நடிகர்கள்: சர்மான்
ஜோஷி, பொமன் இரானி, ரித்விக், வித்யா பாலன்(ஒரு பாட்டுக்கு)
இயக்கம்: ராஜேஷ்
மபுஸ்கர்
இசை: பிரிதம்.
கொஞ்ச நாளைக்கு
முன்னாடி நம்ம பிரகாஷ்ராஜ் இயக்கி, நடிச்சு, தயாரிச்சு வந்த டோனி படத்தோட சாயல்தான்
பெர்ராரி கி சவாரி. அதே கிரிக்கெட், அதே அப்பா & பிள்ளை பாசம், ஆனாலும் கொஞ்சமல்ல
நிறைய வித்தியாசத்தோட வந்துருக்க ரொம்ப நல்ல படம்.
சரி பெர்ராரி கி
சவாரியில என்ன சொல்லியிருக்காங்கன்னு பாப்போம்.
முக்கியமான கதாநாயர்களாக….சர்மான்
ஜோஷி, இவர் நம்ம நண்பனில் ஜீவா நடிச்சாரே அந்த கேரக்டருல ஹிந்தி 3 இடியட்ஸ் படத்துல
நடிச்சவரு. அருமையான நடிப்பு………3 இடியட்ஸுல விளையாட்டு பையனா நடிச்சவரு…..இந்த படத்துல
ஒரு நேர்மையான, பொறுப்புள்ள….. இன்னும்….. நாம ஒரு நல்லவனை பாத்தா சரியான கேனையண்டான்னு
சொல்லுவோமே அது மாதிரியான கேரக்டருல வாழ்ந்துருக்கார்.
பொமன் இரானி……சர்மான்
ஜோஷியோட அப்பா. இவருக்கு ஏத்த மாதிரி வித்தியாசமான கேரக்டரா கிடைக்குதா இல்லை. அந்த
கேரக்டருக்கு ஏத்த மாதிரி இவரு மாறிக்கிறாரா? எப்படியிருந்தாலும்…………இவர் இந்திய சினிமாவின்
மாணிக்கம்.
மாஸ்டர் ரித்விக்………..இந்த
காலத்து பசங்க எல்லாமே ரொம்ப திறமைசாலியான பசங்கதான்…அந்த பசங்க என்ன கத்துக்கிறாங்க
இல்லை நாம என்ன சொல்லி குடுக்கறோம் என்பதை விட…………….நாம அவங்க முன்னாடி எப்படி நடந்துக்குறோம்
அப்படிங்கரதுதான் ரொம்ப முக்கியம். நடிப்பு……சுறுசுறுப்புன்னு எல்லா வகையிலயும் சூப்பர்
பாய்……..ரொம்ப நேர்மையானவர் தன் அப்பான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது தன் அப்பாவும்
தனக்காக தன் கிட்டயே பொய் சொல்லிட்டாரேன்னு நினைச்சு கலங்கும் இடம், பின்ன அதை புரிஞ்சுக்கரதுன்னு
கலக்கல்….…ஜோஷி சொல்றது மாதிரி………..பையன் பெரிய ஆளுதான்.
விது வினோத் சோப்ரா,
படத்தோட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுதுறதுல கொஞ்சம் உதவியிருக்கார். இவர் சினிமாவுல
ஒரு பல துறை மன்னன். இவர் சம்பந்தப்பட்ட படங்கள் எல்லாமே மிக சிறந்த படங்கள்தான். உதாரணமா
லேட்டஸ்டா வந்த 3 இடியட்ஸ்.
ராஜேஷ் மபுஸ்கர்,
இவருதான் படத்தோட இயக்குநர். 3 இடியட்ஸ் படத்தோட அஸோசியேட் இயக்குநர். இவர் ஒரு திரைக்கதை
மன்னன். இவோரட திரைக்கதையில வந்த படங்கள் எல்லாமே பேர் சொல்லும் படங்கள்தான்.
இசை, படத்தோட போக்குல
இயல்பா வரவேண்டியதுதான் இந்த படத்துக்கான தேவை. அதை ரொம்ப தெளிவா தெரிஞ்சுக்கிட்டு
தந்துருக்கார். அதும் அந்த கிரிக்கெட் மேட்சின் பரபரப்பான நிமிடங்களில், ஜோஷி தன் அப்பாவோட
பிளாஷ் பேக் சொல்லும் இடத்துல, பொமன் இரானிக்கு கோபம் வரும் இடங்களில்……..நல்லாவே ஸ்கோர்
பன்னிருக்கார். வித்யாபாலன் வர குத்து பாட்டு மாலா ஜாவுதே………….நல்லக் குத்து.
கதை, சர்மான் ஜோஷி(அப்பா),
ரித்விக்(பையன்), பொமன் இரானி(தாத்தா) எனும் மூன்று பேர் மட்டுமே உள்ள ஒரு சாதாரன மிடில்
கிளாஸ் குடும்பம். ஜோஷி ஒரு ஆர்டிஓ ஆபிஸ் கிளார்க், நேர்மையின் சிகரம்தான் ஜோஷி. ஸ்கூட்டருல
போகும் போது….சாலை விதிகளை ரொம்ப சரியா கடைப்பிடிக்கரது, தெரியாம சிக்னல கிராஸ் பன்னிட்டதுக்காக….டிராபிக்
கான்ஸ்டபில தேடி போயி பைன் கட்டுரதுன்னு, என்ன ஆளுங்க…..சூப்பரா நடிச்சுருக்காரு.
அப்பாதானே பிள்ளைங்களோட
ரோல் மாடல்…..அப்பாவோட நேர்மைய பாத்து வளரும் பையனும் ஒரு நேர்மையாளனாகத்தானே இருக்க
முடியும். கிரிக்கெட்டுல அவன் பிடிச்ச கேட்சை அம்பயரே சரியா பாக்காம அவுட் கொடுத்தாலும்…இல்ல
சார்…நான் கேட்சை சரியா பிடிக்கலைன்னு சொல்லி திருத்துர அளவுக்கு நல்ல பையன்.
ஜோஷியோட பையனுக்கு
கிரிகெட்டுன்னா உயிர். பையனோட சந்தோஷமே ஜோஷியோட சந்தோஷம். ஜோஷியோட அப்பா பொமன் ஒரு
முன்னாள் கிரிக்கெட்டர்…….தன்னோட சின்ன வயசுலயே……..தன் நண்பன் செய்த துரோகத்தால் இந்திய
அனிக்கு விளையாடும் வாய்ப்பை இழந்துட்டு வலிகளோடு வாழும் மனிதர்.
தன் தாத்தாவோட
வலியை அறியாதவரைக்கும் அவர கண்டாலே காண்டாகும் ரித்வி……அவரோட கதைய தன் அப்பா மூலமா
தெரிஞ்சுக்கிட்ட பின்ன காட்டும் அன்பு அலாதிதான்.
மகன் கிரிக்கெட்
விளையாட பேட் இல்லாததுனால……..காலையில கடை தொறக்கரதுக்கு முன்ன போயி காத்திருந்து தன்னோட
மகன் விருப்ப பட்ட பேட்டை வாங்கி வந்து கொடுக்கும் அப்பாவும், அந்த பேட்டுக்காக காத்திருந்து…
அப்பா வந்ததும் அப்பா மேல கோபம் படாம..பேட்டை வாங்கி மாரோ மாரோன்னு பந்தை அடிச்சு ஸ்கோர்
பன்னும் பையனும் சூப்பர்.
இப்படி
கிரிக்கெட்டையே உயிரா நினக்கும் ரித்விக்கு
லண்டன் லார்ட்ஸ் மைதானத்துக்கு போயி கோச்சிங் எடுத்துக்கிட்டு
விளையாடும் வாய்ப்பு கிடைக்குது. அந்த கோச்சிங் எடுத்துக்கிட்டா………எதிர்காலத்துல இந்திய டீமுலயே ஈசியா
சேர முடியுமுன்னு ரித்வி கோச்சு தூபம்
போட, அந்த கோச்சிங்குக்கு ரித்விய
அனுப்ப ரித்வியோட அப்பா ஜோஷி முடிவு
பன்றார்.
லண்டன் பயனத்துக்கு
தேவை பணம். நல்ல பேட் வாங்கவே தாளம் போடும் ஜோஷிக்கிட்ட அவ்வளவு பணம் இல்லாத்துனால….பேங்குல
லோன் கேக்கரார். படிக்கவே லோன் தர மாட்டானுங்க……….விளையாடவா கொடுத்துடுவானுங்க. பணத்துக்கு
என்ன பன்றதுன்னு தெரியாம தவிக்கும் போதுதான்.
ஒரு அலப்பரை அரசியல்வியாதி
தன்னோட லூசு பையன் கல்யானத்துக்கு ஊர்வலம் போக பெர்ராரி காருதான் வேனுமுன்னு மேரேஜ்
அரேஞ்ஜர் முன்னாடி ஒத்த காலுல நிக்கான்,. புரோக்கரும் பெர்ராரி கார் யாருக்கிட்ட இருக்குன்னு
ஆர்டிஓ ஆபிசுல விசாரிக்க, அது இந்தியாவுலயே கிரிக்கெட் பிளேயர் சச்சினுக்கிட்ட மட்டும்தான்
இருக்குன்னு தெரியவருது.
விஷயத்தை தெரிஞ்சுக்கிட்ட
புரோக்கர்……, ஜோஷிக்கிட்ட ஒரு டீல் போடுறாங்க…..என்ன? பெர்ராரிய ஒரு நாளைக்கு அரேஞ்ஜ்
பன்னி குடுத்தா..ஜோஷியோட லண்டன் பயணத்துக்கு ஆகும் ஒன்றரை லட்சம் பணம் தருவதாக..
ஜோஷி முதல பயந்தாலும்,
தன் அப்பா ஒரு முன்னாள் கிரிக்கெட்டருன்னு சச்சினுட்ட சொன்னாக்க பெர்ராரி கார் கிடைக்குமுன்னு
நினைச்சு…..சச்சின் வீட்டுக்கு போக, வீட்டுல சச்சின் இல்லை ஆனால், எதிர்பாராத விதமா
காரோட சாவி ஜோஷி கையில கிடைக்குது. தன்னோட மனசாட்சி தடுத்தாலும்….புரோக்கரோட வற்புறுத்தலுக்கும்……..தன்
பையனோட எதிர்காலத்தையும் மனசுல வச்சு பெர்ராரி காரை ஓட்டிக்கினு வந்தரார். கல்யான ஊர்வலம்
முடிஞ்சு ஜோஷிக்கு பணமும் கிடைச்சுடுது.
ஆனால்……ஜோஷி காரை
திரும்ப கொண்டு போயி விட போகுமோது சச்சின் ஊருக்கு திரும்பி வரதுனால…..சச்சின் வீட்டுக்கு
போலீஸ் பாதுகாப்புக்கு வந்துடுது, பயந்து போன ஜோஷி காரை ரோட்டுலயே பார்க் பன்னிட்டு
வந்துட, ராங்கா பார்க் பன்னியிருந்த காரை டிராபிக் போலிஸ் தள்ளிக்கிட்டு போக…….ஜோஷியோட
பணமும் அந்த காரோடயே போயிடுது. ஜோஷியோட கலக்கத்தை பாக்கும் நம்ம கண்களும் கூட கலங்கித்தான்
போகுது.
கலங்கி போன ஜோஷி
தன் அப்பா பொமன் இரானிக்கிட்ட சொல்லி அழுவ, பொமன் செம காண்டாகி……..சின்ன பையல் கிரிக்கெட்
விளையாட நாம் ஜெயிலுக்கு போகனுமான்னு கேக்க? ஜோஷி தன் பையனுக்காக அதுக்கும் ரெடிங்கரார்.
அப்படி என்ன நல்லா
விளையாடுரான்னு…….தாத்தா பால் போட அதை ரித்வி விளாசி தள்ள…..பேரனோட கிரிக்கெட் திறமைய
பாத்த தாத்தா பொமன் இரானியும் பேரனை லண்டன் அனுப்ப வேண்டி களத்துல இறங்கி பெர்ராரிய
தூக்க………..நிலவரம் கலவரமாகி………..அவங்களும் கலங்கி……..நம்மலயும் கலங்கடிச்சுட்டாங்க…………
0 comments:
Post a Comment