Sunday, June 10, 2012

ஐந்து நாடுகளின் வான் பரப்பில் தோன்றிய விசித்திர ஒளிவட்டம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 pm இற்கு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ள சுமார் ஐந்து நாடுகள்
தமது வான் பரப்பில் பறக்கும் தட்டுப் போன்ற ஒரு ஒளிவட்டைக் கண்டுள்ளனர். சில தரப்பினர் இதை ரஷ்ய தயாரிப்பான விசித்திரமான ஏவுகணை என்று கருதும் போதும் அதன் தோற்றம் பெருளவுக்கு ஒரு பறக்கும் தட்டுப் போலவே ஒத்துள்ளது.

இஸ்ரேல், துருக்கி, ஜோர்டான், சைப்பிரஸ், மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் வானிலே இந்த அதிசய ஒளிவட்டுத் தோன்றியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நோர்வேயிலும் இது போன்ற ஒரு ஒளிவட்டு வட்ட சுருள் வடிவில் தோன்றி பலரை வியப்புக்கு உள்ளாக்கியிருந்தது. எனினும் சில மணி நேரங்கள் கழைத்து ரஷ்ய அரசு இந்த ஒளி வட்டு ஏற்படக் காரணம் தனது ஏவுகணைப் பரிசோதனையே என்று தெரிவித்திருந்தது.

இதைப் போலவே பல்லாயிரக் கணக்கான மக்கள் அச்சமுறவும் கலவரமடையவும் காரணமான நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த சுருள் ஒளிவட்டுக்கும் பின்னர் காரணம் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ஒளி வட்டம் ஏற்படுவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யா தனது விசித்திரமான ஏவுகணை ஒன்றை ரகசியமாக பரிசோதனை செய்ததாகவும் எனினும் இப்பரிசோதனை தோல்வியுற்று பாதியிலேயே ஏவுகணை வெடித்துச் சிதறியதாகவும் இந்த ஒளிவட்டம் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment