Thursday, June 14, 2012

இனிப்பா, உப்பா?

இந்தியாவின் பிரபலமான பிஸ்கெட் நிறுவனம் அது. இனிப்பு பிஸ்கெட்டும், உப்பு பிஸ்கெட்டும் தயாரிப்பதில் கில்லாடிகள். பகல் ஷிஃப்ட்டில் இனிப்பு பிஸ்கெட், இரவு ஷிஃப்ட்டில் உப்பு பிஸ்கெட் தயாரிப்பார்கள்.

காலையில் வரும் தொழிலாளி, இயந்திரங்களைச் சுத்தமாகத் துடைத்தப் பிறகுதான் இனிப்பு பிஸ்கெட் தயார் செய்ய வேண்டும். ஆனால் அவரோ, ஏதோ ஒரு ஞாபகத்தில் இயந்திரத்தைச் சரியாகத் துடைக்காமல் பிஸ்கெட் தயாரித்தார்.

அது இனிப்பும் உப்பும் கலந்த பிஸ்கெட்டாக இருந்தது. இதை விற்க முடியாது என்று உற்பத்தி மேனேஜரின் கவனத்திற்குக் கொண்டு போனார். மேனேஜர் ஒரு பிஸ்கெட்டை சாப்பிட்டார். வித்தியாசமா இருக்கே என்று நினைத்தவர் அதற்கு ஒரு பெயர் வைத்து விற்க ஆரம்பித்து விட்டார். இன்றைக்கு இனிப்பும் உப்பும் கலந்த பிஸ்கெட்டை எல்லா நிறுவனங்களும் தயாரிப்பதுதான் ஆச்சரியம்! தவறுகளைத் திருத்திக் கொள்பவர்கள் லட்சாதிபதிகள் ஆகிறார்கள்: தவறுகளைப் பலங்களாக மாற்றுபவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள்!

0 comments:

Post a Comment