Friday, June 8, 2012

வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெயில்!


கத்திரி வெயிலுக்கு முன்னே தொடங்கிய வெப்பம் இன்னும் தணிந்தபாடில்லை. தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டியே அனல் வீசுகிறது. மக்கள் வெளியில் நடமாட முடியாமலும், வீட்டிற்குள் இருக்க முடியாமலும் மரண வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பருவ மழை தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் ஆங்காங்கே ஈரக் காற்று வீசுகிறது. ஒருசில இடத்தில் மழை தூறல் விழுந்துள்ளது. இந்த வெப்பம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியு]ள்ளனர்.

கேரளாவிலும், கர்நாடகாவிலும் நிறைய மரங்கள் உள்ளன, அதனால் அங்கு பருவத்துக்கு மழை பொழிகிறது. தமிழ்நாட்டில் பணத்துக்கு பேராசைப்பட்டு விளை நிலங்களை விற்பதுவும், காடு கழணிகளை விற்பதும், ஆற்று மணலை அடுத்த மாநிலத்துக்கு திருட்டுத்தனமாக விற்பதும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. பின்னே எப்படி மழை வரும், நாடு குளிர்ச்சியாகும்.

தன்னால தான் கெட்டா, குருட்டு அன்னாவி என்ன செய்வான்னு கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அதுமாதிரி தமிழ்நாட்டையே தரிசாக்கி காயப்போட்டுட்டு வெயில் தாங்க முடியலை, வெளியில போக முடியலேன்னா என்ன செய்ய முடியும். ஒண்ணும் செய்ய முடியாது. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்துச்சுன்னா என்னைக்கும் நம்ம நிலைமையும் இப்படித்தான்.

பணமா... வாழ்வாதாரமா..? யோசிப்போம்!

0 comments:

Post a Comment