வலிகளோடு வாழும் மனிதர்.

தன் தாத்தாவோட வலியை அறியாதவரைக்கும் அவர கண்டாலே காண்டாகும் ரித்வி……அவரோட கதைய தன் அப்பா மூலமா தெரிஞ்சுக்கிட்ட பின்ன காட்டும் அன்பு அலாதிதான்.

மகன் கிரிக்கெட் விளையாட பேட் இல்லாததுனால……..காலையில கடை தொறக்கரதுக்கு முன்ன போயி காத்திருந்து தன்னோட மகன் விருப்ப பட்ட பேட்டை வாங்கி வந்து கொடுக்கும் அப்பாவும், அந்த பேட்டுக்காக காத்திருந்து… அப்பா வந்ததும் அப்பா மேல கோபம் படாம..பேட்டை வாங்கி மாரோ மாரோன்னு பந்தை அடிச்சு ஸ்கோர் பன்னும் பையனும் சூப்பர்.

இப்படி கிரிக்கெட்டையே உயிரா நினக்கும் ரித்விக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்துக்கு போயி கோச்சிங் எடுத்துக்கிட்டு விளையாடும் வாய்ப்பு கிடைக்குது. அந்த கோச்சிங் எடுத்துக்கிட்டா………எதிர்காலத்துல இந்திய டீமுலயே ஈசியா சேர முடியுமுன்னு ரித்வி கோச்சு தூபம் போட, அந்த கோச்சிங்குக்கு ரித்விய அனுப்ப ரித்வியோட அப்பா ஜோஷி முடிவு பன்றார்.

லண்டன் பயனத்துக்கு தேவை பணம். நல்ல பேட் வாங்கவே தாளம் போடும் ஜோஷிக்கிட்ட அவ்வளவு பணம் இல்லாத்துனால….பேங்குல லோன் கேக்கரார். படிக்கவே லோன் தர மாட்டானுங்க……….விளையாடவா கொடுத்துடுவானுங்க. பணத்துக்கு என்ன பன்றதுன்னு தெரியாம தவிக்கும் போதுதான்.

ஒரு அலப்பரை அரசியல்வியாதி தன்னோட லூசு பையன் கல்யானத்துக்கு ஊர்வலம் போக பெர்ராரி காருதான் வேனுமுன்னு மேரேஜ் அரேஞ்ஜர் முன்னாடி ஒத்த காலுல நிக்கான்,. புரோக்கரும் பெர்ராரி கார் யாருக்கிட்ட இருக்குன்னு ஆர்டிஓ ஆபிசுல விசாரிக்க, அது இந்தியாவுலயே கிரிக்கெட் பிளேயர் சச்சினுக்கிட்ட மட்டும்தான் இருக்குன்னு தெரியவருது.
விஷயத்தை தெரிஞ்சுக்கிட்ட புரோக்கர்……, ஜோஷிக்கிட்ட ஒரு டீல் போடுறாங்க…..என்ன? பெர்ராரிய ஒரு நாளைக்கு அரேஞ்ஜ் பன்னி குடுத்தா..ஜோஷியோட லண்டன் பயணத்துக்கு ஆகும் ஒன்றரை லட்சம் பணம் தருவதாக..

ஜோஷி முதல பயந்தாலும், தன் அப்பா ஒரு முன்னாள் கிரிக்கெட்டருன்னு சச்சினுட்ட சொன்னாக்க பெர்ராரி கார் கிடைக்குமுன்னு நினைச்சு…..சச்சின் வீட்டுக்கு போக, வீட்டுல சச்சின் இல்லை ஆனால், எதிர்பாராத விதமா காரோட சாவி ஜோஷி கையில கிடைக்குது. தன்னோட மனசாட்சி தடுத்தாலும்….புரோக்கரோட வற்புறுத்தலுக்கும்……..தன் பையனோட எதிர்காலத்தையும் மனசுல வச்சு பெர்ராரி காரை ஓட்டிக்கினு வந்தரார். கல்யான ஊர்வலம் முடிஞ்சு ஜோஷிக்கு பணமும் கிடைச்சுடுது.

ஆனால்……ஜோஷி காரை திரும்ப கொண்டு போயி விட போகுமோது சச்சின் ஊருக்கு திரும்பி வரதுனால…..சச்சின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு வந்துடுது, பயந்து போன ஜோஷி காரை ரோட்டுலயே பார்க் பன்னிட்டு வந்துட, ராங்கா பார்க் பன்னியிருந்த காரை டிராபிக் போலிஸ் தள்ளிக்கிட்டு போக…….ஜோஷியோட பணமும் அந்த காரோடயே போயிடுது. ஜோஷியோட கலக்கத்தை பாக்கும் நம்ம கண்களும் கூட கலங்கித்தான் போகுது.

கலங்கி போன ஜோஷி தன் அப்பா பொமன் இரானிக்கிட்ட சொல்லி அழுவ, பொமன் செம காண்டாகி……..சின்ன பையல் கிரிக்கெட் விளையாட நாம் ஜெயிலுக்கு போகனுமான்னு கேக்க? ஜோஷி தன் பையனுக்காக அதுக்கும் ரெடிங்கரார்.

அப்படி என்ன நல்லா விளையாடுரான்னு…….தாத்தா பால் போட அதை ரித்வி விளாசி தள்ள…..பேரனோட கிரிக்கெட் திறமைய பாத்த தாத்தா பொமன் இரானியும் பேரனை லண்டன் அனுப்ப வேண்டி களத்துல இறங்கி பெர்ராரிய தூக்க………..நிலவரம் கலவரமாகி………..அவங்களும் கலங்கி……..நம்மலயும் கலங்கடிச்சுட்டாங்க…………

ரித்வி எப்படி லண்டன் லார்ட்ஸுக்கு போயி மாரோ மாரோன்னு விளாசினாரு……….. அப்படிங்கரத…………..படத்தை பாத்து அனுபவிங்கப்பா…..செம படம். பாக்க வேண்டிய படம்…….நேர்மையாவே வாழ்றவங்களுக்குத்தான் தெரியும் தங்களை நம்புறவங்கக்கிட்ட சின்ன பொய் சொல்றது கூட எவ்வளவு கஷ்டமுன்னு. இந்த படம் வெறும் கிரிக்கெட்ட மட்டும் சொல்லலை………அதுக்கும் மேல நாம எப்படி வாழனுமுன்னும் சொல்லுது.

Wednesday, June 20, 2012

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் !!! (பாண்டிச்சேரி)


இந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி.600ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ
பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத்தகுந்தவை.

புதுச்சேரியின் அமைதியான கடற்கரை ரோட்டில் நடந்து சென்று கடல் அழகை ரசிப்பதும், அமைதியை அனுபவிப்பதும் புதிய அனுபவம்தான். வார இறுதி நாட்களில் புதுச்சேரி கடற்கரை ரோட்டில் மக்கள் தலைகளாகத்தான் தென்படும்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு, தங்குமிடங்களைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஒரு பிரச்னையே அல்ல. தரமான உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் புதுச்சேரி உள்ளது. அருமையான சாலை வசதி இருக்கிறது. விமான நிலையத்தை பொறுத்த வரை சென்னைதான் அருகில் உள்ள விமானநிலையம் ஆகும்.

குருமார்கள் சீடர்களைத் தேடலாமா?

போதி தர்மர், இந்தியாவிலிருந்து இமயமலையைக் கடந்து சீனாவுக்குப் போனார். சீடர்களை பிடிக்கவோ புத்த மதத்தைப் பரப்பவோ அல்ல. ஒன்பது வருடங்களாக அவர், மக்களுக்கு முதுகு காட்டி, சுவரையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் என்கிறார்கள். வருகிறவர்களுக்கு எல்லாம் அவரின் முதுகுதான் தெரிந்தது!
மக்கள், “ஏன் இப்படி சுவரைப் பார்த்தபடியே இருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, “நான் பார்த்த மனிதர்களது முகங்கள் அனைத்தும் சுவர் போல உயிர்ப்பு அற்றதாகவே உள்ளன. என்னிலிருந்து வெடித்துக் கிளம்பும் ஞானத்தை வரவேற்கும் உயிர்ப்புள்ள முகங்களே இல்லை. சுவர் போன்ற அந்த முகங்களைவிட சுவரே மேலானது என்று காத்திருக்கிறேன்...” என்றாராம்.
ஹீய்நிங் என்கிற ஒருவர் வந்து தம் கைகளை வெட்டி, போதி தர்மரிடம் கொடுத்துவிட்டு, “நீங்கள் திரும்பாவிட்டால் என் தலையை நானே வெட்டிக்கொள்வேன்” என்றதும் திரும்பினாராம். ஹீய்நிங்கின் கண்களை ஊடுருவி நோக்கினார், போதி தர்மர். “நான் இமயமலை தாண்டியது இவனுக்காகவே” என்றார். (இப்படியொரு சீடர்- இப்படியொரு குரு)
- சுகி.சிவம் (24.2.2009 சக்தி விகடன் இதழில்)