Tuesday, June 19, 2012

சுவிஸ் வங்கிகளில் பணம்: இந்தியாவுக்கு 55 வது இடம்

சுவிஸ் வங்கிகளில் கள்ள பணத்தை உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் போட்டு வருகிறார்கள்.

இந்த சுவிஸ் வங்கிகளில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 2011 ஆம் ஆண்டு இறுதியில் 90 டிரில்லியன் ரூபாய் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி). இதில் இந்தியாவின் பங்களிப்பு ரூ.12,700 கோடிதான்.

சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள சர்வதேச நாடுகளின் பணத்தில் இந்தியர்களின் பங்களிப்ப்பு 0.14% மட்டும்தான். 2006 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் ரூ. 40,000 கோடி வரை இந்தியர்களால் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. 2010 ஆம் ஆண்டு படிப்படியாக டெபாசிட் குறைந்துள்ளது. அதாவது பணத்தை எடுத்துவிட்டார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி போல சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கியின் தர வரிசைப்பட்டியல்படி பார்த்தால், சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்துள்ள வெளிநாடுகளில் இந்தியா 55வது இடத்தில் உள்ளது.

சுவிஸ் வங்கிகளில் பணம் குவித்திருப்பதில் இந்தியாவை பக்கத்து நாடான பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளிவிட்டது. பாகிஸ்தானுக்கு தரவரிசைப் பட்டியலில் 52 வது இடம் கிடைத்திருக்கிறது.

நம்பமுடிகிறதா?

குறிப்பு: இப்படி விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் மொத்தப் பணத்தையும் எடுத்துவிடுவார்கள். அப்போது சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் எதுவும் இல்லை என்று அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை..!

0 comments:

Post a Comment