Tuesday, June 12, 2012

பரளிக்காடு அழகானதொரு சுற்றுலா தலம் !!!

பரளிகாடு மிகவும் ரம்மியமான இயற்கையான eco -friendly ஸ்பாட் .பரளிக்காட்டின் மிக முக்கியமான நிகழ்வு பரிசல் சவாரி தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பில்லூர் அணைப்பகுதியில் அடர்ந்த காட்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.அதில் ஒன்று தான் பரளிக்காடு . இது பில்லூர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம்புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது.

சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.


கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.

பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300

15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200

10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.

பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : வன அதிகாரி திரு. சீனிவாசன் : மற்றும் வன அதிகாரி திரு. திரு.ஆண்டவர் தொலைபேசி எண் : +91 9047051011

இவர்களிடம் தான் 10 நாட்களுக்கு முன்பாகவே (முடிந்தவரை சனிக்கிழமை அல்லது சண்டே-பயணம் போகும் படியான திட்டமிட்டு)-முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்

பதிவு - முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி - அடிப்படையில்*

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

0 comments:

Post a Comment